தமிழர் நாகரிகத்தில் கிராமிய வாழ்க்கை
வினா விடைகள் :
1. நாகரிகம் எத்தன்மையானது என தமிழர் நாகரிகத்தில் கிராமிய வாழ்க்கை கட்டுரை வெளிப்படுத்துகிறது?
சமுதாயம் அழிந்து போகாமல் தொடரச் செய்வது. பிழைப்புக்கும் சுக அனுபவத்திற்கும் உயர்பண்புகளுக்கும் ஆதாரமானவை. முன்னர் இருந்தவற்றுக்கு உயிர்கொடுப்பது.
2. நகரவாசிகள் கிராமத்திற்குச் சென்றாலும் கிராமிய வாழ்வை அனுபவிக்க மாட்டார்கள் என்பதற்கு கட்டுரையாசிரியர் கூறும் நியாயங்கள் எவை?
சாப்பாட்டுப் பிரச்சினை
மோட்டார் கார்,
தொய்ந்துபோன காதில் வைத்து ஊசலாடும் வைரக்கம்மல் மனைவி, விட்டமின் மாத்திரை, திருக்குறள் உபாசனை இவற்றுடன் கிராமத்துக்குச் செல்லல்.
தாம் வாழ்ந்த கிராமம் பற்றிய வரலாற்று உணர்வோடு வாழும் உயரிய பண்பு.
இயற்கையை நண்பனாக்கி அவற்றோடு இணைந்து வளங்களைப் பாதுகாக்கும் பண்பு.
பத்திரிகையும் பழக்கூடையும் பட்டணத்திலிருந்து வருதல்.
ஆற்றிலே நிறைந்த தண்ணீர் போனாலும் வெந்நீரில் குளித்தல்.
தென்றல் காற்று வீசினாலும் பிளானஸ் சட்டையைப் போட்டுக்கொண்டு வெள்ளை பூணி தடியோடு உலாவுதல்.
பட்டணத்திலிருந்து சிலவற்றை கொண்டுவந்து கிராமத்தைப் பார்த்தால் கிராமம் தென்படாது.
3. நாகரிக வளர்ச்சியில் கிராமங்கள் பெறும் முக்கியத்துவம் தொடர்பாக கட்டுரையாசிரியர் கூறுவதென்ன?
கிராமிய மக்களின் உடல்,
உள உறுதி அவர்கள் காட்டும் பரிவு என்பன நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படை யாகின்றது.
கிராம மக்களின் பசிப்பிணி போக்கும் விருந்தோம்பும் உயர்ந்த பண்பு நாகரிக வளர்ச்சிக்கு அடித்தளமாகின்றது.
நகரங்கள் தோன்றலாம், யந்திரங்கள் வரலாம். ஆனால் இவற்றுக்கெல்லாம் வாய்ப்பாக அமைவன கிராமங்கள்.
சமுதாய நாகரிக வளர்ச்சியின் ஆதார சக்தியாக விளங்குவது கிராமிய விவசாயமாகும்.
4. கிராம
மக்களின் சிறந்த பண்புகள் என ஆசிரியர் கூறுவன வற்றை
எடுத்துக் காட்டுக?
எதையும் வெளிப்படையாக சொல்லும் பண்பு
கிராம மக்களிடம் வலிமை உண்டு. பரிவும் உண்டு.
திசைமாறித் திரிவோர்க்கு விருந்தோம்பல் செய்யும் மனப்பாங்கு.
கிராமிய மக்கள் வாழ்க்கையின் தேவைக்காக கடுமையாக உழைக்கும் பண்பு.
எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் கூட்டு வாழ்க்கைப் பண்பு.
5. ஒப்பீட்டு அடிப்படையில் கிராம
வாழ்க்கை பற்றியும் பட்டணத்து வாழ்க்கை பற்றியும் கட்டுரையாசிரியர் கூறுவனவற்றை துலக்குக?
கிராம வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவன் பட்டண வாழ்க்கை யை விரும்பான். பட்டண வாழ்க்கையை விரும்பியவன் கிராம வாழ்க்கையை விரும்பான்.
பட்டண வாழ்க்கையில் பசி போக்கமுடியாது. கிராம வாழ்க்கை நிரம்ப பசியாற முடியும்.
பட்டணம் சமூக விருப்பத்திற்கும் அறிவுக்கும் ஏற்ற இடமாகலாம். ஆனால் அவற்றின் உயிர்ப்புக்கும் தெளிவுக்கும் மூலமாக விளங்குவது கிராமம்.
கிராமம் தூர்ந்து போனால் பட்டணம் பாழாகிவிடும்.
பட்டணம் இயற்கையோடு இயைந்து கொள்வதில்லை. கிராமம் இயற்கையோடு இணைந்து வாழக்கூடியது.
பட்டணத்தில் பிழைக்கலாம், ஒதுங்கி வாழலாம். ஆனால் கிராமத்தில் ஒதுங்கி வாழமுடியாது.
பட்டணத்து ஒழுங்குமுறை, இட நெருக்கடி போன்ற வற்றை கிராமத்தில் காணமுடியாது. பசி வந்தபோதுதான் கிராம மக்கள் உணவு அருந்துவர்.
பட்டணத்தில் குளிப்பதற்கு குழாய் தண்ணீரையே பயன்படுத்துவர். கிராமத்தில் தாராளமான ஆற்று நீரைப் பயன்படுத்துவர்.
6. கட்டுரையாசிரியர் தெரிவுசெய்த கிராமத்தின் இயல்புகளைக் கூறுக?
கட்டுரையாசிரியர் தெரிவுசெய்த கிராமத்தில் ஒரேயொரு தெருவுண்டு. அங்கு பிராமணர்கள் இல்லை. ஒரு கோடியில் கிராம அதிகாரியும் மறுகோடியில் கணக்குப்பிள்ளையும் இருக்கிறார்கள்.
தெருவுக்கு கூப்பிடு தூரத்தில் பத்துப் பதினைந்து வீடுகளைக் கொண்ட மறவர் வாழ்கின்றனர். இவர்களது தொழில் ஏர் பிடித்து உழுதலாகும்.
மறவர் தெருவுக்கு எட்டாத தூரத்தில் மறைவாக வாழும் பள்ளர்சேரி உள்ளது.
கிராமத்தில் ஒரேயொரு மைதானம் உள்ளது. மாடுகள் படுக்கவும் சாணி தட்டவும், நெல் உலர்த்தவுமே பயன்படு கின்றது.
கிராம மக்களின் வழிபாட்டிற்கு பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. ஊரின் எல்லையில் காவல் தெய்வமான பேராய்ச்சி கோவில் உள்ளது.
பேராய்ச்சி கோயிலில் வருடத்திற்கு ஒரு முறை மிருக பலியிடும் வழக்கம் உள்ளது.
7. கட்டுரையில் இடம்பெறும் பேராய்ச்சி கோயில் பற்றி
கட்டுரையாசிரியர் கூறுமாற்றினை எடுத்துரைக்குக?
ஊரின் எல்லையில் பேராய்ச்சி கோயில் காவல் தெய்வமாக உள்ளது.
இக் கோயிலில் வருடம் ஒரு தடவை மிருக பலியிடும் வழக்கம் உண்டு.
கோயிலின் கர்ப்பக்கிரகம் இருட்டாக இருக்கும். விறைத்துப் பார்க்கும் கண்களுடன் கையில் சூலம் தாங்கியிருக்கும்.
கோயிலில் குடி கொண்ட தாயின் மகத்துவம் வலிமை வாய்ந்தது. அருளாட்சி செய்யும் அத்தாய் மிகுந்த கண்டிப்புக்காரி.
8. கிராமிய நாகரிகத்தில் விவசாயம் பெறும் முக்கியத்துவம் தொடர்பாக கட்டுரையாசிரியர் கூறுவனவற்றை எடுத்துக் காட்டுக?
ஒளவையார் பாடிய சில பாடல்களின் துணை கொண்டு கிராமிய நாகரிகத்தில் விவசாயம் பெறும் முக்கியத்துவத்தை கட்டுரையாசிரியர் விளக்கியுள்ளார்.
சமூகத்தின் ஸ்திரத்தன்மைக்கு அவசியமும் ஆதாரமும் கொண்டது விவசாயம். மேழி பிடிக்குங்கை வேல்வேந்தர் நோக்குங்கை
ஆழி பிடித்தே அருளும்கை' சக்கரம் இயங்க விவசாயம் அடிப்படையாகின்றது. என்று குடிமக்களுக்கு குறை வராமல் அரசனது ஆணைச்
உடை முள்ளையும் கடும் வெயிலையும் ஆற்று வெள்ளத்தையும் கொடுங் காற்றையும் தம் சகாக்களாகப் பாவித்து அவற்றை வசக்கி வயலின் வளத்தை பாதுகாக்கும் விவசாயத்தின் வளர்ச்சியிலேயே மனித வாழ்க்கை தங்கியுள்ளது.
'வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்'
என்ற ஔவையாரின் பாடல் வரிகள் இதனை வலியுறுத்தி யுள்ளது. இதுவே சமுதாய வளர்ச்சியின் ஆதாரசக்தியுமாகும். ஆற்றங்கரையில் உள்ள மரமும் நீரினால் அரிக்கப் பட்டு ஒரு நாள் விழுந்து போகலாம். அரசவையில் அதிகாரத்துடன் வீற்றிருந்த வாழ்வும் நிலைத்து இருக்காமல் போகலாம். ஆனால் விவசாயிகள் வாழ்வுக்கு அழிவேயில்லை.
9. கிராமிய மக்களின் விருந்தோம்பலும் பரிமாறும் உணவின் சுவை பற்றியும் கட்டுரையாசிரியர் கூறுமாற்றினைத் துலக்குக?
மதுரை மாநகரத்தில் பாண்டிய மன்னனது கலியாணத் தில் உணவு கிடைக்காததை கேலி செய்து கிராமத்தின் விருந்தோம்பல் தன்மையை ஒளவைப்பாட்டியே பெருமைப் படுத்துவது போல கூறப்பட்டுள்ளது.
வாசனை உடையதாகவும், வேண்டியளவு உண்ணக் கூடியதாகவும், நெய் விட்டுச் சேர்த்து, இலைக்கறி சேர்த்த உணவென்று சொல்லி அமுதம் போன்ற இனிய உணவினை ஈந்தாள் வளையலணிந்த கிராமத்துப் பெண்.
இன்னொரு வேளையில் தன் பசி போக்க உண்ட உணவினை,
'வரகரசிக் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முறமுறெனவே புளித்த மோரும்'
எனக் குறிப்பிடுகின்றாள். வரகரசியில் சமைத்த சோறு. கத்தரிக்காய் பொரியல், நன்றாகப் புளித்த மோரும், முற முற என பொரியலுடன் அவ்வுணவு இருந்தது.
10. இக் கட்டுரையில் புதுமைப்பித்தன் கையாண்ட மொழிநடைச் சிறப்பினை ஆராய்க?
பொதுவாக புதுமைப்பித்தன் கையாளும் மொழிநடை எவரும் கையாளாத ஒரு புது மொழிநடை என்பதை இக் கட்டுரை அறியத்தருகின்றது.
மறுமலர்ச்சி எழுத்தாளர் என்ற வகையில் பேச்சு மொழியில் உள்ள சொற்கள், சொற்றொடர்கள், இலக்கண அமைதி, பிறமொழிச் சொற்கள் முதலான வற்றை பயன்படுத்தி தனது உள்ளத்தில் எழும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வாசகர் மனங் கொள்ள வேண்டுமென்ற வருணனைப் பாங்கும் இக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.
இலகுவில் வார்த்தைக்குள் சிக்காத கருத்துக்களை ஒரு சில சொற்களால் அழகுற அமைத்துக்காட்டும் யதார்த்த பூர்வமான மொழிநடையாக அமைந்துள்ளது.
மனித நடத்தையை கிண்டல் கேலி செய்வது போன்ற மொழிநடையாகவும் உள்ளது.
ஆங்கில மொழிப் பதங்களையும் வடமொழிப் பதங் களையும் ஏற்ற இடங்களில் பயன்படுத்தியிருப்பது சமூகத்தில் காணப்படும் குறைபாடுகளை குத்திக் காட்டுவது போல மொழிநடை அமைந்துள்ளது.
வாக்கியங்கள் பெரும்பாலான இடங்களில் சிறு வாக்கியங்களாக அமைந்திருப்பதோடு வசனங்களோடு கருத்துக்களை விளக்க செய்யுள் அடிகளும் பயன் படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக