திணை
திணை என்பது சாதி என்கிறார் ஆறுமுக நாவலர். ஆனால் சாதி என்ற சொல் வழக்கொழிந்து தற்போது குடும்பம், குழு,
வகுப்பு என்ற பெயர்களால் வழங்கப்படுகிறது.
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவர் அல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே
- தொல்காப்பியம் -
அந்த வகையில் உயர்திணை பற்றி நன்னூல் கூறும்போது
மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை
(நன்னூல் :261) என்கின்றது.
எனவே மக்கள், தேவர், நரகர் உயர்திணை என்றும் மற்றைய உயிர் உள்ளனவும், உயிர் அற்றனவும் அஃதிணை என்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக