8.10.25

A/L பல்லவர் கால சைவசமய பக்தி இலக்கியங்கள்

* பல்லவர் காலத்தில் எழுந்த சைவசமய பக்தி இலக்கியங்கள் பற்றி விளக்குக?

பல்லவர் காலத்திலே தோன்றிய நாயன்மார்கள் சைவ சமயத்தை வளர்ப்பதற்கு அரும்பாடு பட்டனர். மதம் மாறிய மக்களை தம் சமயத்துக்கு மீட்டெடுப்பதற்கும், மேலும் மக்களை மதம் மாறாமல் இருப்பதற்கும் பல அரும்பணிகளை ஆற்றினார்கள் அதற்காக பல அற்புதங்களை மேற்கொண்டனர். ஆலய வழிபாடு குன்றியிருந்த அக்காலகட்டத்திலே ஆலயங்களுக்கு மக்களை வரச் செய்வதற்காக ஆலயங்களில் தங்கள் அற்புதங்களை நிகழ்த்தினர். ஒவ்வொரு அற்புதத்தின் போதும் ஒவ்வொரு தேவாரங்கள் பாடப்பட்டது.

இந்த வகையிலே நாயன்மார்கள் பாடிய தேவாரங்கள் திரு முறைகளாக தொகுக்கப்பட்டன. திரு முறைகள் 12 ஆகும். திருஞான சம்பந்த பெரியார்கள் பாடியருளிய தேவாரம் முதல் திருமுறைகளிலும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் அடுத்த 3 திருமுறைகளிலும் சுந்தரர் பாடிய தேவாரம் 7ஆம் திருமுறையும் சேர்க்கப்பட்டுள்ளது. திருஞான சம்பந்தர் குழந்தையாக இருந்து குதூகலமாக வாழ்த்த படியால் அவரது பதிகங்கள் அனைத்திலும் குதூகல உணர்ச்சியே காணப்படுகிறது. இயற்கையில் தோற்றமும் இறைவனின் உருவமும் அவர் மனதிலே மகிழ்ச்சியை உருவாக்குகின்றன. இதனால் அவரது பாடல்கள் பலவற்றில் வரணனைகள் பல காணமுடியும்.

பல நெடுங்காலம் துறவு பூண்டு இடையிலே மதம் மாறி பல இன்னல்களுக்கு ஆளாகியமையினால் திருநாவுக்கரசரது பாடல்களிலே ஐம்புலன் அசைவினால் விளையும் துன்பங்கள் சிறப்பாக கூறப்படுகின்றன. (உலக நிலையாமை, வாழ்க்கை நிலையாமை) போன்ற தத்துவ கருத்துக்கள் இவரது பாதங்களிலே நிறைந்து காணப்படும். திருவாரூரிலே பிறந்த சுந்தர மூர்த்தி நாயனார் சுந்தர வேடங்கள் பூண்டு பரவையார் சங்கிலியார் எனும் இரு பெண்களை மணந்து சிறப்பாக வாழ்ந்த ஒரு யோகியாவார். உலக இன்பங்களில் திளைத்த ஒருவராக சுந்தர மூர்த்தி நாயனார் காணப்பட்டாலும் சித்தத்தை சிவன் பால் வைத்த ஒருவராவார். இவரது பாடல்களிலே இறைவனை தோழனாக வைத்து வாழ்ந்த வாழ்க்கையும் தனது சுவை மிக்க வாழ்க்கை அனுபவங்களையும் காணலாம்.

கி.பி 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்க வாசகர் திருவாத ஊரில் பிறந்ததனால் வாதலூர் என்றழைக்கப்பட்டார். இவர் கல்லும் கசிந்து உருகும் திருவாசகத்தினையும், திருகோவையாரையும், திருவெம்பாவை, திருஅம்மானையும், திருப்பள்ளி எழுச்சினையும் மிக இனிமையாக பாடியுள்ளார். திருபரம் துரையிலே இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இவர் தாயை நினைத்து அழும் பிள்ளையைப் போல் மனங் கலங்கி பாடிய பாடல்கள் யாவும் படிப்போர் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளன. இதனால் தான் போலும் "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசசுத்திற்கும் உருகார்" என கூறப்படுகிறது.

இவர் இறைவன் மேல் பெற்ற பேரின்ப காதலை தலைவன் தலைவி என்னும் பாவனையில் வைத்து சிறப்பாக வெளிப்படுத்தி பாடிய திருக்கோவையாகும். சங்ககாலத்தில் காணப்பட்ட அகப்பொருட் சித்தரிப்பு இவரது பாடல்களிலே மனிதன் இறைவன் மீது கொண்ட காதலாக சித்திரிக்கப்படுவதை காணலாம். இதனை மதுரபான சித்தரிப்பு எனக் கூறலாம். முக்காலமும் உணர்ந்த திருமூல நாயனார் சித்தர்களுள்ளே முதன்மையானவராக கருதப்படுகிறார். இவர் திருமந்திரம் எனும் சிறப்பான நூலை இயற்றினார். இறைவனை அடையும் வழிகளை அனுபவ வாயிலாக எடுத்து கூறும் ஒரு சிறந்த நூலே திருமந்திரமாகும். மேற்குறிப்பிட்டவாறு பல்லவர் காலத்திலே சைவசமய நூல்கள் பக்தி பாடல்கள் என்பன எழுந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக