தமிழ் இலக்கிய நயம்
புகழ்வேட்டை
1. இக்கட்டுரை யாரால் எழுதப்பட்டது?
அ.ச. ஞானசம்பந்தன்
2. ஆசிரியர் பற்றி
சிறுகுறிப்பு எழுதுக?
இவர் தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர்.
தமிழறிஞர்
இலக்கிய விமர்சகர்
விரிவுரையாளர்
35 ஆய்வு நல்கள்
மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள்
பல பாடநூல்கள்
புதிய பார்வை என்ற அவரது இலக்கிய விமர்சன நூல் சாகித்திய அகடமி பரிசு பெற்றது.
3. இக்கட்டுரையின் பிரதான நோக்கு யாது?
இக்கட்டுரை, மூவேந்தர்களின் புகழ் நாட்டத்தையும் குறுநில மன்னர்களின் புகழ் நாட்டத்தையும் ஒப்பிடுவதோடு மூவேந்தர்களின் செயல்களைப் பற்றியும் சிந்திக்க வைக்கின்றது.
4. மூவேந்தர் ஆட்சிபுரிந்த தமிழக
இடப்பரப்பு யாது?
வடக்கே வேங்கடமலை தொடக்கம் தெற்கே கன்னியாகுமரி வரைக்கும் மேற்கும் கிழக்கும் கடல்கள். வடக்கிலிருந்து தெற்கே ஏறக்குறைய 500 மைல்கள். கிழக்கிலிருந்து மேற்கே அகன்ற இடத்தில் 400 மைல்கள்.
5. தமிழகத்தை மூவேந்தர் ஆட்சி
செய்தமைக்கான சான்றுகள் எவை?
1. "மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் முரசு முழங்கும் தானை மூவர்"
(புறநானூறு. 55)
பொருள்
இத்தமிழ் நிலத்தை குளிர்ச்சி பொருந்திய தமிழுக்கு உரிமையுடையவர்களாக கருதப்படுகின்ற வெற்றி முரசுகள் ஒலிக்க நாற்படைகளுடனும் ஆட்சி செய்கின்ற சேரசோழபாண்டியர்.
2. "சோழன் குளமுற்றத்துஞ்சிய கிள்ளி வளவனை" வெள்ளைக்குடி நாகனார் பாடிய பாடலில்
"முரசு முழங்கும் தானை மூவருள்ளும் அரசு எனப்படுவது நினதேபெரும"
(புறநானூறு, 35)
பொருள்
வெற்றி முரசு முழங்கும் நாற்படைகளோடும் கூடி ஆட்சி செய்யும் மூவேந்தருள்ளும் பெருமைக்குரியவரே! அரசு என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது உனது அரசே!
6. இம்மூவேந்தர்கள் ஆளும்
பகுதி உலகம்
என்று குறிப்பிடப்பட்டிருந்தமைக்கான சான்றுகள் எவை?
1. புலவர் பிரமனார் பொதுமை சுட்டிய மூவர்
உலகமும் பொதுமை இன்றி ஆண்டிசினோக்கும் (புறநானூறு, 35)
2. உலகம் என்ற சொல்லால் நாட்டின்
ஒரு பகுதியைச் சுட்டிக் கூறுதல் அக்கால மரபுதான்.
"மாயோன் மேய காடுறை உலகமும்"
(தொல்காப்பியம்)
3. "மூவர் உலகம்"
(புறப்பாடல்)
7. மூவேந்தரின் குறிக்கோளாக அமைந்தது யாதென
ஆசிரியர் குறிப்பிடுகின்றார்?
மூவேந்தர்களுள் ஒவ்வொருவனும் ஏனையோரை அடிப்படுத்தலையே தம் வாழ்நாளின் குறிக்கோளாக கொண்டிருந்தான்.
8. தமிழ்
மன்னர்களின் போர் வெறி பற்றி
ஆசிரியர் குறிப்பிடுவது யாது?
கரிகாற்பெருவளத்தான் போன்ற ஒரு சிலர் தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டிச்சென்று பிறநாடுகளிலும் வெற்றி கண்டார்களாயினும் பெரும்பான்மையான தமிழ் மன்னர்கள் வெற்றி கண்டது பிறதமிழ் மன்னர்களையேயாம். தமிழனை மற்றொரு தமிழன் போரிட்டுத் தொலைப்பதைப் பெரு வெற்றியாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த நாளில் பெரும்பான்மையான தமிழர் சில சந்தர்ப்பங்களில் இவர்களுடைய போர் அவ்வளவில் நின்றுவிடாமல், யாதொரு தீங்கும் புரியாத மக்களையும் வருத்தத் தொடங்கியது. வெல்லப்பட்டவர், தோற்றவர் நாட்டை அழித்து நெருப்பூட்டல் வழக்கம்.
"கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந்தண்பணை பாழாக
ஏம நல்நாடு ஒள் எரி ஊட்டின" (புறம் 16)
வெற்றி கொண்ட தமிழ் மன்னர்கள் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடும் பொழுதுகூட தோற்றவரைப் பற்றி நினைப்பதில்லை. அவர்களும் தம்மைப்போன்ற மொழி பேசும் நாகரிகம் உடையவர் என்ற எண்ணம் இவ்வீரர்களுக்கு தோன்றவில்லை. போர்வெறி கொண்டவர்களாகவே வாழ்ந்தனர்.
9. மூவேந்தர்கள் ஓயாமல் போரிட்டதற்கு தலையாய காரணமாக அமைந்தது எதுவென ஆசிரியர் குறிப்பிடுகின்றார்?
மனித மனதின் ஆழத்தில் காணப்பெறும் இரண்டு உணர்ச்சிகளே இதற்குக் காரணம்.
1. இயற்கையாகத் தோன்றும் வெறுப்புணர்ச்சி
2. புகழ் ஈட்ட வேண்டுமென்று தோன்றும் உணர்ச்சி
(இவை இரண்டும் கூடினவிடத்து விளைவது போரேயன்றி வேறு எதுவாக இருக்கமுடியும்)
10. தமிழருடைய புகழ்
பைத்தியத்தை எடுத்துக் காட்டும் இலக்கியச் சான்றுகள் சில தருக?
1. மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாமாய்ந்தனரே
பாடியவர் - பெருந்தலைச் சாத்தனார்
பாடப்பட்டோன் - குமணன்
பொருள்
நிலைபேறில்லாத இவ்வுலகிலே நிலைபெறக் கருதினோர் தம்புகழை இங்கே நிலைநாட்டி பலர் மாய்ந்தனர்.
2. சேற்றுவளர் தாமரை பயந்த, ஒண் கேள்
நூற்றிதழ் அலரின் நிறைகண்டன்ன,
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே
மரை இலைபோல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்த்தி
எய்துப என்ப
பாடியவர் - உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
பாடப்பட்டோன் -
சோழன் நலங்கிள்ளி
பொருள்
சேற்றில் வளரும் தாமரையிலே தோன்றிய செந்தாமரை மலரின் நூற்றுக்கணக்கான இதழ்களும் நிரலே உயர்வுடன் தம்முள் வேற்றுமையற்ற குணம் உடையினவாயிருக்கும். அதுபோல வேற்றுமை இல்லாத உயர்ந்த குடியில் பிறந்து வாழ்ந்தவராயினும் அவருள்ளும் உரையும் பாட்டுமாகப் புகழப்பட்டோர் மிக சிலரேயாவர். அத்தாமரையின் இலைபோல புகழற்று மாய்ந்தவரே பலர் புலவர் பாடும் புகழ்பெற்றோர் வானின் கண் செலுத்துபவன் இல்லாதுதானே இயங்கும் வானவூர்தியில் செல்லும் அளவு உயர்வர்.
(திருக்குறள்)
3. தோன்றிற் புகழோடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று.
4. திருக்குறளுக்கு முன்னதாகவே இம் மக்கள் தம் வாழ்நாளில் பெறவேண்டிய குறிக்கோளாக இடந் தந்து பாடாண் திணை என்றொரு திணையையும் வகுத்துள்ளது. இதனைக் கொண்டிருந்தனர் என்பதை நன்கு அறியமுடிகிறது. இலக்கணமும் இதற்குப் பெரியதோர் ஏன்?
11. வன்மைமிக்க அரசர்கள் போர் என்ற வழியை
பயன்பெறும் வழியாகக் கருதியது ஏன்?
இயற்கையாக மனதில் தோன்றும் வெறுப்புணர்ச்சிக்கு வடிவு கொடுப்பதன்மூலம் இரண்டு பயன்கள் கிட்டுகின்றன. முதலாவது யாரை வெறுக்கின்றோமோ அவர்மேல் போர் தொடுத்து வெற்றி காண்பது இரண்டாவது அவ்வாறு பெறும் வெற்றியைப் பிறர் புகழவும் காரணமாகிறது. அரசர்கள் புரியும் இப்போரினை தம்முடைய நாட்டு மக்களின் நலத்திற்காகவே செய்ததாகவும் கூறினர். மக்களும் இதனை நம்பினர்.
12. போரைத் தவிர்த்து புகழ்
பெறுவதற்கான வேறு வழிகளில்லையா? என்பதற்கான விடைகளாக கூறப்பட்டுள்ள கருத்துகள் யாவை?
காங்குடி மருதனார் என்ற புலவர் தம்முடைய அரசனுக்குண்டான போர் வெறியைத் தணிக்க மதுரைக் காஞ்சி என்றொரு நூலையே இயற்றினார். இந்நூல் போர் வெறி என்ற பாலைவனத்தில் இஃது ஒரு நீர்
ஊற்றுப்போன்று காணப்படுகிறது. இந்நூலில் பாண்டியன் தலையாலங் கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனுக்கு கூறும் அறிவுரையில்
பொற்பு விளங்கு புகழவை நிற்புகழ்ந்து
ஏத்த விளங்கு இழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே (மதுரைக்காஞ்சி)
பொருள்
உனக்கிருக்கும் வாழ்நாள் ஓரளவுடையதாகலின் நல்ல முறையில் உண்டு உடுத்து மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக.
....இப்புலவர் இதே மன்னனை புறப்பாட்டு ஒன்றிலே
ஒண்தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி பெரும ஆங்கது
வல்லுனர் வாழ்ந்தோர் என்ப (புறம்)
பொருள்
வளையணிந்த மகளிர் நறுமணம் மிக்க மதுவை அதனையுண்டு மகிழ்வுடன் இனிதே வாழ்வாயாக! பெருமானெ! வீர ஒழுக்கம் வல்லவரே வாழ்ந்தோராவர் என்பர் அறிவுடையோர். பழமையான புகழும் அதுவே.
13. போர் செய்து அடையும் புகழைவிட வேறு வழியிலும் நல்லதொரு புகழை
அடையமுடியும் என்பதனை இக்கட்டுரை ஆசிரியர் எவ்வாறு விளக்குகின்றார்?
தமிழ் நாட்டில் இப்பேரரசர்கள் வாழ்ந்த காலத்தில் சில சிற்றரசர்களும் வாழ்ந்துள்ளனர். அவர்களின் குறிக்கோள முற்றிலும் வேறானதாகும். கடையெழு வள்ளல்களைப் பற்றியும் இப்புறப்பாடல்கள் கூறுகின்றன. அவர்களும் புகழ்படைத்தவர்களாகவே உள்ளனர்.
பேரரசர்களும் குறுநில மன்னர்கள் சிலரும் புகழை அடைய இருவேறுபட்ட வழிகளைக் கையாண்டனர். போர் வெறிகொண்டு தமிழர் குருதியை ஆறாகப் பெருகவிட்டு புகழடைந்து செருக்குற்றனர் பேரரசர். குறுநில மன்னர்கள் பிறருக்கு தீங்கு புரிவதனை கனவிலும் கருதாதவர்களாய் வாழ்ந்து அவ்வள்ளல்களும் புகழ் பெற்றனர். அடையும் பயன் ஒன்றேயாயினும் கையாண்ட வழிகள் மாறானவை. அறிவுவழி மேற்கொண்ட பேரரசர்களின் புகழைவிட அன்பு, அன்பு வழி மேற்கொண்ட வள்ளல்களின் புகழ் சிறந்தது மேலானது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக