மென்மையே வாழும்
1. டார்வினதும், கன்ஃபூஷியஸினதும் கூற்றுக்களாக இங்கு குறிப்பிடப்படுபவை எவை?
வாழ்க்கை என்பது போராட்டம். இதில் வலிமையானவை வாழும் என்பது டார்வினது கூற்றாகும்.
மென்மையானவையே நீண்ட நாள் வாழும் என்பது சீன ஞானி கன்பூஷியஸினது கூற்றாகும்.
2. சீடர்களுக்கு குருவின் கடைசிச் செய்தியாக அமைந்தது எது?
வலிமையானவை சீக்கிரம் அழிந்துவிடும். மென்மையானவை நீண்டநாள் இருக்கும். எனவே நீங்களும் மென்மையானவர்களாக இருங்கள். நீண்ட நாள் வாழ்வீர்கள். என்பதே குருவின் கடைசிச் செய்தியாக அமைந்தது.
3. மென்மையானவற்றை வன்மையானவை ஒருபோதும் வெல்லாது என்பதற்கு ஆசிரியர் கூறும் எடுத்துக்காட்டுக்கள் எவை?
வயதானால் வன்மையான பற்கள் விழுந்து விடுகின்றன. மென்மையான நாக்கு விழுவதில்லை.
வலிமையான அணைகளை மென்மையான நீர் தகர்த்துவிடுகிறது. வன்மையான நெருப்பை மென்மையான நீர் அணைத்து விடுகிறது.
புயலினால் வலிமையான மரம் விழுந்துவிடுகிறது. மென்மையான நாணல் தப்பித்து விடுகிறது.
பூகம்பத்தில் வலிமையான வீடுகள் உடைய மென்மையான சிலந்திவலை தப்பித்து விடுகிறது.
வன்மையான கல்லை மென்மையான வேர் பிளந்துவிடுகிறது.
வன்மையான வெப்பம் பாயாத தூரத்துக்கு மென்மையான ஒளி பாய்ந்து விடுகிறது.
வன்மையான பொருட்கள் நுழைய முடியாத இடங்களில் மென்மையான நீர் நுழைந்து விடுகிறது.
போருக்கு வலிமையானவர்களே அனுப்பப்படுகிறார்கள். மென்மையானவர்கள் தப்பித்து விடுகிறார்கள்.
வலிமையான ரவுடிகள் செத்துப் போகிறார்கள். மென்மையானவர்கள் நீண்டநாள் வாழ்கிறார்கள்.
வலிமையான ஆங்கிலேயரின் படையை காந்தியின் மென்மையான அகிம்சை குணம் வென்றது.
கொடியவர்களையும் இசை மென்மையாக்கி விடுகின்றது என்று மென்மையின் சிறப்பு எடுத்துக் கூறப்படுகிறது.
4. இங்கு பைபிளில் இருந்து எடுத்துக்காட்டப்பட்ட மேற்கோள் யாது?
வாளை உருவியவன் வாளாலே சாவான்
5. அஹிம்சை வென்றதற்கு பத்தியாளர் காட்டும் வரலாற்று உதாரணம் யாது?
ஆங்கிலேயரின் வலிமையான படைகளை காந்தியடிகளார் தனது அஹிம்சையால் வென்றதை வரலாறு காட்டுகிறது.
6. பாலைப்பண் பற்றி முடத்தாமக் கண்ணியார் பொருநராற்றுப் படையில் கூறுவது யாது?
வழிப்பறிக் கொள்ளையர்களின் கொடிய மனத்தையும் மாற்றி ஆயுதங்களைக் கீழே போட்டுவிடச் செய்யும் வல்லமை வாய்ந்தது என்று பாலைப்பண்பற்றி குறிப்பிடப்படுகின்றது.
7. ஆணின் வன்மை பெண்ணின் மென்மையிடம் தோற்றுப் போவதை எவ்வாறு காட்டுகிறார் ?
ஆண் வன்மையானவன். பெண் மென்மையானவள் என்பது இயற்கை நியதி. ஆனால் புறவயமாகவே பெண்ணை ஆளமுடியும், ஆனால் பெண்ணோ அகவயமாக ஆணை ஆளுகிறாள். பெண் ஆணை அன்பால் வென்றுவிடுவாள். மாவீரன்கூடதனது வலிமை பெண்ணின் பார்வை அம்பு பட்டு தோற்றுப் போய்விட்டதே என்று அலறுகிறான். இவற்றின் மூலம் ஆணின் வன்மை பெண்ணின் மென்மையிடம் தோற்றுப் போவது எடுத்துக்காட்டப்படுகிறது.
8. பெண்ணின் பார்வை அம்பின் வலிமை வள்ளுவரால் எவ்விதம் விளக்கப்பட்டுள்ளது?
போர்க்களத்தில் மாவீரர்களையும் பகைவர்களையும் வென்ற மாவீரன் பெண்ணின் பார்வை அம்பு தன் மீது பட்டதால் தனது வலிமை பெண்ணின் முக அழகுக்கு முன் தோற்றுப் போய்விட்டதாக அலறுவதை காமத்துப்பாலில் வள்ளுவர் மிக அழகாகக் காட்டுவதன் மூலம் பெண்ணின் பார்வை அம்பின் வலிமை புலனாகிறது.
மாகும்.
9. மென்மை தீர்க்காயுசுடன் வாழும் என்று ஆசிரியர் கூறக்காரணம் என்ன?
ஏனெனில் வன்மையின் வெற்றிக்கு வரலாறு எனும் மயானத்தில் மட்டுமே இடமுண்டு. ஆனால் மென்மையின் வெற்றிக்கோ அழியாத காவியங்களில் இடமுண்டு. ஆகவே வன்மைக்கு அற்பாயுசு மென்மை தீர்க்காயுசுடன் வாழும் என்கின்றார் ஆசிரியர்.
10. உண்மையில் மென்மையே வன்மையானது என்பதை விளக்க ஆசிரியர் கையாண்ட உத்திகள் யாவை?
சீனஞானி கன்பூஷியஸினது கருத்துக்களை ஆதாரமாகக் கொள்ளுதல்.
குருவுக்கும் சீடனுக்கும் நடந்த உரையாடலை எடுத்துக் காட்டாகக் கொள்ளுதல்
ஆங்கிலச் சொற்களை இடையிடையே புகுத்தல்.
வன்மையானவற்றுக்கும் மென்மையானவற்றுக்குமிடையில் காணப்படும் வேறுபாடுகளை சுட்டிக்காட்டல்.
சங்ககால இலக்கியமான பொருநராற்றுப்படையிலிருந்து பாடலடி ஒன்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளுதல்.
திருக்குறள் காமத்துப் பாலிலிருந்து மென்மைக்கான உதாரணம் ஒன்றைக் கையாளல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக