19.10.25

A/L நகுதக் கனரே வினா விடை

A/L புறநானூறு - நகுதக் கனரே

வினா விடை :

1. இச் செய்யுளில் இடம்பெற்றுள்ள திணை, துறையை எடுத்து விளக்குக?.

திணை - காஞ்சி

நாட்டைக் கைப்பற்ற எண்ணிப் போருக்கு வந்தவரைத் தம் நாட்டு எல்லையில் எதிர்த்து நின்று போர் செய்தல். போருக்குச் செல்லும் வீரர் காஞ்சிப் பூவைச் சூடிச் செல்வர்.

துறை - வஞ்சினக் காஞ்சி

தம்மை இகழ்ந்து பேசிய அரசர்களை 'முரசமொடு அகப்படுத்திலேன்' எனில் குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக. புலவர் 'பாடாது வரைக' என்று சினந்து வீரமும் மானமும் வெளிப்பட சபதம் செய்தலால் வஞ்சிக் காஞ்சி ஆயிற்று (வரைக - நீங்கு)

2. இச் செய்யுளில் வெளிப்படும் விழுமியக் கருத்துக்கள் எவை என எடுத்துக் காட்டுக?

நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடம் தன்மான உணர்வும் வீரமும் இருத்தல் வேண்டும்.

குடிமக்களைப் பாதுகாப்பது ஒரு அரசனின் இன்றியமை யாக் கடமை.

இரந்து வந்தவர்களுக்கு பொருள் வழங்குவதனை உயர்வாக கருதல், பொருள் வழங்க முடியாமையினால் இழிவு ஏற்படும் என்பதை உணர்தல்.

புகழுக்கு உரியவராயின் உயர்வும், குடிமக்களின் பழிக்கு உள்ளாவதன் இழிவும் ஏற்படும் என்பதை உணர்தல்.

3. இச் செய்யுளில் புலவன் கூறவந்த விடயம் யாது?

பகையரசர் எழுவரோடு நடந்த போரில் தலையாலங் கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் மீது பகையரசர் கூறிய இழிவான வார்த்தைகளை பொறுக்க முடியாது கடுங் கோபமுற்று தன் வீரம் வெளிப்பட நெடுஞ்செழியன் சபதம் செய்தமை.

4. அதனை எவ்வாறு எடுத்துரைக்கின்றார்?

புலவர் கூற்றாக அமையாது நெடுஞ்செழியன் தன் கூற்றாக கூறுதல்.

இகழ்ந்த அரசர்கள் கூறிய இழிசொற்களுக்கு எதிராக வஞ்சினம் கூறுதல்

தன்மான உணர்வு வெளிப்படும்படியாக கூறுதல்.

தான் கூறியனவற்றை செய்யாவிடின் குடிமக்கள் தன்னை பழிக்குமாறும் வறுமை தன்னை வந்தடையுமாறும் எதிர் விளைவுகளினூடாக கூறமுற்படுதல்.

5. நெடுஞ்செழியன் மீது பகையரசர்கள் கூறிய இழிசொற்கள் யாவை?

நெடுஞ்செழியனை உயர்வாகப் பேசியவர்கள் நகைப்பி ற்கு இடமானவர்கள்.

இவன் அரசியல் அனுபவமற்ற இளைஞன்.

நாம் நால்வகைப் படை உடையவர்கள் என தம்மை உயர்வுபடுத்துவதனூடாக நெடுஞ்செழியனை இழிவு படுத்தினர்.

6. நெடுஞ்செழியன் கூறிய வஞ்சின மொழிகள் எவை?

* புன்மையான வார்த்தை பேசியவர்களை போரில் தாக்கி யழிப்பேன்.

*
அவர்களை முரசங்களோடு கைப்பற்றுவேன்.

*
அவர்களை வெற்றிகொள்ளாவிடின் குடிமக்கள் என்னை கொடுங்கோலன் என்று பழிக்கட்டும்.

*
நல்லிசைப் புலமை உள்ளம் கொண்ட மாங்குடி மருதனார் போன்ற சான்றோர் என்னைப் பாடாது விடுக.

*
இரப்பவர்க்கு எதனையும் வழங்கமுடியாத வறுமை என்னை வந்து சேரட்டும்.

7. ஓர் அரசனை இழிவுபடுத்தும் கீழ்மை உணர்வுகள் என நெடுஞ்செழியன் உள்ளத்தில் ஊறி நின்றன எவை?

* குடிமக்கள் பழிதூற்றும் கொடுங்கோன்மை

*
புலவர் பாடும் புகழ் பெறாமை

*
இரவலர்க்கு ஈயாமை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக