தமிழ்ப் பண்பாடு
தனிநாயகம் அடிகள்
01. தமிழ்ப் பண்பாடு எனும் கட்டுரை யாரால் எழுதப்பட்டது?
தனிநாயகம் அடிகளால் எழுதப்பட்டது
02. சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
நச்சினாக்கினியர்
03. "உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது" இக்கூற்றை கூறியவர் யார்?
சுவாமி விபுலானந்த அடிகளார்
04. தனிநாயகம் அடிகளாரால் எழுதப்பட்ட இலக்கியங்கள் சில தருக?
தமிழ்த்தூது
ஒன்றே உலகம்
திருவள்ளுவர்
05. "யாமிரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல அன்பால் அன்பும் அருளும் அறனும் மூன்றும்.." இப்பாடல் இடம்பெறம் நூல் ?
பரிபாடல்
06. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான் புகழ்.."இக்கூற்றைக் கூறியவர் யார் ?
பாரதியார்
07. "இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்.." இம்மை என்பதன் பொருள் யாது?
இப்பிறப்பு
08. "உலகம் போற்றும் ஆடவல்லாரின் வடிவம் இப்பக்தியின்..." இங்கு ஆடவல்லார் எனக்குறிப்பிடப் படுபவர்?
நடராஜப் பெருமான்
09. பக்தி இலக்கியம் தோன்றுவதற்கு எவ்விலக்கியம் துணை நின்றதாக கூறப்படுகின்றது?
அகத்திணை இலக்கியங்கள்
10. வடமொழி சமய இலக்கியங்கள் வளம்பெற உதவிய தென்னாட்டு தத்துவ ஞானிகள் யாவர்?
சங்கரர்
இராமானுஜர்
மாதவர்
11. 'தெய்வம் உணவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ..' இவ்வடியில் இடம்பெற்றுள்ள உயிரளபெடை ?
தொகைஇ
12. உலக மனப்பான்மை மாசுபடக் காரணமாக இருந்த விடயம் யாது?
சமயக் காழ்ப்புணர்ச்சி
13. தமிழ் மரபின்படி இலக்கிய இலக்கணங்களை ஆக்கிய மேனாட்டார் யாவர்?
வீரமாமுனிவர்
கால்டுவெல் ஐயர்
போப்பையர்
14. தமிழில் பக்திப்பாடல்களைப் பாடியவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக?
சுவாமி விபுலானந்தர்
அப்பர்சுவாமிகள்
சேக்கிழார்
கம்பர்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
இராமலிங்க அடிகள்
பாரதிதாசன்
15. மக்கள் நலக் கொள்கையை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?
கியூமனிசம் (Humanism)
16. "நான் மனிதன், மனிதனுக்கு எதிரான எதனையும் நான் வெறுப்பதில்லை" எனும் மக்கள் நலக் கொள்கையை கூறியவர் யார்?
ரெறன்ஸ் எனும் இலத்தீன் மொழிப் புலவர்
17. பக்திப்பண்புடைய தமிழ்க் கலைகளுக்கு உதாரணம் தருக?
இசைக்கலை, பரதநாட்டியம், தஞ்சாவூர்ப பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம்
18. "திருக்குறளைப் போல் உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்ட ஒரு நூலை இவ்வுலகில் காண்பது அரிது" எனும் கூற்றைக் கூறியவர் யார்?
அல்பேர்ட் சுவைச்சர்
19. "உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது." இதில் பயின்று வந்துள்ள அணி யாது?
உள்ளக்கமலம் உருவக அணி
20. "யாதும் ஊரே யாவரும் கேளீர்.." எனும் பாடலடி இடம் பெறும் இலக்கியம் யாது?
புறநானூறு
21. இலட்சியத்தை தேற்றம் கொடுத்து வலியுறுத்தும் இலக்கியம் யாது? உதாரணம் தருக?
புறநானூற்று இலக்கியம்
'உண்டாலம்ம இவ்வுலகம்" இம்மைக்காவது மறுமைக்காமென..' எனும் பாடல்கள்
22. தனிநாயகம் அடிகள் பற்றிச் சிறுகுறிப்பு வரைக?
இவர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற கிராமத்தில் நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு, சிசிலியா இராசம்மா வஸ்தியாப்பிள்ளை ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். கணபதிப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட இவர் தமிழை உலகெல்லாம் எடுத்துச் சென்று அதன் உயர்வினை அறியச் செய்த தமிழ்த் தொண்டர். இலங்கையிலே தலைசிறந்த தமிழியலாளர்களுள் ஒருவர். தன் காலத்து தமிழறிஞர்களை ஒன்றிணைத்து தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர். 1966 முதல் தமிழாராய்ச்சி மாநாட்டை நடாத்தியவர். தமிழ்த் தூது, ஒன்றே உலகம், திருவள்ளுவர் போன்ற நூல்களுடன் அதிகளவான கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
23. தமிழர் பண்பாட்டின் குறிக்கோள்களாக ஆசிரியர் குறிப்பிடுவன யாவை?
இக் கட்டுரையில் தமிழர் பண்பாட்டின் அடிப்படையான கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களாக ஆசிரியர் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார்.
பரந்த உலக மனப்பான்மை
விருந்தோம்பல்
பிறர் மீதான அன்பு
மனத்தூய்மை
விடாமுயற்சி
யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும் மனநிலை
அகத்திணை, புறத்திணை வாழ்வு
மானம்
என் கடன் பணி செய்து கிடப்பதே எனச் செயற்படல்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனும் உயர்ந்த இலட்சியம்
தமக்கென வாழாது பிறருக்காக வாழும் பரந்த மனப்பாங்கு
மானமென்றால் உயிரையும் கொடுத்து காப்பாற்றும் வேட்கை
24. இக்கட்டுரையிலே தமிழர் பண்பாட்டின் சிறப்பியல்புகளாக ஆசிரியர் குறிப்பிடுவன யாவை?
இக் கட்டுரையில் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பியல்புகள் என பின்வருவனவற்றை கட்டுரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.
உலக மனப்பான்மை உலக மனப்பான்மை எனும் போது, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதும், சமணம், பௌத்தம் என்பவற்றை தமிழ் நாட்டவர் வரவேற்றமையும், கிரேக்கர் மற்றும் வடஇந்தியரிடம் இம் மனப்பாங்கு காணப்பட்டமையும்
கண்ணோட்டம் சமய தத்துவம், இலக்கியம், கலை, உரை எனும் பல பிரிவுகளில் இத் தன்மையை காண முடிகின்றது.
பக்தி இலக்கியம், ஆலயம், பிறநாடுகள், புலவர்கள் எனும் வகையில் இதனை காணலாம்.
ஒழுக்கம் தமிழரது பண்பாட்டில் ஒழுக்கமே முதன்மையானது, திருக்குறள் ஒழுக்க நூலாக விளங்குகின்றது.
மக்கள் நலக்கொள்கை இதில் அடங்கும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயற்படும் தன்மைகள்
25. தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சி பற்றிக் கருத்துரை வழங்குக?
கட்டரையிலே தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சி பற்றி ஆசிரியர் குறிப்பிடுவனவற்றை பின்வருமாறு எடுத்து நோக்கலாம்.
பிற சமயத்தவர்கள் தமிழரது பண்பாட்டினை தழுவியமையால் தமிழ்ப் பண்பாடு வளர்ச்சி அடைந்தது.
இந்து சமய வழிபாட்டு முறையும் இலக்கியங்களும் தென்னாட்டு தத்துவங்களால் வளம் பெற்றன இதுவும் தமிழர் பண்பாட்டின் வளர்ச்சியை எடுத்துரைக்கின்றது.
பார்ப்பனரும், சமணரும், பௌத்தரும், கிறிஸ்தவமும் தமிழ்ப் பண்பாட்டினை தழுவியமை
பக்தியின் மொழி தமிழ் எனப்பட்டதுடன் அத் தமிழ் மொழியில் பல இலக்கியங்கள் தோற்றம் பெற்றுள்ளமையும் தமிழர் பண்பாட்டின் எடுத்துக்காட்டாகும்.
சிலப்பதிகாரம், மணிமேகலை, தேம்பாவணி, சீறாப்புராணம் என்பனவற்றில் சமயக் கோட்பாடுகளில் தமிழர் பண்பாடு பற்றிய குறிப்புக்கள் விளக்கப்பட்டுள்ளமையை காண முடிகின்றது.
இந்தியப் பண்பாட்டில் அதிகம் இடம் பெற்றுள்ளது தமிழர் பண்பாடேயாகும். இவ்வாறு தமிழர் பண்பாட்டின் வளர்ச்சி பற்றி அறிய முடிகின்றது.
26. தமிழ் பக்தியின் மொழி என்பதனை ஆசிரியர் எவ்வாறு எடுத்துக் காட்டுகின்றார்?
தமிழ் பக்தியின் மொழி என்பதை எடுத்துரைக்க கட்டுரையாசிரியர் பல காரணங்களை குறிப்பிடுகின்றார். அவற்றைப் பின்வருமாறு எடுத்து நோக்கலாம்.
பக்தி இலக்கியங்கள் பலவும் தமிழ் மொழியிலேயே தோற்றம் பெற்றுள்ளதால் அத்தகு பக்தி இலக்கியங்களைப் போல அழகிலும், ஆழத்திலும், பரப்பிலும் வேறெங்கிலும் இல்லை எனக் கூறுதல்.
பரிபாடல் முதலாக விபுலானந்தர் இலக்கியம் வரை புலவர்கள் பலரும் பாடிய பாடல்கள் தமிழ் மொழியிலே பிறர் இன்புறும் வகையில் அமையப் பெற்றுள்ளமை.
பக்தியை உணர்த்தும் சொற்கள் பலவும் தமிழ் மொழியில் அமைந்துள்ளமை
நாயன்மார்கள், ஆழ்வார்கள், மற்றும் கம்பர் போன்றோரின் தமிழ்ப் பக்தியுணர்வு உலகிலே நிகரற்றது.
காணலாம். * ஏனைய தமிழ்க்கலை பலவற்றிலும் பக்திப்பண்பு இணைந்திருப்பதைக் உதாரணமாக, தஞ்சைப் பெருங்கோயில், இசைக்கலை மற்றும் கங்கை கொண்ட சோழ புரம் என்பவற்றை குறிப்பிடலாம்.
27. தமிழர்களின் பரந்த உலக மனப்பான்மையை எடுத்துக் காட்டும் இலக்கிய உதாரணங்கள் யாவை?
புறநானூறு - 'யாதும் ஊரே யாவரும் கேளீர்...
திருக்குறள் 'யாதானும் நாடாமல் ஊராமல்.."
28. கால அடைவில் தமிழர் பண்பாட்டின் நிலை யாது?
கால அடைவில் தமிழர் பண்பாடு அத்துணை அளிவிற்கு மாற்றம் காணவில்லை
ஆனால் காலப்போக்கில் வளர்ச்சி அடைந்துள்ளது
வட ஆரியர் தமிழ் நாட்டிற்கு வந்த காலத்திலும், சமணர், ஐரோப்பியர் ஆகிய பிறநாட்டவர் செல்வாக்கடைந்த காலத்திலும் தமிழர் பண்பாட்டு அடிப்படைக் கொள்கைகளில் மாற்றம் அடையவில்லை
29. தமிழர் பண்பாட்டை விளக்க பிற மதத்தினர் இயற்றிய நூல்கள் எவை?
சிலப்பதிகாரம் சமண மதத்தவரான இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது
மணிமேகலை பௌத்த மதத்தவரான சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்டது
தேம்பாவணி கத்தோலிக்க சமயத்தவரான வீரமாமுனிவரால் இயற்றப்பட்டது
சீறாப்புராணம் இஸ்லாமிய சமயத்தவரான உமறுப்புலவரால் இயற்றப்பட்டது
30. பண்டமாற்று வணிகம் குறித்த கட்டுரையாசிரியரின் கருத்துக்கள் யாவை?
தமிழ் நாட்டின் புவியியல் அமைப்பு அதனை பண்டமாற்று வணிகத்திற்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது
கீழ்த்திசை நாடுகளுக்கு செல்ல வேண்டிய மேற்றிசைப் பண்டங்கள் தமிழ் நாட்டில் இறக்கப் பெற்று வேறு மரக்கலங்களில் கீழ்த்திசை நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது
மேற்றிசை நூல்களே சங்க இலக்கியத்தைப் போல இவ்வணிக நடவடிக்கைகள் தொடர்பாக சான்று பகிர்கின்றன.
31. உலக மனப்பான்மை யாருடைய கொள்கைகளுடன் முரண்பட்டு இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது?
வட ஆரியர், கிரேக்கர் போன்றோருடைய பண்டைக் கொள்கைகளுடன் முரண்பட்டிருந்தது
வட ஆரியர் இயம மலைக்கும் விந்திய மலைக்கும் இடையே உள்ள நிலம் தான் புண்ணிய பூமி என்று கருதினர்
கிரேக்கர்களான அரிஸ்டோட்டில், பிளேட்டோ போன்றவர்கள் கிரேக்கர் மட்டுமே உயர்ந்தவர்கள் என்றும் பிற மக்களை நாகரிகம் அற்றவர்கள் என்றும் கூறிவந்தனர்.
32. கண்ணோட்டம் என்றால் என்ன? அக்கொள்கையின் சிறப்பம்சங்கள் யாவை?
உலக மனப்பான்மையில் இருந்து தோன்றிய மற்றுமோர் கொள்கையே கண்ணோட்டம் எனப்படும்
தமிழ் நாட்டிற்கு அப்பாலிருந்து வந்த சமயங்கள், தத்துவங்கள் தமிழ் நாட்டில் தடையின்றி போதிக்கப் பட்டமை
பெரும் விழாக்களில் தத்துவவாதிகள் தத்தம் கொடிகளைப் பறக்கவிட்டு தம் கருத்துக்களைப் பற்றி உரை நிகழ்த்தியமை
33. திருவள்ளுவர் சமணர் என்ற கருத்துக்கு முரண்பாடாக அமையும் கருத்துக்கள் யாவை?
அவர் எழுதிய காமத்துப் பாலும், இல்லறத்தைப் போற்றும் முறைகளும்
அவர் தம் கருத்துக்களை பல தமிழர்களின் மூல நூல்களில் இருந்த பெற்றிருக்கலாம் என்ற கருத்து
34. சமயம் கடந்த தமிழ்ப்பணி பற்றி கண்ணோட்டம் பகுதியில் ஆசிரியர் குறிப்பிடுவன யாவை?
இடைக்காலத்தில் வைணவர், சைவர் ஆகிய பார்ப்பன உரையாசிரியர்கள் சமண நூல்களை இலக்கிய நூல்கள் எனக்கருதி நுட்பமான உரைகள் எழுதியிருக்கின்றமை.
பிற்காலத்தில் சமய சமரசக் கீர்த்தனைகள், சமரசக் கொள்கை என்று உண்மை, அழகு பொதிந்துள்ள கருத்துக்களைத் தந்துள்ளனர்.
பேராசிரியர் சேதுப்பிள்ளை திருக்காவலூர் கலம்பகம், தேம்பாவணி, சீறாப்பராணம் பற்றியும் எழுதியுள்ளார்.
திரு.வி.கலியாணசுந்தரனார் கிறிஸ்துவில் அருள்வேட்டல், புத்தரின் அருள்வேட்டல் போன்ற இலக்கியங்களைப் பாடியுள்ளார்.
கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை இயேசு, புத்தர் போன்றவர்களைப் பற்றிப் பாடியுள்ளார்.
35. பக்தி பிறநாடுகளுக்கு பரவியது என்பதற்கு கட்டுரையாசிரியர் கூறும் சான்றுகள் யாவை?
இந்தோனேசியாவில் இருக்கும் பிறம்பாணாள் பானாத்தரான் கோயில்கள்
கம்பூச்சியாவில் இருக்கும் சில அரண்மனைகளும் சிற்பங்களும்
தாய்லாந்தில் கொண்டாடப்படும் திருவெம்பாவை திருநாள்
உலகம் போற்றும் ஆடவல்லாரின் வடிவம்
36. தமிழர் பண்பாட்டில் ஒழுக்கம் பெறும் முக்கியத்துவம் யாது?
தமிழர் பண்பாட்டின் ஒரு அடிப்படைக் கொள்கையாக ஒழுக்கம் அமைந்துள்ளது
தமிழர் வாழ்க்கைக்கு பெரும் அழகையும், மனநிறைவையும் ஒழுக்கம் நல்குகின்றது
தமிழ் மக்கள் இத்தனை நூற்றாண்டுகளாக தனி நாடுகளில் வாழ்ந்து செழித்தோங்குவதற்கும் அரசியல் வாழ்க்கைக்கும் இவ்வொழுக்கமே துணையாக அமைந்துள்ளது
37. மக்கள் நலக் கொள்கை நம் பண்பாட்டில் ஓர் அடிப்படைக் கொள்கையாக அமைந்துள்ளமைக்கு ஆதாரம் தருக?
* மனிதனை என்றும் பேண வேண்டும் என்ற நோக்கினைக் கொண்டிருத்தல்
ஒரு செயலால் வரும் பிற நலன்களைக் கருதாமல் நன்மையை நன்மைக்காக செய்ய வேண்டும் என்ற தன்மையைக் கொண்டிருத்தல் 'இம்மைச் செய்தது..'
"மேலுலகம் இன்றெனினும் ஈதலே நன்று' எனும் தன்மை காணப்படல்
38. புறநானூறு கூறும் தமிழர் பண்பாட்டின் அடிப்படைக் கொள்கைகள் யாது?
இந்திரனுடைய தேவாமிர்தம் கிடைத்தாலும் அது இனியதென தனியாக உண்ணாதவர்கள். யாரையும் வெறுக்காதவர்கள், பிறர் அஞ்சுகின்ற துன்பத்திற்கு தாமும் அஞ்சி அது தீர்தற் பொருட்டு இறக்காதவர்கள், புகழ் கிடைப்பதாயின் அதற்கென தம்முயிரைக் கொடுப்பவர்கள், ஒன்றைப் பெறுவதற்காக பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைத்தாலும் அதனைப் பெற்றுக் கொள்ளாதவர்கள், சோர்வு அற்றவர்களாய் மாட்சிமையுடையவராகி தமக்கு மாத்திரம் என ஒன்றையும் முயலாது வலிய முயற்சியுடையவர்கள், பிறர் பொருட்டு முயற்சியுடையவர்கள் போன்றோர்கள் இருப்பதனாலே தான் இவ்வுலகம் இருக்கிறது என புறநானூறு தமிழர் பண்பாட்டின் அடிப்படைக் கொள்கையினை எடுத்துரைக்கின்றது.
39. இக்கட்டுரையில் வெளிப்படுகின்ற ஆசிரியரின் மொழிநடைபற்றிக் குறிப்பிடுக?
வாசகருக்கு விளங்கக் கூடிய வகையிலே எளிய மொழிநடையினைக் கையாண்டுள்ளமை
சிறு சிறு வாக்கியங்களைக் கொண்டு கட்டுரையினை படைத்திருக்கின்றமை
பல்வேறு விடயங்களை ஒப்பிட்டு நோக்குகின்ற தன்மை காணப்படுகின்றமை
பொருத்தமான உதாரணங்களைக் கையாளுதல், பொருத்தமான இடங்களில் பொருத்தமான அணிகளைக் கையாண்டு கட்டுரையை அமைத்திருக்கின்றமை
அறிஞர்களுடைய கருத்துக்களை ஆதாரம் காட்டி விளக்குகின்ற பாங்கு
பிறமொழிச் சொற்களைக் கட்டுரையில் தேவைக்கேற்ப பயன்படுத்தியுள்ளமை
தர்க்கரீதியான தனித்துவம் வாய்ந்த மொழிநடையினைக் கையாண்டிருக்கின்றமை
தலைப்பிற்கு ஏற்ற வகையிலே தமிழர் பண்பாட்டு அம்சங்கள் தொடர்பான விடயங்கள் நிறைந்ததாக கட்டுரை அமையப் பெற்றுள்ளமை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக