30.10.25

மணவாழ்வுப் பொன் மொழிகள்

மணவாழ்வுப் பொன் மொழிகள்

திருமணத்தை நிலைக்கச் செய்வது உடல் அல்ல உள்ளம். காதலால் புனிதமாகிய மனமே உண்மையான திருமணம். திருமணம் என்பது இருவர் இணையும் வாழ்க்கையை உறுதிப்படுத்தும் முறை என்பதை விட. இருவர் வாழ்க்கை இணைப்புக்கு உலகம் உடன்படும் முறை என்பதே பொருத்தம்.

முனைவர் மு.வரதராசன்.-

உளமொத்த வாழ்க்கைத் துணையுடன் வாழ்வதால் அடையும் இன்பம் வாய்க்காத இல்லம் ஓர் இருண்ட வீடு. அதனால் இடரும் இன்னலும் சோர்வும் அதிகரிக்கின்றன. தந்தி தளர்ந்த வீணையிலிருந்து இன்பநாதம் எங்ஙனம் கிளம்ப முடியும்.

பேரறிஞர் அண்ணா

மனித வாழ்விற்கான அமைப்புக்களில் மிகவும் தூய நெறி காட்டுவது திருமணம் என்று நான் நம்புகிறேன். குடும்ப உறவு இன்றி வாழ்வதற்குத் தகுதியான வாழ்க்கை முறை எதுவுமில்லை.

பகுத்தறிவாளர் ராவர்ட்சிலின் இங்கர் சால்

காதல் வாழ்க்கையிலும் பார்வையிலும் இல்லை. காதல் என்பது இரண்டு உள்ளங்களில் ஒரே காலத்தில் தோன்றும் புத்துணர்ச்சி. பெண்பால் ஆண்பால் மணந்து பலர்பாலைத் தருவதே இயற்கை. தாய்ப்பால் உடலுக்கு நல்லது. மொழிப்பால் அறிவுக்கு நல்லது.

மூதறிஞர் .சுப. மாணிக்கனார்

'இல்லறம் என்பது ஆண், பெண் இருவரும் ஒரு மனப்பட்டு பயிலும் கல்விக் கூடம். திருமண வாழ்க்கையை விட உயர்ந்த கல்வி உலகில் மானிட குலத்திற்கு இல்லை.

மெழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக