குகன்
சிருங்கி பேரம் என்னும் ஊரில் வசிப்பவனும் பல நாவாய்களுக்குத் தலைவனுமாகிய குகன் இராமருடைய பணியில் முன்னின்றவன். இராகவனாலேயே "குகனொடும் ஐவரானோம்" என்று உடன்பிறப்பு உரிமை பாராட்டப்பட்டவன். இவனுடைய பிறப்பு வரலாறு சுவையானது.
குருக்குஹன் என்பவன் ஒரு வேடன். ஒருநாள் வேட்டை எதுவும் கிடைக்காததால் அவனது பெற்றோர் பசியால் வருந்த அதனைக் காணப்பொறுக்காது வில்லையும் அம்பையும் கொண்டு கானகத்தில் வேட்டைக்கு அலைந்தான். பறவைகளோ மிருகங்களோ எதுவுமே அன்று சிக்கவில்லை. பகல் மறைந்து இரவுப் பொழுதாகியது. பசி பொறுக்காத குருந்ததன் அருகிலிருந்த பொய்கையிலிருந்து நீர் அருந்தித் தன்னிடம் இருந்த குடுவையிலும் நீரை முகந்துகொண்டு அப்பொய்கையில் நீர் அருந்த வரும் விலங்கினங்களுக்காகக் சுரையிலிருந்த வில்வ மரத்தின் மீது ஏறி மறைந்திருந்தான். நேரம் கடந்து முதற் சாமம் ஆயிற்று. அப்பொழுது அப்பொய்கையில் நீருண்பதற்காக ஒரு பெண்மான் வந்தது. அதனைக் கண்ட அவ்வேடன் மானைக் கொல்ல வில்லில் அம்பைத் தொடுத்தான். அந்நேரம் அப்பினைத் தொடுக்கும் அசைவால் மரத்தினின்று 95 வில்லதளமும் குடுவையினின்று சிறிது நீரும் வில்வ மரத்தினடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது சிந்தியது. வேடனது நாணொலி கேட்ட அப்பெண் மான் நடுநடுங்கி வேடனிடம் வந்து தான் தனது குட்டிகளை தன் மாற்றாளிடம் ஒப்புவித்து வருகிறேன் என உறுதியுடன் கூற அப்பெண்மானின் பேச்சை நம்பி அதனைப் போக விடுத்தான்.
முதற் சாமம் சென்று இரண்டாம் சாமம் ஆயிற்று முன் சென்ற மானைத் தேடி மற்றுமொரு இளைய பெண் மான் நீருண்ண வந்தது. வேடனும் வில்லில் அம்பைப் பூட்டினான்.
அந்த அசையில் மீண்டும் ஒரு வில்ல தளமும், சிறிது நீரும் கீழேயுள்ள சிவலிங்கத்தின் மீது சிந்தியது நாணொலி கேட்ட பெண்மான் அஞ்சி வேடனிடம் வந்து தனது குட்டிகளுக்குப் பாதுகாப்பளித்து விட்டு மீண்டும் வருவதாக கூற வேடனும் அதனைப் போக விடுத்தான்.
மூன்றாம் சாமம் நெருங்கியது. பெண்மான் இரண்டையும் தேடிக்கொண்டு ஆண்மான ஒன்றுயா வேடன் அம்பு பூட்ட மீட்டும் ஒரு வில்வதளமும், சிறிது நீரும் சிவலிங்கத்தின் மீது சிந்தியது. அந்த ஆண் மானும் தனது மனைவியருக்குக் கூறிவிட்டு வந்து விடுகிறேன் என்று அதனையும் விடுத்தான்.
நான்காம் சாமம் வந்தது. சொன்ன சொல் தவறாமல் ஆண் பானுடன் அவ்விரு பெண் மான்களும் வேடனிடம் திரும்பி வந்தன. மூன்றையும் ஒரு சேரக் கண்ட லேடன் அவைகளைக் கொல்வோம் என்று வில்லை எடுக்கையில் மீண்டும் ஒரு வில்வதளமும் நீரும் சிவபெருமான் மீது பட்டது.
அன்று சிவனக்கு உரிய சிவராத்திரி தினம் பகல் முழுதும் வேட்டைக்கென அலைந்து உணவு கொள்ளாமல் இரவு முழுதும் விலங்குகளுக்காக விழித்திருந்து தன்னை அறியாமலே நான்கு சாமங்களிலும் வில்வதளத்தையும். நீரையும் சிந்திய வேடன் குருக்குளனுக்கு இறைவன் ஞானத்தை அருளினான்.
ஞானம் கைவரப்பெற்ற வேடன் அம்மாளின் சத்தியம் தவறாத செய்கையை வியந்து, தான் மனிதனாக ஆறறிவு படைத்திருந்தும் உயிர்க்கொலை செய்யும் இழித்தொழில் புரிவதற்காக வருந்தச் சிவபெருமான் நேரே காட்சியளித்து அவனுக்கு குகன் என்ற பெயரிட்டு இராகவனுடைய சேவையில் தன்னை அர்ப்பணித்துப் பின்னர் முக்தியடையுமாறு அருள் புரிந்தார். மான்களும் சிவதரிசனத்தால் தேவருலகம் அடைந்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக