பல்லவர் காலம்
கி.பி 6ஆம் நூற்றாண்டின் பிற பகுதியோடு முடிந்ததாக கூறிய சங்கமருவிய காலப்பகுதிக்கும் கி.பி 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்த சோழர் ஆட்சி காலப்பகுதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியே பல்லவர் காலம் ஆகும். ஏறக்குறைய 300 ஆண்டுகளை கொண்டது.
பல்லவர் காலத்து தமிழ் நாடும் அரசியலும்
சங்கமருவிய கால பிற்பகுதியிலேயே தமிழ் நாட்டை ஆண்டுக் கொண்டிருந்த களப்பிரரின் ஆட்சி நி.பி 6 ஆம் நூற்றாண்டில் வலிகுன்ற அவர்களுக்கு கீழ்ப்பட்டிருந்த பாண்டியர்கள் அவர்களுடன் போர் செய்து பாண்டி நாட்டை கைப்பற்றினர். அந்த நூற்றாண்டிலே பல்லவ மன்னர்கள் தமிழ் நாட்டிலே புகுந்தனர். பல்லவர்கள் தமிழ் நாட்டுக்கு வடக்கே சில மாகாணங்களுக்கு தலைவராய் இருந்து வந்த ஒரு வகுப்பினர். அங்கு நிலவிய பேரரசு நிலை தளர பல்லவர்கள் நாம் தலைமை வகித்த மாகாணங்களுக்கு தாமே அரசராகி பிற நாடுகளையும் தம் ஆட்சிக்கு உட்படுத்தினர். களப்பிரரின் ஆட்சி வலுக்குன்றி இருப்பதை அறிந்து தமிழ் நாட்டையும் தமதாக்க எண்ணினர். பின்னர் பாண்டியருக்கும், பல்லவர்களுக்கும் போர் மூண்டது அவர்கள் இருவருக்குமிடையே நடைபெற்ற போரிலே பாண்டியரை பல்லவர் வெற்றி கொண்டனர். இப்பல்லவர்களின் ஆட்சி ஏறக்குறைய 300 ஆண்டுகள் நிலைப்பெற்று நின்றது.
பல்லவர் கால சமய நிலை
பல்லவர் காலம் பக்தி நெறிக்காலம் என்று அழைக்குமளவுக்கு பல்லவர் காலத்திலே சமயம் வளர்ச்சி அடைந்தது. அதாவது சைவம், வைஷ்ணவமும் அதிகளவு வளர்ச்சியடைத்த காலகட்டமாகும். சங்கமருவியகால பிற்பகுதியில் ஆரம்பித்த சைவ சமயம் பல்லவர் காலத்திலே பெருவழக்கு அடைந்தது. சமண பௌத்தர்களின் பிரச்சாரங்களினால் சமண, பௌத்த மதங்கள் வளர்ச்சியுற சைவ, வைஷ்ணவ சமயங்கள் வீழ்ச்சியடைய தொடங்கின கி.பி 7ஆம் நூற்றாண்டில் இம்மத வளர்ச்சி காட்டுத் தீப்போல் பரவியது. இக்கால கட்டத்தில் சைவமும், வைஷ்ணவமும் ஒன்று சேர்ந்து சமண, பௌத்தத்தை எதிர்த்து சமண சமயத்திற்கு மதம் மாறிய மன்னர்களை அக்காலத்தில் தோன்றிய நாயன்மார்களாகிய திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் தங்கள் அருட் செயல்களினால் சைவ சமயத்திற்கே மன்னர்கள் திரும்பி வரும்படி செய்தார்கள். இம்மன்னர்களுள் மகேந்திரவர்மனை திருநாவுக்கரசரும் நின்ற சீர் நெடு மாறன் எனும் மன்னனை திருஞானசம்பந்தர் அவர்களும் சைவ சமயத்திற்கு மதம் மாற்றினர். இக்காலத்திலே" மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே" என்ற வகையில் பெருமளவு மக்களும் மதம் மாறத் தொடங்கினர். அதனால் அக்கால கட்டத்திலே சைவம், வைஷ்ணவம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது.
பிற சமயங்களை எதிர்த்து போராட வேண்டிய நிலையில் ஒன்று சேர்ந்திருந்த சைவமும், வைஷ்ணவமும் ஏனைய சமயங்கள் வலியிழந்த போது இவ்விரண்டு சமயங்களும் தங்களுக்குள்ளேயே ஒன்றை ஒன்று பகைக்கத் தொடங்கின. இதனால் இரு சமயங்களுக்கிடையே போட்டியும் இவ்விரு சமயங்களும் சிறப்பாக வளர்ச்சியடைய காரணமாயின. இக்கால கட்டத்திலே சமண பௌத்த சமய வளர்ச்சி மிகவும் குன்றத் தொடங்கியது. இதற்கு காரணம் ஏனைய மதங்கள் தழைக்க தொடங்கியது மட்டுமன்றி சமண முனிவர்களுக்கிடையே இருந்த போலி வேடமும். ஒழுக்க கேடும் காரணமாயின. இதனால் அம்முனிவர்கள் நம்மிடம் காணப்பட்ட குறைகளை நீக்கி மக்களுக்கு தொண்டு செய்வதில் ஆர்வம் காட்டினர். இதனால் இம்மதங்கள் முற்றாக அழிந்து விடாமல் காப்பாற்றப்பட்டன. எது எவ்வாறிருப்பிலும் பல்லவர் காலத்தில் பல்லவர் காலத்தில் மன்னர்கள் பலரின் ஆதரவு பெற்று சைவமும், வைஷ்ணவமும் ஆகிய சமயங்கள் சிறப்பாக வளர்ச்சியடைந்தன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக