ஒரு நாள் செல்லலம்
வினாவிடைகள் :
1. இச் செய்யுளில் இடம்பெற்ற திணை, துறையை விளக்கிக் காட்டுக?
திணை - பாடாண் திணை
புகழ்ந்து பாடத்தக்க ஆண்மகனின் ஒழுகலாறு என பொருள்படும். ஒருவனுடைய புகழும் வலிமையும் கொடையும் அருளும் ஆகிய இவற்றைப் புகழ்ந்து பாடுதல், ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும் அளியும் என்றிவற்றைப் புனைந்து பாடுதல் பாடாணில் நிகழும்.
துறை - பரிசில் கடாநிலை.
'யாவரும் பரிசில் பெற்றார்; யான் பெற்றிலன்' எனத் தனது பரிசில் பெறும் விருப்பத்தைப் பரிசில் கொடுப்போனிடத்து புலப்படுத்திக் கூறுதல். பரிசில் தாழ்ப்பினும் தருதல் தப்பாது என்று உரைத்து அதனைத் தருமாறு குறிப்பாக வேண்டுத லால் பரிசில் கடாநிலை ஆயிற்று.
2. இச் செய்யுளில் புலவர் சொல்லவந்த விடயம் என்ன?
பரிசிலுக்கு வருந்திய புலவர் அதியமானிடம் கொடைச் சிறப்பினை தனது நெஞ்சிற்கு கூறும் வகையில் இச் செய்யுள் அமைந்துள்ளது.
3. அதனை எவ்வாறு எடுத்துக் கூறுகின்றார் என்பதை விளக்குக?
நேரடி அனுபவத்தினூடாக கூறுதல்
உவமை அணியினூடாசு கூறுதல்
தனது நெஞ்சை அமைதிப்படுத்தும் வகையில் அரசவை வாழ்த்திக் கூறுதல்.
4. இச் செய்யுளில் இடம்பெற்றுள்ள உவமையணியினை எடுத்து விளக்குக?
"நீட்டினும் நீட்டாதாயினும் யானைதன் கோட்டிடை வைத்த கவளம் போல
மையகத்துவது பொய்யாகாதே"
என்பது உவமை அணி யானையின் கொம்புகளிடையே வைத்த கவளம் சிறிது தாழ்ந்ததாயிலும் அக்கவளம் அதற்குத் தப்பாதவாறு வாய்ப்படும். அதுபோல அதியமானுடைய பரிசில் சிறிது தாழ்ப்பினும் தருதல் தப்பாது.
உவமானம் யானை கோட்டிடை வைத்த கவளம் உவமேயம் அதியமானின் பரிசில் பொதுத்தன்மை தவறாது கிடைக்கும்
5. இச் செய்யுளில் கொடை வழங்கும் நாட்கள் எவ்வாறு பகுக்கப்பட்டுள்ளன?
ஒரு நாள், இரு நாள், பல நாள், தலை நாள்
6. கொடை கொடுத்தோனை புலவர் எவ்வாறு வாழ்த்துகின்றார்?
பரிசில் பெற ஆசைப்பட்ட நெஞ்சுக்கு நீ பரிசுக்கு வருந்த வேண்டாமெள பரிசு பொடுத்தவளை வாழ்த்துகின்றார். பரிசில் கொடுக்க தகுதியானவரை பரிசில் பெற்றோரும் பெற விரும்புவோரும் வாழ்க அவன் தாள் என வாழ்த்துவது மரபாகும்.
7. இச் செய்யுளில் அஞ்சியின் கொடைச் சிறப்பினை எடுத்துக் காட்டுக?
ஔவையார் அதியமானிடம் பரிசில் பெற பாடச் சென்ற சமயம் பரிசில் பெறுவதில் கால தாமதமாயிற்று. தன்னிடம் பெருமதிப்பு கொண்டிருந்த அதியமானின் உளப்பாங்கை அறிந்த ஒளவையார் தனது நெஞ்சுக்கு கூறுவது போல அவனது கொடை வழங்கும் இயல்பினை எடுத்துரைக்கின்றார்.
ஒரு நாள் இரு நாள் பல நாள் என தளித்துச் செல்வதன்றி பலரோடு கூடிப் பலமுறை சென்றாலும் தலை நாளில் வரவேற்று வேண்டுவன அளித்தது போலவே கொடை வழங்கும் இயல்புடையவன், இதனூடாக அதியமானின் அன்பு உள்ளமும் முகம் சுருங்காத தன்மையும் கொடை மாண்பும் புலனாகின்றன.
கொடை எதிர்வார் கொடைப் பொருளைப் பெறுதற்கு தாழ்க்கலாமேயன்றி அதியமான் கொடுப்பதில் தாழ்ப்பதிலன் என அவனது பெருமை தோன்ற, 'பரிசில் நருஉம்கால்' எனக் கூறாது 'பெறூஉம் காலம்' எனச் சிறப்பிக்கின்றார்.
யாளையினது கோட்டிடை வைத்த கவளம் எப்படியும் அதன் வாயகத்தே போய் சேரும். அது போல காலம் தாழ்ந்தாலும் தாழாவிட்டாலும் அதியமானின் பரிசில் கைவந்து சேரும் என்பதை, 'யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போல கையகத்தது. அது பொய்யாகாது என்ற உவமையணி யினூடாக உறுதிபடக் கூறுகின்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக