28.10.25

திருக்குறள் நெறித் தமிழ் திருமணம்

திருக்குறள் நெறித் தமிழ் திருமணம்

 

கிளிநொச்சி தமிழ்ச் சங்கம் நடத்தி வரும் திருக்குறள் நெறித் தமிழ்த் திருமணம்.

01. மணமக்கள் இருவரும் எழுந்து அவையை வணங்குமாறு செய்து மீண்டும் இருக்கையில் அமரச்செய்தல்.

02. மணமக்கள் தமிழ்த்தாய்க்கு மாலை அணிவித்தல்.

03. தமிழ்த் தாய் வாழ்த்து -கடவுள் வாழ்த்து

01. நீராரும் கடலுடுத்த

02. கடவுள் வாழ்த்து - குறட் பாக்கள்

04. மணமக்கள் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்தல்.

05. மணவிழா தொடக்கவுரை.

06. திருமண அழைப்பு வாசித்தல்.

07. சான்றோர் வழிபாடு.

08. பெற்றோர் வழிபாடு.

09. மணமகனுக்கு தாய்மாமன் மலர்மாலை அணிவித்தல்.

10. மணமகளுக்கு தாய்மாமன் மலர்மாலை அணிவித்தல்.

11. சம்பந்திகள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துதல்.

12. மணமகள் மணவுடை மாற்றுதல்.

13. தேங்காய், பழம் மங்கலநாண் உள்ள தட்டினை அவையினரின் வாழ்த்துக்கு அனுப்புதல்.

14. உதிரிப்பூ தட்டினை இன்னொருவர் எடுத்துச் சென்று மலரினை அவையினர் அள்ளிக்கொள்ளச் செய்தல்.

15. மணமகன் உறுதிமொழி.

16. மணமகள் உறுதிமொழி.

17. மணஇணையர் திருமணச்சான்றிதழில் ஒப்பமிடல்.

18. "மண்ணில் நல்ல வண்ணம்"திருமுறை இசைத்தல்.

19. குறட்பா இசைத்தல்.

20. மங்கல அணிகலன்(தாலி) திருநாண் பூட்டுதல் (அகவை முதிர்ந்த பெண்() தாய் மங்கலநாண் எடுத்துக் கொடுத்தல்) மணமகள் நெற்றியிலும், தாலியிலும் குங்குமம் இடல்.

1. குறட்பா இசைத்தல் - மந்திரம் போல் இசைத்தல்

2. வாழ்த்துப்பாடல் இசைத்தல்.

21. மணமக்கள் இடம்மாறி அமர்தல்.

22. மாலை மாற்றுதல்.

23. அகவை முதிர்ந்த பெண்களில் சிலர் மங்கல நாணில் சந்தனம், குங்குமம் வைத்து வாழ்த்துதல்.

24. அகவை முதிர்ந்த ஆண்களில் சிலர் மணமக்களுக்கு திருநீறு இட்டு வாழ்த்துதல்.

25. சர்க்கரை அல்லது கற்கண்டை மணமக்களுக்கு வழங்கி மற்றவர்களுக்கும் வழங்குதல்.

26. பெற்றோரை வணங்கி வாழ்த்துப் பெறல்.

27. நல்லறிஞர் சிலர் மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்குதல்.

28. குடும்ப விளக்கு ஏற்றுதல். (இரண்டாம் முறை சுற்றி வரும் போது மெட்டி அணிவித்தல்.)

29. நன்மதிப்பு நிகழ்வு. *மணமக்களுக்கும், பெற்றோருக்கும் நன்மதிப்பு வழங்கல்.

30. அறக்கொடை.

31. தலைவர் முடிவுரை. - நன்றியுரை, விருந்துண்டு செல்ல வேண்டுதல்.

32. அவையோர் மங்கல அரிசி(அறுகரிசி) இட்டு வாழ்த்துதல்.

33. மணமக்களை பொன்னாலும் பொருளாலும் வாழ்த்தி பாலும் பழமும் கொடுத்து அனுப்புதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக