17.11.25

தரம்:-11, தமிழ் இலக்கிய நயம் தீவு மனிதன்

தமிழ் இலக்கிய நயம்

தீவு மனிதன்

1. இச்சிறுகதை ஆசிரியர் யார்?

பார்த்திபன்

2. இச்சிறுகதை ஆசிரியர் பற்றி சிறுகுறிப்பு எழுதுக?

இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.

தற்போது ஜேர்மனியில் வசித்து வருகின்றார்.

புலம்பெயர் இலக்கியப் புலத்தில் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக விளங்குபவர்.

தூண்டில் என்ற முதலாவது புலம்பெயர் தமிழ்ச் சஞ்சிகையினை வெளியிட்டவர்.

நாவல் சிறுகதை, சஞ்சினை ஆசிரியர் என்று விரியும் இவரது ஆளுமை.

வித்தியாசப்படும் வித்தியாசங்கள், பாதி உறவுகள், ஆண்கள் விற்பனைக்கு கனவை மிதித்தவன் முதலான நாவல்களையும் எழுதியுள்ளார்.


3. இச்சிறுகதையின் பேசுபொருளாக அமைவது யாது?

வேகமாகச் சுழலும் இன்றைய உலகம் தஅதையை விருப்பத்தையும் தேவையையும் உணர்ந்துகொள்ளத் தவறி விடுகிறது. அரசியல், பொருளாதாரம், சமூகக் கூறுகள் அவனைத் தனித்து அலைய வைக்கின்றது. இவ்வாறாக பாதிப்பிற்குள்ளான மனிதனைப் பற்றி இக்கதை பேசுகின்றது.

4. இத்தலைப்பின் பொருத்தப்பாட்டினை விளக்குக?

தீவு என்பது நான்கு பக்கமும் கடலால் கூழப்பட்ட நிலப்பரப்பைக் குறிக்கின்றது.

உறவுகளின் நெருக்கமற்ற நிலையும், அரசியல், பொருளாதாரம், சமூகக் கூறுகள் தனிமனிதனை அலைய வைக்கிறது. அதிலிருந்து விடுதலை பெறத்துடிக்கும் மனிதனை இச்சிறுகதை காட்டுகின்றது

.
கடலால் சூழப்பட்ட தீவு போன்று தனிமைப்படுத்தப்பட்ட உறவுகளின் நெருக்கமின்றி நீண்ட இடைவெளியில் அகப்பட்டு வாழும் மனிதனது பாதிப்பினை எடுத்துக்காட்டும் இச்சிறு கதைக்குத் தீவு மனிதன் என்ற தலைப்பு பொருத்தமானது எனலாம்.

5. ஆசிரியரின் மொழிநடை

சிறுசிறு வாக்கியங்கள் கொண்ட சம்பவங்கள்.

வாசகர்களைக் கவரக்கூடியதான வர்ணனைப் பிரயோகம்

கதைகளையும் சம்பவங்களையும் பின்னிச் செல்லுதல்.

கதை கூறும் பாணி

கையாளப்பட்டுள்ள உத்திகள்

புதிய அனுபவத்தையும் தேடலையும் ஏற்படுத்துதல்.

6. கதை கூறுபவரின் உள்ளத்திலே தோன்றும் மகிழ்ச்சி வெளிப்படுமாற்றினை விளக்குக?

குழந்தையை
முதுகில் ஏற்றி யானையாகி மகிழ்தல்.

குழந்தையை சிரிப்பூட்டுவதற்காக குரங்காதல்.

அடிவாங்குதல். அது ஓடிவந்து என்னில் தாவி ஏறும்போது எனக்கு எல்லாம் மறந்து போதல் எனல்.

என்னை நான் மறுபடி புனரமைத்துக் கொள்ளவேண்டும். திரும்ப சிரிப்பை அணிந்துகொள்ள வேண்டும்.

இந்த உலகம் சரிவருமா என்று எங்களை நாங்களே கேட்டு கடைசியில் நாங்களாவது அங்கு போய்ச் சீவிப்போம் என்று உறுதி எடுத்தோம். நான் மிக மகிழ்ச்சியாக இருந்தேன்.

வெளியே போய் என்னைப் போலிருக்கும் மற்றவர்களுடன் சேர்ந்து கள்ளன் பொலிஸ் விளையாடினேன், போனை அடித்தேன், கோயில் கட்டி தேர் இழுத்தேன், இலந்தைப் பழம் பொறுக்கினேன்.

7. கதை சொல்லி தனது தீவு பற்றி கூறுவது யாது?

எனது தீவு நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்டது. இந்த தீவில் என்னுடன் சேர்ந்து உடனிருந்தவை ஒரு புத்தக அலுமாரி, ஒரு கசெற் றெக்கோடர், ஒரு செற்றி; ஒரு யன்னல் மட்டுந்தான். எனது தீவில் நான் மட்டும்தான் அழுவேன். இந்தத் தீவில் இருக்கின்றபோது அடிக்கடி அழுகை வருகிறது. வெளியே போகின்ற போதெல்லாம் அணிந்து செல்கிற சிரிப்பைக் கழட்டி எறிந்துவிட்டு சுதந்திரமாக அழுவேன் எனது யன்னலுக்கு இது வடிவாகத் தெரியும்.

8. பிரதான பாத்திரம் தனக்கு பிடித்தமானவையென எவற்றைக் குறிப்பிடுகின்றது?

யன்னலுக்கூடாக வெளியே எட்டிப் பார்க்கும்போது வீடுகள் மரங்களுக்கு அப்பால் மேலே உயரரத்தில் வானம். அதன் நீலநிறம் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் எனது தீவின் சுவர்களை நீலமாக்கி வைத்திருக்கிறேன். தரைக்கும் நீலம் விரித்திருக்கின்றேன். தவிர நாலு சேர்ட்டு நீலக் கலரில் வைத்திருக்கிறேன். எனக்கு வானம் பிடிக்கும். அதன் நீலம் பிடிக்கும். பஞ்சு பஞ்சாகப் போகும் மேகங்கள் பிடிக்கும். எனக்கும் அவற்றுக்கும் நீண்ட தூரம். எந்த நெருக்கமோ, உருவோ இல்லை. எந்த நெருக்கமோ உறவோ இல்லை. எனினும் அவற்றை எனக்குப் பிடிக்கும்.

9. இக்கதையில் புது ஆரம்பம் என குறிப்பிடப்படுவது யாது?

ஒருவருடனான சந்திப்பு. அவனது கவிதைகளைச் சொல்லிக் காட்டினான். உடனே கவிதையையும் அவனையும் பிடித்துவிட்டது. அது ஓர் அதிசயமான நெருக்கம். எனது உள்ளத்து ஏக்கமும் காயங்களும் அவனது பண்பும் இதற்குக் காரணமாய் இருக்கலாம்.

நாங்கள் ஒன்று சேர்ந்து நாங்கள் விரும்பும் உலகையும் மனிதர்களையும் எழுத்தால் செய்தோம். எமது உலகில் எமக்குப் பிடித்தமானவைகளுக்கு மட்டும் இடமளித்தோம். இந்த உலகம் சரிவருமா என்று எங்களை நாங்களே கேட்டு கடைசியில் நாங்களாவது அங்கு போய்ச் சீவிப்போம் என்று உறுதி எடுத்தோம்.

நான் மிக மகிழ்ச்சியாக இருந்தேன். எனக்கென்று தனித்தீவு இனித் தேவையில்லை. வெளியே மனிதர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன் நான் சேர்ந்துகொள்வேன். அவர்கள் என்னைச் சேர்த்துக் கொள்வார்கள் எனது காயங்கள் மாறாவிட்டாலும் மறந்துபோயின. நாங்கள் ஒன்றாகக் கனவு கண்டோம். ஒன்றாக எழுதினோம். பிறகு அவன் தனக்கென ஒரு துணையைத் தேடிக் கொண்டான். எனக்கு உலகம் இன்னும் விரிந்தது. அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.

குழந்தையுடன் பலவாறு மகிழ்ந்து விளையாடினேன். என்ன இன்மையான உலகம். நாங்கள் வேறு உலகம் போகிறோம் என்று ஒரு நாள் அவன் புதுக்கவிதை எழுதினான். நான் அதிர்ந்து போனேன். நாங்கள் குடியிருப்பதற்காகச் செய்த உலகம் என்று கேட்டேன்.

இப்போது நாங்கள் இருப்பது உண்மை உலகம், இனி நாங்கள் போகப்போவதும் உண்மை உலகம்தான் உண்மையைப் புரிந்துகொள் யதார்த்தமாய் வாழப் பழகிக்கொள் என்றான்.

உலகங்களைப் பற்றி ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் வரைவிலக்கணங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாங்கள் போய் வருகின்றோம் என்று எல்லோரும் போய்விட்டார்கள். குழந்தையும் போய்விட்டது. எனக்கு எல்லாமாக இருந்தது. அதுவும் போய்விட்டது. இப்போது யானையும் குரங்கும் தான் மிஞ்சிப் போயிருக்கின்றன.

10. பிரதான பாத்திரத்தின் இரண்டாவது அனுபவமாக அமைந்த சம்பவம் யாது?

இது முதல் தடவை. நான் திகைத்து நிலை குலைந்து போனேன். எனக்கு நிறைய அனுபவங்கள் எனது ஒரு நாள் ஒருத்தி என்னைத் தனக்கு பிடித்திருப்பதாகச் சொன்னாள். இப்படிச் சொல்லப்பட்டது எனக்கு பழைய காயங்கள் எனது தீவு இவைகளை நினைத்து இம்முறை நான் மிகவும் எச்சரிக்கையாய் இருந்தேன் அவர் விருப்பத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு காலஅவகாசம் கேட்டேன். காலத்தை இழுஇழு என்று இழுத்தேன்.

இப்போது எனக்கு அவனையும் பிடித்திருக்கிறது என்றாள். எனக்கு குழப்பமாயிருக்கு முடிவெடுக்க என்றாள். சில காலம் செல்ல தனது துணையுடன் வந்து எனக்கு அறிவுரை சொன்னாள். மறுபடி அவர்களைக் காணவேயில்லை, தற்செயலாகத்தான் எனக்கும் அவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது. எனக்கு மறுபடியும் தீவு மறந்து போயிற்று. என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பதுபோல் உணர்கையில் நான் மகிழ்ந்துதான் போனேன். அவர்கள் வீட்டிலும் குழந்தை வந்தது. எனது உலகம் இன்னும் விரிந்தது. யாராவது உனக்கென்று சொந்தங்கள் வேண்டாமா என்று கேட்கையில் நான் என்ன தீவிலா இருக்கின்றேன் என்பேன். என்னைச் சுற்றிலும் ஆதரவு காட்டும் மனிதர்கள் என்னை நன்றாக அடையாளம் கண்டுகொள்ளும் குழந்தைகள்.

எனக்கும் சந்தோஷத்திற்கும் அப்படி ஒரு உறவு. மறுபடி நிகழ்ந்தது. எங்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் நீ வந்து போவதை தெருவில் கிடக்கின்ற கண்கள் கவனித்து வாய்கள் தவறாகப் பேசலாம். அதனால்... என்று அவன் சொன்னபோது நான் திரும்பத் திரும்ப துண்டு துண்டாய் உடைந்து போனேன். மீண்டும் என்னை எனது தீவுக்கு திருப்பியனுப்புவதற்கான ஆயத்தம் ஆரம்பமாகி விட்டது.

11. இப்பிரதானபாத்திரம்தான்தீவுக்கு அனுப்பப்பட்டசந்தர்ப்பங்களாக எவற்றைக்குறிப்பிடுகின்றார்?

மேற்கூறப்பட்ட இரண்டு சந்தர்ப்பங்களையுமே தான் தீவுக்கு அனுப்பப்பட்ட சந்தர்ப்பங்களாகக் குறிப்பிடுகின்றார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக