காளமேகப் புலவர்
இவர் பிறப்பால் வைணவர். வரதன் என்ற பெயருடையவர், திருவானைக்கா ஆலயத்தில் நிருத்யோபசாரம் செய்யும் 'மோகனாங்கி' என்ற பெண்ணின் மேற் கொண்ட காதலால் அவளது விருப்பத்திற்கிணங்கிச் சிவன் அருள் பெற்று ஜம்புகேஸ்வரத்திற் பரிசாரகராகப் பணிவிடை புரிந்து வந்தார்.
அதே ஊரில் வாழ்ந்த ஸ்ரீவித்யா உபாசகன் ஒருவன் அகிலாண்ட நாயகியின் அருளை வேண்டி ஆலயத்திற் பாடுகிடப்பான். ஒருநாள் வரதன் என்ற இந்தப் பரிசாரகர் அர்த்த சாமபூசைக்குக் குடமுறை கழித்தபிறகு தன்னையும் அழைத்துச் செல்லுமாறு மோகனாங்கியிடம் கூறிவிட்டு இருண்ட ஓர் மூலையில் உறங்கிவிட்டார். குடமுறை கழித்து வந்த மோகனாங்கி வரதரைக் காணாததால் வீடு சென்றுவிட்டாள். ஆலயத்தைப் பூட்டிக் கொண்டு அர்ச்சகர்களும் சென்று விட்டனர். விழித்துப் பார்த்த பரிசாரகர் கோயில் காப்பிடப்பட்டிருப்பதைக் கண்டு மீண்டும் உறக்கத்தின் வயப்பட்டார்.
நேரம் நடுநிசியைக் கடந்தது. தனது அருளை வேண்டி நாளும் தவமிருக்கும் ஸ்ரீ வித்யா உபாசகனுக்கு இரங்கி அருள்புரிவதற்காக அன்னை அகிலாண்டேஸ்வரி அழகிய பெண்ணாக மாறி ஸ்ரீ வித்யா உபாசகனுடைய வாயைத் திறக்குமாறு கூறினாள், நடுநிசியில் தன்னருகே வந்து நிற்பவள் குலமகளாக இருக்க மாட்டாள் என்று அறிவுநிலையில் நின்று அருவருத்து ஒதுக்கினான். அதனால் அருகே உறக்கத்தின் வயப்பட்டிருந்த பாரிசாரகளிடம் சென்று வாய்திறக்குமாறு கூற மோகானாங்கியின் மீது மயக்கங் கொண்டிருந்தவன் முன்வினைப் பயனால் வாயைத் திறந்தான். அன்னை அகிலாண்ட நாயகியும் தனது மந்திர பீஜாக்ஷரத்தை அவனது நாக்கில் பதித்து "இன்று முதல் காளமேகமாக விளங்குக" என்று அருளி மறைந்தாள். துயில் உணர்ந்து காளமேகம் தான் கண்ட கனவோ எனத் திகைத்து, தனக்கு அருள் செய்தவர் அகிலாண்டேஸ்வரியே எனத் திருவருளாலே துணிந்து நலங்கள் தோறும் சென்று கவிமழை பொழியுங் காளமேகப் புலவர் ஆனார்.
திருமலைராய மன்ளதுடைய அரசவைப் புலவரில் ஒருவர் அதிமதுரக் கவிராயன் என்பவர். அகந்தை மிக்கவர் ஒருநாள் அவர் தண்டிகையில் இவர்த்து வர கட்டியங் கூறுவோர். "அதிமதூக் கவிராயர் வருகிறார்....வருகிறார்" என்று எச்சரிக்கைக் கூறிலர மக்கள் அனைவரும் விலகி வழிவிட அந்த வழியாக வந்த காளமேகப் புலவிராயரை
அதி மதுர மென்றே யகிலமறிய
துதி மதுரமா யெடுத்துச் சொல்லும் புதுமையென்ன
காட்டுச் சரக் குலகித் காரமில்லாச் சரக்கு
கூட்டுச் சரக் கௌவே கூறு
என எள்ளி நகையாடினார்.
அதிமதூக் கவிராயர் தன்னைப் பரிகசித்த புலவன் யாரென்று அறிந்துவர ஒரு தூதனை அனுப்பினார். தூதன் சென்று மிலை அதற்கு விடையாக.
தூதைந்து நாழிகைழிகதனிற் சொற்சந்தயாை துகளிலாலந் தாதியேழு நாழிகை தனிற் சொல்லத் தொகை
படவிரித்துரைக்கப்
பாதஞ்செய் மடல் கோவை பத்து நாழிகை தனீர் பாணி
பொருநாண் முழுத
காளி மெமோரிரு தினத்தியே பாக் பொடி கட்டினேன் சிதஞ்செயயந்தில் கண்மாபினானீடு பழ்செய்ய திருமலைராயன் முகன்
சிறுவாறாகவே தாறுன்றுகள் சொல் திருட்டுக் களிப்பவரைக் காதங்கறுத்துச் செருப்பிட்டடித்துக் கதுப்பிற் படைத்து வெற்றிக் கல்லணையினொடு கொடிய சுடிலாள மிட்டேறு கவிகமேகநாளே
என்று கூறினார்.
காளமேகத்தினுடைய செருக்கை அடக்கவேண்டும் என்று எண்ணி அரசனுக்கு அறிவிக்க, மன்னனும் காளமேகப்புலவரை அரசவைக்கு வரவழைத்தார். அவையில் இருந்த புலவர்கள் எழுந்து இடம் கொடுக்கவில்லை. தனக்கு அவமதிப்பை விளைவிக்கும் நோக்கத்துடனேயே தன் அழைக்கப்பட்டிருக்கின்றோம் என உணர்ந்த கவிகாளமேகம் தான் நாளும் வழிபடும் அன்னை அகிலாண்டேஸ்வரியைத் தியானிக்க மன்னன் திருமலைராயன் அமர்ந்திருக்கும் சிங்காதனம் நீண்டு கவிஞருக்கு இடம் அளித்தது.
வெள்ளை "வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் அரியாசனத்தில் அரசரோடு என்னைச் சரியாசனம் வைத்த தாய்" என்று சரஸ்வதியை பரவிப் போற்றினார்.
அவையில் வீற்றிருந்த புலவர்களை நோக்கி "நீங்கள் யார்" என்று காளமேகம் கேட்க அவர்கள் "சுவிராயர்" என்றனர். கவி என்ற சொல் குரங்கையும் குறிக்குமாதலால்
வால் எங்கே? நீண்ட வயிறு எங்கே? முன் இரண்டு கால் எங்கே? உள்குழிந்த கண் எங்கே? சாலப் புவிராயர் போற்றும் புலவீர்காள், தீவிச் கவிராயர் என்று இருந்தக் கால்" என்று தன்னை மதிக்காதவர்களை சொல்லால் சாடினார்.
இதனைச் செவியுற்ற அதிமதுரக்கவிராயர் எழுந்து நீர் காளமேகம் என்றீரே அது பொழியுமோ என்று இடக்காகக் கேட்டார்.
"கழியுந்தியகட ஐப்பென்று நன்னூற் கடலின் மொண்டு
வழியும் பொதிய வரையினிற் கால்லைத்து வன்களிதை
மொழியும் புலவர் மனத்தே பிடித்து முழங்கி மின்னப்
பொழியும் படிக்குப் கவிகாள மேகம் புறப்பட்ட தே"
என்றும்
"இம்மென்னும் முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம் மென்றாலாயிரம் பாட் டசகாதா - சும்மா
இருந்தா லிருப்பே னெழுந்தேனே யாயிற்
பெருங் காளமேகம் பிள்ளாய்"
என்று அதிமதுர கவியைச் சாமர்த்தியமாகத் தன் சொல்லால் அடக்கினார். காளமேகப்புலவரின் புலமைத்திறம் இருபொருள்தரும் சிலேடைப் பாடல்களாகி, தமிழ்மணம் வீகம், சுவைக்க ஒரு சில பாடல்கள் வைக்கோலுக்கும், யானைக்கும் சிலேடை
"வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டையகும்
போரிற் சிறந்து பொலிவாகும்
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
சீர் உற்ற வைக்கோலும் மால்யானை யாம்"
வயலிலிருந்து கொண்டுவரப்பட்டு நெற்களத்தில் இட்டு அடிக்கப்படும். பின்னர் அது புரியாகப் பிணைக்கப்பட்டு நெற் கோட்டைலயச் சூழ்ந்திருக்கும். மிகுந்த குவியலாகக் குவிக்கப்பட்டு மலை போல உ ய ரமாக விளங்கும்.
போர்க்களத்திற் பகைவர்களை நிலத்தில் தாக்கிக் கொல்லும் போர் முடிந்த பின்பு அரண்மனைக் கோட்டைக்குட் புகும். போர் செய்வதில் ஏனைய, தேர்ப்படை, குதிரைப்படை காலாட்படையை விடச் சிறந்து விளங்கும்.
பாம்பும் வாழைப்பழமும்
நஞ்சிருக்கும் தோல் உரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பட்டால் மீனாது - விஞ்சு மலத்
திருமலைரா வன்வரையில் தேம் பாயும் சோலைப்
பாம்பாகும் வாழைப் பழம்
பாம்பு
நஞ்சை உடையதாக இருக்கும். தனது மேல்தோலை உரிக்கும். சிவபெருமானின் முடியின் அணியாக விளங்கும். மிக்க சினத்துடன் இருக்கும் பொழுது எவர் மீதானது பல்பதியுமானால் விடம் ஏறி இறப்பர், உயிர் மீளாது.
வாழைப்பழம்
தைந்து கனிவாக இருக்கும். உண்பவரால் தோள் உரிக்கப்படும் அபிடேக காலத்திற் சிவனது முடியின் மீது அமரும். சினத்தை உண்டாக்கக் கூடிய பசிநேரத்தில் ஒருவரின் பல்லிற் படுமானால் வயிற்றினுள் செல்லதன்றி மீளா
வானவில், திருமால், வெற்றிலை
"நீரில் உளவால் நிறம் பச்சையால் திருவாய்
பாரில் பகைதீர்க்கும் பான்மையால் - சாருமனும்
பல்வினையை மாற்றுதலால் பாரீர் பெருவான
வில் விண்டு நேர்வெற் நிலை"
வானவில் -
மேகத்தில் உள்ள நீரில் வானவில் தோன்றுகின்றது. பசுமை நிறத்தைப் பெற்றுள்ளது. மழை பெய்வதற்கு மங்கள் அடையாளமாக உள்ளது. மழை பொழிவித்து உலகின் பகையான வறுமையை ஒழிக்கின்றது. மக்கள் தொடர்பாக பலமுயற்சிகளையும் முற்றுவிக்கின்றது.
திருமால்
நீரிலே பள்ளிகொள்பவர். பச்சை நிறம் உடையவர். திருமகளை உடையவர்; அரக்கர்களாகிய பகையை அழிப்பவர் பக்களின் வினைகளைப் போக்குபவர்.
வெற்றிலை :
நீரில் நனைத்துப் பயன்படுத்தப்படுவது, பச்சை நிறத்தை உடையது, மங்கலப் பொருளானது உலகத்தில் பகைமை தீர்க்கும் அடையாளம். பல நோய்களை ஒழிக்கின்றது.
இதுபோன்ற கலைபொருத்திய ஏராளமான சிலேடைப் பாடல்களை இயற்றியவர். எண்ணலங்காரம் எழுத்தலங்காரம் கொண்ட பாடல்களும் இவரது கவித்துவத்தின் தன்மைக்குச் சான்று பகரும்.
சமத்காரமாக ஒரே எழுத்துக்களை வெவ்வேறு எழுத்துக்களுடன் கூட்ட வெல்லேறு பொருள் தந்து நிற்கும்
"ஓ. கா, மா, வீ, தோ உரைப்பன் டு டு டு
நாகார் குடந்தை நகர்க்கதிபர் - வாகாய்
எடுப்பர், நடமிடுவர், ஏறுவர், அன்பர்க்கும்
கொடுப்பர் அணிவர் குழைக்கு
கும்பகோணம் என்னும் நகரத்திற்குத் தலைவனான சிவபெருமான் எடுப்பது ஓடு நடமிடுவது காடு எனுவது மாடு அன்பர்க்குக் கொடுப்பது வீடு அணிவது தோடு. என்று கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.
பொருந்தாத பொருளைத் தரும் குடத்திலே கங்கை அடங்கும். குலுங்கும் போன்ற சொற்றொடர்களை சுற்றடியாகக் கொடுத்துப் பாடுக என்ற பொழுதும் அஞ்சாமற் பாடுவார் இந்தக் கயிராஜ கோ
"விண்ணுக் கடங்காமல் வெற்புக்கு அடங்காமல்
மண்ணுக்கு அடங்காமல் வந்தாலும் - பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கை அடங்கும்."
"வாரணங்கள் எட்டும் மகமேரு வுங்கடலும்
தாரணியும் எல்லாம் சலித்தனவால் நாரணனைப்
பண்யாய் இடைச்சி பருமத்தி னால் அடித்த
புண்வாயில் மொய்த்த போது"
"திருமாலின் பத்து அவதாரங்களையும் வெண்பாவில் அடக்கிப் பாட முடியுமா?" என்ற சவாலுக்கு "முழுவெண்பா வேண்டாம் அரைவெண்பாவிலேயே அமைத்துக் காட்டுகிறேன் பார்" என்று பாடிய பா
"மெச்சு புகழ் வேங்கடலா வெண்பாவிற் பாதியில் என்
இச்சையில் உன் சன்மம் எடுக்கலா - மச்சு கூர்
மாகோலா, சிங்கா, வாமா ராமா, ter
மாகோலமாஆ
மீன், ஆமை, பன்றி, நரசிங்கம், வாமனன், பரசுராமன், தசரத ராமன், பலராமன், கண்ணன், கல்கி, ஆகிய தசாவதாரங்களையும் அரைப்பாடலில் அடக்கினார். "கொட்டைப்பாக்கு என்று தொடங்கி, களிப்பாக்கு என்ற தொடரில் நிறைவு செய்ய வேண்டும்" என்ற நிபந்தனையை ஏற்றுப் பாடிய அருமையான பாடல்:
கொட்டைப் பாக்கும் ஒரு கண் கூடையைப்பாக்கும் மடியில்
பிட்டைப் பாக் கும் பாகம் பெண்பாக்கும் - முட்ட நெஞ்சே
ஆரணனும், நாரணனும் ஆதிமறையும்தேடும்
காரணனைக் கண்டுகளிப் பாக்கு
மாலும், அயனும், மறையும் தேடும் சிவபெருமான், ஒருகண் வேலை செய்பவரின் மண்வெட்டியைப் பார்க்கும் ஒருகண் மண்ணைச் சுமப்பவரின் கூடையைப் பார்க்கும் ஒருகண் படியிலுள்ள உதிர்ந்த பிட்டைப் பார்க்கும் ஒருகண் தன்பாகத்திலுள்ள உமையைப் பார்க்கும் : இத்தகைய இயல்பு பொருந்திய மூலகாரணனைக் கண்டு களிப்புறுவாய் தெஞ்ச எத்துணை ஆழமும் அழுத்தமும் நிறைந்த பாடல் பாருங்கள்.
கொட்டு மண்வெட்டி: களிப்பு ஆக்கு களிப்பாக்கு
பூனைக்கு ஆறுகால் புள்ளினத்திற்கு ஒன்பதுகால் என்று கூறினால் சின்னஞ்சிறு குழந்தை கூட சிரிக்குமே? சொல்வது கவிகாள மேகம் அல்லயா? எப்படி என்று அவரிடமே கேட்கலாம்.
பூதக்கி ஆறுகால் புள்ளினத்திற்கு ஒன்பதுகால்
ஆனைக்குக் கால் பதினேழானதே - மானே கேள்
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லை காண்.
நாமரை போன்ற முகத்தில் கருநீலப்பூப் போன்ற விழிகள் மலர்ந்த மான் போன்றவளே கேட்பாயாக பூநக்கி-பூவை நக்குகின்ற வடிற்கு ஆறுகாய் இனத்திற்கு (ஒன்பதுகால் இரக-டேகால்) இரண்டே கால்கள்தான் உண்டு. அதேபோல் யானைக்கு (பதினேழூகால் நாலேகால் தாலே கால்கள் தான் உண்டு. எப்படி பொடிவைத்து பாடுகிறார் பாருங்கள். இதேபோன்று ஒன்றிற்குக் கீழ்ப்பட்ட பின்னங்களால் அமைந்த ஒரு பாடலையும் பார்க்கலாம்.
முக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்காலரைக் கால்கண்டு அஞ்சாமுன் - விக்கி
இருமா முன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரைஇன்று ஒது"
முக்காய், அரை, அரைக்காய், இருமா மாாணி ஒருமா என்று முழு எண்ணிற்கு உட்பட்ட பின்னங்கள் அமைந்து அழகு செய்கின்றது. இதன் உட்பொருளைப் பார்ப்போம்.
இரண்டுகால்களுடன் ஒரு ஊன்று கோலும் தாங்கி மூன்று கால்களால் நடக்கும் முதுமையெய்துவதன்முன். தலையில் முதுமையின் அறிவிப்பாகிய நரை தோன்றுவதன் முன், இயமதூதர்களில் காய்களைக் கண்டு நடுங்குவதற்கு முன், விக்கள், இருமல் வருவதற்கு முன், நமக்கென்று உரித்தாய காணியாகிய மயானம் செல்வதற்கு முன், காஞ்சித் தலத்தில் உள்ள ஒற்றை மாமரத்தின் கீழ் எழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதரைத் துதிப்பாயாக
யானைக்குத் தமிழிலே பலபெயர்கள் உண்டு. அவைகளை ஒருசோ ஒரே பாட்டிலே அமைத்துள்ள புலமையின் செழுமையைப் பாருங்கள். திருவலஞ்சுழி விநாயகர் மீது அமைக்கப்பட்ட அருத்தமிழ்ப் பாடம்.
பரவசத் தும்பி கருகாத வெங்கரி பண்புகண்டே
இறுகாத தந்தி உருகாத மாதங்கம் இந்துநுதல்
நிறவாத சிந்தரம் பூசாக் களபம், நெடுஞ் சுனையில்
பிறவாத ஆம்பல் வலஞ்சுழிக் கேவரப் பெற்றனளே
பறந்து செல்லாத வண்டு (தும்பி யானை) எரித்துக் யானை) பண்ணின் கருநிறம் அடையாத அடுப்புக்கரி (கரி முறை மாறுபாட்டையக் காரணமான இறுகக் கட்டப்படாத வீணையின் நாம்பு (தந்தி -யானை) நெருப்பில் உருகாத மா தங்கம் (மாதங்கம் பாளை) பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியில் நிறத்தை புலப்படுத்தாத செந்தூரம் (சிந்தூரம் யானை) உடலில் பூசப்படாத சந்தனம் (களபம் -யானை) நீரில் தோன்றாத அவ்விமலர் ஆம்பல் யானை) ஆகிய திருவலஞ்கழியில் காட்சி நங்கும் விநாயகப் பெருமானது அருளைப் பெற்றேன்.
இதுபோன்று பொருளாழம் கொண்ட பற்பல பாடல்கள் -வல்லின, மெல்லின, இடையின எழுத்துக்களால் ஆன அருமையான பாக்கள் ககரவர்க்கத்தில் தகரவர்க்கத்தில் அமைக்கப்பட்ட செய்யுட்கள், கடை மொழி மாற்று இப்படித் தமிழ்க் கடலின் அகட்டினை வருடி முத்தாகக் கோர்த்த சந்தான பாக்கள் ஆசுகவியின் அறிவின் ஆழத்திற்குச் சான்று பக்கும். அதுமட்டுமல்ல கான மேகத்தின் ஒவ்வொரு சொல்லும் சத்தியத்தின் கூரியவாள் ஆக்கவும். அழிக்கவும் வல்லமை படைத்தலை சான்றாக ஒரு நிகழ்ச்சி கயிற்றாறு என்ற ஊருக்கு ஒரு நாள் மாலை நேரம் வந்தடைந்தார். ககள மேகம். இரண்டொரு நாட்களாக சரியான உணவு இல்லை வழிநடந்த களைப்புவேறு கயிற்றாற்றில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று உண்ணுவதற்கு எதும் பிரசாதம் கிடைக்குமா? என்று கேட்டார். அதற்குக் கோவிலில் உள்ளவர்கள் பெருமாளின் திருவீதி உலா இரவு நடக்க இருக்கின்றது. அதில் பெருமாளைச் சுமந்து வந்தால் ஒரு பட்டைச் சோறு தருவோம் என்றார்கள். பசியின் கொடுமையால் துவண்டு இரவு வரை காத்திருந்தார். இரவுலந்தது பெருமாளின் திருவீதி உலாவும் நடைபெற்றது. பெருமாளை மட்டுமல்லாது குருக்களையும் சேர்ந்துச் கமக்க வைத்த ஆத்திரம் தீர ஒரு பாடல் பாடினார்
"பாளைமணங் காழுகின்ற கயிற்றாற்றும்
பெருமாளே பழிகா கசகேள்
வேளை யென்றால் இவ்வேலை பதினா
நாழிகைக்கு மேலா யிற்றென்
தோளை முறித் ததுமன்றி நம்பியா
னையுங் கூடச் சுமக்கச் செய்தாய்
நாளையினி யார் சுமப்பார்? எத்தாளும்
உன்கோயில் நாசத் தானே.
இன்று வரை அக்கோயில் திருவிழாக்கள் இன்றிப் பாழடைந்து கிடக்கின்றது. பசிமுற்றினால் புலவருக்கு ஆந்திரமும் வரும். அற்புத நகைச்சுவையும் வரும். நாகப்பட்டினத்திலுள்ள காத்தான்குடி வருண குலாதித்தன் சத்திரத்தில் நீண்ட நேரம் உணவிற்காகக் காத்திருந்து காத்திருந்து அலுப்பு மேலிட்ட சமயம் பாடல் ஒன்று பிறந்தது. அது நிந்தாஸ்துதியாக அமைந்தது.
"கத்தும் கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி
உலையில்இட ஊர் அடங்கும் ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்
இரவிலே அரிசி வந்து அதனைக் கொழிந்து உலையில் இடும் போது நடுச்சாமம் ஆகும். இலைபோட்டு சாதம் படைக்கும் பொழுது விடிந்து விடும் என்று உணவிடும் காலதாமதத்தை நகைச்சுவையாகப் பாட அங்கிருந்தவர்கள் புலவரைப் பணிந்து தங்கள் பிழையைப் பொறுக்குமாறு வேண்டி வைதுபாடிய அதேபாடலை வாழ்த்தாக மாற்றுமாறு வேண்டிக் கொண்டனர். புலலரும் அதே பாடலில் உள்ள சொற்களுக்கு வேறு பொருளும் கற்பித்தார்.
அத்தமிக்கும் போதில் பஞ்சகாலத்தில் அடங்கும் மக்கள் உணவை உட்க்கொண்டு பசி அடங்குவர். வெள்ளி எழும் - சோற்றின் வெண்மை உருக் வெள்ளியைத் தோற்கடிக்கும்.
தனது பெயருக் கேற்பவே நீருண்ட மேகம் பொழிவது போல தமிழ்மழை பொழித்தவர் காளமேகம் சிலேடை. கொண்டு கூட்டுப் பொருள் கோள், வெண்பா - நிந்தாஸ்துதி போன்ற பலவகைப் பாடல்களையும் அன்னை அகிலாண்டேஸ்வரியின் அருளால் மடைதிறந்த வெள்ளமா மக்களின் மனத்தில் பாய்ச்சியவர்.
ஒருமுறை திருவாரூருக்குச் சென்ற பொழுது கோயிற் சுவரில்
"நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபங் கற்சாபம்
பாணத்தான்" என்று எழுதி நிறைவு செய்யாமல்
விடப்பட்டிருந்த இடத்தில் மண் தின்றபாணமே நாணுயே
சீகாரூர் மேவும் சிவனே நீ எப்படியோ
தேரசர் புரமெரித்த நேர்,
என்ற எழுதிப் பூர்த்தியாக்கிச் சென்றார், சிலகாலம் கழித்து இரட்டைப்புலவர்கள் அங்கு வந்து பார்த்த பொழுது தாங்கள் பூர்த்தி செய்யாது விட்ட பாடலை அற்புதமாகப் பூர்த்தி செய்து எழுதியவர் கவிகாளமேகமே என்று அறிந்து மகிழ்ந்தனர்.
காளமேகப் புலவர் இறந்துவிட்டார் என்று அறிந்து இரட்டைப் புலவர்கள் சென்ற பொழுது உடல் இடுகாட்டில் சிதையில் வெந்து கொண்டிருப்பதைக் கண்டு மனம் மிகவும் நொந்து.
ஆக கலியால் அகில உலகெங்கும்
விசு புகழ்சி கள் மசுமேபூசுரா
விண் கொண்ட செந்தழலில் வேகுதே ஐயைவோ
மண் தின்ற பாணமென்ற வாய்"
என்ற அழுது புலம்பினார்.
காளமேகப் புலவரின் காலம் விஜயநகரத் தாசனின் பிரதிநிதியாக திருமலைராமன் தென்னாட்டை ஆண்ட காலம் (கி.பி. 1455-1468) ஏறக்குறைய 450 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர். இவர் தனிப்பாடல்களை விட திருவானைக்காவுலா சித்திரபடம், பரப்பிரம்ம விளக்கம் முதலிய நூல்களும் எழுதியுள்ளார் என்று தெரிய வருகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக