தத்தைவிடு தூது
தி.த.சரவணமுத்துப்பிள்ளை
01. தத்தைவிடு தூது எனும் இலக்கியத்தினுடைய ஆசிரியர் யார்?
தி.த.சரவணமுத்துப்பிள்ளை
02. தி.த.சரவணமுத்துப்பிள்ளை பற்றி சிறுகுறிப்பு வரைக?
இவர் திருகோணமலையை பிறப்பிடமாகக் கொண்டவர். தி.த.கனகசுந்தரம் பிள்ளையினுடைய இளையசகோதரராவார். தனது 15 வது வயதில் சென்னை சென்று கல்வி கற்றவர். தமிழின் முதல் வரலாற்று நாவலான மோகனாங்கியை 1895 இல் எழுதி வெளியிட்டவர். தத்தைவிடு தூது, முத்துக்குமார சுவாமி இரட்டை மணிமாலை, முத்துக்குமார சுவாமி ஊஞ்சல், பிரிவாற்றாமை. காதலாற்றாமை, வாகைமாலை போன்ற செய்யுள் இலக்கியங்களை எழுதியவர். தமழிப்பாஷை என்ற இவரது ஆய்வு நூல் எல்லோராலும் பேசப்படுவதாகும்.03. தத்தைவிடு தூது எனும்
03. இலக்கியம் கூறும் பிரதான விடயம் யாது?
காதலில் தோல்வியுற்ற இளைஞன் ஒருவன் தன் மனவுணர்வுகளை வெளிப்படுத்தி தன்காதலியிடம் கிளியைத் தூது விடுவதாக அமைந்திருப்பதே இவ்விலக்கியத்தினுடைய பிரதான விடயப் பொருளாகும்.
04. இச்செய்யுள் இலக்கியத்திலே தத்தை எனக் குறிப்பிடப்படுவது யாது?
கிளி
05. கிளி வாழுகின்ற சூழலை கவிஞர் எவ்வாறு எடுத்துரைக்கின்றார்?
தேன் பொங்கும் பூஞ்சோலையில் செழித்து பசுமையான கிளைகளைப் பரப்பி வானைத் தொடுமளவிற்கு வளர்ந்துள்ள தேன் சுவையுடைய மாமரத்தில் வாழுகின்ற பசுமையான கிளி
மொட்டவிழ்ந்த பூஞ்சோலையில் வாழ்ந்து வளர்ந்த பசுமையான கிளி
06. பெண்களின் தொழில் என அறிவிலிகள் எதனைக் குறிப்பிடுகின்றனர்?
உணவருந்துவதும், நித்திரை கொள்வதும், ஊரிலுள்ள புதினங்களைப்பற்றி ஒருவரோடு ஒருவர் கதைப்பதும் பெண்களுடைய தொழில் என ஒரு சாரார் கூறுவார்
பெண்களுக்கு தங்களுடைய கணவனே கண்கண்ட பெருந்தெய்வம் என்பார்கள் சிலர்
பெண்களுக்கும் அடிமைகளுக்கும் வித்தியாசம் இல்லை என்று சொல்லுவார்கள் சிலர்
07. பெண்களுக்கு கல்வி அவசியம் என்பதற்கு கவிஞர் முன்வைக்கும் கருத்துக்கள் யாவை?
பெண்கள் கல்வி நலம் பெற்றவர்களாக இருத்தல் அவசியம்
அவ்வாறு இருப்பதால் தங்களுடைய அருமைக் கணவருக்கு என்றுமே நல்ல துணையாக இருப்பார்கள்
பெண் கல்வியினால் பழைமையான உலகம் சிறப்படையும்
08. இப்பகுதியிலே காதலியிடம் சொல்லுமாறு கிளியிடம் தூதுவிட்ட விடயங்களாக குறிப்பிடப்படுவன
யாவை?
சிறுவயதில் முற்றத்தில் விளையாடும் போது இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக தந்தை கூறிய வார்த்தை தவறியதேன்? அவளும் என்னை மறந்ததேன்?
படித்து விளையாடும் போது அவளாகக் கூறிய வார்த்தைகளை மறந்து விட்டாளா?
நான் சிறு வயதில் ஆம்பல் மாலை அணிவித்ததையும் அதனால் அவள் மகிழ்ச்சி அடைந்ததையும் மறந்துவிட்டாளா?
பெற்றோர் பார்த்திருக்கும் மணமகன் அவளுக்கு பொருத்தமற்றவன் அத்தோடு குரங்கின் கையில் பூமாலை கொடுப்பது போன்றது அவளை அவனுக்கு திருமணம் செய்து கொடுப்பது.
செல்வந்தன் என்பதற்காக ஒருவனைத் திருமணம் செய்து துன்பப்படுவதை விட பொருளற்றவனோடு விரும்பி வாழும் வாழ்வே மகிழ்ச்சியானது. கல்வி அறிவுடையவன் தான் சிறந்த துணைவன்
உன்மேல் கொண்ட காதலால் நான் மெலிந்து போவதும் உயிர் இனியும் நிலைத்திருக்காது என்பதனையும் காதலியிடம் சொல்லுமாறு கிளியிடம் தலைவன் கூறுகின்றான்.
09. தத்தைவிடு தூது இலக்கியத்திலே இடம்பெறுகின்ற காதலியின் அழகு எவ்வாறு எடுத்துக் காட்டப் பட்டுள்ளது?
இப் பகுதியில் காதலியின் அழகு பற்றிய வர்ணிப்பினை அழகுற கவிஞர் எடுத்துரைக்கின்றார். அவற்றைப் பின்வருமாறு எடுத்து நோக்கலாம்.
மான் ஏங்கி நிற்கும் மை தீட்டப்பட்ட விழிகளை உடையவள்
பசுமையான வளையல்களை அணிந்தவள்
வஞ்சிக்கொடி போன்ற இடையினை கொண்டவள்
செந்தாமரை போன்ற வதனம் கொண்டவள்
வாள் போன்ற ஒளிவீசும் நயனங்களை உடையவள்
கோதையானவள்.
பவளம் போன்ற வாயினையுடையவள்
அன்னம் போன்ற நடையுடையவள்
பொன்னிற மலர்க்கொம்பினை ஒத்தவள்
இதயத்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமி போன்றவள்
பெண்களுக்கு தலைவியானவள் பெண்ணரசி
கரும்பு போன்ற இனிய பேச்சினை உடையவள்
* பசுமையான மாலை அணிந்த கூந்தலை உடையவள்
10. இவ்விலக்கியத்திலே இடம்பெறுகின்ற பெண் விடுதலை தொடர்பான கருத்துக்களைக் குறிப்பிடுக?
இப் பாடப் பகுதியில் பெண்ணியம் சார்ந்த அதாவது பெண் விடுதலை குறித்த கருத்துக்களையே அதிகம் கவிஞர் காட்டியிருக்கின்றார். பெண்கள் படும் துன்பம், பெண்களுக்கு செய்து வைக்கும் கட்டாய திருமணம் அவற்றில் இருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டிய தேவை என்பன பற்றி அழகுற பாடியிருக்கின்றார்.
முட்டாள், அறிவில்லாதவர், எளியவர் போன்றவர்க்கு பெண்களை திருமணம் செய்து கொடுக்கக் கூடாது
பெண்ணருமை அறியாத பேதையர்க்கு பெண்ணை மணஞ் செய்து கொடுக்கக் கூடாது
பெண்களை பற்றி பல்வேறுபட்ட கருத்துக்களை கூறுகின்றனர். அறியாமையே அத்தகையவரின் இயல்பாகும்.
கல்வி கற்ற பெண்களே காதலர்களுக்கு உரிய உறுதுணையாவர். அறிவில்லாதவர்கள் பெண்கள்
கல்வி கற்பதை விரும்பாதவர்கள் அவர்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கு இடையூறு செய்பவர்கள்.
பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைத்து அவர்களின் சுதந்திரத்தை கெடுப்பவர்கள் சமூகத்தவர்கள்.
அன்புடன் வளர்ந்த தம் பெண்னை அவரின் பெற்றோர் முன்பின் தெரியாத ஒருவருக்கு மணம் செய்து கொடுப்பர்.
சிறுவர்களின் பொம்மைக் கல்யாணம் போல பெண்களின் திருமணத்தையும் நடத்தி முடித்து விடுவர். இவ்வாறான நிலைமைகள் மாற வேண்டியதுடன் பெண்கள் அவர்களின் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டியது அவசியமாகும்.
மேலும் பெற்றோர் தம் பெண் மனம் விரும்பாத ஒருவரை திருமணம் செய்து வைக்கக் கூடாது என்பதையும் ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார்.
11. இப்பகுதியிலே தலைவன் தலைவி மீது கொண்ட காதல் எவ்வாறு புலப்படுத்தப் படுகின்றது?
இப் பகுதியிலே தலைவி மீது அளவற்ற காதலும், அக்கறையும் கொண்டவனாக காதலன் காட்டப்பட்டுள்ளான். அதனை பின்வருமாறு எடுத்து நோக்கலாம்
தலைவியின் மீதான காதல் அதிகரிப்பினால் கிளியை தூதனப்பியவன்
மங்கையாக அவளிற்கு தகுந்த மணவாளன் தானோ என கேட்டவன்
கல்வியறிவற்றவர்களை அவள் மணம் முடிப்பதை ஏற்காதவன்
பெற்றோர் தம் பெண்ணின் விருப்பத்தை அறியாது முன்பின் காணாத ஒருவனை மணம் முடித்து வைப்பார்கள் என தலைவிக்கு உரைத்தவன்
கண் போன்ற தந்தையரின் செயல்கள் பெண்ணிற்கு துன்பத்தையே கொடுக்கும் என கூறியவன்
தன் காதலியை நினைத்து மெலிகின்றேன் மேலும் மெலிந்தால் உடலில் உயிர் தங்காது என கூறி நின்றவன்
தாமரை போன்ற அவளது முகத்தை காணாது, அவளது கரும்பினைப் போன்ற பேச்சினைக் கேளாது தான் உயிர் வாழமாட்டேன் எனக் கிளியிடம் கூறியவன்.
பாவைத் திருமணம் போல முன்பின் அறியாத ஒருவனுடன் தம் பெண்ணிற்கு திருமணம் முடித்து வைத்துவிடுவர் பெற்றோர் என காதலியிடம் கூறியவன்.
இவ்வாறு தலைவி மீதான தலைவனின் காதல் அழகுற புலப்படுவதைக் காணலாம்.
12. இப்பகுதியிலே பெண்ணடிமைத்தனங்கள் பற்றி ஆசிரியர் குறிப்பிடுவன யாவை?
பெண்கள் தாம் விரும்பியவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாது இருத்தல்
செல்வந்தர்களுக்கே பெண்களைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம்
செல்வம் இருந்தால் மணமகனின் அழகு, இளமை, அறிவு, ஆண்மை போன்றவற்றைக் கருத்திற் கொள்ளாது பெண்களைத் திருமணம் செய்து கொடுத்தல்
உண்பது, உடுப்பது, ஊர்க்கதைகள் பேசுவது பெண்களின் தொழிலாக கருதப்பட்டமை
பெண்களுக்கான கல்வி உரிமை மறுக்கப்பட்டு இருந்தமை
கூண்டுக்கிள் போல பெண்கள் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தமை
பெண்கள் பூனை போலவும். பசுக்கள் போலவும் விலங்குகளாகக் கருதப்பட்டமை
13. காதலன் கிளியிடம் எத்தகைய வேண்டுகோள்களை முன்வைத்து தூது அனுப்புகின்றான்?
காதலன் பல்வேறு வேண்டுகோள்களை முன்வைத்து அவற்றினை தன்னுடைய காதலிக்கு தெரியப்படுத்துமாறு கிளியிடம் கூறுகின்றான். அவற்றைப் பின்வருமாறு எடுத்து நோக்கலாம்.
நான் இங்கு கூறும் வார்த்தைகளை தலைவியிடம் கூறுமாறும், அவை தலைவிக்கு நன்மையைப் பெற்றுத் தருமென்றும் தலைவன் கிளியிடம் கூறுகின்றான்
அவளுக்கேற்ற மணவாளன் நான்தான் என்றும், நங்கையாகிய அவளுக்கு ஏற்ற வகையில் நடக்கும் வல்லமையுள்ளவன் என்றும் கூறுதல்
தான் அவளைப் பிரிந்து வாடுவதாகவும், தனது தகுதியும் குணமும் தனது காதலிக்கு ஏற்றதாக அமைந்ததோ எனக் கூறுதல்
கல்வியில் நலம் பெற்ற தான் அவள் இல்லாவிட்டால் சந்நியாசம் மேற்கொள்ளப் போவதாக
கூறுதல்
பெற்றோரும், மற்றவர்களும் முறையற்ற விதத்தில் தனது காதலிக்கு திருமணம் செய்து கொடுப்பது தவறு எனக் கூறுதல்
தலைவியின் அழகைப் புகழ்ந்த, அவளது முகத்தைப் பார்க்காது வாழமாட்டேன் எனவும், இறந்து விடுவேன் எனவும் கிளியிடம் வேண்டுகோள் விடுத்தல்
தனது காதலியை தான் அடையாவிட்டால் நலிந்து மெலிந்து இறந்து விடுவேன் எனவும், இதனால் தலைவிக்கு பழி வந்து சேரும் எனவும் கிளியிடம் கவலையுடன் கூறுதல்
14. இச்செய்யுள் இலக்கியப் பகுதியினூடாக நாம் கற்றுக் கொள்ளும் படிப்பினைகள் யாவை?
பெண் அடிமைத் தழைகள் ஒழிக்கப்பட வேண்டும்
பெண் எல்லா இடங்களிளும் சுதந்திரமாக நடமாட வேண்டும்
பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்
பெண் தான் விரும்பிய ஆடவரைத் திருமணம் செய்ய வேண்டும்
பெண்களின் திருமணம் ஆராய்ந்து பார்த்துச் செய்யப்பட வேண்டும்
செல்வம் படைத்தவர்களை விட அறிவுள்ளவர்களுக்கு பெண்களைத் திருமணம் செய்து
கொடுக்க வேண்டும்
பெண்களைப் பற்றித் தவறாக பேசும் அறிவிலிகள் மாற வேண்டும்
15. இப்பகுதியிலே வெளிப்படுகின்ற ஆசிரியரின் கவிச்சிறப்புக்கள் பற்றிக் குறிப்பிடுக?
பொதுவாக தூதுப்பிரபந்தங்களில் வெளிப்படும் கவித்துவ சிறப்புக்கள் நயம் மிக்கதாக அமையும் அவ்வகையில் தத்தைவிடு தூது பிரபந்தத்தில் ஆசிரியர் சிறப்பான மொழிநடையினைக் கையாண்டுள்ளார். அதனை பின்வருமாறு எடுத்து நோக்கலாம்.
செய்யுள் நடைக்குரியதான எளிய மொழி நடைப் பிரயோகம்
எளிமையான சொற்பிரயோகம் கையாளப்பட்டிருத்தல்
அணிகளை தேவைக்கேற்ப பாடல்களில் இணைத்துள்ளமை உவமை, உருவக அணிகள்
தன்னுடைய உணர்வுகளை காதலன் என்ற பாத்திரத்தின் வாயிலாக காட்டியுள்ளமை
தூது எனும் பழைய பிரபந்த அமைப்பிற்கேற்ற வகையில் இலக்கியத்தினை படைத்துள்ளமை
பெண்களின் அடிமைத் தழைகள் பற்றிய கருத்துக்களை வலியுறுத்தியுள்ளமை
பெண் விடுதலை தொடர்பான நவீன கருத்துக்களை உள்ளடக்கியதாக பாடல்கள்
அமைந்துள்ளமை
காதலன் கிளியிடம் உரையாடுகின்ற உரையாடற் பாங்கினிலே பாடல்களை அமைத்துள்ளமை
16. இப்பகுதியிலே இடம்பெறுகின்ற அணிகளைக் குறிப்பிட்டு விளக்குக?
இப்பகுதியிலே ஆசிரியர் உவமையணி, உருவக அணிப்பிரயோகங்களைக் கையாண்டுள்ளார்.
அவற்றைப் பின்வருமாறு எடுத்து நோக்கலாம்.
உவமையணிகள்
அறிவில்லாதவர்க்கு பெண்னை திருமணம் செய்து கொடுப்பது வாசணை மிகுந்த மலர்மாலையை
குரங்கிற்கு அளிப்பதைப் போன்றது
உவமானம் மாலையை குரங்கிற்கு அணிவது
உவமேயம் - அறிவில்லாதவருக்கு பெண்ணைக் கொடுப்பது
பொதுத்தன்மை அருமை அறியாத தன்மை
கொடும் புலியின் வாயில் அகப்பட்ட மான் போல பெண்ணையும் அறியாத ஒருவனுக்கு மணம் முடித்து விடுவர்
உவமானம் வெம்புலிவாய் மான்
உவமேயம் - பெண்ணை தகுதியற்றவர்களுக்கு கொடுத்தல்
பொதுத்தன்மை அழிவு
கண்ணைக் கட்டி காட்டில் விடப்படும் பூணையைப் போல பெண்ணையும் அறியாதவாக்கு திருமணம் முடித்து வைத்தல்
உவமானம் பூனையைக் காட்டிலே விடுதல்
உவமேயம் - பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தல்
பொதுத்தன்மை - துன்பம்
செங்கமல வாள்விழியால்
உவமானம் செங்கமல வாள்
உவமேயம் பெண்ணின் சிவந்த கூர்மையான கண்கள்
பொதுத்தன்மை கூர்மை. அழகு
சின்னப் பதுமைகொடு சிறார் செய்மணம் போலும்
உவமானம் - சிறியவர்கள் பாவை கொண்டு திருமணம் செய்து விளையாடல்
உவமேயம் சிந்திக்காமல் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தல்
பொதுத்தன்மை நிலையற்ற தன்மை
அன்னம் போன்ற நடை
தலைவியின் அழகினை உவமையணிகள் வாயிலாக வர்ணித்தல். மலாக் கொம்பினை போன்ற மேனி படைத்தவள்
கரும்பினைப் போன்ற இனிய பேச்சு
உருவக அணி
இதயத் தாமரை இதயம் தாமரையாக உருவகிக்கப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக