28.10.25

A/L சம்பாஷணை ஒரு கலை கட்டுரை :

சம்பாஷணை ஒரு கலை

கட்டுரை :

அசட்டாளன் ஒருவனைப் பற்றி, மிகவும் ஏளனமாகப் பேச விரும்புகையில், 'அவன் பரம அசடல்லவா? அழுதாலும் சுரத்தோடு அழ, அவனுக்குத் தெரியுமா' என்று சொல்லுவார்கள். அழுதாலும்,
சுரம்போட்டு அழ வேணுமாமே! இது வேடிக்கையாக இருக்கிற தல்லவா? வேடிக்கையைப் போல தோன்றும் இதில், மகத்தான உண்மை ஒன்று பொதிந்து கிடக்கின்றது.

கலை அழகையும் கட்டுப்பாடு ஒழுங்கையும் பெறாத எதுவும் சாமர்த்தியமாகவும் கெட்டிக்காரத்தனமாகவும் கருதப்படமாட்டாது என்ற உண்மையைத்தான், மேலே சொன்ன வேடிக்கை வாக்கியம் குறிப்பிடுகின்றது. எவ்வித சத்தம் வெளியே வந்தாலும், அது சங்கீதத்தின் தன்மையைத் தாங்கி நிற்கவேண்டும் என்பது கட்டாயம் போலும்! அதாவது, காதுக்கு இனிப்பாயில்லாத ஒலி எதுவும் வெளிவரப்படாது என்பதை இந்த வாக்கியம் வற்புறுத்துகின்றது.

சத்தத்தைப் பற்றியே, இவ்வளவு கடுமையான கட்டளை இருக்கும்பொழுது, பிரயோகம் செய்யும் சொற்களைப் பற்றிய கட்டளை, இன்னும் எவ்வளவு கடுமையாக இருக்காது?

'
அவனோடே என்னடா பேச்சு! அவன் வெறும் கூச்சல் போடுவான்' என்று சொல்லுகிறார்களல்லவா? காலம் இடம் அளந்தும், ரஸபாவத்தை உணர்ந்தும் பொருளை அனுபவித்துப் பேசாத சம்பாஷணை, கூச்சலைக் காட்டிலும் கேவலமானது என்று சொல்லவும் வேண்டுமா?

காந்தி - இர்வின் ஒப்பந்தப் பேச்சு முற்றுப்பெறும் சமயத்தில், மகாத்மா காந்தியும் வைஸ்ராய் இர்வினும் விடியற்காலம் மூன்று மணி வரைக்கும் பேசிக்கொண்டிருந்தார்கள். இந்த சம்பாஷணையில், அர்த்தமும் ரஸமும், பாவமும் நிறைந்திருக்க வேண்டும். வெறும் கூச்சலாயிருந்தால், அதுவும் படாடோபப் பேச்சாயிருந்தால், இவ ருடைய சம்பாஷணையும் ஐந்து நிமிஷத்துக்குள் முடிவடைந் திருக்கும்.

அர்த்தம், ரஸம், பாவம், விஷயம் இவைகள் நிறைந்திருக்கும் பேச்சிலேதான் கலையழகு இருக்கிறது. மகாத்மாவோடு பேச வைஸ்ராய் இர்வினுக்கு எவ்வளவு ஆவலோ, அவ்வளவு பயம் வைஸ்ராய் வில்லிங்டனுக்கு.

'
நான் காந்தியைக் கண்டு பேசமாட்டேன். நான் சொல்லுவதற் கெல்லாம் அவர் குதர்க்க அர்த்தம் செய்து என்னை எப்படியோ, அவர் நினைக்கிற நினைப்பில் மாட்டிக் கொள்ளும்படியாக செய்து விடுகிறார்' என்று வைஸ்ராய் வில்லிங்டன் சொன்னாராம்.

குதர்க்கம் செய்யும் வேலை, மகாத்மாவுக்கு தெரியவே தெரியாது. சொல்லுக்கு உண்மையானதும் இயற்கையானதுமான அர்த்தத்தில், அதைக் கொள்ளுவதுதான் மகாத்மாவின் பழக்கம். எனவே, சூதான சொல்வலை வீசி ஏய்க்கப் பார்ப்பவர்கள், மகாத்மா வின் சாதுவலையில் அகப்பட்டுக் கொள்கிறார்கள். உதாரணம் ஒன்று பாருங்கள்.

ராயர் சமாதானத்தில் தெனாலிராமன் என்ற மேதாவி வாழ்ந்து வந்தான். ஒருநாள் ராயர், அர்த்தமில்லாமல் தெனாலிராமன் பேரில் கோபித்துக்கொண்டு, 'ராமா நீ சிறிது காலத்துக்குத் தலைமறை வாய் இருக்கவேண்டும்' என்று கட்டளையிட்டார். இந்தக் கட்டளைக்கு என்ன அர்த்தம்? ராயருடைய கண்ணில் தெனாலி ராமன் சிறிது காலத்துக்கு படப்படாது என்பதுதான் அந்தக் கட்டளைக்கு, உண்மையும் இயற்கையுமான அர்த்தம். இப்படி அர்த்தம் செய்துகொள்வதுதான் மகாத்மாவின் சுபாவம்.

இந்தக் கட்டளையை தெனாலிராமன் எப்படி நிறைவேற்றி னான் தெரியுமா? சட்டியை தலையில் வைத்து தலையை மூடிக் கொண்டு, தெனாலிராமன் ராயரின் முன்னால் போய் நின்றான். அவன் 'தலைமறைவாய்' நிற்கிறானாம். தெனாலிராமனைப் போல, விகடமாகவும், விபரீதமாகவும் அர்த்தம் செய்து, ஏய்க்கப் பார்க்கும் ராஜதந்திர நிபுணர் வில்லிங்டன். கணப்பொழுதில் மகாத்மாவிடம் மாட்டிக் கொள்வார்.

சில பெரியார்கள், தங்கள் போலிப் புலமையைக் காண்பிப் பதற்காக, சந்தர்ப்பத்துக்கும் சிறிதும் பொருத்தமில்லாத பெரிய பெரிய சொற்களைப் பிரயோகம் செய்து, பிறரைப் பயமுறுத்தப் பார்க்கும் ஆபாச வித்தைக்கு சம்பாஷணை எனப் பெயர் கொடுக்க லாமா? எந்த வகையாலும் நாங்கள் சொல்லுவதை பிறர் தெரிந்து
களே அல்ல. அவர்கள் அசட்டாளர்கள் அல்லது மோசக்காரர்கள். கொள்ளக்கூடாது என்ற பேச்சுப் பழகுகிறவர்கள் சாமர்த்தியசாலி

சம்பாஷணையில் இதமும் இங்கிதமும் இல்லாமல் போனால், இரசப்படாது. 'உனக்குத் தெரியாது அந்த விஷயத்தைப் பற்றி, அந்த மனுஷியனைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்' என்பதைத் தான் இப்பொழுது, அடிக்கடி சம்பாஷணையில் காண்கிறோம்! சர்வாதிகாரி தோரணையில் இவ்வாறு பேசுவது, பேசுகிறவன் மிகக் கேவலமான அல்பன் என்றும் தற்பெருமைக்காரன் என்றும் சந்தேக மன்னியில் தெளிவுபடுத்தி விடுகிறது.

விஷயத்தை விளக்கமாக, தெளிவுடன் சொல்லத் தெரியாதவர் கள், 'உனக்கு இது புரியாது' என்று பல்லவி பாடுவார்கள். அழகான பாஷையை வைத்துக் கொண்டு 'உனக்குப் புரியாது' என்று சொல்லுவது மதியீனமும் மோசமும் கலந்த 'புளித்தகாடி' அதில் சந்தேகமே இல்லை.

நாம் எந்தப் பொருளில் ஒரு சொல்லைப் பிரயோகம் செய்கிறோமோ, அதே அர்த்தத்தில் மற்றவர்களும் எளிதில் அதைக் அந்தச் சொல்லை உபயோகிக்க வேண்டும். நாம் நினைக்கிறபடி கொள்ளுவார்களா என்பதை செவ்வனே தெரிந்துகொண்டுதான், மற்றவர்கள் அர்த்தம் செய்யாமற் போனால், சம்பாஷணை அநேகமாய் கைகலப்பில் முடிந்து, விபரீதமாகிவிடும்.

பிறரை அவதானப்படுத்தும்படியாக பேசவேபடாது. 'நீங்கள் பேசுகிறது மடத்தனமாயிருக்கே' என்று அடிக்கடி நம்மவர்கள் பேச்சில் சொல்லி விடுகிறார்கள். இவை வரம்பு கடந்த வார்த்தைப் பிரயோகமாகும். ஒருவனுக்கு 'மடையன்' என்று நற்சாட்சிப் பத்திரம் கொடுப்பதற்கு, மற்றவன் சர்வகலாசாலையா? இந்த அற்ப அகம்பாவத்தால், வெகு சமயங்களில், இருவருக்குள் நல்லுறவு முறிந்து போகின்றது. பகைமையையும் மனக்கசப்பையும் எளிதிலே சம்பாதித்துக்கொள்ளும் நாகரிகமில்லாத வழி இது.

எதையும் யோசிக்காமல், 'வெடு வெடு'வென்று வார்த்தை களைக் கொட்டி விடுவது விவேகத்தையும் நல்ல பழக்கத்தையும் பண்பாட்டையும் காண்பிக்காது.'ஸ்பிலாஷ்' என்று இங்கிலீஷ் வார்த்தை இருக்கிறது. இது பத்திரிகை சம்பந்தமான சொல்.

"
இந்த ஒப்பந்தம் லண்டன் நகரில் 'ஸ்பிலாஷ்' செய்யப்பட்டது என்று இங்கிலீஷில் வந்த தந்தியை, ஒரு நண்பர், வினோதமாகத் தமிழ்ப்படுத்தி, சேதியையே சின்னாபின்னப்படுத்திவிட்டார். இந்த ஒப்பந்தம் லண்டன் நகரில், (பத்திரிகையில் முக்கியமான இடத்தில்) கொட்டை எழுத்தில் பிரதான்யம் கொடுக்கப்பட்டது என்பது இதன் அர்த்தம். 'ஸ்பிலாஷ்' என்ற வார்த்தையை நண்பர் கேள்விப்பட்டது இல்லை. இங்கிலீஷ் அகராதியைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். இது நவீன வார்த்தையானதால், அகராதியிலும் இல்லை.

எனவே, அவர் வார்த்தையின் அர்த்தத்தை யூகம் செய்தார். 'ஸ்பிலாஷ்' என்றால் முறிந்து போதல் என முடிவு செய்துகொண்டார். இந்த ஒப்பந்தம் லண்டன் நகரில் முறிந்து போய்விட்டது என்று அர்த்தம் செய்து எழுதிவிட்டார். இரு பத்திரிகையும் வெளிவந்து விட்டது. என்ன விபரீதமான அர்த்தம்! ஒப்பந்தம் நிறைவேறிற்று என்பதற்குப் பதிலாக, ஒப்பந்தம் முறிந்து போய்விட்டது என்று பத்திரிகையில் வந்தால், படிப்பவர்களுக்கு வயிற்று எரிச்சல் உண்டாக்காதா?

இத்தகைய பொறுப்பற்ற மேதாவிகள் சம்பாஷணையில் கலந்துகொண்டால், பேச்சு எவ்வளவு ரஸமாயிருக்கும் என்று நீங்கள் தான் கற்பனை செய்துகொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் (உயிர் உலகத்தில் தோன்றிய காலத்தில்) வார்த்தைதான் இருந்தது என்று பைபிள் (கிறிஸ்தவ வேதம்) சொல்லுவது அற்புதமானது. உலகம் தோன்றிய நாள் முதலாக இருந்துவரும் சொற்களை உபயோகிக்கும் வழிதெரியாமல், அவை களின் மூலமாக மனிதர்கள் விஷயங்களைத் தெளிவுபடுத்த முயலாமல், வம்பையும் மாற்சரியத்தையும் உண்டாக்கும் அற்புதத் தைப் பற்றி என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.

பதார்த்தம் என்ற சொல் இருக்கிறது. பதத்துக்கு அர்த்தம் பதார்த்தம்; அதாவது சொல்லுக்கு, உருவமாய் நின்று, அதை விளக்கிக் காண்பிப்பது பதார்த்தம். ஒரு சாமானைக் குறிப்பிடுவது சொல். சொல்லை விளக்கிக் காண்பிப்பது சாமான். எனவே, யாதொரு குழப்பமும் இல்லாமல் சொற்களின் பொருளை எளிதிலே தெரிந்துகொள்ள முடியும்.

பதார்த்தத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளாமல் ஏன் பேசவேண்டும்? சொல்லப்போகும் விசயத்தைப் பற்றி மனதில் தெளிவுபடுத்திக் கொள்ளாமல் பேச முயலுவது அறிவுடைமை ஆகாது. காந்தி பேசினாலும், எழுதினாலும், ஏன் சுவாரஸ்யமாய் இருக்கிறது? பாரதியாரின் எழுத்து தமிழர்களை ஏன் பரவசப் படுத்துகிறது? தங்கள் உள்ளத்தில் காணுவது இன்னதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. தெளிந்த கருத்துக்களை, சந்தேகமில்லாமல் அர்த்தம் செய்து கொள்ளக்கூடிய சொற்களின் மூலமாக, அவர்கள் வெளியிடுகிறார்கள். மேலும், அந்த எழுத்துகள் நம்மோடு அவர்கள் உடன் இருந்து பேசும் சம்பாஷணைகளைப் போலவே, இருக்கின்றன. அவைகளில் கலை அழகு நிரம்பி யிருக்கிறது.

கலை அழகு நிறைந்த சம்பாஷணையின் மூலமாக, உலகத்தின் தன்மையையே மாற்றிவிட முடியும் என்று பிரசங்கத் திலும் பேச்சிலும் நிபுணர் என்று தற்காலத்தில் மதிக்கப்படும் பெரியார் ஒருவர் சொல்லுகிறார். பேச்சுக்கு இருக்கிற சக்தி அவ்வளவு என்று அவர் சொல்லுகிறார். அனுபவத்திலிருந்து தோன்றும் உண்மையை அலட்சியம் செய்யமுடியுமா?

சம்பாஷணையின் இனிப்பையும் மாண்பையும் ரசிக்க முடியாத முறையில், நம்மவர்கள் பேச்சுப் பேசுகிறார்கள். ஒரு சபையில், தனி ஒரு மனிதன் கூட வெட்கப்பட்டுத் தலை குனியும்படியான முறையில் பேசுவது நாகரிகமாகாது. தடிமுண்டுத்தனமாகப் பேசுவது, பேச்சில் சேர்ந்ததே அல்ல. அது சச்சரவை வரவழைக்கும் கூச்சலாகும்.

சம்பாஷணையில் நிகரில்லாதவர்கள் என்று சொல்லக்கூடிய சிலரைக் குறிப்பிடுகிறேன். பேச்சில் யோகி அரவிந்தர் இணையில்லா தவர் என்றே நான் சொல்லுவேன். பாரதியாரும் அப்படியே. காந்தி சம்பாஷணையில் பேசும்பொழுது பலாப்பழத்தில் மொய்ப்பது மாதிரிக் கூடிக் கொள்ளுவார்கள். இவ்வளவு அழுத்தமாயும் தெளிவுடனும் பேசும் இன்னொருவரை நான் கண்டதில்லை என்று காந்தியைப் பற்றி, பிரபல அமெரிக்க ஆசிரியர் கந்தர் எழுதுகிறார். லெனின், சம்பாஷணையில் வெகு சாமர்த்தியசாலியாம். இங்கிலீஷ் ஆசிரியர் பர்னார்ட் ஷா வெடுக்கு வெடுக்கென்று பேசுவாராம். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகப் போகுமாம்.

கலை அழகு நிறைந்திருப்பின், சம்பாஷணை, சங்கீதத்தின் கவர்ச்சியையும் வேதத்தின் உட்பொருளையும் கவிதையின் கற்பனா சோபையையும் கழைக்கூத்தர்களின் ஜால வித்தையையும் ஒருங்கே சேர்த்துக் காண்பிப்பது போல இருக்கும்.

அத்தகைய சம்பாஷணை, தமிழ்நாட்டில் கூடிய விரைவில் நிறைந்திருக்குமா

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக