எலியம்
1. எலிகளை விரட்டியடிக்க இக்கதை கூறும் கதாபாத்திரம் எடுத்த முயற்சிகள் எவை?
எலிகளை விரட்டியடிக்க அவன் பல முயற்சிகளைச் செய்தான. முதலில் எலிப்பொறி வைத்து எலிகளைக் கொல்ல முயற்சித்தான். அது தோல்வியில் முடியவே எலிப்பாஷணத்தை உணவுடன் கலந்து வைத்து எலிகளைக் கொல்ல முயன்றான் அதுவும் முடியாமல் போக பூனையை வளர்த்துப் பார்த்தான். இறுதியில் வீட்டிற்கு பின் இருக்கும் பாழ்வளவை தப்பரவு செய்து பார்த்தான் இவைகளே அவன் எலிகளை விரட்ட அவன் எடுத்த முயற்சிகளாகும்.
2. எலிகளை ஒழிக்க லோரன்ஸ் கூறிய அறிவுரைகள் எவை?
எலிப்பாஷணத்தை உணவுடன் கலந்து வைக்கும் முறையை லோரன்ஸ் அவனுக்கு சிபாரிசு செய்தார் மேலும் பூனையை வளர்த்தால் எலி கிட்டேயும் வராது என்று ஆலோசனை கூறினார்.
3. அருவருக்கும் ஜீவராசிகளை ஒழிக்க அவன் இறுதியாக எடுத்த முடிவு என்ன?
அவனது வீட்டிற்கு பின்புறமிருக்கும் பாழ்வளவை சுத்தப்படுத்திவிட்டால் அருவருக்கும் ஜீவராசிகளை ஒழித்துவிடலாம் என்று அவன் நினைத்து பாழ்வளவை சுத்தப்படுத்தினான்.
4. இக்கதாபாத்திரம் எலித்தொல்லை குறித்து ஆலோசனை கேட்க லோரன்ஸை நாட காரணங்கள் என்ன?
அவன் ரோலன்ஸை நாடக் காரணம் கோழி, உடும்பு, காட்டெருமை முதலிய ஜீவராசிகளோடெல்லாம் போராட்டம் நடத்தும் லோரன்ஸ்க்கு எலி ஒரு அற்ப அற்ப விஷயம் என்று நினைத்து வேட்டையாடுவதில் சாமர்த்தியசாலியான லோரன்ஸை நாடினான்,
5. கூலிக்காரர்களின் சாமர்த்தியம் யாது?
பாழ்வளவை முற்றுமுழுதுமாக துப்பரவு செய்துவிட்டால் தமக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்று நினைத்து அவர்கள் வேர்களை மண்ணுக்குள் விட்டுச் சென்றதனால் மீண்டும் பச்சைகள் தலை தூக்கியிருந்தன. இது கூலிக்காரர்களின் சாமர்த்தியம் நிறைந்த செயலாகும்..
6. இக்கதையில் குறிப்பிடப்படும் விஞ்ஞானியின் பெயர் என்ன?
ஆர்கிமிடீஸ்
7. எலிப்பொறி மீது அவன் நம்பிக்கை இழக்கக் காரணமான சம்பவம் யாது?
எலிப்பொறி வைக்கப்பட்டிருந்தும் அவனது சட்டை எலியால் குதறி எடுக்கப்பட்டிருந்தது எலிப்பொறி வைத்த இடத்திலேயே இருக்க, அதிலிருந்த கருவாடு மட்டும் காணாமல் போயிருந்தது. இதனால் அவனுக்கு எலிப்பொறி மீது அவநம்பிக்கை தோன்றியது.
8. இக்கதையின் தலைப்பின் பொருத்தப்பாட்டினை விளக்குக.
இக்கதையின் தொடக்கம் முதல் கதையின் இறுதி வரை எலியை மையமாக வைத்தே கதை சுழல்வதால் 'எலியம்' எனும் தலைப்பு இக்கதைக்கு மிகப் பொருத்தமாய் அமைகின்றது.
9. கதையை வளர்த்துச் செல்ல கதையாசிரியர் கையாண்ட உத்திகள் எவை?
1. நகைச்சுவையும் கிண்டலும் நையாண்டியும் கலந்த மொழி நடை
2. ஆங்கில மொழிக்கலப்புச் சொற்கள் காணப்படுகின்றமை.
உ-ம் : ஸ்டெதெஸ்கோப், குளோஸ், வோல்ட், டிஸ்னி, மிக்சிமவுஸ், கொன்வென்ர், பௌடர்.
பேக்கரி, கேக், ஜேம்ஸ் பாண்ட்
3. வடமொழிச் சொற்கள் கலந்த மொழிநடை
உ-ம் : சாகஸம், அவஸ்தை, நாகாஸ்திரம், எலிப்பாஷணம்
4. உவமைச் சொற்றொடர்கள் காணப்படுகின்றமை
உ-ம் : வாய் திறந்து காத்திருக்கும் முதலைபோல, விரிந்த மலர் போல
5. அணிகள் காணப்படுகின்றமை
உவமைஅணி காண்னுக்கு கிடைத்த நாகாஸ்திரத்தை ஒத்த எலிப்பொறி
உருவக அணி அதழி நிய முதலைகளும் கோட்டையின் அரண்கள் தோரும் ஆத்தம் Αυτεύσεις και Δεύθυς τους βασι
இடைக்கிடையே உரையாடங்கள் கையாளுகின்றமை
10. "முதலில் செய்ய வேண்டிய காரியத்தை கடைசியில் செய்திருக்கின்றோம்" என்று கூறப்பட்டது ஏன்? விளக்குக.?
எலிகள் மட்டுமல்ல அருவருக்கும் ஜீவரசிகன் தங்கியிருக்கும் வீட்டிற்கு பின்புரத்திலுள் முதலிலேயே சுத்தம் செய்திருந்தால் எவிதனால் ஏற்பட்ட அவஸ்தைகளை அனுபவிக்க தேர்ந்திரு ஏனெனில் எலிப்பொறி எலிப்பாஷணம் பூனை வளர்த்தல் போன்ற முயற்சிகள் தற்கா தந்தன. நிரந்தர தீர்வான அவற்றின் வாழ்விடங்களை முதலிலேயே கண்டுபிடித்து அழித்திருந்தும் இவ்வளவு துன்பதுயரங்களை அனுபவிக்கத் தேவையில்லை என்பதற்காகவே இவ்வாறு கூறப்பட்டது
அ. "அவுஸ்திரேலியாக் கண்டத்தை ஞாபகப்படுத்தும் ஒரு கிழிசல் சட்டைப்பை இருக்கும் இடத்தில் இருந்தது"
ஆ "எலிகள் எல்லாம் சைவத்தைத் தழுவி விட்டனவா?"
இக்கூற்றுக்களால் நீர் விளங்கிக் கொள்வது யாது?
அ. சட்டைப்பை இருந்த இடம் எளியினால் குதறப்பட்டிருந்ததால் அவ்விடத்தில் பெரிய பொத்தம் ஒன்று உண்டாகியிருந்தது என்பதனையே இக்கூற்று விளக்கி நிற்கின்றது.
ஆ எலிப்பொறியில் கருவாடு வைக்கப்பட்டிருந்தும் எமி அதனை உண்ணவில்லை பலியி கைவிடப்பட்ட கருவாட்டுத் துண்டை ஏறும்புகள் மொய்த்திருந்ததைக் கண்டதனாலேயே எலிகள் சையத்தைத் தழுவிவிட்டனவோ என்றெண்ணினான் என்பதனையே இக்கூற்று வி நிற்கின்றது.
11. எலிகள் பற்றிய விபரிப்பில் இழையோடும் அங்கதத்தினை கருக்கமாக விளக்குக.
'எலியம்' எனும் சிறுகதையில் பல இடங்களில் எலிகள் பற்றிக் கூறுகையில் அங்கதச்சுவை விரவ காணலாம்.
புத்தம் புதிதாக வாங்கிய மணச்சவர்க்காரத்தை எலி அபகரித்துச் சென்றதை எலிலாவுக்காக அதாவது தனது மனைவிக்காகவோ காதலிக்காகவோ கொண்டு போய்ச் சேர்த்ததாகக் கூறுவதில் நகைச்வையுணர்வு கலந்துள்ளது.
மேலும், கட்டில் என்பதை தச்சர்கள் படுப்பதை உத்தேசித்தே செய்திருப்பார்கள். அவன் இவ்விதம் துள்ளிக் குதிப்பான் என முன்னரே தெரிந்திருந்தால் இன்னமும் பலமான மரத்தைக் கட்டில் செய்த தச்சன் இவனுக்காக தேர்ந்தெடுத்திருக்கக்கூடும் என்று கூறுவதிலும் அருவருக்கும் ஜீவராசிகள் வசிக்கும் பாழ்வளவுக்குள் இருந்த கார் இந்த நாடு இறக்குமதி செய்த முதல் நூறு கார்களுள் ஒன்றாக இருந்திருக்கும் என்று கூறுவதிலும் அங்கதச்சுவை பரவியுள்ளது.
எலிப்பொறி தயாரித்த நாட்டின் பெயரைக் கேட்கையில் இந்த உலகுக்கும் அப்பால் பல கிரகங்களிலும் எவ்வளவு சாதனை புரிந்தவர்கள் அந்நாட்டினர் என்று எண்ணி எலிப்பொறியை வாங்கிக்கொண்டபோதும்
எலிப்பொறியை கழுவித் துடைக்கும்போது அவற்றுடைய ரத்தத்தின் வாடைகூட ரத்தத்தின் ரத்தங்களுக்கு' வீசக்கூடாது என்று கவனமாயிருந்தான் என்று கூறுவதிலும் அவனது நேசத்துக்குரிய சட்டையை எலி குதறியபோது சட்டைப்பை இருந்த இடத்தில் அவுஸ்திரேலியாக் கண்டத்தை ஞாபகப்படுத்தும் கிழிசல் தோன்றியிருந்தது என்று சூறுவதிலும் உலகத்திலுள்ள கெட்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லி எலியை திட்டித் தீர்த்ததாகக் சூறும் போதும் நகைச்சுவையுணர்வு மேலோங்கி நிற்கின்றது.
மட்டுமன்றி சவரம் செய்யாத முகத்துடன் எலிப்பாஷணம் வாங்கச் சென்றபோது 'எலிக்குத்தானே' என்ற ஒரு அபத்தமான கேள்வியுடன் கடைக்காரன் மருந்துப் போத்தலைத் தந்தான் என்று கூறும்போதும், எலிகளை ஒழிக்க ஆலோசனை கேட்க லோரன்ஸை நாடியபோது லோரன்ஸ் கோழியை உரித்துக் கொண்டிருந்தார். அரைக்கால் பங்கு உயிருடன் கோழி மன்றாடிக் கொண்டிருந்தது என்று கூறுவதிலும் தமிழ்ப் பெயர்கள் செல்லப் பிராணிகளுக்கு பொருந்துவதில்லை (தேவருடைய படங்களைத் தவிர) எனவே ஆங்கிலப் பேரை தனது பூனைக்கு சூட்டியதாகக் கூறியபோதும், எலி கருவாட்டை உண்ணாததற்கு எலிகளெல்லாம் சைவத்தை தழுவி விட்டனவா? என்று கேட்பதிலும் அங்கத உணர்வு விரவி நிற்கின்றது.
இவ்வாறு இக்கதையில் ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை எலிகள் பற்றிய விபரிப்பில் அங்கதச்சுவை இழையோடி நிற்கக் காணலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக