1)
கன்றுதன் பயமுலை வினா விடை
1. கன்றுதன் பயமுலை என்ற இச் செய்யுளில் புலவர் கூறவந்த விடயம் யாது?
பொருள் நிமித்தம் பிரியும் தலைவனை நோக்கி, 'இதுவரை உனது விருப்பப்படியே ஒழுகி வந்த நாம் செய்த நன்றியை மறவாது விரைவில் வந்து தலைவியை திருமணம் செய்து கொள்வாயாக' என தோழி கூறியது.
2. அதனை எவ்வாறு எடுத்துக் கூறுகிறார் என்பதை விளக்குக?
i) தலைவனது நாட்டின் இயற்கை நிகழ்வு ஒன்றினூடாக கூறுதல்.
ii) இறைச்சி எனப்படும் குறிப்புப் பொருளினூடாக கூறுதல்.
iii) பொருத்தமான உவமை அணியினூடாக கூறுதல்.
iv) தோழி கூற்றாக எடுத்துரைத்தல்.
3. கன்றுதன் பயமுலை என்ற இச் செய்யுளில் இடம்பெற்றுள்ள உவமை அணியினை எடுத்து விளக்குக?
1) ஒரு மன்னன் அரசு கட்டிலையிழந்து துயருற்றபோது பிறர் தாமே வலியவந்து உதவின உதவியை அரசுரிமை எய்திய பின்னர் மறந்தது போல நீ இருந்து துயருற்ற காலத்தில் யான் தலைவியை நின்னோடு கூட்டிய செய்ந்நன்றியை மறவாது வரைந்து கொள்வாயாயின் அணியாகும். நன்றி மறந்த அரசனைப் போல தலைவன் இவள் கூந்தல் உனக்குரியதே என்பது உவமை செயற்படக்கூடாது என்பது இவ்வுவமையினூடாக வெளிப் படுத்தப்பட்டுள்ளது.
ii) தலைவியின் கூந்தல் மென்மையான மயிலின் தோகை போன்றது என்பது உவமை.
தலைவியின் கூந்தலில் தலைவன் துயின்று இன்புறுதலின் அதனை அவனுக்கு உரிமைப்படுத்தும் வகையில் கூறப்பட்டது.
4. இச் செய்யுளில் இடம்பெறும் குறிப்புப் பொருள்களை எடுத்துக் காட்டுக?
பெண்யானை முற்றத்தில் வளர்ந்த தினைப் பயிரை உண்ணுதல் - தலைவியை களவில் பெற்று மகிழ்ந்ததை குறித்தது.
☆ கன்று பிடியிடம் பால் உண்ணுதல் தலைவியை வரைந்து கொண்டு சுற்றமாக்காமையைக் குறித்தது.
☆ கெட்ட இடத்தில் உதவுதல் - களவுக் காலத்து குறை யிரந்து வேண்டிய தலைவனுக்கு இன்பம் தந்து மகிழ்வித்தமை.
☆ இவள் கூந்தல் நினக்கே உரிய என்பது வரைந்து கொள்ள மறவாவிடின் இவள் கூந்தல் உனக்குரியது. மறப்பாய் ஆயின் இவள் இறந்து விடுவாள்.
5. இச் செய்யுளில் இடம்பெற்றுள்ள இறைச்சிப் பொருளை எடுத்துக் காட்டுக?
கன்று பசியால் வருந்தாதபடி ஊட்டிக்கொண்டே தனக்கு வேண்டிய தினையையும் பிடி உண்ணும். தலைவியையும் பிரிவுத் துன்பம் அடையாதவாறு அருள்செய்து வரைவிற்கு வேண்டிய பொருளையும் ஈட்டிக் கொண்டு விரைந்து வந்து திருமணம் செய்வாயாக என்பது இறைச்சிப் பொருளாகும்.
6. இறைச்சிப் பொருள் என்றால் என்ன?
இறைச்சிப் பொருள் என்பது வெளிப்படையாக கூறப்படாததாய் உள்ள பொருள் ஒன்றினுள்ளே கொள்வதோர் பொருளாகும். கருப்பொருள் பிறிதொரு பொருட்டு உபகாரப் படுதலேயன்றி அக்கருப்பொருள் தன்னுள்ளே தோன்றும் பொருளும் உள. அது இறைச்சிப் பொருள் எனப்படும். ஓர் அகப்பாடலில் மாந்தர் தம் காதலைப் புனைவது உரிப் பொருள். பிற உயிரினங்களின் காதலைச் சித்தரிப்பது இறைச்சிப் பொருள். சில நிகழ்வுகளினூடாக தான் சொல்ல விரும்பும் பொருளை குறிப்பாகப் புலப்படுத்துவதும் இறைச்சிப் பொருளாகும்.
7. கன்றுதன் பயமுலை என்ற இச் செய்யுளில் சமூகச் செய்திகள் புலப்படுமாற்றினை விளக்குக?
☆ தலைவன் பொருள் தேடுவதோடு மட்டும் நின்றுவிடாது தலைவியை மணந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
☆ நன்றி மறவாது செயற்படுதல் உயரிய அறமென தலைவி சொல்வதனூடாக வெளிப்படுத்தப்படுகின்றது.
8. இச் செய்யுளின் ஊடாக தோழியின் மதிநுட்பம் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றது?
தலைவனுடைய ஆற்றலை குறிப்பாகப் புலப்படுத்துதல் மூலம்
உவமையணியினைக் கையாண்டு தலைவனது கடமை யை வற்புறுத்துவதன் ஊடாகப் புலப்படுத்தப்படுகின்றது.
9. இச் செய்யுளில் இடம்பெற்றுள்ள முதல்,
கரு, உரிப்
பொருளை எடுத்துக்காட்டுக?
முதற்பொருள் : களமும் காலமும்
களம் : குறிஞ்சி நிலம் - மலையும் மலை சார்ந்த இடம்
காலம் : கூதிர் காலம், சிறுபொழுது -சாமம்
கருப்பொருள் : யானை, யானையின் கன்று, மயில், தினை
உரிப்பொருள் : புணர்தல்
/ களவொழுக்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக