19.10.25

A/L, GAQ, BA இந்து மதத்தின் புராதன நிலையும் சிந்துவெளி தொல் பொருள் ஆய்வுகளும்

இந்து மதத்தின் சிறப்பம்சங்களும் அம்மதத்தின் புராதன நிலைகளை அறிந்து கொள்வதற்குதவும் சிந்துவெளி தொல் பொருள் ஆய்வுகளும்

இந்துமதத்தின் சிறப்பியல்புகள்

() தொன்மை வாய்ந்த சமயமாக விளங்குதல்

(
) சனாதன தர்மமாக விளங்குதல்

(
) சமய தத்துவத்தை மரபாக கொண்டிருத்தல்

(
) அறநெறி வாழ்க்கையினை வலியுறுத்தல்

(
) கலையம்சங்களை மரபாகக் கொள்ளும் சிறப்பு

(
) ஆன்மாக்களின் உயர் இலட்சியத்துக்கு வழிகாட்டல்

(
) பரந்த நோக்குடைய மதமாக விளங்குதல்.

என்பன யாவும் இந்துமதத்தின் சிறப்பம்சங்களாகக் கொள்ளப்படுகின்றன.

இந்துமதத்தின் புராதன நிலைகளும் சிந்துவெளி அகழ்வுப் பொருட்களும்

இந்து மதத்தின் புராதன நிலைகளை அறிந்து கொள்ள சிந்துவெளி அகழ்வுப் பொருட்கள் ஓர் மூலமாக விளங்குகின்றன. அவற்றின்படி புராதன இந்து மதத்தில் பல கடவுள் கொள்கை, உருவ வழிபாடு, உருவ வழிபாட்டுடனான கிரியை முறைகள், சமய தத்துவ சிந்தனைகள், கலை மரபுகள் என்பன அம்மதத்தில் எந்தளவிற்கு இணைந்து சிறப்புற்று விளங்கியது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

உருவ வழிபாடும் பல கடவுள் கொள்கையும்

சிந்துவெளி அகழ்வுப் பொருட்களாகிய உருவ இலட்சினைகள், சிலைகள், இலிங்கங்கள், தாயத்துக்கள், கருமண் பொருட்கள் போன்றவற்றின் மூலம் அக்கால மக்களிடையே சிவ வழிபாடு (சைவம்), சக்தி வழிபாடு (சாக்தம்) மற்றும் ஏனைய வழிபாட்டம்சங்களான மரம், மரத்தேவதை, நதி, நந்தி, நாகம், சூரியன் என்பனவும் வழிபடப்பட்டு வந்தன என்பதை புதை பொருளியலாளர்கள் சமயசார்புடைய தொல்பொருட்கள் மூலம் சான்று பகர்வர். இவ்வாறான வழிபாட்டு முறைகளும் அம்சங்களும் இன்றைய இந்து மதத்தின் உருவ வழிபாட்டிற்கும் பல சுடவுள் கொள்கைக்கும் அடிப்படையாக விளங்கியது எனக் கூறலாம்.

சிவ வழிபாடு (சைவம்)
சிந்துவெளியின் இரு பெரு நகரங்களான( மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல் பொருட்களான கொம்புடைய மனிதனின் உருவ இலட்சினைகள், ஆண் சிலைகள், இலிங்கங்கள் என்பவற்றை அடிப்படியாகக் கொண்டு அக்கால மக்களிடையே சிவ வழிபாடு நிலவியுள்ளது. என்பதனை புதை பொருளியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். அவற்றின்படி சிந்துவெளி அகழ்வுப் பொருட்களில் கருத்தைக் கவரும் தெய்வம் "கொம்புடைய தெய்வமாகும்". அத் தெய்வத்தின் உருவம் மூன்று இலட்சனைகளில் பொறிக்கப்பட்டிருந்தது. அவற்றில் இரு இலட்சினையில் உள்ள உருவம் ஓர் கற்பீடத்தில் அமர்ந்திருப்பதாகவும் மற்றைய இலட்சனையிலுள்ள உருவம் நிலத்தில் அமர்ந்தும் இருந்தது. இத் தெய்வத்தின் இருக்கையானது பத்மாசன நிலையில் யோக வடிவமாய் அமர்ந்திருக்கும் திருக்காட்சியாக உள்ளது. அத்தெய்வத்தின் உடல் ஆடையின்றி அம்மணமாக உள்ளதோடு கையில் பல கடகங்களையும் கழுத்தில் ஆரம் போல தோன்றும் அணிகலன்களையும் அணிந்துள்ளது. அதன் தலையிலுள்ள இரு கொம்புகளுக்கிடையில் செடி போன்ற பொருள் ஒன்று வளர்ந்துள்ளது. இம்மூன்று இலட்சினைகளில் பெரியதில் கொம்புடைய உருவத்தினைச்சூழ யானை, புலி, காண்டாமிருகம் எருமை என்பன நிற்கின்றன. அத்தெய்வம் அமர்ந்திருக்கும் பீடத்தின் கீழ் இரு மான்கள் உள்ளன. புலியின் முகம் போன்ற அதன் முகத்தில் வலம், இடமாக இரு படைப்புக்கள் உள்ளன. அதனை அவதானித்த ஜோண்மார்சல் கருத்துத் தெரிவிக்கையில் "முந்து சிவன் எனக் கூறினார். இத்தகைய கொம்புடைய தெய்வத்தின் உருவ அமைப்பில் அதன் ஆண்குறி நிமிர்ந்து நிற்பதும் தலையிலுள்ள கொம்புகளுக்கிடையில் செடி போன்ற அமைப்பு இருப்பதும் அதனை ஒரு வனத்தெய்வமாக கருத இடமுண்டு. கொம்புத் தெய்வத்தின் உருவ அமைப்பிலுள்ள அம்சங்கள் பலவற்றையும் தொகுப்பாக நோக்குமிடத்து பிற்காலத்தில் சைவசமயத்தில் எழுந்த சிவ தத்துவத்தை விளக்குவதாக அமைகின்றது. அவற்றின்படி கொம்புத் தெய்வத்தின் யோக வடிவம் "யோகிகளுக்கெல்லாம் யோகி மகா யோகி" எனும் யோக தட்சணாமூர்த்தியின் சிவ நாமத்தை விளக்க வல்லது. விலங்குகளினால் சூழப்பட்ட அத்தெய்வத்திற்கு பசுபதி (உயிர்களின் தலைவன்) எனும் பெயரும் பொருந்தும். இவ்வுருவத்தில் காணப்படும் மூன்று முகங்கள் முக்கண்ணன் என்ற சிவ நாமத்திற்கும் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூன்று முகூர்த்தங்களையுடையவன் சிவன் என குறிப்பிடுவதற்கும் இடம் கொடுத்திருக்கலாம். சில ஆய்வாளர்கள் அம்மூன்று முகங்களையும் முத்தொழில் தத்துவத்தை குறிப்பன என்றும் கூறுவர்.
ஹரப்பா நகரின் "அபூ" எனும் மலைக்கண்மையில் கண்டுகொள்ளப்பட்ட சிலையொன்று மூன்று முகம் கொண்டது. அக்காலத்தில் இது மும்மூர்த்திக்கருத்தாக அமையாவிட்டாலும் பிற்காலத்தில் இடம்பெற்ற மும்மூர்த்திக் கொள்கைக்கு இது அடிப்படையாக அமையலாம். சிந்துவெளி அகழ்வுப் பொருட்களில் இடக் காலைத் தூக்கியாடும் மற்றுமொரு ஒடிந்த சிலையின் அமைப்பு முறையினை அவதானித்த ஜோன்மார்ஷல் பிற்கால நடராஜர் தத்துவத்திற்கு முன்னோடியாக அமைந்திருக்கலாம் எனக் கருதுகின்றார்.
சிந்துவெளி மக்கள் இலிங்க வணக்கமுடையவர்களாக விளங்கினார் என்பதற்கு அங்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட போது கிடைக்கப்பெற்ற பல நூற்றுக்கணக்கான இலிங்கங்களை ஆதாரமாகக் கொண்டு கூறலாம். இவை இன்றைய இலிங்க அமைப்பு முறையினை பின்பற்றி அமைக்கப்பட்டவையல்ல என்பதனால் அவற்றினை சாதாரண கற்களாகவும் கருத இடமுண்டு. இருந்த போதிலும் அக்கற்கள் பயன்பாடு கருதி ஆக்கப்பட்டவை என்பது தெளிவு. எனினும் கி.பி 1500 ம் ஆண்டளவில் இந்தியாவின் வட பகுதியில் பிரவேசித்த ஆரியர்கள் அங்கு ஏற்கனவேயிருந்த இலிங்க வணக்கமுடையவர்களை "தாஷர்கள் எனக்கூறி போரிட்டு வெற்றி கண்டதாக இருக்கு வேதம் குறிப்பிடுவதனால் இந்தியாவிற்கு ஆரியர்கள் வருகை தருவதற்கு முன்னர் சிந்துவெளி மக்கள் இலிங்க வணக்கமுடையவர்களாக விளங்கினர் என்பதனை உணர்ந்து கொள்ள இடமுள்ளது. எனவே இன்றைய சைவ சமயத்தில் இடம்பெறும் சிவனின்

- சிவயோக முகூர்த்தம்
-
நடராஜர் முகூர்த்தம்
- இலிங்க - அருவுருவத் திருமேனி
என்பனவற்றிற்கு சிந்துவெளி தொல்பொருட்களே சான்று பகர்கின்றன.

சக்தி வழிபாடு (சாக்தம்)
பண்டைய உலகில் சிறந்து விளங்கிய தாய்த்தெய்வ வழிபாடு பண்டைய காலத்தில் இந்தியாவிலும் சிறந்து விளங்கியதற்கு தொல்பொருட்களும் இலக்கியங்களும் சான்றாக உள்ளன. பண்டைய இந்தியர்கள் தமக்கு வளம்பல அளிக்கும் தரையை பெண்ணாக உருவகித்து வழிபாடு செய்ததன் விளைவாக அங்கு சக்தி வழிபாடு உருவாகிற்று. அவ்வழிபாட்டின் மிகத் தொன்மையினை சிந்துவெளி தொல்பொருட்களான முத்திரைகள் சுடுமண் கல்லிலான சிலைகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். முத்திரை ஒன்றில் தாயும் குழந்தையும் இணைந்து அச்சமூட்டும் தோற்றமும், மற்றுமொரு முத்திரையில் அமைதியான தோற்றமுடைய பெண் வடிவமும் காணப்படுவதனையிட்டு பிற்காலத்தில் சிவனின் சக்தியாகப் பேசப்படும் துர்க்கை, உமை, பார்வதி எனும் முகூர்த்தங்களுக்கு அடிப்படையாக உள்ளதென ஆய்வாளர்கள் கருதுவர்.
பெண்ணுருவம் பொறிக்கப்பட்ட இலட்சனைகளில் தலைகீழாகத் தொங்கும் பெண்ணின் உருவம் கருத்தாழமிக்கது. அதன் வயிற்றின் தொப்புளில் இருந்து செடியொன்று வளர்கின்றதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த உருவ அமைப்பினை ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் தரையை தாயாக உருவகப்படுத்தி அது மக்களுக்களிக்கும் பொருட்களை கருவுயிர்க்கின்றதாக காட்டும் தத்துவத்தை சித்தரிக்கின்றதாக காட்டுவர். இதிலிருந்து "அகிலாண்ட கோடியீன்ற அன்னையே பின்னையும் கன்னியென மறை பேகம் உண்மையே" என அடியவர்கள் உருகியுருகி உளம் குலைந்து போற்றும் அகிலாண்ட நாயகியின் ஆரம்பத் தோற்றம் இதுவாக இருக்கலாம் என பலரும் உணர்கின்றனர். பிற்காலத்தில் இடம் பெற்று வரும் சக்தி வழிபாட்டு முறைகள் இவைகளை ஒட்டியது இல்லையென்றாலும் அடிப்படைகளில் அவற்றிடையே ஒற்றுமையினை காண முடிகின்றது. உதாரணமாக "சக்தியே படைப்பின் மூலம்" எனும் சமயக் கருத்து பொதுவாக அமைந்திருப்பதனைக் காண முடியும்.

ஏனைய வழிபாட்டம்சங்கள்
சிந்துவெளி சமயச் சார்புடைய தொல்பொருட்களாகிய இலட்சினைகள் பலவற்றில் காணப்படுகின்ற சித்திர உருவ அமைப்புக்களை நோக்குமிடத்து அக்கால மக்களிடையே
- எருது வழிபாடு
- மர வழிபாடு
-
மரத்தேவதை வழிபாடு
-
ஆற்று வழிபாடு
என்பன இடம்பெற்றிருக்கலாம் என கூறிக்கொள்ள முடியும்.
எருது வழிபாடு
சிந்துவெளி மக்கள் எருது வழிபாட்டினைப் பின்பற்றினர் என்பதற்கு காளை உருவமைப்புடைய இரு வேறுபட்ட இலட்சனைகள் ஆதாரங்களாக அமைகின்றன." ஒருவகை இலட்சனைகளில் காளையானது ஒற்றைக் கொம்புடன் காணப்படுகின்றது. அது வளச்சடங்குக்காக தானியங்களை முளைக்க வைக்கும் ஓர் பீடத்தில் தானிய முளைகளை உண்டவாறு காணப்படுகிறது. அவ்வாறான நிகழ்ச்சி மங்களச் சடங்கின் ஓர் கூறாகலாம். இவ்வாறான எருது அக்காலத்தில் சிவனுடன் சேர்த்து வழிபடப்படவில்லை. அக்கால மக்கள் தமது விவசாயத் தொழிலுக்கு பெரிதும் உதவிய எருதினை தெய்வமாகப் போற்றி அதற்கென வளச்சடங்கு ஒன்றினையும் நிறைவேற்றி வந்துள்ளனர். அவ்வாறான நிலையில் அங்கு எருது வழிபாடு நிலவியிருக்க முடியும். மற்றுமொரு இலட்சினையில் திமில் பெருத்த காளை ஒன்று காணப்படுகின்றது. இது நந்தி தேவரைக் குறிக்கும். சிந்து வெளிகால மக்களிடையே இத்தகைய நந்தி வழிபாடானது தனியொரு வழிபாடாக இருந்து பிற்காலத்தில் சிவனுடன் சேர்த்து வழிபடப்பட்டிருக்கலாம் என ஊகித்துக் கொள்ள முடியும்.
மரம், மரத்தேவதை வழிபாடு
சிந்துவெளி இலட்சனைகள் சிலவற்றில் திருவுடைய மரங்களாக அரசு, வேம்பு ஆகியன காணப்படுகின்றன. அரசமரமொன்றின் கொம்பொன்றினிடையே இருகொம்புகளையுடைய பெண் தெய்வமொன்று நிற்கின்றது. அதனை கொம்புடைய வேறு தெய்வமொன்று வணங்குவது போன்றும், மனிதத் தலையுடைய ஆடொன்று அந்த மங்கள வினையை பார்ப்பது போன்றும் கூந்தலைப் பின்னிவிட்ட ஏழு பெண்கள் அந்தப் பெண் தெய்வத்திற்கு திருப்பணிகள் செய்யக் காத்திருப்பது போலவும் நிற்கின்றனர். இவர்கள் பெண் ஜயைமார்களாக இருக்கக்கூடும். வேறு சில முத்திரைகளில் கொம்புடைய மரத் தெய்வத்திற்கும் கொம்பு புலிக்குமிடையில் போராட்டம் இடம் பெறும் காட்சியும் வேம்பு மரத்தடியில் மேடையமைக்கப்பட்டு இருப்பதும் மரக்கிளைகளுக்கிடையே ஓர் பெண் ஆடையின்றி நிற்பதும் அம்மரத்தடியில் ஆடையுடைய பெண்ணொருத்தி வழிபாடு செய்வதனையும் காணக்கூடியதாக உள்ளன. எனவே இன்றைய இந்துக்கள் மரத்தினை வழிபாடு செய்வதும் அவற்றில் தெய்வீக தேவதைகள் இருப்பதாகவும் நம்பிக்கை கொள்வதும் சிந்து வெளி கால மக்களின் மரவழிபாடு, மரத்தேவதை வழிபாட்டின் அடிப்படையில் இருந்தே வளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் எனக் கருத இடமுண்டு.*
இலட்சனையொன்றில் முக்காலி மீது ஓர் பாத்திரம் இருப்பதும் அப்பாத்திரத்தினை நாகமொன்று பார்த்தவாறு நிற்பதும் அக்கால மக்களிடையே நிலவிய நாக வழிபாட்டினை நினைவூட்டுவதாக அமைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுவர். சில முத்திரைகளில் கொம்புடைய நாகங்களும் காணப்படுகின்றன.
ஆறு வெவ்வேறு தலைகளுடன் கூடிய வடிவம் ஹரப்பா இலட்சினையில் காணப்படுகின்றன. இவ்வுருவினை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் கதிரவனைக் குறிக்கும் எனக் கூறுவர். வேறொரு இலட்சினையில் ஓர் போர்வீரன் இரு புலிகளுடன் போராடும் காட்சி ஒன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த இலட்சனைகளில் காணப்படும் வீரனின் முகம் வட்டமானது. அவனுடைய தலைமுடி வழக்கத்திற்கு மாறான வகையில் வாரி, வகிர்ந்து கோலம் செய்யப்பட்டிருந்தது. இவ்வுருவினை நோக்குமிடத்து இன்று இந்துக்களின் கோயில்களில் தீட்டப்படும் ஆரிய உருவத்திற்கு அடிப்படையாக உள்ளதென்பதை ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். இவ் இலட்சனைகளில் காணப்படும் புலி இருளின் வலிமையை குறிப்பதாக அமைகின்றது எனக் கருதப்படுகின்றது.
இலட்சனைகளில் சிறு மீன்களை வைத்திருக்கும் முதலை, ஆமை போன்ற உருவங்கள் ஆற்று வணக்கத்தின் அடையாளங்களாக கலாநிதி மா. இராசமாணிக்கனார் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உருவ வழிபாட்டுடனான கிரியை முறைகள்
சிந்துவெளி அகழ்வுப் பொருட்களில் உருவ வழிபாட்டு முறைகளினுடனான கிரியை முறைகள் இடம் பெற்றுள்ளன என்பதற்கு பல்வேறு சான்றுகளுள்ளன. அவையாவன,
1 கைக்குழந்தைகளை ஏந்தி நிற்கும் தாய்ப்பதுமைகள்
2.
தவழ்ந்து செல்லும் குழந்தைப் பதுமைகள்
3.
விலங்குப் பதுமைகள் - என்பனவாகும்.
இவை நேர்த்திக் கடன் பொருட்டு கோயில்களில் வைக்கப்பட்டனவாக இருத்தல் வேண்டும். இரு முத்திரைகளில் சமயக் குறிகள் எனக் கருதப்படும் எருது முதலிய விலங்குகளை மக்கள் தூக்கிச் செல்லும் ஊர்கோலக் காட்சி இன்றைய கோயில் விழாக்களில் தூக்கிக் கொண்டு செல்லப்படும் நந்தி முதலிய வாகனங்களை நினைவூட்டுவதாக அமைகின்றது. இன்றைய இந்து சமயத்தில் உள்ள ஒவ்வொரு கடவுளர்களுக்கும் வாகனங்கள் இருந்ததுபோல் சிந்துவெளி மக்களிடையே வழிபாட்டுத் தெய்வங்களுக்கும் வாகனங்கள்-இருந்தன. K.N.Diksit என்பவர் பிரம்மாவிற்கு அன்னமும், சிவனிற்கு எருதும், துர்க்கைக்கு புலியும் வாகனங்களாக சிந்துவெளி சமய நிலையில் காணப்பட்டன என கூறுகின்றார்.
இங்கு இடம்பெற்ற அகழ்வாராய்ச்சியின் போது கண்டுகொள்ளப்பட்ட சில பெண் சிலைகளில் புகை பிடித்திருப்பதனை அவதானித்த ஆய்வாளர்கள் தூப, தீப, நைவேத்திய முறை நிலவியிருக்கலாம் எனக் கூறுகின்றனர். சில மனைகளில் மாடங்கள் இருப்பதும் அவற்றில் புகையேறி இருப்பதும் தெய்வப் பதுமைகள் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. சில இலட்சனைகளில் பெண்கள் படைக்கும் தட்டுக்களை ஏந்தியவாறு நிற்கும் காட்சி இன்றைய இந்துக்களால் பின்பற்றப்படும் படையல் செய்யும் வழக்கத்தினை நினைவூட்டுகின்றது. இவற்றினை விட விலங்குப் பலி, நரபலியிடல் முறைகளும் அங்கு இடம்பெற்றதாக ஆய்வாளர்கள் கூறுவர்.
சிந்துவெளி தொல்பொருள் ஆய்வுகளின்படி இங்கு நிலவிய சமய மரபுகளில் கோயில் வழிபாடு செய்தமைக்கான சான்றுகள் எவையும் கிடைத்ததாகத் தெரியவில்லை. சில அறிஞர்கள் சுமேரியர் போன்று இங்கும் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறுவர். ஆனால் இதற்குத் தக்க சான்றுகள் இல்லை. இங்கு இறைவழிபாடு அருவமாகவும் உருவமாகவும் இடம் பெற்றிருக்கலாம். உருவ வழிபாட்டிற்குரிய குறிகளாக சிலைகள் இலட்சனைகள் அவற்றிலுள்ள சின்னங்கள் முதலியவற்றை ஆதாரமாகக் குறிப்பிடலாம்.

கலை மரபுகள்
இன்றைய இந்து மதத்துடன் நெருக்கமான தொடர்புடைய அம்சம் நுண்கலை மரபுத் தத்துவமாகும். இத்தகைய கலை மரபுகளுக்கு சிந்துவெளி நுண்கலைகளே அடிப்படையெனக் கூறலாம். சிந்துவெளிக் கால கலையமைப்பு முறையானது
(
) கட்டிடக் கலை
(
) சிற்பக்கலை
(
) ஓவியக்கலை
(
) நடனக்கலை
(
) இசைக்கலை
என்றவாறு பிரிகையடைந்து காணப்பட்டன. அவற்றில் காணப்படும் கலைப்பண்புகள் பிற்கால இந்தியக் கலைகளுக்கு அல்லது இந்துக் கலைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன எனக் கொள்ள இடமுண்டு.


கட்டிடக்கலை
சிந்துவெளி மக்களிடையே வணக்கத்திற்குரிய பொது வழிபாட்டுத்தலம் இருந்தமைக்கு போதியளவு ஆதாரங்களில்லை. அங்கு காணப்பட்ட நீர்க்கேணிக்குத் தெற்கே சிறிது தூரத்தில் 200 x 100 நீள அகலமுடைய பெருங் கட்டிடம் ஒன்று காணப்படுகின்றது. அக்கட்டிடம் சமயச் சடங்கு பொருட்டு அமைக்கப்பட்டதாக இருக்கலாம் எனவும் அரண்மனையாகவும் அது இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. இருந்த போதிலும் அது இந்துக் கோயில்களில் காணப்படும் பெரு மண்டப அமைப்பு முறைக்கு ஒப்பானதாக உள்ளதனைக் கண்டு கொள்ள முடியும். பொதுவாகச் சிந்து வெளி கட்டிட அமைப்பு தொழில் நுட்ப முறைகள் மனித வாழ்க்கைக்குரியனவாக இருந்த போதிலும் அக்கட்டிட அமைப்பு முறைகளில் இடம்பெறும்
1.
கட்டிடங்களுக்கான தளங்கள்
2.
சதுர அமைப்பு முறை
3.
மேடையமைப்பு முறை
4.
மண்டப அமைப்பு
5.
தூண்கள் அவற்றிற்கான குழிகள்
6.
தரைகீழ் கட்டிடம் அமைக்கும் முறை
7.
படிகள் அமைக்கும் முறை
என்பன யாவும் இன்றைய இந்துக் கோயில் கட்டிடக் கலையமைப்பு முறையில் பின்பற்றப்படுகின்றன. நீர்க்கேணி அமைக்கும் முறை, தரைகீழ் கட்டிடம் அமைக்கும் முறைக்கும் அதனருகே காணப்படும் ஒய்வு சாலைகள் பிற்கால கோயில் முறையில் நீண்ட மண்டபங்கள் அமைப்பதற்கும் முன்னோடியாக இருந்தன. சிந்துவெளியில் காணப்பட்ட நடுமுற்ற வீடுகளில் காணப்படும் மேடை போன்ற அமைப்பு திராவிடக் கோயில் முறையில் கற்பக்கிரகம், தூண், விமானம் என்பனவற்றை அமைக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட மேடைகளைப் போன்றுள்ளது. எனவே திராவிடக் கட்டிடக்கலை மரபு முறைக்கு சிந்துவெளி கட்டிடக் கலை மரபுகளே அடிப்படையாக விளங்கியது எனக் கூறலாம்.

சிற்பக்கலை மரபு
சிந்துவெளி தொல்பொருட்களில் காணப்படும் உருவ இலட்சனைகள் (சுதீற்றைற்று இலட்சனைகள்) சுடுமண்ணிலான சிலைகள், சுதீற்றைற்று சிலைகள், வெண்கலப் படிமங்கள் என்பன இக்கால இந்து மதத்தில் காணப்படும் பல்வேறு சிற்ப அமைப்புக்களின் அடிப்படைகளாக அமைந்திருப்பதனை காணக் கூடியதா கவுள்ளன.
(
+ம்)
(1)
சுதீற்றைற்று உருவ இலட்சனைகள் இன்றைய இந்துக் கோயில்களில் காணப்படுகின்ற புடைப்புச் சிற்பத்திற்கு
(2)
கடுமண்ணிலான சிற்பங்கள், சுதீற்றைற்று சிலைகள் என்பன இன்றைய இந்துக் கோயில்களில் காணப்படுகின்ற தூபிகளில் இடம்பெறும் பொம்மைச் சிற்பங்கள், தெய்வ முகூர்த்தங்கள் என்பவற்றிற்கும் கோயில்களில் உள்ள தனிச்சிற்பங்களுக்கும்
(3)
வெண்கலப் படிமங்கள் இன்றைய கோயில்களில் காணப்படும் பெரும் வெண்கல விக்கிரகங்கள் தெய்வீகச் சிலைகள் என்பவற்றிற்கும் அடிப்படையாக விளங்குகின்றதனை கண்டுகொள்ள முடியும்

ஒவியக் கலை
சிந்து வெளி தொல் பொருட்களில் காணப்பட்ட ஓவியக் கலைகள் சமயச் சார்புடையனவாக காணப்பட்டன என்பதற்கு போதிய ஆதாரங்களில்லை. அகழ்வராய்ச்சியின் போது ஏராளமான மட்பாத்திரங்களில் பல்வேறு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவ்வோவியங்களில் காணப்படும் பல்வேறு அம்சங்களும் பிற்கால இந்து குகையோவியம், கோயில் சுவரோவியம் என்பவற்றோடு தொடர்புடையன. உதாரணமாக இந்தியகுகையோவியங்களான அஜந்தா ஓவியம், எலிபந்ரா, எல்லோரா, சித்தண்ண வாசல் முதலான ஓவியங்களில் காணப்படும்.
() இயற்கை வனப்பை சித்தரிக்கும் ஓவியங்கள்
(
) மனித வடிவங்கள்
(
) தெய்வ வடிவங்கள்
என்ற வரிசையில் சிந்துவெளி தொல்பொருட்களில் இயற்கை வனப்புக்கள், மனித உருவம் என்ற வகையில் மரங்கள், மலர்கள், மிருகங்கள், இலைக்கொத்துக்கள், பறவைகள், மீன்கள் என்பன இயற்கை வனப்புக்களுடனும் மீனவன் வலையை தோளில் சுமந்து செல்லும் காட்சி மனித உருவ அமைப்புடனும் தொடர்புடையன. இக்காலத்தில் தெய்வங்களின் வடிவம் ஓவியக் கலைகளில் இடம் பெற்றமைக்கான ஆதாரங்கள் இல்லையெனினும் அதன் குறைபாட்டினை தெய்வ வடிவங்களை சித்தரிக்கும் உருவ இலட்சனைகள் நிறைவு செய்திருத்தல் வேண்டுமெனக் கூறலாம்.

நடனக் கலை
சிந்துவெளி தொல்பொருட்களில் வெண்கலத்தால் செய்யப்பட்ட நடனமாதின் உருவம் சிந்துவெளி மக்களின் கலை உணர்வினையும் வெளிக் காட்டுகின்றன. இந்நடன வடிவம் பெண்மைக்குரியது. இதன் இடதுகை நிறைய வளையல்கள் காணப்படுகின்றன.இச்சிலை வழவழப்பாகவும் ஒழுங்காகவும் அமைந்துள்ளதாகும். இதனை ஆய்வு செய்த சில ஆராய்ச்சியாளர்கள் "கோயிலில் ஆடும் விலைமகளிர் (தேவ தாசியர்) குலத்திற்குரியவள்" எனக் கூறினர். ஆயினும் இக்கருத்து நிரூபிக்கக் கூடியதல்ல. ஆனால் அம்மகளிர் கோயிலில் ஓர் ஆடல் மகளிர் என்பது புலனாகும். றோவான்ட் எனும் ஆய்வாளர் இந்நடன கோலத்தினை சிவனது நடராஜகோலத்திற்கு அடிப்படையானது என்றார். சுந்தரம் என்ற அறிஞர் அது ஆராய்ச்சிக்குரியது என்று கூறுகின்றார்.

இசைக்கலை
நடனக் கலையோடு நெருங்கிய தொடர்புடைய இசைக்கலையும் சிந்துவெளி மக்களிடையே பயிற்சியான ஓர் கலை முறையாக விளங்கியது என்பதற்கு களிமண்ணிலான ஆணுருவத்தின் கழுத்தில் தொங்கும் மேளம், மிருதங்க அமைப்புடைய உருவினை சித்தரிக்கும் முத்திரைகள் வீணை வடிவில் அமைந்த ஓவியம், பாகவதர்கள் தாளமிடப் பயன்படுத்தப்படும் சப்பாளக் கட்டை, நுண்துளை இடப்பட்ட ஊதுகுழல் என்பன யாவும் அக்கால சமய மரபுகளுடன் தொடர்புடையன எனக் கூறக் கூடிய அளவிற்கு ஆதாரங்கள் இல்லாத போதும் இன்றைய இந்துக் கலைகளின் வளர்ச்சியடைந்த இசைக்கலைக்கு அல்லது இந்திய இசைக்கலை வளர்ச்சிக்கு இவை அடிப்படையாக உள்ளன. எனவே சிந்துவெளித் தொல்பொருட்கள் இன்றைய வளர்ச்சியடைந்த இந்துசமய மரபுகளின் பல்வேறு அம்சங்களான உருவ வழிபாடு, பல கடவுள் கொள்கை, கிரியை முறைகள், நுண்கலை மரபுகள் யாவற்றிற்கும் அடித்தளமாக அமைந்துள்ளதனை எடுத்துக் காட்டுகின்றன.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக