கருத்து சுதந்திரங்களும் ஊடகங்களும்
இன்றைய உலfpன் மனிதன் கருத்துக்களையும் எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் எதிர் பார்ப்புக்களையும் பிறிதொருவற்கு அல்லது ஒரு குழுமத்திற்கு அல்லது சமூகத்திற்கு தெரிவிப்பது கருத்து ஆகும் இதை தெரிவிப்பதற்கு உலகத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதனிற்குமுள்ள உரிமை சுதந்திரமாகும். எனவே உலகத்திலுள்ள மக்கள் தமது அபிப்பிராயங்களைத் தெரிவிக்கும் உரிமை கருத்து சுதந்திரமாகும். இத்தகைய கருத்துக்களைத் தெரிவிப்பதற்காக இன்றைய உலகில் பல ஊடகங்கள் பங்களிப்பு செய்கின்றன அதாவது கருத்துக்களைப் பகிரங்கபடுத்த மிக பொருத்தமான வழியாக ஊடகம் அமைகின்றது. எனவே கருத்து வெளிப்பாட்டிற்கு இன்றியமையாததாக ஊடகங்கள் அமைவது என்பது எவராலும் மறுக்க முடியாத, மறுக்க இயலாத உண்மை என்றால் அது மிகையாகாது.
ஆதிகாலத்திலிருந்து இன்றைய சமூகம் வரை எல்லா மட்டங்களிலும் ஒருவகையான தொடர்பு முறை இருந்துவருகின்றன. இத்தொடர்பு முறைகள் சமூகநடவடிக்கைகள் சீராகநடைபெறவும் பண்பாட்டு கையளிப்பினை மேற்கொள்ளவும் வழி ஏற்படுகின்றன. ஆதி காலத்தில் தூது முரசறைதல் என்ற நிலையிலிருந்து பாரிய மாற்றம் பெற்ற ஒன்றாக ஊடகங்களின் வளர்ச்சி அமைகின்றது. ஊடகங்களை நாம் அச்சூடகங்கள் என்றும் இலத்திரனியலூடகங்கள் என்றும் இரண்டு வகைப்படுத்தலாம். அச்சூடகம் ஈனும் போது பத்திரிகைகள் சஞ்சிகைகள் வெளியீடுகள் முதலானவற்றைக் குறிப்பிடலாம். இலத்திரனியல் ஊடகம் எனும்போது தொலைக்காட்சி வானொலி முகப்புத்தகம் என்பவற்றை குறிப்பிடலாம். இவை தாம் வளர்ந்ததோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் தேவையான அவசியமான கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் முன்னெடுத்துச் செல்வதற்கான பணியினை செய்கின்றன.
இன்றைய நவீன உலகில் ஊடகங்களின் பணி இன்றியமையாத ஒன்றாக அமைகின்ற இந்தவகையில் பொதுசனங்கள் மத்தியில் அபிப்பிராயங்களை ஏற்படுத் துவதில் ஊடகங்கள் பிரதானமாக பணியாற்றுகின்றன. கருத்துக்களையும் மக்களின் உண்மையான உலகளாவிய ரீதியில் இடம்பெறுகின்ற சம்பவங் களையும் வானிலை மற்றும் அறிவியல் சமூக பண்பாட்டு சமய அரசியல் அம்சங்களையும் நிலைமைகளையும் பொருளாதார நிலைமைகளையும் எடுத்து விளக்குவதே பொதுமக்களிற்கு உண்மை யானதும் நடுநிலையானதுமான வெளியிடுவதில் ஊடகங்களின் தகவல்களை பங்களிப்பு மகத்தானமாகும். ஆனால் இன்று ஊடகங்களில் கருத்து சுததந்திரத்திற்கு இடம் உண்டா என்ற கேள்வி எழத்தான் செய்கின்றது. எனவே இயலுமானவரை தமது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தக் கூடிய அளவிற்கு கருத்து சுதந்திரம் அமையவேண்டும் என்பதே எமது பேரவா ஆகும்.
இன்றைய நவீன உலகில் சுதந்திரமாக வெளிப்படுத்துவதன்மூலம் பல்வேறு கருத்துக்களை பயன்களை நாடும் நாமும் அடையக் கூடியதொரு நிலை உருவாகும். அந்தவகையில் ஊழல்கள் வன்முறைகள் துஷ்பிரயோகங்கள் அரசியல் ரீதியான பக்கசார்புகள் முதலியவற்றை இல்லாது ஒழித்து ஒரு சுபிட்சமான சமுதாயத்தை உருவாக்க இவ் ஊடகங்களுடாக வரும் கருத்து சுதந்திரங்கள் வழிசமைக்கும் எனலாம்.
அது மட்டுமன்றி மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் இவ் ஊடகங்களிலான கருத்து சமூக சுதந்திரம் பிரதான பணியாற்றுகின்றது. அது மட்டுமன்றி பல்லின சமூகம் வாழுகின்ற நாட்டிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இவ் ஊடகங்களின் பணி பிரதானமாக அமைகின்றது. சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்வதற்கும் வழி கோலுவதாக ஊடகங்கள் அமைகின்றன.
இவ்வாறு கருத்து வெளிப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு மிக சுதந்திரத்தை மகத்தானதாக உள்ளது. நாட்டின் ஜனநாயகத்தை மேம்படுத்துவதும் உறுதிப்படுத்தவும் ஆக அமைவது ஒரு நாட்டின் கருத்து சுதந்திரமே இத்தகைய மேம்பாட்டிற்கு உதவுவது ஊடகங்களே ஆகும். என்றால் அது மிகையாகாது. எனவே ஒரு நாடு ஜனநாயகமானதாகவும் சமாதானமாகவும் நீடித்து நிலைக்கக் கூடிய ஆளுமை பண்புடையதாகவும் மக்களையும் சமூகத்தையும் மாற்றுவதில் பெரும் சக்திமிக்க ஆயுதமாக திகழ்வது கருத்துச் சுதந்திரம் ஆகும். இத்தகைய கருத்து சுதந்திர வெளிப்பாட்டிற்கு ஊடகங்கள் பெரிதும் பங்காற்றுகின்றபோதும் உண்மைத் தன்மையில்லாத பொதுப்படையான கருத்துக்களை வெளியிடும் சந்தர்ப்பத்திலே அது நாட்டின் ஜனநாயக விரோத செயல்களிற்கும் அவற்றின் வெளிப்பாட்டிற்கும் ஊடகங்கள் பெரிதும் உந்து சக்தியா அமைந்து விடும். எனவே உண்மைகளை எடுத்துரைக்க நாட்டின் ஜனநாயக வழிக்கு ஊடகங்கள் பங்களிப்பு செய்யின் ஒரு கருத்து சுதந்திரம் மிக்க சமுதாயத்தை உருவாக்க முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக