19.9.25

19ஆம் நூற்றாண்டு

19ஆம் நூற்றாண்டு

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒல்லாந்தர் காலத்தை யடுத்து இடம்பெறும் காலப்பகுதி ஆங்கிலேயர் காலமாகும். கி.பி. 1796-1948 வரையுள்ள 153 ஆண்டுகளை உள்ளடக்கிய காலப் பகுதியாகும். ஆங்கிலேயர் காலம் 19ஆம் நூற்றாண்டையும் 20ஆம் நூற்றாண்டின் முன்னரைக் காலப் பகுதியையும் உள்ளடக்கியதாக இருப்பினும் இலக்கிய வளர்ச்சிப் போக்கினை கொண்டு நோக்கும்போது ஈழத்தின் அரசியல், பொருளாதாரம், கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களின் அடிப்படையில் 19ஆம் நூற்றாண்டு தனித்து நோக்கப்பட வேண்டியதாகின்றது.

1796
ஆம் ஆண்டு இலங்கை ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டு 1802 ஆம் ஆண்டு முடிக்குரிய குடியேற்ற நாடாகியது. 1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியமும் ஆங்கிலேயர் வசமாகியது. பல நூற்றாண்டுகளாகத் தனித்தனி இராச்சியமாக இருந்த ஈழத்துப் பிரதேசங்கள் ஆங்கிலேயராலேயே ஒரே இராச்சியமாக ஆளப் பட்டது. 1833 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் திட்ட முன்மொழிவின் மூலம் அரசியல் அதிகாரம் படிப்படியாக இலங்கை மக்களின் கையில் வரத்தொடங்கியது. பெருந் தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. வணிகத்துறை வளர்ச்சியடைந்தது. நாடு முழுவதும் புகையிரதப் பாதைகளும் தெருவீதிகளும் அமைக்கப்பட்டன. ஆட்சியாளரின் நிர்வாக கடமைக்கு நாட்டு மக்கள் தேவைப்பட்டனர். ஆங்கிலக்கல்வி

பரவலாக்கப்பட்டது. நகரங்களில் ஆங்கிலப் பாடசாலைகள் உதயமாகின. கிறிஸ்தவ மதக் குழுவினரின் மதப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கல்வி, நாகரிகம், உடை நலுங்கா உத்தியோகம் முதலியவை மக்களின் மனதைக் கவர்ந்தன. மரபுவழிக் கல்வி முறையில் மாற்றம் புகுந்து நிறுவனக்கல்வி முறை தோற்றம் பெற்று வளர்ந்தது. இச்சூழ்நிலையில் படித்த மத்திய தரவர்க்கத்தினர் தோற்றம் பெற்றனர். மக்கள் தம் பொருளாதார வளத்தை விருத்தி செய்யவும் அரசாங்கத்தில் உயர் பதவிகள், அந்தஸ்துக்கள், சலுகைகள் பெறவும் கிறிஸ்தவராக மதம் மாறினர். இச் சூழ்நிலையே 19ஆம் நூற்றாண்டின் ஈழத்து இலக்கியக் களத்தின் அடித்தளமாக அமைந்தது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக