24.9.25

A/L தமிழ்த்தொண்டு வினா விடை:

தமிழ்த்தொண்டு வினா விடைகள்:

 

1. தமிழ்த்தொண்டு என்ற இக் கட்டுரையில் ஆசிரியர் சொல்ல வந்த விடயம் என்ன?

பிற தேசத்தவர்களுக்கு இணையாக நாமும் நமது மொழியும் வாழ வேண்டுமாயின், பழந்தமிழ் இலக்கியங் களினதும் உத்தமக் கவிஞர்களினது கருத்துக்களின் பெருமை யையும் உணர்ந்து, பிறமொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்து தமிழ்த்தொண்டு புரிதல் வேண்டும்.

2. இதனை எவ்வாறு கட்டுரையில் எடுத்துரைக்கின்றார்?

  தமிழ்மொழியின் பழைய கால சிறப்புக்களையும் தமது காலத்து தமிழ்மொழியின் நிலமைகளையும் ஒப்பு நோக்கிக் கூறுதல்.

  தமிழ்மொழி வளர்ச்சியுற வேண்டுமாயின் பிறமொழியில் உள்ள தகுதியான நூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதை பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி விளக்குதல்.

  கருத்துக்களை வலியுறுத்துவதற்கு தர்க்க ரீதியான நியாயங்களையும் எடுத்துக்காட்டுக்களையும் கூறுதல்.

  வாசகரை முன்னிலைப்படுத்திக் கூறுதல்.

  வாசகரிடையே மொழிப்பற்றினை ஏற்படுத்தும் வகையில் கவர்ச்சிகரமான மொழிநடையினைப் பின்பற்றுதல்

3. தமிழ்மொழியின் பெருமை பற்றி விபுலானந்த அடிகளார் கூறுவனவற்றை தெளிவுறுத்துக?

  முடியுடை மூவேந்தரால் போற்றப்பட்ட மொழி.

  அகத்தியர் முதலான புலவர்களால் முச்சங்கங்களினாலும் ஆராயப்பட்ட மொழி.

  இவ்வுலகில் வழங்கும் மொழிகளில் காலத்தால் முன் தோன்றிய மொழி

  இரண்டு கோடி மக்களால் பேசப்பட்டு வரும் உயிருள்ள மொழியாக விளங்குதல் மொழியாக விளங்குதல். (இன்று பத்துக்கோடி மக்களால்)

  தமிழகம், இலங்கையில் மட்டுமன்றி தென்னாபிரிக்கா, மத்திய அமெரிக்கா, மலாயா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பேசப்பட்டு வரும் மொழியாக காணப்படுதல்.

  தொண்டர் நாதனைத் தூதிடைப் போக்கிய மொழியாக விளங்கியமை.

4. பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக கட்டுரை ஆசிரியர் கூறுமாற்றினை விளக்குக?

  வாழ்க்கையின் மர்மத்தை அறிந்துகொள்வதற்குப் பயன்படுவன.

  புறநானூறு, சீவகன் சரிதை, கம்பராமாயணம் முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் இயல்புடையன.

  பழந்தமிழ் இலக்கியங்களின் வழி நின்று வாழ்க்கையை நடாத்துபவன் உயர்நிலையை அடையமுடியும்.

  பழந்தமிழ் இலக்கியங்கள் காலத்திற்கு காலம் புதிதாக தோன்றியமையால் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த உதவுவன.

5. தமிழ்மொழி வளர்ச்சியுற விபுலாநந்தர் கூறும் தமிழ் தொண்டு பற்றி எடுத்துரைக்குக?

  முதலில் தமிழ்மொழிக்கு வணக்கம் செலுத்துதல் வேண்டும்.

  தமிழ்மொழிக்கு தொண்டு செய்ய வேண்டும் என மக்களிடம் ஆர்வமூட்ட வேண்டும்.

  பிறநாட்டிலே உள்ள நல்லறிஞர்களின் சாத்திரங்களை தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்.

  அழிவில்லாத புகழுடைய புதிய விஞ்ஞான நூல்களை தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.

  நான்கு திசைகளுக்கும் சென்று தமிழ் கருவூலத்தில் கிடக்கும் மணிகளை வெளிக்கொணர்ந்து பிறர்க்கு உணர்த்த வேண்டும்.

  எளிமையான நடையில் உயர்ந்த சாத்திரங்கள் எழுதுவிக்கப்படல் வேண்டும்.

  உடலுக்கு வலிமையும் மனதுக்கு உறுதியும் தரத்தக்க எண்ணங்களை தமிழ் நாடெங்கும் பரப்புதல் வேண்டும்.

  வடமொழியில் உள்ள நூல்கள் பல தமிழில் மொழி பெயர்க்கப்படவேண்டும்.

6. உத்தமக் கவிஞர்கள் தொடர்பாக அடிகளார் கூறுவனவற்றை குறிப்பிடுக.

  வாழ்க்கையின் இரகசியங்களை ஊடுருவி நோக்கும் ஆற்றல் உத்தமக் கவிஞர்களிடையே உள்ளன.

  உத்தமக் கவிஞர்களது கருத்துக்கள் உண்மை வழி நின்று வாழ்க்கையில் உயர்நிலை அடைய உதவும்.

  கலைமகளின் கடாட்சம் பெற்ற இவர்கள் பிரம்மாவைப் போல புதிய புதிய கருத்துக்களை உருவாக்கும் வல்லமை உடையவராவர்.

  இவர்களது நோக்கம் உயர்வடையும்போது செயல் உயருகின்றது. செயல் உயர்வடைய வாழ்க்கையும் உயர்வடைகின்றது.

  மாறும் சமூக நிலைக்கேற்ப கருத்துக்களை எடுத்துச் சொல்லும் ஆற்றல் இவர்களுக்கு உள்ளது.

  உத்தமக் கவிஞர்களது பாடல்கள் நாட்டிற்கு புத்துயிர் அளிக்கவல்லன.

  இடைக்காலத்தில் தமிழ்மொழி வளர்ச்சியில் பின்னடைவு

7. ஏற்பட்டமைக்கு அடிகளார் கூறும் நியாயங்கள் யாவை?

  அரசியல் மாற்றம் - இந்தியா ஆங்கிலேயரால் ஆளப் பட்டமை.

  பிறமொழி ஆட்சிபெற்றமை மொழியாக இருந்தமை. ஆங்கிலம் அரசகரும் தமிழறிஞர்கள் தமிழ்மொழி வளர்ச்சியில் சோர்வுற் றிருந்தமை.

8. வடமொழி நூல்கள் தொடர்பாக அடிகளார் கூறுவனவற்றை தெளிவுறுத்துக?

  தமிழ்மொழி வளர்ச்சிபெற வேண்டுமானால் வடமொழி நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டும்.

  மேல்நாட்டார் வடமொழியிலுள்ள தத்துவ நூல்களை மொழிபெயர்த்து எழுதி தமக்கு உரிமையாக்கிக் கொண்டுள்ளனர்.

  வடமொழியிலிருந்து சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் ஏற்ற சில புராணக் கதைகளுமே மொழிபெயர்க்கப்பட்டன.

  வடமொழியில் உள்ள சிற்பம், இரசாயனம், ஆயுள் வேதம், கணிதம், தர்க்கம், அர்த்த வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம் போன்ற பலதுறை நூல்களை தமிழிலும் மொழிபெயர்க்க வேண்டும்.

  நியாயம், வைசேடியம், சாங்கியம், யோகம், உத்தர மீமாம்சை, பூர்வ மீமாம்சை போன்ற நூல்களை மொழி பெயர்த்தால் தமிழ்மொழி வளர்ச்சியுறும்.

9. இக் கட்டுரையில் விபுலாநந்தரின் மொழிநடைச் சிறப்பினை ஆராய்க?

  பொதுவாக விபுலாநந்தரின் மொழிநடை புலமை நடை என்று கூறுவதே வழக்கம். ஆயினும் இக்கட்டுரை எளிமையும் ஒழுகிசை நிறைந்த செந்தமிழ் நடையாக அமைந்துள்ளது.

  தமிழ் இலக்கண மரபினை கண்ணெனப் போற்றும் வகை யில் மொழிநடை அமைந்துள்ளது. எந்த வாக்கியத்தை எடுத்தாலும் எழுவாய், பயனிலை, சொல்லியைபு என்பவற்றில் வழுவற்றதாக உள்ளது.

  வாரீர் சகோதரர்களே என வாசகரை முன்னிலைப் படுத்தியே கட்டுரையின் மொழிநடை அமைந்துள்ளது.

  வாசகரிடையே தமிழ்மொழியின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கவர்ச்சிகரமான மொழியாட்சி பின்பற்றப் பட்டுள்ளது. உதாரணமாக அன்னையாகிய தமிழ்மாது விழித்தெழுந்த சிறப்பினைக் கண்ட பாவலரும் நாவலரும் இவளுக்குத் திருப்பள்ளி எழுச்சி கூறுகின்றனர். 'காரிருட் காலம் கழிந்துவிட்டது' என்ற பகுதியைக் குறிப்பிடலாம்.

  கட்டுரையின் பெரும்பாலான இடங்களில் நீண்ட வாக்கியங்களின் பயன்பாடே இடம்பெற்றுள்ளது. சில இடங்களில் மிகச்சிறிய வாக்கியங்களும் இடம் பெற்றுள்ளன.

  சொல்லாட்சி தூய தமிழ் சொற்களாக இலக்கிய வழக்குச் சொற்களாக இடம்பெற்றுள்ளன. எனினும் நூற் பெயர்கள் சில வட சொற்களாக அமைந்துள்ளன.

  கருத்துக்களை கூறுவதற்கு மொழிநடையில் இடை யிடையே பாரதியாரின் கவிதை, தர்க்க ரீதியான நியாயம் காட்டல் காரண காரிய தொடர்பு போன்ற சிறப்புக்களும் காணப்பட்டன.

10. பாரதி பாடல்களில் அடிகளார் மிகுந்த ஆர்வம் கொண்டிருந் தார் என்பதை இக்கட்டுரையினூடாக எவ்வாறு அறியலாம் என்பதை விளக்குக?

  பாரதியார் மறைந்து ஆண்டுகள் பல கடந்தாலும் அவரது கவிதைகள் அழியாப் புகழ்பெற்று நாட்டிற்கு புத்துயிர் அளித்து வருகின்றன என கூறுதல்.

  பாரதியின் கருத்துக்கள் தமிழ்த் தொண்டு செய்வோர்க்கு மிகவும் இன்றியமையாதன எனக் கூறி அவரது கவிதையை ஆதாரம் காட்டுதல்.

  அன்னையாகிய தமிழ்மாது விழித்தெழுந்த சிறப்பினைக் கண்ட பாரதி தமிழ்மொழிக்கு திருப்பள்ளியெழுச்சி கூறுவதாகக் கூறுதல்.

  நாட்டிற்கு புத்துயிர் அளிக்கவல்ல உத்தமக் கவிஞர் களுக்கு உரிய பண்புகள் பாரதியாரிடம் இருப்பதாகக் கூறுதல்,

  பாரதியின் பாடல்கள் நாட்டிற்கு உறுதி எனக் கூறுதல்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக