20.9.25

ஆரியச் சக்கரவர்த்தி கால சமய உணர்வு

ஆரியச் சக்கரவர்த்தி கால இலக்கியங்களில் சமய உணர்வு மேலோங்கிக் காணப்பட்டமைக்கான காரணிகளை சுருக்கமாக விளக்குக?

 

1.      இக்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாகக் காணப்பட்டனர். தமது ஆட்சி அதிகாரத்தைப் ஸ்திரப்படுத்த சமயத்தை ஓர் ஊடகமாகப் பயன்படுத்தினார்கள்.

2.      ஈழத்தின் பல பாகங்களிலும் சைவ ஆலயங்கள் கட்டப்பட்டும் புனருத்தாரணம் செய்யப்பட்டும் வழிபாடுகள் செய்யப்பட்டும் வந்தன. அவ்வாலயங்கள் மீது தலபுராணங்கள் பாடப்பட்டன.

3.      இந்தியாவில் இருந்து தமிழ் மொழி இலக்கியப் புலமை பெற்ற பிராமணர்கள் அரச ஆதரவோடு குடியேறினர். இக்காலத்தெழுந்த நூல்களுள் பெரும்பாலானவை பிராமணர்களாலேயே இயற்றப்பட்டன.

4.      தமிழகத்திற்கும் ஈழத்திற்குமான தொடர்புகள் நெருக்கமாக காணப்பட்டன. யாழ்ப்பாணத்துக்கும் காஞ்சிபுரத்திற்கும் இடையிலான நெருக்கமான தொடர்பு காணப்பட்டது.

-ம்:- கச்சிக கணேசையர் - யாழ்ப்பாணக் கூழங்கைத் தம்பிரான் தொடர்புகள்.

5.      யாழ்ப்பாண மன்னர் காலத்தில் ஈழநாட்டிலே காணப்பட்ட வழிபாட்டு மரபுகள் முக்கியம் பெறுகின்றன. முருக வழிபாடு ஈழநாட்டிலே வலிமை பெற்றிருந்தது. நல்லூர், மாவிட்டபுரம், கதிர்காமம், பொலிகண்டி, கந்தவனக்கடவை முதலானவை பெருமை பெற்றிருந்தன.

6.      சமயப் பற்றும் ஆர்வமும் நிறைந்த புலவர்கள் அக்காலத்தில் வாழ்ந்திருந்தனர்.

7.      அடிநிலை மக்களிடையே காணப்பட்ட வழிபாட்டு மரபுகளை இலக்கியங்கள் உள்வாங்கின. கண்ணகி வழிபாடு - கண்ணகி வழ்குரையாகவும் சிலம்பு கூறலாகவும் கோவலனார் கதையாகவும் பாடப்பட்டது.

8.      பெரும்பாலான புலவர்கள். இலக்கியங்களைப் கர்ண பரம்பரைக் கதைகளை படைத்தனர்.

உதாரணம்: திருக்கரைசைப் புராணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக