19ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் இலக்கியம் வளர்ச்சி அடைந்தமைக்கான காரணங்கள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஆங்கிலேயரின் ஆட்சி குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வணிக நோக்குடனும் மதம் பரப்புவதற்காகவும் வந்த ஆங்கிலேயர் படிப்படியாக ஆட்சியைக் கைப்பற்றினர். இவர்கள் தம் ஆட்சியில் மருத்துவமனைகள், ஏழை விடுதிகள், கல்விக்கூடங்கள் முதலியவற்றை நிறுவி மக்களுக்கு தொண்டுகள் புரிந்தனர். இவர்களின் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களும், ஆங்கிலக் கல்வியும் ஈழத்து தமிழ் மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தியது. அதன் விளைவாக தமிழ் மொழி வளர்ச்சியடைந்தது.
ஆங்கிலேயர் ஈழத்தில் கல்வியைப் பரவலாக்கினார்கள். மரபு வழிக் கல்விமுறை விஸ்தரிக்கப்பட்டது. கிராமம் தோறும் பாடசாலைகளை நிறுவினர். உயர் வகுப்பினரிடத்தும் செல்வம் மிகுந்தோரிடமும் தனியுடமையாக இருந்த கல்வி பொது உடமையாக மாறியது. சமுதாய ஏற்றத்தாழ்வினை நீக்கி சமூகத்தின் சகல வகுப்பினரும் எழுத்தறிவு பெற உதவினர். மக்களை மதம் மாற்றவும் கிறிஸ்தவ மதக் கருத்துக்களை படித்தறிந்து கொள்ளவும் தமது ஆட்சிக்கேற்ற அலுவலர்களை
இத்தகைய கல்விப் பாவலாக்கம் மக்கள் மத்தியில் விழிப் ஆக்கிக் கொள்ளவும் கல்வி விருத்தி மேற்கொள்ளப்பட்டது. புணர்வை ஏற்படுத்த படித்த மத்தியதர வர்க்கத்தினர் தோற்றம் பெற்றனர். ஆங்கிலக் கல்வி பயின்று அம்மொழியில் பாண்டித் தியம் பெற்ற தமிழர் ஆங்கில மொழியில் உள்ள இலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், அகராதி முதலியவற்றை தமிழில் புகுத்த விரும்பினர். அதன் விளைவாக ஈழத்திலும் ஆங்கில இலக்கியப் போக்குகளும் வளர்ச்சிகளும் இடம்பெறலாயின.
19ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரமும் பட்டன. கிறிஸ்தவ மிசனரிமார் கிறிஸ்தவ மதத்தை பிரச்சாரம் கிறிஸ்தவத்திற்கெதிரான இந்து மதப் பிரச்சாரமும் மேற்கொள்ளப் செய்யும் நோக்கில் பத்திரிகைகள், துண்டுப் பிரசுரங்கள், கிறிஸ்தவ மத விளக்க நூல்கள் என்பனவற்றை வெளியிட்டனர்.
இதே முறையினை இந்துக்களும் இந்து மதப் பிரச்சாரத்திற்குக் கையாண்டனர். இஸ்லாமியரும் தமது மதக் கருத்துக்களை விளக்குவதற்கு இத்தகைய வழிமுறையினைக் கையாண்டனர். இந்த நிகழ்ச்சியால் ஈழத்துத் தமிழ்மொழி வளர்ச்சியடைந்தது.
19ஆம் நூற்றாண்டில் தமிழ்மொழிக்கு கிடைத்த மிகப் பெரிய அதிஸ்டங்களில் ஒன்று அச்சுப் பொறி கிடைத்தமையாகும். ஆங்கிலேயர் தமது மதத்தைப் பரப்புவதற்கும் அஞ்ஞானிகளை நல்வழிப்படுத்தவும், அச்சில் தமிழ் நூல்களை வெளியிட்டனர். "ஐரோப்பியர் வருகையால் அச்சியந்திரம் வராதிருக்குமேயானால் அனேகமான தமிழ் நூல்களை இன்று நாம் கண்டிருக்க முடியாது" என மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுவர். அச்சியந்திரப் பயன்பாட்டிற்கு கடதாசியின் உபயோகம் உறுதுணை புரிய ஓலையில் உறங்கிய தமிழ்மொழி கடதாசியில் உலா வரத் தொடங்கியது. இவ்வம்சம் தமிழ்மொழியின் பரவலான வளர்ச்சிக்குப் பசுமையான தீனியாகியது.
ஆங்கிலேயர் வருகையால் ஈழத்துத் தமிழ்மொழி உரைநடை வளர்ச்சியிலும் ஏற்ற மிகு வளர்ச்சியைப் பெற்று புதுப்பொலி வுடன் திகழ்ந்தது. அரசியல், சமூகம், பொருளாதார மாற்றங் களும், கல்வி, அச்சியந்திரம் முதலிய சாதனங்களும்
உரைநடைக்கு உந்துதல் அளித்தன. வசன நடை கைவந்த வல்லாளர் என வீ.கோ. சூரியநாராயண சாஸ்திரியாரும் தற்கால உரைநடையின் தந்தையென பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்களாலும் பாராட்டப்பட்ட ஆறுமுக நாவலர் உரைநடை வளர்ச்சிக்கு உரமூட்டினார். தமிழ் உரைநடை எழுந்து நடக்கத் தொடங்கியது. 19ம் நூற்றாண்டிலேயே எனப் பேராசிரியர் க.கைலாசபதி குறிப்பிடுவதும் நோக்குதற்குரியது. உரைநடை வளர்ச்சியின் மூலம் பத்திரிகைத்துறை, கண்டன நூல்கள், சொற்பொழிவுகள், பிரசங்கங்கள், நாவல், சிறுகதை, அகராதி, பதிப்புத்துறை போன்ற இன்னோரன்ன பல துறைகளிலும் செல்வாக்குச் செலுத்த ஈழத்தில் தமிழ்மொழி பல்துறை வளர்ச்சியைப் பெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக