ஒல்லாந்தர் கால இலக்கியப் பண்புகள்
ஒல்லாந்தர் கால இலக்கியங்களைக் கவனித்த பின்னர் அவ்விலக்கியங்கள் சுட்டும் இலக்கியப் பண்புகளை விரிவாக நோக்கலாம். ஒல்லாந்தர் கால இலக்கியங்கள் சமயப்பிரச்சார வாகனமாக அமைந்துள்ளன. போர்த்துக்கேயர் காலத்தில் விதைக் கப்பட்ட கத்தோலிக்கம் ஒல்லாந்தர் காலச் சமயப் பிரச்சாரத்தால் வேரூன்றி வளர்ந்து சிறப்புப் பெற்றது எனலாம். போர்த்துக்கேயர் காலத்தைவிட ஒல்லாந்தர் காலத்தில் நிலவிய மதச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் என்பவற்றால் இந்துமதப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது கத்தோலிக்க மதத்தை பிரச்சாரம் செய்வதாக திருச்செல்லவர் காவியம், யோசேப்பு புராணம் திருச்செல்வர் அம்மானை என்பனவும் இந்து மதத்தைப் பிரச்சாரம் செய்வதாக சிவராத்திரி புராணம் கிள்ளைவிடு தூது,
ஏகாதசிப் புராணம், வெருகல் சித்திரவேலாயுதர் காதல், பறாளாய் விநாயகர்பள்ளு போன்ற இலக்கியங்களை விதந்து குறிப்பிட்டுக் காட்டலாம்.
நாயக்கர் கால இலக்கியங்களின் பண்பாகிய சமய சார்பு, தத்துவச் சார்பு, பழமை போற்றும் பண்பு என்பன ஒல்லாந்தர் கால இலக்கியங்களிலும் இடம் பிடிக்கின்றது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களில் இந்து மத ஆசார அனுஷ்டானங்களுக்குத்தடை விதித்தும் இந்து ஆலயங்கள் இடித்தழித்துக் கொடுமைப் படுத்திய சூழ்நிலையே இருந்தது. இச்சூழ் நிலையில் தமிழகத்தில் இந்து மத நிறுவனங்களாகிய மடாலயம், ஆதீனம் என்பன மத வளர்ச்சிப் பணிகளுக்கு உதவியது போன்று ஈழத்தில் எவ்வித தாபனங்களும் உதவவில்லை. இச்சூழ்நிலையில் சமய வாழ் விலும் ஆலய வழிபாட்டிலும் நம்பிக்கை கொண்டு தளரா உள்ளத்தோடு மக்கள் உறுதியுடன் விளங்கியதால் இக்காலத்தில் தோன்றிய இந்து மதம் சார்ந்த இலக்கியங்கள் இந்து மக்களின் தேவையைப் பூர்த்திசெய்தன. இவற்றின் மூலம் ஆலயங்கள் எழுப்பப்பட்டு நித்திய பூசைகளும் விரதனுஷ்டானங்களும் மேற்கொள்ளப்பட்டன. இந்து மக்கள் சமயக் கருத்துக்களையும் தத்துவக் கருத்துக்களையும் தெரிந்துகொள்ளும் முகமாக இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.
அந்தாதி இலக்கிய வடிவம் செல்வாக்குப் பெற்றமை ஒல்லாந்தர் கால இலக்கியங்களின் சிறப்பம்சம் ஆகும். நல்லூர் சின்னத்தம்பிப் புலவரின் மறைசையந்தாதி, கல்வளையந்தாதி என்பனவும் மாதகல் மயில்வாகனப் புலவரின் புலியூர் அந்தாதி யும் ஈழத்தில் அந்தாதி இலக்கியத்தின் செல்வாக்கைக் காட்டு கின்றது. ஈழத்துப் புலவர்கள் அந்தாதி பாடுவதில் கைதேர்ந்தவர் கள் என்பதனை உலகுக்கு காட்டுவதாகவும் அமைந்துள்ளன என பேராசிரியர் ஆ. சதாசிவம் குறிப்பிடுவர். இவ்வந்தாதிகள் கடவுள் மீது பாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொது மக்கள் சார்பான இலக்கியங்கள் தோற்றம் பெற்ற மையும் ஒல்லாந்தர் காலத்திற்குரிய தனித்துவமாகும். ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலும், போர்த்துகேயர் காலத்திலும் சமய இலக்கிய நோக்கில் அமைந்த பள்ளுப் பிரபந்தம் ஒல்லாந்தர் காலத்தில் மக்களைப் பாடுவதாயிற்று. காரைக்காட்டிலிருந்து வந்து குடியேறிய கனகராய முதலியாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு சின்னக்குட்டிப் புலவரால் பாடப்பட்ட தண்டிகைக் கனகராயன் பள்ளு பொதுமக்கள்சார் இலக்கியமாக இக்காலத்தில் தோன்றியது. கரவெட்டியில் வாழ்ந்த வேலாயுத பிள்ளையைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட கரவைவேலன் கோவை என்ற கோவைப் பிரபந்தமும் பொதுமக்கள் இலக்கியமாக விளங்குகின்றது.
ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் தொடக்கம் ஈழத்து இலக்கியங் காலத்தில் அருகிக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்க சிறப்பம்ச களில் மலிந்து காணப்பட்ட வடமொழிச் செல்வாக்கு ஒல்லாந்தர் மாகும். ஒல்லாந்தர் காலத் தமிழ்ப் புலவர்கள் சொந்தக் கற்பனை யாற்றலின் உதவி கொண்டு இலக்கியம் படைத்தனரேயன்றி மொழிபெயர்த்து இலக்கியம் படைக்க விரும்பினரல்லர். இதனால் பழைய செந்தமிழ்ச் சொற்கள் ஒல்லாந்தர் கால இலக்கியங்களிலே வாழ்வு பெறுவதனை சின்னத்தம்பிப்புலவர் போன்றவர்களின் பாடல்களில் தெளிவாக அறிய முடிகின்றது.
உதாரணமாக
"மஞ்சளாவிய மாடங்கள் தோறும்
மயில்கள் போல் மடவார் கணஞ் சூழ"
எனப் பறாளாய் விநாயகர் பள்ளிலும்
"தென்னிலங்கை இராவணனைச் செய்யவிர லூன்றிப்
பின்னவன்ற னின்னிசையைப் பெட்புடனே கேட்டு வந்து
என சித்திரவேலாயுதர் காதலில் வரும் பாடல்களைச் சுட்டிக் காட்டலாம். தமிழகப் புலவர்கள் வடமொழி ஆதிக்கத்தின் தீமையை உணரும் முன் ஈழத்துப் புலவர்கள் உணர்ந்து விட்டனர் என பேராசிரியர் ஆ. சாதாசிவம் குறிப்பிடுவர்.
சமயப் பொதுமை பேணப்பட்டமை ஒல்லாந்தர் கால இலக்கியங்களின் சிறப்பம்சமாகும். கூழங்கைத் தம்பிரானால் ஆக்கப்பட்ட ஜோசேப்பு புராணம், சித்திர விநாயகர் திருவிரட்டை மணிமாலை, நல்லைக் கலிவெண்பா என்பன எம்மதமும் சம்மதமே என்ற தன்மையைக் காட்டுகின்றது.
வரலாற்றுச் சார்பைக் கொண்டிருத்தல் என்ற அம்சமும் ஒல்லாந்தர் கால இலக்கியங்களில் இடம்பெறுகின்றது. ஒல்லாந்தர் காலத்தில் தமிழ்ப்புலவர் பரம்பரை இருந்தமை கண்டே மாதகல் மயில்வாகனப் புலவர் யாழ்ப்பாண வைபவமாலை என்ற வரலாற்று நூலை வசன நடையில் எழுதினார். இவ்வம்சம் வசன இலக்கியம் தோன்றிய காலம் ஒல்லாந்தர் காலம் என்ற சிறப்பினையும் ஏற்படுத்துவதாயிற்று.
பல்துறை இலக்கிய வடிவம் தோற்றம் பெற்றமையும் ஒல்லாந்தர் காலத்திற்குரிய தனித்துவமாகும். காவியம், புராணம், தூது,
அம்மானை, காதல், அந்தாதி, கோவை,
பள்ளு, பதிகம், ஊஞ்சல், வரலாறு, நாடகம், விளக்க நூல்,
மருத்துவம், சோதிடம் முதலிய பல்வகை இலக்கியங்களும் வளர்ச்சியடைந்த காலம் ஒல்லாந்தர் காலமாகும்.
நாடக இலக்கிய வளர்ச்சி தோற்றம் பெற்ற காலம் ஒல்லாந்தர் காலமாகும். அலங்காரரூப நாடகம், மலையநந்தினி நாடகம், அதிரூபவதி நாடகம், வாளபிமன் நாடகம், நொண்டி நாடகம், அனிருத்தன் நாடகம் முதலிய நாடக இலக்கியங்கள் வளர்ச்சி யடைந்தமை முக்கிய அம்சமாக விளங்குகின்றது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக