இலக்கியமும்
இலக்கணமும்:
இலக்கியம்
தாய்;
இலக்கணம்
சேய்.
இலக்கியம்
தேமாங்கனி;
இலக்கணம்
தீஞ்சுவைச்சாறு.
இலக்கியம்
பெருவிளக்கு;
இலக்கணம்
அதன்
ஒளி இலக்கியம்
எள்;
இலக்கணம்
எண்ணெய்.
இந்த
உறவு
முறையை
- பிணைப்பு
முறையை
நம் முன்னோர்
நன்கு
அறிந்து
தெளிந்திருந்தனர்.
இதனாலேயே,
'இலக்கியம்
இன்றி
இலக்கணம்
இன்றே
எள்ளின்
றாகில்
எண்ணெயும்
இன்றே
எள்ளினுள்
எண்ணெய்
எடுப்பது
போல இலக்கியத்
தினின்றும்
எடுபடும்
இலக்கணம்'
எனக்
கூறிப்போந்தனர்.
எனவே,
இலக்கியப்
பெருந்தருவின்
நிழலில்
எழுந்து
நிற்பதே
இலக்கணம்
என்பது
பெறப்படும்.
இலக்கியமும்
இலக்கணமும்
வேறுபட்ட
நிலையுடையன
அல்ல;
ஒருவழிப்பட்ட
ஒற்றுமையுடையனவே
ஆகும்.
இலக்கணத்
தோற்றம்:
இலக்கியம்
பலவாய்ப்
பல்கிப்
பெருகி
வளரத்
தலைப்படும்
காலத்தில்
மொழியினை
ஒழுங்குபடுத்த
எண்ணும்
மூதறிவாளர்
கண்ட
முறையே
இலக்கணமாகும்.
இவர்கள்,
தாம்
வாழும்
காலத்திற்கும்
அதற்கு
முன்பும்
உள்ள
மொழி
பழக்கு
அனைத்தையும்
அறிந்து
வகைப்படுத்திக்
கூற முயல்வார்கள்.
இம்முயற்சியின்
விளைவே
இலக்கணத்
தோற்றம்
எனலாம்.
தொல்காப்பியர்
முந்து
நூல்
கண்டு
முறைப்
பட எண்ணி
இலக்கணம்
வகுத்தார்
எனச்
சிறப்புப்பாயிரம்
செப்புகின்றது.
பாணினிமுனிவர்,
வேதம்
முதலிய
வடமொழி
நூல்களைக்
கற்றுத்
தேர்ந்து
அவற்றின்
சாரத்தைப்பிழிந்து
பாணினியமாக
வடித்துக்
கொடுத்தார்
என்று
கூறுவர்.
எனவே
நூல்கள்
பல எழுந்த
பின்பே
நூல்களின்
பண்பு
நுவலும்
இலக்கணங்களும்
தோன்றி
யிருத்தல்
வேண்டும்.
இதுகாறும்
கூறியவற்றைக்கொண்டு
இலக்கியங்களின்
மொழியமைப்பைக்
கொண்டு
மட்டும்
இலக்கணம்
தோன்றியது
என முடிவு
கட்டி
விடுதல்
கூடா.இலக்கணத்
தோற்றம்,
இலக்கியத்தை
மட்டும்
அடிப்படையாகக்
கொண்டதன்று.
வழக்கு
மொழியின்
வாழ்வையும்
வளத்தையும்
மதித்து
அதனையும்
தழுவி
ஒழுகும்
உயர்வுடையது.
இதனால்தான்,
தொல்காப்பியச்
சிறப்புப்
பாயிரம்,
'வழக்கும்
செய்யுளும்
ஆயிரு
முதலின்
எழுத்தும்
சொல்லும்
பொருளும்
நாடித்'
தொல்காப்பியம்
தொகுக்கப்
பெற்றது
என அந்நூலின்
இயல்பினை
எடுத்துரைக்கின்றது.
இலக்கணப்
புலவர்கள்
இலக்கிய
அமைப்பினை
மட்டும்
தழுவி,
உலக வழக்கினை
உதறித்
தள்ளிவிட
வேண்டும்
என்ற
உள்ளம்
படைத்தவர்கள்
அல்லர்.
அவர்களது
பரந்த
நோக்கமெல்லாம்
மொழி
ஒரு திறப்பட்டுச்
செல்ல
வேண்டும்
என்பதே.
இதனால்,
அவர்கள்,
தம் காலங்கடந்த
புலமையை
ஒரு கட்டுக்குள்
அடக்கிக்
கொண்டு
வாழாமல்,
இருவேறு
கட்டுக்குள்
அடக்கிக்
கொண்டு
வாழாமல்,
இருவேறு
வழக்கின்
இயல்பினையும்
அறிந்து
ஏற்பன
ஏற்றுத்
தள்ளுவன
தள்ளி
இலக்கணப்
படைப்புக்களை
ஈந்துள்ளார்கள்.
இலக்கணம்
- சொல்லாராய்ச்சி;
மொழிச்
சொல்லின்
சிதைவு
என்பர்.
ஆனால்
வடமொழியில்
இலக்கணம்
என்னும்
சொல்,
லக்ஷணம்
என்னும்
வட நாம்
கருதும்
இலக்கணத்தை
லக்ஷணம்
என்று
சொல்வதில்லை.
வியாகரணம்,
சப்த
சாஸ்திரம்
என்று
கூறுவார்கள்.
இதனால்
இலக்கணம்
என்னும்
சொல்,
லக்ஷணம்
என்பதன்
சிதைவு
என்பது
பொருந்தாது.
இலக்கு
என்னும்
தமிழ்ச்சொல்,
அணம்
-என்னும்
விகுதிபெற்று
இலக்கணம்
என ஆயிற்று
என்று
கோடலே
பொருந்தும்.
இச்சொல்
சிறந்த
தமிழ்ச்சொல்லே;
இதனைப்
பற்றிய
விரிவான,
ஆராய்ச்சியினைச்
செந்தமிழ்ச்
செல்வி
22-ல் காண்க!
இலக்கணம்
என்ற
சொல்லினை
முதன்
முதலில்
வழங்கியவர்
தொல்காப்பியனாரே
ஆவர்.
இவர்,
இச்சொல்லினை,
'பல பொருளை
உய்த்துணர்ந்து
அவற்றின்
இயல்பினை
உள்ளவாறு
அறிவித்தற்குக்
காட்டப்படும்
வரையறை'
என்ற
பொருளிலேயே
ஆட்சி
செய்துள்ளார்.?
சிலர்,
புலம்
என்னும்
சொல்,
தமிழ்
இலக்கணத்தைக்
குறிக்கும்
என்பர்.
இதற்குச்சான்றாகப்
'புலம்
தொகுத்தோனே
போக்கறுபனுவல்'
என்னும்
பனம்பாரனார்
கூற்றைக்
காட்டுவர்.
வேறுசிலர்,
இயல்
என்பது
இலக்கணத்தினைக்
குறிக்கும்
தமிழ்ச்சொல்
என்பர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக