7.9.25

ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் தலப்புராணங்கள் தோற்றம் பெற ஏதுவாய் அமைந்த சூழ்நிலை

ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் தலப்புராணங்கள் தோற்றம் பெற ஏதுவாய் அமைந்த சூழ்நிலையை விளக்குக.?

 

யாழ்ப்பாணத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலம் கி.பி 13 - 17 நூற்றாண்டு வரை நிலவியது. இக்காலப் பகுதியில் சமயச் சார்புடைய இலக்கியங்கள் எழுந்தன. அவற்றுள் தட்சிணகைலாய புராணம், திருக்கரசைப் புராணம், வியாக்கிரபாத புராணம் என்பன மேற்படி காலப்பகுதியைச் சார்ந்தன. இவற்றுள் முதலிரண்டுமே நூல் வடிவில் எமக்குக் கிடைப்பன.) வியாக்கிரபாத புராணத்தில் இரு பாடல்களே கிடைத்துள்ளன.

புராணம் என்ற இலக்கிய வகையில் ஒரு கிளையான தலபுராணம் பிரிவைச் சார்ந்த இவ்வாக்கங்கள் முறையே திருக்கோணேஸ்வரம், திருக்கரசை ஆகிய தலங்களின் சிறப்புரைப்பன. இவற்றில் கதை மூலங்கள் வடமொழிப் புராண மரபு சார்ந்தவை. இவ்வகையில் ஈழத்தில் பண்டுதொட்டுப் பேணப்பட்டு வந்த வடமொழி மரபின் விளை பொருளாகத் இத்தல புராணங்கள் கொள்ளத்தக்கன.

தலபுராணம் என்ற இலக்கிய ஆக்கம் குறித்த ஒரு தலத்தின் இறைவன் புகழை மையப்படுத்தி) அதன் சூழலில் உள்ள மக்களின் பண்பாட்டையும் வரலாற்றையும் விரித்துரைப்பதை நோக்காகக் கொண்டது.

பெரும்பாலான புராணங்கள் நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே காண பரம்பரைக் கதைகளையும் உள்வாங்கிப் பாடப்பட்ட போதும் ஆட்சியாளர்களின் திருப்பணிச் செயற்பாடுகளையும் அவர்களது ஆட்சிப் பிரதேச நிலைகளையும் சுட்டிச் செல்வதை பெரும்பாலான தலபுராணங்களினூடாக கண்டு கொள்ளலாம். தமது ஆட்சிப் பரப்பின் நிலை பேற்றையும் விஸ்தரிப்பையும் நிலை நிறுத்தும் பொருட்டு சமயத் தலங்களை அமைப்பதும் புனரமைப்பதும் அவை பற்றிய புராணங்களைச் செய்விப்பதும் அரசின் முக்கிய செயற்பாடுகளாகும். இந்த வகையிலேயே யாழ்ப்பாணத்து அரசர் காலத்துப் புராணங்களையும் தெரிந்து கொள்ளல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக