15.11.25

தெரிநிலை வினை & குறிப்பு வினை

தெரிநிலை வினை

வெளிப்படையாக காலத்தை காட்டும் வினை தெரிநிலை வினை எனப்படும்.
+ம் - படித்தான் - இறந்த காலம்
எழுதுவான் - எதிர்காலம்
அதாவது தெரிநிலை வினையானது
    
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள்
ஆகிய ஆறு பொருள்களைத் வெளிப்படையாக காட்டும் என்பர்.நன்னூலார்.


செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே
(
நன்னூல்:319) என்பது நன்னூல் நூற்பா.

     வனைந்தான்
செய்பவன் - குயவன்
கருவி - திரிகை
நிலம் - வனையும் இடம்
செயல் - வனைதல்
காலம் - இறந்தகாலம்

இந்த ஆறு விடயங்களையும் வினைச்சொல் உணர்த்துவதை அறியலாம்.
   
 வினைச் சொற்களை முற்றுவினை, எச்சவினை என
இரண்டாகப் பிரிக்கலாம். எச்சவினையைப் பெயரெச்சம்,
வினையெச்சம் எனப் பிரிக்கலாம்.

.குறிப்பு வினை

வெளிப்படையாக காலத்தை காட்டாது குறிப்பாக காலத்தை காட்டும் வினை குறிப்புவினை எனப்படும்.
    
+ம் - அவன் கரியன்
அவன் நல்லவன்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக