19.10.25

A/L அறுகுளத் துகுத்து வினா விடை

 

A/L புறநானூறு - அறுகுளத் துகுத்து

வினா விடைகள் :

1. இச் செய்யுளில் ஆசிரியர் கூறவந்த விடயம் யாது?

பேகனது கொடை நலத்தை வியந்து பாடியது ஆகும்.


2. கூறவந்த விடயத்தை எவ்வாறு எடுத்துரைக்கின்றார்?

வரையாது வழங்கும் வள்ளண்மை உடையவன் என்பதை எடுத்துக் கூறுவதன்மூலம்

பொருத்தமான உவமையணிகளைக் கையாள்வதன் மூலம்

அரசனது இயல்பு மிகுதியை எடுத்துக் காட்டுவதன் மூலம்


3. 'கொடை மடம் படுதல்' என்ற சொற்றொடரின் பொருளை எடுத்து விளக்குக?

பரிசில் பெற வருவோரை வேண்டியவர், வேண்டாதவர், வலியோர், மெலியோர், புதியோர், பழையோர் எனக் கருதாது

எல்லோருக்கும் வரையாது வழங்கும் இயல்புடைமையைக் குறிக்கின்றது. இரவலர் மீது அன்பு காட்டும் இயல்புடையவன்.


4. 'படை மடம் படான்' என்ற சொற்றொடரின் பொருளை விளக்குக?

வீரர்களில் மெலிந்தவர், புறமுதுகிட்டவர், புண்பட்டவர், மூத்தோர், இளையோர் ஆகியோர் மீது போர் செய்ய விரும்பாமையையும், எதிர் நின்று போராடும் போர் வீரருடன் மட்டும் போர் செய்தலையும் குறிக்கும்.

5. பேகனுடைய குணவியல்புகள் பற்றி இச் செய்யுளில் கூறியவற்றை தருக?

கொடை வழங்கும்போது வேறுபாடு காட்டாது மழை போல வரையாது வழங்கும் இயல்புடையவன்.

போர்க்களத்தில் மெலிந்தவரோடு போர் செய்யாது வலிமையுடைய வீரருடன் போர் செய்யும் குணம் படைத்தவன்.


6. இச் செய்யுளில் இடம்பெற்ற திணை துறையை விளக்கிக் காட்டுக?

இச் செய்யுள் பாடாண் திணைக்குரியது. ஒருவருடைய வெற்றி, வலிமை, கொடை, அணி, புகழ் போன்ற சீரிய குணங்களை எடுத்துரைப்பது பாடாண் திணையாகும்.

கொடை மடம் படுதல் அல்லது படை மடம் படான் என அரசனது இயல்பு மிகுதி தோன்றக் கூறுதலால் இது இயன்மொழித்துறை ஆயிற்று (மூன்றாம் நான்காம் வினாக் களுடன் ஒப்புநோக்குக)

7. இச் செய்யுளில் இடம்பெற்றுள்ள பேகனின் கொடைச் சிறப்பினை சுருக்கமாக கூறுக?

பேகன் சங்க காலத்தில் புகழ் பெற்ற வள்ளலாக விளங்கி புகழ்பெற்றவன். அன்பு உள்ளத்தோடு பொருளை வாரி வழங்கும் போது இவருக்குக் கொடுக்க வேண்டும் இவருக்கு கொடுக்கக்கூடாது என்ற வரையறை இல்லாமல் கேட்டவர்

சிறப்பினை புகழ வந்த பரணர் அவனை மழைக்கு ஒப்பிட்டுக் எல்லோருக்கும் வாரிக் கொடுத்தவன். அவனது கொடைச் கூறுகின்றார். மழை பெய்யும்போது மழை நீர் பயன்படும் குளத்திலும் பொழிகிறது. வயலிலும் பொழிகிறது. ஒரு வகையிலும் பயன்படாத உவர் நிலத்திலும் பொழிகின்றது. மழைக்குள்ள அந்த அறியாமை பேகனிடத்திலும் இருந்தது என்கிறார் புலவர். ஈர நெஞ்சத்தால் தக்கவர் தகாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் பொருள் உதவி செய்த போதிலும் வீர நெஞ்சத்தோடு போர்க்களம் புகுந்து எதிரிகளின் படைகளோடு போர் செய்யும்போது அந்த அறியாமையை பேகனிடம் காணமுடியாது. போர்க்களத்தில் இன்னாரை தாக்க வேண்டும் இன்னாரை தாக்கக்கூடாது என்ற தெளிவுடன் போர் செய்யும் சிறந்த வீரன். ஆகவே பேகனிடம் கொடை மடம் உண்டே தவிர படைமடம் இல்லை என்பதனூடாக கொடைச் சிறப்பு கூறப்பட்டது.

8. இச் செய்யுளில் பேகனது வீரச் சிறப்பு எவ்வாறு கூறப் பட்டுள்ளது?

மதம் கொண்ட யானையையும் வீரக் கழலையும் அணிந்தவன்.

வீரர்களில் மெலிந்தவர், புறமுதுகிட்டவர், புண்பட்டவர், மூத்தோர், இளையோர் மீது போர் செய்ய விரும்பாமை.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக