16.9.25

போர்த்துக்கேயர் கால இலக்கியப் பண்புகள்

போர்த்துக்கேயர் கால இலக்கியப் பண்புகள்

போர்த்துக்கேயர்
கால இலக்கியங்களைக் கொண்டு அவை சுட்டுகின்ற இலக்கியப் பண்புகளைக் கவனிக்கும் போது போர்த்துக்கேயர் கால இலக்கியங்களில் வட சொற்கள் விரவி வருதலைக் காணமுடிகின்றது. அண்டகோளம், ரூபலங்காரம், ஏகமாகி, திரித்துவமாகி, ஜெகத்தில் போன்றனவும் இன்னும் பலவுமான வடசொற்கள் ஞானப்பள்ளிலும் ஆரியர் கோத்திரத் தோன், அந்தமுடன், இரத்தினம், சூரியன் போன்றன வும் இன்னும் பலவுமான வட சொற்கள் அர்ச்சயாகப்பர் அம்மானை யிலும் இடம்பெற்றிருப்பதனை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட லாம்.

பேச்சு வழக்குச் சொற்களை கையாளும் போக்கு போர்த்துக் கேயர் கால இலக்கியங்களிலே உலா வருவது குறிப்பிடத்தக்க தாகும். துண்ட வெண்பிறைச் சூரியனும் மண்ணும் தோற்றவே எனவும் அண்டர் நாதன் திருத்தோளிலே வைத்து எனவும் தெருவு நீள நிழல் கொண்டு எனவும் தெருக்கள் மீது அழுது முன் சென்ற எனவும் ஞானப்பள்ளி லும் "இக் கதையைப் பாடியது என்னுடைய ஆசிரியன்" எனவும் "மாணிக்கச் செப்பே வயிர மணிவிளக்கே எனவும் ஆராரோ ஆராரோ அன்பனே பள்ளி கொள்ளாய் எனவும் "சன்னாசிமார்கள் சலிப்பின்றி இங்கு வந்து எனவும் பன்னு தமிழ்ப் பாடும் பாவலர்கள் வாழியவே. எனவும் "கொன்றாலும் விட்டாலும் எனவும் அர்ச்சயாகப்பர் அம்மானையில் வரும் சொற்களையும் குறிப்பிடலாம்.

போர்த்துக்கேயர் காலத்தில் செந்தமிழ், கொடுந்தமிழ் என தமிழ் வேறுபாடு மக்களால் உணரப்பட்டிருந்தமை அக்கால இலக்கியங் கள் மூலம் தெரிய வருகின்றது. "செந்தமிழாற் பள்ளினிசை தேனுலகிற் பாடுதற்கு" என ஞானப்பள்ளிலும் "செந்தமிழைப் புன்றமிழாற் செப்பத்துணிந்து கொண்டு" என்றும் "கீர்த்தியுள்ள செந்தமிழாற் கிளத்தினார் இக்கதையை எனவும் "செந்தமிழினா லறிய செப்பினார் யாவருக்கும்" எனவும் அர்ச்சயாகப்பர் அம்மானையில் வரும் அடிகளை நோக்கும்போது செந்தமிழ், கொடுந்தமிழ் வேறுபாடு புலனாகின்றது.

கத்தோலிக்க மதப்பிரச்சாரமாக அமைதல் போர்த்துக்கேயர்கால இலக்கியங்களின் சிறப்பம்சமாகின்றது. "சீருக்குகந்த திரித்துவ ஏகனைச் சிந்திப்பவர் ஆருக்கு முந்திப் பரலோக நன்மை யடைவார்களே" எனவும் "ஏகநாதன் பிறந்தே வளர்ந்து எமக்கே வேண்டி இறந்தே வுயிர்த்து" என ஞானப்பள்ளிலும்

"
பாதகத்தை விட்டொதுங்கி பராபரனை நெஞ்சில் வைத்து தீதற்று உலகர்கதி சேர்ந்தென்றும் வாழியவே" என அர்ச்சயாகப்பர் அம்மானையும் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டலாம்.

போர்த்துக்கேயர் கால இலக்கியங்கள் கத்தோலிக்க மதப் பிரச்சார இலக்கிங்களாக அமைந்ததனால் அவ்விலக்கியங்களில் கூறப்படும் கத்தோலிக்க மதக் கருத்துக்களும் கத்தோலிக்கப் புனிதத் தலங்களின் வர்ணனைகளும் "ஜெருசலேம்" "றோமாபுரி ஆகிய மேலைத்தேசங்களைப் பற்றியே சித்திரித் துள்ளன. "தேவலோகந் திறந்து முன்காட்டும் ஜெருசலைத் திரு நாடெங்கள் நாடே" என ஜெருசல நாட்டின் சிறப்பினை மூத்தபள்ளியும் "ஊற்றுலாவு கருணை விளங்கும் றோமாபுரி நாடெங்கள் நாடே" என றோமாபுரியின் சிறப்பினை இளைய பள்ளியும் குறிப்பிடுவதனைச் சுட்டிக் காட்டலாம்.

பண்ணைத் தோன்றிய எண் நான்கு கிழவியும் எனத் தொல்காப் பியரினால் விதந்து கூறப்பட்ட சாதாரண நாட்டார் இலக்கிய வடிவங்களைக் கொண்டு விளங்குதல் போர்த்துக்கேயர் கால இலக்கியங்களின் சிறப்பாகும். மணிவாசகரால் பக்தி இலக்கியத் திற்கு பயன்படுத்தப்பட்ட அம்மானை என்ற வடிவம் ஈழத்தில் போர்த்துக்கேயர் காலத்தில் பேதுருப்புலவரால் அர்ச் யாகப்பர் அம்மானை பாடுதற்குப் பயன்படுத்தப்பட்டது. அம்மானை நாட்டார் இலக்கிய வடிவமாக அமைவதால் இனிய ஓசையும், விழுமிய நடையுமுடையதாக விளங்குகின்றது.

போர்த்துக்கேயர் காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் ஈழத்திற்குரிய தேசியப்பண்புகள் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மேலைத் தேசத்தின் மதமாகிய கத்தோலிக்க மதக் கருத்துக்களையும் மேலைத்தேச மக்களின் வாழ்க்கை முறை களையும் சித்தரிப்பதால் ஈழநாட்டுக்குரிய தேசியக் கருத்துக்கள் இடம்பெற முடியாது போய்விட்டது எனலாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக