23.9.25

A/L தியாகம் சிறுகதை வினா விடை

தியாகம் - சிறுகதை : கு. அழகிரிசாமி (1923 1970)

திருநெல்வேலி மாவட்டத்தில் இடைச்செவல் என்னும் சிற்றூரில் குருசாமி, தாயம்மாள் ஆகியோருக்கு முதல் மகனாக 23.09.1923 இல் பிறந்தார். விடாமுயற்சியுடன் எஸ்.எஸ்.சி. வரை படித்து முடித்தார். இவரிடம் பள்ளிப் படிப்பை விட அனுபவ அறிவே அதிகம் எனலாம். 1952 1957 வரை மலேசியாவில் வசித்தார். 1955 இல் சீநாலெட்சுமியை மலேசியாவில் திருமணம் செய்து கொண்டார்.

20
ஆம் நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த இவர், சிறுகதை, கட்டுரை, புதினங்கள், மேடை நாடகங்கள். கவிதைகள், கீர்த்தனைகள், மொழி பெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார்.

1970
இல் இவரது அன்பளிப்பு' என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்டது. "உறக்கம் கொள்ளுமா?" என்ற இவரது முதல் சிறுகதை 1943 இல் ஆனந்த போதினி மாத இதழில் பிரசுரமானது. ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் நூலை முதன்முதலில் தமிழாக்கம் செய்தவர் இவர்.

தமிழ் இலக்கியங்களோடு மேல்நாட்டு இலக்கியங்களையும் படித்தார். அத்துடன் பழைய பாடல்களுக்கு உரையெழுதும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார். "ராஜா வந்திருக்கிறார்" என்ற இவரது கதை இந்திய மொழிகளிலும் ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதையாகும்.

1960 1965
வரை நவசக்தி நாளிதழில் பணிபுரிந்தார். இக்காலத்தில் "சுவிச்சக்கரவர்த்தி 61680 வரலாற்று நாடகத்தை எழுதினார். இந்நாடகம் இவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது.

பின் ஐந்தாண்டுகள் சுதந்திர எழுத்தாளராக இருந்தார். கடிதம் எழுதுவதைக் தமது கடமையாகக் கொண்டிருந்தார். இவர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு."கு. அழகிரிசாமி கடிதங்கள்" என்ற நூலாக வெளிவந்துள்ளது.

இவரது சிறுகதைகள் ஒன்பது தொகுதிகளாகவும் கட்டுரைகள் ஐந்து தொகுப்புக்களாகவும் வெளிவந்துள்ளன. இருபதாம்நூற்றாண்டின் சிறந்த சிறுகதையாசிரியர்களுள் ஒருவராக விளங்கியவர்.

'தியாகம்' சிறுகதையில் ஆசிரியர் வெளிப்படுத்த விளைந்த விடயமும் சிறுகதையின் பேசுபொருளும்:

முதலாளி, தொழிலாளி சார்ந்த சிந்தனைகளை ஏற்படுத்துதல்.

கதிரேசன் செட்டியார் வேலையாட்களோடு மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்பவராகத் தோன்றுகிறார்.

முடிவில் அவர்,வேலையாட்களின் முன்னேற்றத்தில் அக்கறை மிக்க நல்லுள்ளங் கொண்டவர் என்பது புலனாகின்றது.

கதையின்
மையக்கரு:

கோவில்பட்டிக் கிராமத்தில் மளிகைக் கடை நடத்திவரும் கதிரேசன் செட்டியார், அங்கு வேலை செய்யும் பையன்களுடன் வெளிப்பார்வைக்கு மிகவும் கடுமையானவராக நடந்துகொள்பவராகத் தோன்றினாலும் அந்தப் பையன்களின் முன்னேற்றத்திற்காகத் தனது நலத்தையும் பொருட்படுத்தாது தியாகம் செய்து வாழ்கிறார் என்பதை எடுத்துரைத்தல்.

'தியாகம்' சிறுகதையின் கதாபாத்திரங்கள்:

கதிரேசன்செட்டியார் மளிகைக்கடை முதலாளி, சோமசுந்தரம்பிள்ளை கணக்கு எழுதுபவர், ஷண்முகம்பிள்ளை(அண்ணாச்சி) கதிரேசன் செட்டியாரது நண்பர். சிப்பந்திகள்: முருகையா,வெங்கடாசலம் உட்பட நால்வர்

'தியாகம்' சிறுகதையில் வெளிப்படுத்தப்படும் எடுத்துரைப்பு முறை:

கதைப்பொருளுக்கேற்ப குறைந்தவளவான,அவசியமான பாத்திர வார்ப்புக்களை சிருஷ்டித்துக் கதை நகருமாறு கதை புனையப் பெறுவது சிறந்த சிறுகதைக்குரிய இலக்கணமாகும். அவ்வகையில் கதிரேசன் செட்டியார், சோமசுந்தரப்பிள்ளை ஷண்முகம்பிள்ளை,கடைச்சிப்பந்திகள் ஆகியகுறைந்தளவான பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு எடுத்துக்கொண்ட கருவை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

கதையாசிரியரே கதைசொல்லியாக அமைந்து, கதையின் பிரதான பாத்திரத்தின் செயற்பாட்டை அறிமுகம் செய்து கதையை அவரது பார்வையில் கூறப்பட்டுள்ளது: அன்றும் கலை 10:25 க்கு கடைக்கு வந்தார். கடைக்குள் நுழையும் போது முகத்தை எப்படி வைத்துக்கொள்ள வேண்டுமோ ஒரு குறிப்பிட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும் அப்படி வைத்துக்கொண்டார். இந்த முகபாவத்தின் பிரதான அம்சம், கடுகடுப்பு, பிரதானமில்லாத அம்சம், ஒரு மாதிரியான விறைப்பு என எடுத்துரைத்தல்.

கதாசிரியரே கதை சொல்லுவதாக அமைந்த போதிலும், சில இடங்களில் பாத்திர உரையாடலை முன்வைத்தும் கதை வளர்த்துச் செல்லப்பட்டுள்ளது. செட்டியாருக்கு அவர் சொன்னது விளங்கவில்லை. அதனால் "என்ன அண்ணாச்சி? என்ன சொல்றீங்க? என்று கேட்டார் "ஒங்களைப் பார்க்க எனக்கு உண்மையிலேயே பாவமா இருக்கு. இப்படிக் கத்தினா ஒங்க ஓடம்புக்கு ஆகுமா?! செட்டியாரும் தம் நிலையை எண்ணித் தாமே வருந்தினார். "என்ன செய்றது? நாம வாங்கின வரம் அப்படி அந்தச் சோமசுந்தரப்பிள்ளை நடுவில ஏதாச்சும் செய்வாரு.அதுதான் சாக்குன்னு கொஞ்சம் வாயை மூடுவேன்.

திருநெல்வேலி பேச்சுத்தமிழை லாவகமாகக் கையாண்டு கதையை வளர்த்தெடுத்துள்ளார் "அஷ செருப்பாலே! நாயே! வாயைத் தொறக்கிறியா நீ? (கணக்குப் பிள்ளையைப் பார்த்து பார்த்தீரா சோமசுந்தரம்பிள்ளை? பயல் எதுத்தல்லே வெவகாரம் பண்றான்? ஜோட்டாலே அடிச்சி வெளியே பத்தும் இவனை! நமக்குச் சரிப்படாது. கஞ்சிக்கில்லாமே செத்த பயல்களை இரக்கப்பட்டுக் கடையிலே வச்சது என் முட்டாள்தனம்.

கதையின் இறுதிப்பகுதி வரையிலும் கதிரேசன் செட்டியாரின் கடுமையான போக்கிள் மனக்கிடக்கை வெளிப்படாத வகையில் அவர் செய்து வந்த தியாகம் இறுதியில் வெளிப்படுத்தப்படும் பாங்கில் கதையை நகர்த்திச் சென்றுள்ளார். கதையின் இறுதிப் பகுதியில் கதிரோன் செட்டியார் பையன்களின் முன்னேற்றத்திற்காக தனது நலத்தையும் பொருட்படுத்தாது தனது நலனைத் தியாகம் செய்து வாழ்ந்தமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கதிரேசன் செட்டியார் தனது நாளாந்த கடமைகளை ஆற்றுவதில் கண்டிப்பான மனநிலையோடு காணப்பட்டமையினை அவரது செயற்பாடுகள் மூலம் காட்டிய கதாசிரியர்,கடைச்சிப்பந்திகளோடு கடுமையான முறையில் நடந்து கொண்ட கண்டிப்பான சுபாவத்தை, அவரது ஏச்சுக்கள் மூலமாக நுணுக்கமான முறையில் வெளிப்படுத்திக கதையை நகர்த்திய பாங்கு குறிப்பிடத்தக்கது." கழுதே! ஒன்னைத் தானே! பருப்புலே ஒரே கல்லாக் கெடக்குன்னு சொன்னேனே, பொடச்சி வச்சியா? என்னடா! இல்லையா? அப்போ நான் பொய்யா சொல்றேன்?

கதையில் பாத்திரங்களின் உரையாடல்கள் யாவம் இயல்பு குன்றாத வகையில் இடம்பெற்றுள்ளன. அவ்வுரையாடல்களே பாத்திரங்களின் குணாதிசயங்களையும் காட்டி விடுவனவாக அமைந்துள்ளன. கதிரேசன் செட்டியாரின் கண்டிப்பான மன நிலையும் தியாக மனநிலையும் உரையாடல் முலமாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சோமசுந்தரப்பிள்ளை பையன்களை முதலாளியின் கண்டிப்பில் இருந்து விடுவிக்கும் பாத்திரமாக இயங்குவதும் உரையாடலின் வாயிலாகவே வெளிப்படுத்தப்படுகிறது.

கதையில் இலேசான நகைச்சுவையை இழையோடவிட்டும் கதையை நகர்தியுள்ளார்:

தியாகம் சிறுகதையை நகர்த்திச் செல்லும் உத்திகள்

பாத்திர வசீகரங்களை இயல்புத்தன்மையில் பயன்படுத்தியமை:பாத்திரங்களின் இயக்கத்தையும் உரையாடல்களையும் இயல்பு குன்றாமல் வாசகர்களை வசீகரிக்கும் வகையில் சித்திரிப்பதன் மூலம் பாத்திரங்களின் குணாதிசயங்களைப் புலப்படுத்தல்.

செட்டியார் இப்பாத்திர இயல்பு நேரடியாக கூறப்பட்டாலும், சில இடங்களில் அப் பாத்திர செயற்பாட்டின் மூலம் குறிப்பிட்ட பண்பு வெளிக்காட்டப்படுகிறது: விபூதி பூசிய புதுப்பையனை ஏசிய பின் ஏனையை கடைச் சிப்பந்திகள் சிரிப்பார்கள். அப்போது செட்டியார் "செட்டியார் அதோடு அவனை விட்டு விடாமல் மற்றொரு பையனைப் பார்த்து அஸ்திரத்தைத் தொடுத்தார்" என கூறினார்.இதனால் ஏசுவதில் கூட சமத்துவம் தெரிகிறது. இவ்வாறு வாசகர்களை சிந்தனை ரீதியாக அறிவை தூண்டுவதும் ஒரு வகையான இயல்புதான்.

கணக்குப்பிள்ளை கதை நகர்வில் இப்பாத்திர ஒத்துழைப்பை விட பிரதான பாத்திரமான செட்டியாருக்கு இப்பாத்திரம் வழங்கும் ஒத்துழைப்பு சிறப்பானது.கதாபாத்திரங்களுக்கு இடையிலான முறுகல் நிலையை தளர்வடையச் செய்து கதை நகர்வை செவ்வனே கொண்டு செல்ல இப் பாத்திரம் உதவியாகவுள்ளது. அண்ணாச்சி செட்டியாரது தியாக உணர்வு வெளிப்பட காரணமானது இப் பாத்திரமேயாகும்.

கதைப்பின்னலில் கையாளப்பட்ட உத்திகள்-செட்டியாரது பாத்திர அறிமுகம் செட்டியாரது கடை நுழைவு.கடை நிகழ்வுகள்,அடுத்த நாள் கடை நிகழ்வுகள்.ஷண்பக வள்ளியம்மன் கோயிலுக்கு செல்லல் எனும் ஐந்தும் கதைப்பின்னலை ஒன்றோடு ஒன்று இணைத்த விதம் சிறப்பானது. ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு நகரும் போது அந்த இணைப்பை தனது உத்தியால் சிறப்பாக காட்டியுள்ளார்.

செட்டியாருடைய பாத்திர அறிமுகத்திலிருந்து செட்டியாரது கடை நுழைவுக்கு செல்லும் போது அவரின் அறிமுகத்தில் அவரது பண்புகளை சுட்டி காட்டியதோடு அவரது குணத்தை கடை சார்பாக (கடைக்கும் அவருக்குமான தொடர்பு) காட்டி அதன் பின் நுழைவு இடம்பெறல்.

கடை நிகழ்வில் அதிகமாக செட்டியார் சிப்பந்திகளுக்கு ஏசுவதாகதான் உள்ளது. எனவே கடை நுழைவிற்கு பின் கடை நிகழ்வுகளை தொடங்க செட்டியாரது முகபாவத்தை காட்டியுள்ளார்.

அடுத்த நாள் நிகழ்வை தொடங்க வாசகர்கள் விளங்க "மறுநாள்" என்று கூறி தனது உத்தியை காண்பித்துள்ளார்.

செட்டியாரின் உள்நோக்கம் தெரியாமல் கதையினை கொண்டு செல்லுதல் ஆரம்பத்தில் வாசகருக்கு கெட்டவராக காட்டி இறுதியில் அவரது தியாக உணர்வினை வெளிக்காட்டல்

என்பதையும் தாண்டி சிந்திக்கும் அளவிற்கு கதையை நகர்த்தியுள்ளார்.உண்மைச் சம்பவங்கள்.யதார்த்தமாக கடையில் நடக்கும் விடயங்கள்.இலேசான நகைச்சுவையை இழையோடவிடல்

பரீட்சையமான மொழி வழக்கு பேச்சு மொழி யாவாரம், ஒண்ணுக்குப் பாதியா.நெத்தியில போன்ற சொற்கள் பாத்திர உரையாடல்களுக்குப் பொருத்தமான பேச்சுமொழிகளைக் கையாளல்,மதுரைத் தமிழ் : போங்கல எம் முஞ்சியில முளிக்காதிங்க வாங்க அண்ணாச்சி,வித்தியாசமான சொற்பிரயோகம் : ஜருராக சிப்பந்தி,ஜோட்டால,அத்துடன் எளிமையான சொற்கள் ติทันเ சிறிய வசனங்களை கையாண்டுள்ளமை,

கதையினை கதாசிரியர் அதிகமாக சொல்லாமல் உரையாடல்கள் மூலம் கதையினை நகர்த்தியுள்ளார்: அறிமுகம் கதையாசிரியரால் சொல்லப்படல்,பாத்திரங்களுக்கிடையில் அதிகமாக உரையாடல்கள் இடம்பெறல், பாத்திர உரையாடல் மூலம் கதையை வளர்த்துச் செல்லல்,

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் கதாபாத்திரம் குறைவு : செட்டியார். சோமசுந்தரம்பிள்ளை, ஷண்முகம்பிள்ளை, சிப்பந்திகள், கதைக்களம் குறைவு: செட்டியாரின் கடைவீடு செல்லும் வழி, சிறிய கதை

கதையின் தமிழர்தம் பண்பாட்டம்சங்களை சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக கையாண்டுள்ளமை ஷெண்பகவல்லியம்மன் கோயில் திருவிழா,மேளக்கச்சேரி, வான வேடிக்கை,வெளியூர் கூட்டம் என தமிழர் பண்பாடுகள் உள்நுழைக்கப்பட்டன.

அணிகளை கையாண்டுள்ளமை உவமை உருவகம்: "சேற்றிலே தோய்த்தெடுத்த கல்","நெத்திய கருவாடு

மாதிரி வச்சிக்கிட்டு". "புளுத்த நாய் குறுக்கே போகுது"

யதார்த்தமான கதைக்கருவும், நிதர்சனமான காடசிகளும் கதாபாத்திரமும் உபயோகிக்கப்பட்டன:புநுரா வந்த பையன் எதிர்த்துப் பேசுதல்,முதலாளியை யதார்த்தமாக படைத்துள்ளமை,புதிதாக வந்த பொடியனுக்கு முதலாளி ஏசுகின்ற பொழுது பழைய பொடியன்கள் நகைத்தல் இச் சிறுகதையை கதை என்பதையும் தாண்டி உண்மையாக நடப்பது போல கதையினை ஒரு காட்சியாக புலப்படுத்தியுள்ளார் கதையாசிரியர்.

ஆங்கில மொழிக் கலப்பில்லாத தூய தமிழ்ச் சிறுகதை தமிழ் சிறுகதைகளில் ஆங்கில மொழியின் உட்புகுதல் காரணமாக படிப்படியாக தமிழின் தனித்துவம் குறைகிறது.

தியாகம் சிறுகதையின் அமைப்பு முறையும் இடம் பெறும் பண்புகளும்

சிறுகதை என்பது: சுருக்கமான கதையைக் கூறும் புனைவு வகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக்கருவினை-நிகழ்ச்சியின் அனுபவத்தை விபரிக்கும் இலக்கியவகை. சிறுகதை, பொதுவாக குறும்புதினம் மற்றும் நாவலைவிட சுருக்கமானதும் முடிவில் திருப்பம் உடைய சிறிய கதை வடிவமும், பெரும்பாலும் நடப்பியல் நோக்கில் எழுதப்படுவதும் ஆகும்.

தமிழ் சிறுகதைப் படைப்பாளர்களில் புதுமைப்பித்தன் காலத்திலேயே கு.அழகிரிசாமி அவர்களின் படைப்பாற்றல், கற்பனை, மனோபாவ அலசல் எல்லாமே அபாரம். கதையின் தலைமாந்தரான மளிகைக் கடை செட்டியார் ஒரு வெகுளி தங்கமான மனசு, நீளமான நாக்கு என்பவற்றின் மூலம் தியாகம் சிறுகதை வெளிப்படுகிறது.

சிறுகதை விறுவிறுப்பாகத் தொடங்கி அதன் தொடர்ச்சியில் நெகிழ்ச்சி இல்லாமல் இயங்கி உச்ச நிலைக்கு சென்று முடிவுவரை படிப்பவரின் கவனத்தை ஒருமுகப்படுத்தல் என்பது அமைப்பில் காணப்படும் முக்கியமான முதல் அம்சமாகும்.ஆரம்பத்தில் செட்டியாரை வாசகர்களுக்கு வெறுப்பாகக் காட்டுவதும் இறுதியில் தியாக உணர்வு வெளிப்படுவதும் இக்கதையின் உயிர்நாடி எனலாம். இது வாசகரை ஒருநிலைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

இரண்டாவதாக படிப்பவரை சோர்வடையச் செய்யக் கூடாது இதுவும் அமைப்பின் பிரதான அம்சமாகும். இதற்கு உதாரணமாக நகைச்சுவையைக் கொள்ளலாம்: "ஏண்டா தடிப்பயல்களா! நீங்க என்ன பரதேசிகளா, சந்யாசிகளாடா? எருமைமாட்டுப் பயல்கள்! விடிஞ்சதும் நாலு வீட்டுக்கு யாசகத்துக்குப் போற பிச்சைக்காரப் பயல்கள்கூட இப்படி சாம்பல அள்ளிப் பூசமாட்டாளேடா?","நீங்களும் விபூதி பூசியிருக்கிங்களே மொதலாளி ?"

அடுத்ததாக கதை உணர்ச்சி ஓட்டம் காணப்படும் இதில் செட்டியாரை ஆரம்பத்தில் வெறுப்பாக காட்டி பின்பு அவருடைய தியாகம் வெளிப்படும் போது மனதை கசக்கி பிளிவது போல் காணப்படுதல்: இனிமே என்ன? வயசு அறுபதாச்சு உசுர வச்சிருந்து என்னத்த சாதிக்கப் போரம் என்று தியாக உணர்ச்சியோடு பேசினார்.

கருப்பொருள் எளிமையானதாகக் காணப்படல்: இதன் கருப்பொருளாக செட்டியாரது 'தியாகம்' காணப்படுகிறது. அத்தோடு உணர்ச்சி என்பதும் சிறுகதையின் அமைப்பில் ஒன்றாகும். இச்சிறுகதையில் நகைப்பு, வெறுப்பு. கருணை என்பன காணப்படுகின்றன. "நீங்களும் விபூதி பூசியிருக்கிங்களே மொதலாளி?""அடி செருப்பாலே! நாயே வாயை திறக்கிறையா நீ?"

எளிய நடை காணப்படுதல்: "கண்டிப்பா கேட்டியா? கண்டிப்பா கேட்டன் மொதலாளி" என்பது எளிய

நடைக்கு உதாரணம் ஆகும்.

சிறுகதையின் பண்புகளுள் உதாரணமாக மையக்கரு காணப்படுகின்றது. இந்த தியாகம் சிறுகதையின் மையக்கருவாக 'தியாகமே' காணப்படுகின்றது.

பாத்திரங்களைக் கொண்டிருத்தல் சிறுகதையில் காணப்படும் பண்பாகும். இக்கதையில் கதிரேசன் செட்டியார். சண்முகம் பிள்ளை, சோமசுந்தரம் பிள்ளை, முருகையா, வெங்கடாசலம் உட்பட நான்கு சிப்பந்திகள் மொத்தமாக ஏழு பாத்திரங்கள் காணப்படுகின்றன.

ஓர் இரு நிகழ்ச்சி காணப்படும்: கடை நிகழ்ச்சி செம்பக வல்லியம்மன் கோயில் நிகழ்ச்சி, செட்டியாரின்

வீட்டு நிகழ்ச்சி

தொடக்கமும் முடிவும் சுறுசுறுப்பாகக் காணப்படுதல்: இதற்கு உதாரணமாக குதிரைப் பந்தயத்தை கொள்ளலாம். அதாவது குதிரைப்பந்தயத்தில் எது முந்தும் என்ற விறுவிறுப்புடன் பார்ப்போம். அதேபோல் சிறுகதையில் அடுத்து என்ன நடக்கும் என்று வாசிப்போம்.

சுருக்கச் சொல்லும், சுருக்கெனச் சொல்லும் ஆற்றல்: சேற்றிலே தோய்ந்த என்பது சிறிய சொல்லானாலும் அது எமக்கு உடனடியாக சென்றடையும் எளிய சொல்லாகவும் காணப்படுகின்றது.

உரையாடல் அளவோடு இருத்தல்: "கண்டிப்பா கேட்டியா?கண்டிப்பா கேட்டன் மொதலாளி

கண்முன்னே நேரே நடப்பது போல் காணப்படுதல்: சிறுகதையில் காணப்படும் மற்றும் ஓர் அம்சமாகும்.

'தியாகம்' சிறுகதையின் பாத்திரப்படைப்புக்கள்:

() கதிரேசன் செட்டியார் பாத்திரப்படைப்பு

பாத்திர அறிமுகம்:கோவில்பட்டி மளிகைக்கடை கதிரேசன் செட்டியார் காலையில் பலகாரம் சாப்பிட பத்துமணி ஆகும். அப்புறம் ஒரு பத்து நிமிசம் உட்கார்ந்து சாப்பிட்ட சிரமத்தை போக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிள் கடையை நோக்கி புறப்படுவார். இவ் வரிகள் மூலம் தியாகம் சிறு கதையினுள் கதிரேசன் செட்டியாரின் பாத்திரம் வாசகர்களுக்கு அறிமுகமாகின்றது.

பாத்திர உருவாக்கம்: ஏகாதிபத்திய பண்புகள் தன்னகத்தே கொண்டு இரக்கமுள்ள ஒரு முதலாளியாகவும் மனசாட்சியும் அன்பும் உள்ள ஒரு மனிதராகவும் கதிரேசன் செட்டியார் என்ற பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

பழமையை மதிக்கும் ஒருவர்:இக்கதையில் அவர் அந்தக் காலத்து மனுசர் அவர் பழகிய உலகம் அவரை விட்டாலும் அவர் அதை விடுவதாக இல்லை' என்ற கூற்றின் மூலம் அறியலாம்.

கடமையை சரியாக செய்து முடிப்பவர்: கதிரேசன் செட்டியார் என்ற பாத்திரம் பற்றி கூறப்படுவது தனது காரியத்தில் கண்ணாக இருப்பவர் என்றும் தனது கடமைகளையும் சரியாக செய்து முடிப்பவர். எடுத்துக்காட்டு; இனி வசை புராணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான் எதைச் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கலாம் என்று ஒரு கணம் யோசித்தார். ஒரே ஒரு கணம் தான் சாக்கு கிடைத்து விட்டது. என்ற கூற்றின் மூலம் இவர் ஏசி ஏசி வேலை வாங்குபவராக காணப்படுகின்றார். என்பது புலப்படுகிறது. தனது கடையில் வேலை செய்யும் வேலையாட்களை மிகவும் கண்டிப்புடனும். கவனத்துடனும் வேலை வாங்குபவர்.

மணிக்கணக்கை சரியாக கணிப்பிடுபவர்: து நாளாந்த கடமைகனை உரிய வேளைகளில் செய்து முடிப்பதில் கண்டிப்பான மனப்பாங்குள்ளவர். காலை பத்து மணிக்குப் பலகாரம் சாப்பிடல், சாப்பிட்ட சிரமம் போக்கப் பத்து நிமிடம் உட்கார்ந்திருத்தல். அதன் பின் கடைக்குப் புறப்படல் 10:25க்கு கடைக்கு வருதல் என்பன இதனைத் தெளிவுபடுத்துகின்றன. கையில் கடிகாரம் காட்டாமலே நிமிஷக் கணக்கு தவறாமல் வருஷம் முந்நூற்று அறுபத்தைந்து நாளும் ஒரே மாதிரியாக அவர் கடைக்கு வருவதும் வீடு திரும்புவதும் இந்தக் காலத்துக் கடைச்சிப்பந்திகளுக்கு ஓர் அதிசயமாக இருக்கும் என்ற வரிகள் மூலம் எடுத்துக் காட்டப்படுகிறது.

கண்டிப்பான மனநிலையை உடல் மொழியாலும் வெளிப்படுத்தும் பக்குவ நிலையை அடைந்தவர்:

கடைக்குள் நுழையும் போது முகத்தை எப்படி வைத்துக் கொள்ளவேண்டுமோ அப்படி ஒரு குறிப்பிட்ட முறையில் வைத்துக் கொண்டார். இந்த முகபாவத்தின் பிரதான அம்சம் கடுகடுப்பு, பிரதானமில்லாத அம்சம், ஒரு மாதிரியான விறைப்பு. இந்த முகபாவத்தைக் கடையில் உட்கார்ந்திருக்கும் வரையில் எக்காரணத்தைக் கொண்டும் மாற்றமாட்டார். நண்பர்களோ. அந்தஸ்து மிக்க வாடிக்கைக்காரர்களோ வரும்போது அவர் சிரிக்கவோ, புன்னகை செய்யவோ வேண்டிய அவசியம் ஏற்படும். அதையும் இந்த முகபாவத்தை மாற்றாமலே நிறைவேற்றி விடுவார். எனக் கதாசிரியர் கூறுவது கடையில் எவ்வாறு இருக்க வேண்டும் மற்றவர்களுடன் எவ்வாறு பழக வேண்டும் என்ற பக்குவ நிலையை அடைந்ததைப் புலப்படுத்தும்.

பிறரை மதிப்பவர் தனது கடையில் வேலை பார்க்கின்ற கடைச் சிப்பந்திகளைத் செட்டியார் திட்டும் போது கணக்குப்பிள்ளை தடுத்து நிறுத்துவதை விரும்புபவர்.அதுபோல், தனது நண்பரான ஷண்முகப்பிள்ளையின் மீது அன்பும் மதிப்பும் கொண்டவராகவும் படைக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக கண்டிப்பாக இருப்பவர் தாள் கடைச்சிப்பந்தியாக வேலை செய்த போது தனது முதலாளி தன்னை ஏசித் திட்டி வேலை வாங்கியதால்தான், தான் இப்போது தன்னிலையில் இருப்பதாக எண்ணிக் கொள்பவர். தன்னிடம் வேலை செய்யும் சிப்பந்திகளும் நன்னைப்போல உயரவேண்டும் என்ற நன்னோக்கத்தில் அவர்களிடம் எந்நேரமும் கண்டிப்புடன் இருப்பவர் தனது கடையில் வேலை செய்யும் பையன்களுடன் கடுமையாக நடந்துகொள்பவராகத் தோன்றினாலும், அந்தப் வையன்களின் முன்னேற்றத்திற்காக தனது நலத்தையும் பொருட்படுத்தாது தியாகம் செய்து வாழ்பவராகப் படைக்கப்பட்டுள்ளார்.

தான் நம்புபவர்களையும் தன்னை நம்புபவர்களையும் கைவிடாதவர் தனக்கு நம்பிக்கையானவர்களையும் தன்னிடம் வேலை செய்பவர்களையும் எவ்வளவு கடுகடுப்பாக ஏசினாலும் சிடுசிடுப்பாக இருந்தாலும் இலகுவில் தூக்கி எறியாதவராகவே காணப்படுகிறார். இதனை அவரது கடைக் கணக்குப்பிள்ளையான சோமசுந்தரப்பிள்ளையை முப்பது வருசமாக தன் கூடவே வைத்திருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கண்டிப்புடன் இரக்ககுணம் வெளிக்காட்டாத உடையவராக இருந்தாலும் உண்மையன்புடையவர்:முதலாளியார் ன்னதான் கடைப் பையன்களை வெளியில் ஏசினாலும், பேசினாலும் அவர் மனதுக்குள் மிகுந்த பாசமும் இரகத்துடனும் பார்த்து வருபவர். ஏளைய கடைகளில் சிப்பந்திகளுக்குக் கொடுக்கும் சம்பளத்தை விட அதிக சம்பளம் கொடுப்பவர். தீபாவளிக்கு புது வேஷ்டி சட்டைகளுடன் பத்து ரூபாய் ரொக்கமாகவும் கொடுப்பவர். கடையில் வேலை பார்க்கும் பையன்கள் வளர்ந்து தனிக்கடை ஆரம்பிக்க உதவுபவர், பையன்கள் வாலிபராகித் திருமணம் நடைபெறும் போது திருமணச் செலவுக்குப் பணம் கொடுப்பவர். அவரது வீட்டுக்குச் சென்றால் சிலவேளை சாப்பிடவும் சொல்பவர், ஒரு போதும் தனது வீட்டு வேலைகளைச் செய்வதற்கு சிப்பந்திகளைப் பணிக்காதவர். வீட்டிற்கு கடைப் பையன்கள் போனால் ஐயா, ராசா என்று அன்போடு பேசுவார்.எனவே சிப்பந்திகள் மீது உண்மையன்பு கொண்ட பாத்திரமாகக் கதையில் படைக்கப்பட்டுள்ளார்.

கடவுள் பக்தி கொண்டவர் கடவுள் பக்தி கொண்டவராகவும் தான் மட்டும் அல்லாது நன்னீடம் வேலை செய்பவர்களையும் திருவிழா பார்க்க செல்ல வேண்டும் என நினைப்பவர். எடுத்துக் காட்டு: நீ என்னடா சைவனா? இல்லை வேதக்காரனா என்னல முழிக்கிற? உன் மூஞ்சிய பாத்தா எவண்டா கடைக்கு வருவான், நெத்தி சுடுகாடு மாதிரி வைச்சிக்கிட்டு""இன்னிக்கி திருவிழா ஆச்சே ஊர் பூராகவும் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுதே நாமளும் போகனும்னு உங்களுக்கு தோணல"

பாரம்பரிய மருத்துவ முறைகளை சேர்த்து அருந்துதல். அறிந்தவர்.தொண்டை வலிக்கு பாலில் பனங்கல்கண்டும் மிளகும்

பிறர் கேட்காமலே அவர்களின் விருப்பை அறிந்து உதவுபவர்.சிப்பந்திகளுக்கு கோயிலுக்குப் போவதற்கு பணம் கொடுப்பது.

என்னதான் முதலாளித்துவ பண்புகளைக் கொண்டு அவர் வேலை ஆட்களை பேசினாலும் தன்னுடைய வேலையாட்களின் நலனுக்காகவே தான் அவர் அரும்பாடு பட்டார் என்பது மறுக்க முடியாதது.

இந்த தியாகம் சிறுகதையில் முக்கியமான கதாபாத்திரமாக கதிரேசன் செட்டியார் என்ற பாத்திரம் விளங்குகிறது. இவரே கதையை நகர்த்தி செல்பவராகவும் கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை கதையில் இயங்கும் கதையை இயக்கும் பாத்திரமாகவும் காணப்படுகிறார்.

கதிரேசன் செட்டியார் பாத்திர வார்ப்பின் நுட்பம்:

கதையின் பிரதான பாத்திரமான கதிரேசன்செட்டியாரின் செயற்பாட்டை அறிமுகம் செய்வதாகவே கதை ஆரம்பமாகிறது. அத்தகைய அறிமுகம் கதிரோன் செட்டியார் தனது நாளாந்த கடமைகளைச் செய்வதில் கண்டிப்பான மனநிலையோடு செயற்படுவதனைப் புலப்படுத்துகிறது.

அப்பாத்திரத்தின் செயற்பாடுகளாகத் தொடர்ந்து கூறப்படும் செய்திகள் அவர் தொழிலாளிகளோடு (சிப்பந்திகள்) கடுமையாக நடந்துகொள்வர் என்பதான மனப்பதிவை வாசகரிடத்தில் பதித்துவிடும் வகையில் அமைந்துள்ளன.

சிப்பந்திகளைக் காரணமின்றி ஏசுவதன் மூலம் அத்தகைய குணவியல்பு (எதிர்மறைக் குணவியல் வெளிப்படுத்தப்படுகின்றது.

செட்டியார் சிப்பந்திகளோடு கடுமையாக நடந்து கொள்பவர் எனச் சித்திரிக்கப்பட்டதன் பிற்பாடு, மெல்ல மெல்ல செட்டியாரின் அன்புள்ளம் புலப்படுகிறது. "சோமசுந்தரப்பிள்ளை குறுக்கிட்டு கடைப் பையன்களுக்குப் புத்தி சொல்லத் தொடங்கிவிட்டால் கொஞ்சம் மூச்சு விட்டு ஒய்வெடுத்துக் கொள்வார். பையன்களைத் தாம் திட்டும் போது தடுத்து நிறுத்துவதற்கு ஓர் ஆள் வேண்டும் என்பதற்காகவே சோமசுந்தரம் பிள்ளையை அந்த முப்பது வருஷகாலமும் தம் கடையில் கணக்குப் பின்ளையாக வைத்துக்கொண்டதாக் கூறுவதிலிருந்து அவரது அன்பு மெல்ல வெளிக்காட்டப்படுகிறது.

பின்னர், கடையில் வேலை பார்க்கும் பையன்கள் வளர்ந்து தனிக்கடை ஆரம்பிக்க உதவுபவர், ஏனைய கடைகளில் சிப்பந்திகளுக்குக் கொடுக்கும் சம்பளத்தை விட அதிகம் கொடுப்பவர். பையன்கள் வாலிபராகித் திருமணம் நடைபெறும் போது திருமணச் செலவுக்குப் பணம் கொடுப்பவர், அவரது வீட்டுக்குச் சென்றால் சிலவேனை சாப்பிடவும் சொல்பவர். ஒரு போதும் தனது வீட்டுவேலைகளைச் செய்வதற்குச் சிப்பந்திகளைப் பணிக்காதவர். என அடுக்கிச் சொல்லப்படும் செய்திகள் மூலம் அவர் தொழிலாளிகள் மீது கொண்ட அன்புள்ளம் மேலும் விசாலமாக்கிக் காணப்படுகிறது. அத்தகைய உள்ளம் சிப்பந்திகளுக்கும் செட்டியாருக்கும் நடைபெறும் உரையாடல் ஒன்றின் மூலமும் (திருவிழாவுக்கு பணம் கொடுத்து அனுப்புதல்) நுட்பமான முறையில் வாசகருக்கு வெளிப்படுத்தப்படுகின்றது.

கதையின் ஆரம்பப் பகுதியில் சிப்பந்திகள் மீது கடும் போக்குடையவர் எனச் சித்திரித்துக் காட்டப்பட்ட செட்டியார் பாத்திரம், தொழிலாளர் நலனில் அக்கறையும் தொழிலாளர் மீது அன்பும் கொண்ட பாத்திரம் என்ற விடயம் மெல்லமெல்ல கதையோட்டத்தில் அவிழ்த்துவிடப்படுகிறது. கதையின் இறுதிப் பகுதியில் ஷண்முகம்பிள்ளைக்கும் செட்டியாருக்கும் இடையில் இடம்பெறும் உரையாடல் அவ்வன்பின் அக்கறையின் உச்சத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துவிடுகிறது. அவ்வுரையாடல் மூலமாக பையன்களின் முன்னேற்றத்திற்காக தனது நலத்தையும் பொருட்படுத்தாது தியாகம் செய்து வாழ்பவர். அவர்கள் நலத்தின் முன் தன்னுயிரைச் துச்சமாகக் கருதுபவர் என்ற உண்மை புலப்படுத்தப்படுகின்றது. அண்ணாச்சி? நீங்க என்னதான் சொல்லுங்க பயக நல்லபடியாகத் தலையெடுக்கணும், இவ்வளவு காலமும் இப்பிடி இருந்துட்டு இனி எவன் எக்கேடு கெட்டா என்னண்ணு என்னாலே இருக்க முடியாது, இனிமே என்ன? வயது அறுபதாச்சு. உசுரை வச்சிருந்து என்னத்தைச் சாதிக்கப் போறோம்?" என்று தியாக உணர்ச்சியோடு செட்டியார் பேசிய பகுதி இவ்வகையில் சுட்டிக் காட்டத்தக்கது.

() ஷண்முகப்பிள்ளை பாத்திரப்படைப்பு

அறிமுகம் தியாகம் சிறுகதையின் முக்கியமான பாத்திரம் கதிரேசன் செட்டியாருடைய நண்பராக ஷண்முகப்பிள்ளை என்ற துணைப்பாத்திரமாக உருவாக்கம் அமைந்துள்ளது. இக்கதையில் இவர். அண்ணாச்சி எளவும் அழைக்கப்படுகின்றார்.இவர் அடிக்கடி செட்டியாரின் கடைக்கு வந்து செல்பவராகவும் காணப்படுகின்றார். செட்டியாரைப்பற்றி அறிந்தவர் கடைப்பையன்களுக்கு மகிழ்ச்சி அளிப்பர். செட்டியாருடன் நெருங்கிய சிநேகத்தைக்கொண்ட செட்டியாரின் மிகநீண்டநாள் நண்பர்.அதனால் ஷண்முகப்பிள்ளைமீது செட்டியார் மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டுள்ளார்.

இரக்க குணம் உடையவர்: "செட்டியாரே ஒங்களைப் பார்க்க எனக்கு உண்மையிலேயே பாவமாக இருக்கு. இப்படிக் கத்தினா மொதல்ல ஓங்க ஓடம்புக்கு ஆகுமா?"

செட்டியாரின் மதிப்புக்குரிய ஒருவர்: ஏன் இப்படிக்கடைச் சிப்பந்திகள் மீது கடுகடுப்பா இருக்கீங்க" என்று ஷண்முகப்பிள்ளை கேட்டபொழுது, "அத விடுங்க" என்று தட்டிக்களிக்காமல் அதற்கான விடயத்தை சொல்கின்றார்.

கடைச் சிப்பந்திகள் மீது பாசம்: "மொதலாளி சொல்லாமலேயே எப்படி கடையைப் போட்டுட்டு, சாமி பாக்க போவாங்க" என்று கூறுகின்றார்

இறை நம்பிக்கை உடையவர்: "கோயிலுக்கு போறதுள்னா தேங்காய், பழம், சூடமெல்லாம் கொண்டு போக வேண்டாமா கொண்டுதான் போகனும்" என்றார்.

நகைச்சுவையாகப் பேசியவர்: ஒங்கமேலே தப்பில்லே ஒங்க மொதலாளியைச் சொல்லனும் ஓங்களுக்கு நல்லாத்தான் பாடம் சொல்லிக் கொடுத்திருக்காரு" என்றார்.

சிப்பந்திகள் விரும்புவதற்கு பாத்திரமானவர்: ஷன்முகப்பிள்ளை வந்துவிட்டார்" என்றால்.கடைப் பையனுகளுக்கு ஒரே கொண்டாட்டம். ஏனென்றால் அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது செட்டியார் சஹஸ்ர நாம அர்ச்சனையைத் தற்காலியமாக நிறுத்திவிடுவார்.

கதிரேசன் செட்டியார் மீது அண்பு:மாதத்தில் பத்து நாட்களாவது அவர் செட்டியார் கடைக்கு வந்து சிறிது உட்கார்ந்து பேசிப் போவார்.

செட்டியாரது தியாக மனப்பாங்கு வெளிப்படக்காரணமான பாத்திரம். செட்டியார் மனதிலுள்ள துன்பத்தை பகிர்ந்துகொள்ள உதவியாக இருந்த பாத்திரம்.

இப்பாத்திரத்தை மையமாக வைத்தே செட்டியாரின் சமூக அந்தஸ்து, செட்டியாரின் மளவியல்புகள்,சிப்பந்திகளின்மீது கொண்டுள்ள அக்கறை, சிப்பந்திகள்பொருட்டு அவர்செய்யும், நியாகம் என்பன வெளிப்படுத்தப்படுகின்றன. "இல்லே நீங்க ரொம்ப தயாளகுணத்தோடே இருக்கிறீங்க. ஊரிலேயும் ஒங்களைப்பத்தி பெருமையாய் பேசுறாங்க. கடைப்பையன்களுக்கு உங்களைப் போல சம்பளம் குடுக்கிறவங்க இல்லேன்னும் எனக்குத் தெரியும். எல்லாம் நல்லாத்தான் இருக்கு" எனவரும் உரையாடல் அவரின் சமூகமதிப்பைக் காட்டுகிறது.

கதையில் சிப்பந்திகளின் மீது செட்டியார் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் இருவருக்குமான உரையாடல் மூலமே வெளிப்படுகின்றது. அண்ணாச்சி அன்பா ஆதரவா இல்லேன்னா நான் திட்டுவனா? அதைக் கொஞ்சம் யோசனை பண்ணிப்பாருங்க. பயகளை நெசமா எனக்கு பிடிக்கலேன்னா.ஒரே சொல்லில் கடையை விட்டு வெளியேத்திப்பிட்டு மறுசோலி பாக்கமாட்டேனா? பயக விருத்திக்கு வரணும்னு தானே தொண்டைத் தண்ணியை வத்த வச்சிக்கிட்டிருக்கேன்? கத்திக்கத்தி என் உசுரும் போகுதே" என வரும் உரையாடல் பகுதி இதனை விளக்கும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக கதையின் மையக் கருவாகிய செட்டியாரின் தியாகத்தை எடுத்துரைக்கவும் ஷண்முகப்பிள்ளைக்கும் செட்டியாருக்கும் இடையில் கதையின் இறுதிப்பகுதியில் இடம்பெறும் உரையாடல் மூலமாகவே பையள்களின் முன்னேற்றத்திற்காக தனது நலனைத் தியாகம் செய்து வாழ்பவர் என்ற உண்மையும் புலப்படுத்தப்படுகிறது.

செட்டியார் பாத்திரத்தின் மனநிலையை நுட்பமான முறையில் வளர்த்துச் செல்லவும் கதையின் மையக் கருத்தை வெளிப்படுத்தவும் ஷண்முகப்பிள்ளை என்ற பாத்திரமே துணையாய் நின்றியங்குகிறது.

() சோமசுந்தரம் பிள்ளையின் பாத்திரப் பண்புகள்

கடையில் உள்ள கதாபாத்திரங்களுடன் தொடர்புடையவர்: செட்டியார் சிப்பந்திகளுக்கு மிட்டிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டு அதனை தடுப்பதன் மூலம் கடையிலுள்ள பாத்திரங்களுடன் தொடர்புடையதாக காட்டப்படுகின்றது.

செட்டியாரின் மன உணர்வை புரிந்து வைத்திருக்கும் ஒருவர்: செட்டியாரிடம் பல வருடகாலமாக கணக்குப்பிள்ளையாக இருந்தவர் என்பதனால் அவரை புரிந்து வைத்திருப்பவர்: சிப்பந்திகளுக்கு திட்டிக்கொண்டிருக்கும் போது அதனை தடுப்பதற்காக குறுக்கிட வேண்டி இருக்கும். சிப்பந்திகளுக்கு செய்யும் சலுகை. ஒரு தொகை பணம் பிற உதவிகள் என்பவற்றின் மூலம் செட்டியாரை புரிந்து வைத்திருப்பவர்.

செட்டியாரிடமிருந்து சிப்பந்திகளை காப்பாற்றுபவரும் செட்டியாரை புரிந்து சிப்பந்திகளை வழிநடத்துபவர்: செட்டியார் சிப்பந்திகளுக்கு நீட்டும் போது அவர்களைக் கூப்பிட்டு புத்தி சொல்வதன் மூலம் சிப்பந்திகளை வழிநடாத்தி செட்டியாரை புரிந்து வைப்பதனை அறியலாம்.

பொறுப்பு மிக்கவர்: பல காலமாக செட்டியார் வருவதும் போவதுமாக இருக்கும் நேரத்திலும் பிறநேரங்களிலும் கடையை பொறுப்பாக வழிநடத்துபவர்.

நம்பிக்கையான பாத்திரம்: செட்டியார் கடையில் பல வருடமாக இருந்தாலும் செட்டியாரை மதித்து நடப்பவரும். செட்டியாரை புரிந்து வைத்திருப்பவரும் அதனாலும் இவர் பொறுப்பு மிக்க நம்பிக்கையான பாத்திரம் எனலாம்.

செட்டியாரை சமாதானப்படுத்தி ஆறுதலளிப்பவர்: கடையில் உள்ள புதுப் பையன் விபூதி வைத்திருக்காமல் வரும் வேளையில் செட்டியார் திட்டும் போது சோமசுந்தரம்பிள்ளை போய் விபூதியை எடுத்துப் பூக" என்கின்ற நேரத்தில் செட்டியாரை சமாதனப்படுத்தி ஆறுதலளிப்பவருமாக காணப்படுபவர்.

கதையை தளர்வாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்திச் செல்ல உதவுவது:செட்டியார் சிப்பந்திகளுக்கு திட்டும் போது சோமசுந்தரம் பின்ளை குறுக்கிட்டு பேசுவதன் மூலம் கதை தளர்வாக இன்னொரு இடத்திற்கு நகர்த்தி செல்லப்படுகின்றது: விபூதி வைத்து வராமல் இருக்கும் சிப்பந்திக்கு திட்டும் போது விபூதியை எடுத்து பூசு என்று சோமசுந்தரப்பிள்ளை கூறும்போது செட்டியார் அமைதி அடைந்து மற்றுமொரு சிப்பந்தியை உற்று நோக்கும் போது கதை இன்னொரு இடத்திற்கு நளர்வதாக நகர்ந்து செல்கின்றது. எனவே கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் பாத்திரம்.கதையை நகர்த்திச் செல்லும் பாத்திரம்.கதையில் உணர்ச்சியை ஏற்படுத்தும் பாத்திரம் சோமசுந்தரமே.

வெளிப்படும் மனப்பதிப்பு: செட்டியாரின் வலது கை. பொறுப்பு மிக்கவர், நம்பிக்கையானவர், அமைதியான பொறுமையான பாத்திரம்.

'தியாகம்' சிறுகதையில் வெளிப்பட்டுள்ள நகைச்சுவைகள்

உணவிற்கு அறுசுவைபோல் மனித உணர்ச்சிக்கு அங்கதச்சுவை சிறப்பானது. ஒவ்வொரு சிறுகதையிலும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உணர்வுகள் காணப்படும். அதேபோல இந்த சிறுகதையிலும் நகைச்சுவை உணர்வு வெளிப்பட்டுள்ளது. கதிரேசன் செட்டியாரின் கோபமான வார்த்தைகளிலும் செட்டியாரின் அனுபவக்கதையின் மூலமும் ஷண்முகம்பிள்ளை செட்டியாருக்கு சொல்லும் அறிவுரையின் மூலமும் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

செட்டியாரின் அனுபவத்தை : "என்னப்பத்தி மட்டுமா? என் தாயி, தகப்பன், பாட்டன், அத்தனை பேரையும் சேர்ந்து கேவலமாய் பேசுவாரு. புளுத்த நாய் குறுக்கே போகாது. ஒரு நாள் என் மூஞ்சியில் அஞ்சுபால் படியையே வீசிட்டாரு. தலையைக் குனிஞ்சனோ தப்பிச்சனோ."

ஷண்முகப்பிள்ளையின் அறிவுரை சரி சி எவ்வளவு காலம் தான் ஓடம்பு தாங்கும்? இனிமே ஒவ்வொன்னையும் அப்பிடி அப்பிடி கொறைச்சிக்கிட்டு வர வேண்டியதுதான் நமக்கு பகவான் தொண்டைய என்ன வெங்கலத்திலயா படைச்சிருக்கான்?

கதிரேசன் செட்டியாரின் வசைப் புராணம்

கடைக்கு வந்தவுடன் ஏசல் ஏன்டா தடிப்பயல்களா! நீங்க என்ன பரதேசிகளாடா? சந்நியாசிகாளாடா? எருமை மாட்டுப் பயல்கள் விடிஞ்சதும் நாலு வீட்டுக்கு யாகத்துக்குப்போற பிச்சைக்காரப்பயல்கள்கூட இப்படி சாம்பலை அள்ளி பூச மாட்டானுகளடா? நீங்க வந்து கடையில் மொளச்சிங்களோ இல்லையோ யாவாரம் ஒன்னுக்குப் பாதியாப் படுத்துப்போச்சி மிச்சம் மீதியையும் படுக்க வச்சிட்டு போகவாடா இப்படி நெத்தியில அள்ளிப் பூசிட்டு வந்திருக்கிங்க சாம்பலை..."

வெங்கடாசலத்தின் எதிர்க் கேள்வி : வெங்கடாசலம், "நீங்களும் விபூதி பூசியிருக்கீங்களே மொதலாளி" என்று கேட்க,"அடி செருப்பால நாயே! வாய தொறக்கிறியா ! பாரத்தீரா சோமசுந்தரம்பிள்ளை பய எதுத்தில விவகாரம் பண்ரான். ஜோட்டால அடிச்சு வெளிய பத்தும் இவன! நமக்கு சரிப்படாது""கஞ்சிக்கில்லாம செத்த பயல்களை எரக்கப்பட்டு கடையில வெச்சது என் முட்டாள்தனம்..."

பருப்பில் கல்" கழுதே ஒன்னைத்தானே பருப்பில ஒரே கல்லாக் கெடக்குன்னு சொன்னேனே பொடச்சி வச்சியா? என்னடா இல்லயா? கடைக்கு வர்ரவனெல்லாம் ஒருத்தன் பாக்கியில்லாம என்ன மொதலாளி பருப்புல ஒரே கல்லாக் கெடக்கு என்றான். நீ என்னடா இல்ல பொடச்சேன் என்றா? கழுதே உண்மைய சொல்லு பொடச்சியா இல்லையா?"

வெங்கடாசலம் விபூதி பூசாமை:"நீ என்னடா சைவனா? இல்ல வேதக்காரனா? என்னலே முழிக்கிற? ஒன் முஞ்சிய பாத்தா எவன்டா கடைக்கு வருவான்? நெத்திய சுடுகாடு மாதிரி வச்சிக்கிட்டு...?"

ஷண்பகவள்ளியம்மன் திருவிழா: "தீவட்டித் நடியன்களா, நான் கேக்கிறன் வாயில் என்ன கொளக்கட்டையா வச்சிருக்கீங்க...? எங்க தலையில ஏன் களிமண்ண வச்ச சாமி முளைய வெக்கலேண்ணாலும் வெள்ள மெழுகைாயவது வச்சிருக்கக் கூடாதா?' என்று கூறுவது.

தியாகம் சிறுகதையின் முதலாளி தொழிலாளி சார்ந்த சிந்தனைகள்

கு.அழகிரிசாமி சமவுடமை சிந்தனையால் பெரிதும் கவரப்பட்டவராவார்.எனவே இக் கதையில் தொழிலாளர் சார் கோட்பாடாகிய சமவுடமை வாதத்தினுடைய தேவைப்பாடு, அதனுடைய தற்கால இருப்பு, முதலாளிகள் சார் நிலைப்பாடு என பல விடயங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே இக் கதையினை மாக்ஸிச நோக்கில் திறனாய்வு செய்வது உசிதமாகும்.

தியாகம் கதையின் முதலாளி தொழிலாளி தொடர்பான சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு அரசியல் ரீதியாக நோக்குவோமாயின் இக்கதையின் ஆரம்பமான முதன்மை வர்க்கமான முதலாளிகளையும் அடிமை வர்க்கமான தொழிலாளிகளையும் அடிப்படைக் கருவாகக் கொண்டதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.

()முதலாளிகள்:

சொத்துடையவர்கள்,தொழில் மையத்தில் ஆதிக்கம் மிக்க ஒருவர்: சொத்துமிக்க கதிரேஷன் செட்டியார்

எதைச் சாக்காக வைத்துக் கொண்டு ஆரம்பிக்கலாம்...'

முதலாளியானவர் சமுகத்தில் அந்தஸ்து மிக்கவராகக் காணப்படுகின்றார். எடுத்துக்காட்டு:தியாகம் சிறுகதையில் கதிரோன் செட்டியார் நன்னிடம் வேலை பார்க்கும் சிப்பந்திகளுக்கு தீபாவளிக்கு புது வேஷ்டி சட்டைகளுடன் ஆளுக்கு பத்து ரூபாய் ரொக்கம் கொடுக்கின்றார்.தன்னிடம் வேலைபாரக்கும் சிப்பந்தி தனியாக ஒரு புதிய கடை ஆரம்பிக்க நினைத்தால் அதற்கும் உதவுகின்றார். கோயில் திருவிழாவுக்கு ஒத்த ரூபாய் பணம் கொடுத்து பழம், தேங்காய், சூடம் என்பவற்றை வாங்கச்
அதிகபடியான கருத்துச் சுதந்திரம் முதலாளிக்கு மாத்திரமே காணப்பட்டது:திருநீறு பூசி வந்த சிப்பந்திகளை முதலாளி திட்டிய போது புதுப்பையன் நீங்களும் பூசி இருக்கிங்களே முதலாளி என்று சொன்னபோது செருப்பாலே! வாயை திறக்கிறையா நீ ? என்று பேச விடாது தடுத்தல்.கல்லு இல்லையே முதலாளி என்று சொன்னதுக்கு பயபேச்சப் பாத்திரா என்று முதலாளி சொல்லுகின்றார் இதன் மூலம் எதிர்த்துப் பேச அவர்களுக்கு உரிமை இல்லை என்பது புலனாகின்றது.

தொழிலாளிகளுடைய உழைப்பைச் சுரண்டும் வர்க்கம் பழைய சிப்பந்தியிடம் முதலாளி கல்லை புறக்கிட்டியா என்று கேட்டதுக்கு ஓம் முதலாளி நாள் ஒருகல்லும் இல்லாம புறக்கிட்டன் என்று சொல்ல அப்ப நான் என்ன பொய்யா சொல்றன் என்ற வார்த்தையூடாக திரும்பவும் சிப்பந்தி செய்த வேலையை முதலாளி செய்யச் சொல்கின்றார்.

வாடிக்கையாளர்கள் அல்லது நுகர்வோரில் பாகுபாடு காட்டல்: 'நண்பர்களே அந்தஸ்து மிகக் வாடிக்கையாளர்களோ வரும் போது அவர் சிரிக்கவோ புன்னகை செய்யவோ வேண்டிய அவசிம் ஏற்படும்". இதிலிருந்து முதலாளி தன் இலாப நோக்கை எவ் கோணத்தில் பார்க்கிறான் என்பதை காணலாம். அந்தஸ்து இல்லாத வாடிக்கையாளரிடம் இவ் முதலாளி காட்டும் முகபாவம் நான் என்ன? சிறுகதையினுள் தாராண்மை வாதம் வலுக்கிறது.

தொழிலாளர்களின் வறுமையினை தமக்கு சாதகமாக வைத்திருத்தல்; 'கஞ்சிக்கில்லாம செத்த பயல்களை எரக்கப்பட்டுக் கடையிலே வச்சது என் முட்டாள்தனம்...

தொழிலாளர்களின் உழைப்பையோ வேலை செய்யும் நேரத்தியையோ புகழ்ந்து மனம் கொள்ளாதவர்கள்: முத்தையா பிள்ளையின் பாக்கியை கடை சிப்பந்தி ஒருவன் வாங்கல் விவகாரம்

ஒரு மனிதனின் அடிப்பைட இயல்பை அன்பு, கருணை, விட்டுக்கொடுப்பு. உதவி என நல்ல பண்புகளை அதிகம் காணப்பட்டாலும் முதலாளிகள் எனும் நிலையில் வைத்து நோக்கும் போது சர்வாதிகரியாகவே

தன்னைத் தான் மாற்றிக் கொள்கிறார்கள்.

கதைத் தலைப்பின் பொருத்தப்பாடு (மாக்ஸிச நோக்கில்) தனது இயல்பான நற் பண்புகளை தனது முதலாளித்துவத்திற்காக தியாகம் செய்யும் மனிதர்களும் உள்ளனர்.

இக்கதையின் ஆரம்பத்தில் முதலாளியானவர் சுயநலவாதியாக காணப்பட்டாலும் கதை முடியும் போது அவருடைய தியாக உணர்வு வெளிப்பட்டு சிலருடைய கண்ணுக்கு பொதுநலவாதியாகவும் சிலரது கண்ணுக்கு வித்தியாசமாக அவர் தென்பட்டாலும் அவருடைய உண்மையான குணமாக தியாக உணர்வே வெளிப்படுகின்றது.

முதலாளியின் வார்த்தைப் பிரயோகம் ஆரம்பத்தில் நாகரிகமற்றதாக காணப்பட்டு மற்றவர்களுக்கு கெட்டவராக தென்பட்டாலும் அவர் இவ்வாறு செய்வது தம்மிடம் வேலை செய்யும் சிப்பந்திகளின் நலனுக்காகவே என்று தெரிய வரும் போது அவர் நல்ல மனிதராக நம் கண்களுக்கு தென்படுகின்றார்.

தொழிலாளிகளை எவ்வாறு தான் அவர் கொடுமைகளுக்கு உட்படுத்தி இருந்தாலும் அவர்களுடைய விருப்பு வெறுப்புகளை அறிந்து அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து வைப்பார்:தீபாவளிக்கு புது வேஷ்டி சட்டைகள் வாங்கிக் கொடுத்தல், திருமணத்திற்கு கணிசமான தொகையை வழங்குதல், தன்னிடம் வேலைபார்க்கும் சிப்பந்திகள் புதுக்கடை ஆரம்பிக்க எண்ணினால் உதவுதல்,கோயிலுக்கு போகும்போது வேண்டிய பொருள்வாங்க பணம் வழங்கல்.

தியாகம் சிறுகதையில் காணப்பட்ட முதலாளி தொழிலாளி தொடர்பான சிந்தனையையும் அரசியலில் காணப்படும் சிந்தனையையும் ஒத்து நோக்கும் போது சில கருத்துக்கள் ஒத்துப் போனாலும் சில கருத்துக்கள் வேற்றுமை நிலையில் காணப்படுகின்றன. இருந்தாலும் இக்கதையில் முதலாளியினுடைய தியாக உணர்வே மேலோங்கி நிற்கின்றது.

()தொழிலாளிகள்:

உழைப்புச் சுரண்டல்களுக்கு உள்ளாகுபவர்கள்:

சுதந்திரம் இல்லாதவர்கள்: பேச்சு சுதந்திரம் உட்பட

வேலை நேரம் அதிகம் (முதலாளிகளுடன் ஒப்பிடல்) முதலாளிக்கு முன்னமே கடைக்கு வரல்

உடல்.உள.சமுக ரீதியானபாதிப்பிற்கு அதிகம் உள்ளாவோர். உடல்: வேலைப்பளு. உளம் செட்டியாரது ஏச்சுக்கள். சமுகம்:கடைக்கு வரும் நுகர்வோருக்கு முன்னாலும் அவமானப்படுத்தப்படல்: சண்முகப்பிள்ளையின் அவதானிப்புக்கள்.

முதலாளித்துவ சமூகத்தால் வழங்கப்படும் நலன்புரி செயற்பாடுகளால் முதலாளித்துவ சமூகத்தின் அடிமைத்தனத்தை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றல், செட்டியானரின் வார்த்தைகளுக்குப் பொருள் கிடையாது என்று மனப்பூர்வமமாக அவர்கள் நம்பினார்கள். அதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று, வேறு எந்த கடையிலும்...

அதிகபடியான கருத்துச் சுதந்திரம் முதலாளிக்கு மாத்திரமே காணப்பட்டது:திருநீறு பூசி வந்த சிப்பந்திகளை முதலாளி திட்டிய போது புதுப்பையன் நீங்களும் பூசி இருக்கிங்களே முதலாளி என்று சொன்னபோது செருப்பாலே! வாயை திறக்கிறையா நீ ? என்று பேச விடாது தடுத்தல்.கல்லு இல்லையே முதலாளி என்று சொன்னதுக்கு பயபேச்சப் பாத்தீரா என்று முதலாளி சொல்லுகின்றார் இதன் மூலம் எதிர்த்துப் பேச அவர்களுக்கு உரிமை இல்லை என்பது புலனாகின்றது.

தொழிலாளிகளுடைய உழைப்பைச் சுரண்டும் வர்க்கம் பழைய சிப்பந்தியிடம் முதலாளி கல்லை புறக்கிட்டியா என்று கேட்டதுக்கு ஓம் முதலாளி நாள் ஒருகல்லும் இல்லாம புறக்கிட்டன் என்று சொல்ல அப்ப நான் என்ன பொய்யா சொல்றன் என்ற வார்த்தையூடாக திரும்பவும் சிப்பந்தி செய்த வேலையை முதலாளி செய்யச் சொல்கின்றார்.

வாடிக்கையாளர்கள் அல்லது நுகர்வோரில் பாகுபாடு காட்டல்: 'நண்பர்களே அந்தஸ்து மிகக்

வாடிக்கையாளர்களோ வரும் போது அவர் சிரிக்கவோ புன்னகை செய்யவோ வேண்டிய அவசிம் ஏற்படும்". இதிலிருந்து முதலாளி தன் இலாப நோக்கை எவ் கோணத்தில் பார்க்கிறான் என்பதை காணலாம். அந்தஸ்து இல்லாத வாடிக்கையாளரிடம் இவ் முதலாளி காட்டும் முகபாவம் நான் என்ன? சிறுகதையினுள் தாராண்மை வாதம் வலுக்கிறது.

தொழிலாளர்களின் வறுமையினை தமக்கு சாதகமாக வைத்திருத்தல்; 'கஞ்சிக்கில்லாம செத்த பயல்களை எரக்கப்பட்டுக் கடையிலே வச்சது என் முட்டாள்தனம்...

தொழிலாளர்களின் உழைப்பையோ வேலை செய்யும் நேரத்தியையோ புகழ்ந்து மனம் கொள்ளாதவர்கள்: முத்தையா பிள்ளையின் பாக்கியை கடை சிப்பந்தி ஒருவன் வாங்கல் விவகாரம்

ஒரு மனிதனின் அடிப்பைட இயல்பை அன்பு, கருணை, விட்டுக்கொடுப்பு. உதவி என நல்ல பண்புகளை அதிகம் காணப்பட்டாலும் முதலாளிகள் எனும் நிலையில் வைத்து நோக்கும் போது சர்வாதிகரியாகவே

தன்னைத் தான் மாற்றிக் கொள்கிறார்கள்.

கதைத் தலைப்பின் பொருத்தப்பாடு (மாக்ஸிச நோக்கில்) தனது இயல்பான நற் பண்புகளை தனது முதலாளித்துவத்திற்காக தியாகம் செய்யும் மனிதர்களும் உள்ளனர்.

இக்கதையின் ஆரம்பத்தில் முதலாளியானவர் சுயநலவாதியாக காணப்பட்டாலும் கதை முடியும் போது அவருடைய தியாக உணர்வு வெளிப்பட்டு சிலருடைய கண்ணுக்கு பொதுநலவாதியாகவும் சிலரது கண்ணுக்கு வித்தியாசமாக அவர் தென்பட்டாலும் அவருடைய உண்மையான குணமாக தியாக உணர்வே வெளிப்படுகின்றது.

முதலாளியின் வார்த்தைப் பிரயோகம் ஆரம்பத்தில் நாகரிகமற்றதாக காணப்பட்டு மற்றவர்களுக்கு கெட்டவராக தென்பட்டாலும் அவர் இவ்வாறு செய்வது தம்மிடம் வேலை செய்யும் சிப்பந்திகளின் நலனுக்காகவே என்று தெரிய வரும் போது அவர் நல்ல மனிதராக நம் கண்களுக்கு தென்படுகின்றார்.

தொழிலாளிகளை எவ்வாறு தான் அவர் கொடுமைகளுக்கு உட்படுத்தி இருந்தாலும் அவர்களுடைய விருப்பு வெறுப்புகளை அறிந்து அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து வைப்பார்:தீபாவளிக்கு புது வேஷ்டி சட்டைகள் வாங்கிக் கொடுத்தல், திருமணத்திற்கு கணிசமான தொகையை வழங்குதல், தன்னிடம் வேலைபார்க்கும் சிப்பந்திகள் புதுக்கடை ஆரம்பிக்க எண்ணினால் உதவுதல்,கோயிலுக்கு போகும்போது வேண்டிய பொருள்வாங்க பணம் வழங்கல்.

தியாகம் சிறுகதையில் காணப்பட்ட முதலாளி தொழிலாளி தொடர்பான சிந்தனையையும் அரசியலில் காணப்படும் சிந்தனையையும் ஒத்து நோக்கும் போது சில கருத்துக்கள் ஒத்துப் போனாலும் சில கருத்துக்கள் வேற்றுமை நிலையில் காணப்படுகின்றன. இருந்தாலும் இக்கதையில் முதலாளியினுடைய தியாக உணர்வே மேலோங்கி நிற்கின்றது.

() கோட்பாடு ரீதியாக

முதலாளித்துவத்திற்க எதிரான சிந்தனையை கொண்ட ஒருவர் ஏன் செட்டியாரது பண்புகளை நியாயப்படுத்துகிறார். ஏன்ற கேள்வி வரலாம்.

செட்டியார் பரம்பரை முதலாளி அல்ல, அதாவது இவரது தந்தை போன்றோர் முதலாளியாக காணப்படவில்லை. மாறாக தொழிலாளியாக வேலை செய்து பின்னர் முதலாளி ஆனவர். எனவே தொழிலாளர் நலன் பேண் நோக்கங்களை கொண்டிருப்பது இயல்பே இருப்பினும் கடை உரிமையாளர் ஆகையால் முதலாளித்துவத்தின் போக்கிற்கும் ஆளாகிறார் என்பதையும் காணலாம்.காரணம்: 'எங்கு இரண்டு வர்க்கங்கள் தோன்றுதோ அங்கு ஒன்றினது நலன் பேணும் கருவியாக அரசு தோன்றும் கால்ஸ் மாக்ஸ்: 'வரலாற்று பொருள் வாதம்'

தாராண்மைவாதமானது காலத்திற்கேற்ப தமது கோட்பாட்டில் சீர்திருத்தங்களை உள்வாங்கி கொண்டுள்ளது. ஆனால் சமவுடமை வாதமானது இற்றைப்படுத்தப்படாத மரபு ரீதியான உள்ளடக்கத்தை கொண்டுள்ளதை சமவுடமை வாதி என்ற ரீதியில் அழகிரிசாமி தமது கதையில் உள் நுழைத்துள்ளார், செட்டியார் தனது முதலாளியிடம் பெற்ற அனுபவத்தை தனது தொழிலாளிகளிடம் நடப்பித்தல், அது தான் நன்மை தரக்கூடியது என எண்ணல்,

தாராண்மை வாதக் கருத்தியலில் தலையிடா அரசு கொள்கை, நலன்புரி வாத அரச கொள்கை, குறைந்த பட்ச அரச கொள்கை எனும் எண்ணக்ருக்கள் காலத்தின் தேவைக்கேற்ப சேர்க்கப்பட்டமை ஆகும். தொழிலாளர்கள் முதலாளித்துவ சமூகத்தில் வறுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்ற விமர்சனத்திற்குப் பதிலாக ஓர் கண்துடைப்பாக நலன்புரிச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்:செட்டியார். தொழிலாளர்கள் திருமணத்திற்கு பணம் கொடுத்தல்,

உலக நாடுகளிலும் குறிப்பாக இலங்கையிலும், இந்தியாவிலும் தொழிலாளர்களின் நிலையினை வைத்து அரசியல் செய்யும் போக்குகள் அன்றும் இன்றும் மேற்கொள்ளப்படுகின்றன.

தியாகம் சிறுகதையில்: கதிரேசன் செட்டியாரது மளிகை கடையில் நடைபெறும் அன்றாட செயற்பாடுகள்

அறிமுகம் ஒரு பலசரக்கு கடை என்றால் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல பொருட்கள் விற்பனை செய்யப்படும் ஆகவே நுகர்வோர். கடை வேலையாட்கள் என பலர் குழுமியிருக்கும் இடமாக இது காணப்படுகின்றது. தியாகம் சிறுகதையின் பிரதான கதைக் களமாக காணப்படுவது கதிரேசன் செட்டியாரது பலசரக்குக் கடையாகும்.தியாகம் சிறுகதை மளிகைக் கடையை களமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது அதிகாலையில் கடை திறப்பது முதல் மாலை கடை அடைப்பது வரை இடம்பெறும் சம்பவங்கள். செயற்பாடுகள் பலசரக்கு கடையொன்றில் இடம்பெறும் அன்றாட செயற்பாடுகளை கருதலாம்.

கடை திறத்தல்:இந்து முறைப்படி,தியாகம் சிறுகதையில் வருகின்ற பாத்திரங்கள் இந்து அதாவது தழிழர்களாக காட்டப்பட்டுள்ளதன் மூலமாக அறியலாம்.

நேரத்திற்கு எழும்புதல்:செட்டியார் செய்யும் தொழில் நிரந்தரமானது அதனால் அவருக்கு பழக்கப்பட்ட விடயமாகும். தினமும் 10:25 கடைக்கு வருபவர்.

கடை திறப்பவர் முதலாளி,தொழிலாளிகளிடையே,தியாகம் சிறு கதையில் தொழிலாளியே கடை திறப்பவராக காணப்படுகின்றார்: செட்டியார் 10:25க்கு கடைக்கு வந்து சோமசுந்தரப் பிள்ளையை ஏறிட்டுப் பார்த்தல்,

செட்டியாரது கடை நுழைவு: கதிரேசன் செட்டியாரது கடை நிகழ்வுகள் அனைத்துமே அவரது கடை நுழைவிற்கு பின்னர்தான் ஆரம்பமாகின்றது. இதற்கு உதாரணமாக கதிரேசன் செட்டியார் காலையில் 10 மணிக்கெல்லாம் பலகாரம் சாப்பிட்டுவிட்டு சாப்பிட்ட சிரமத்தை போக்கிக் கொள்ள 10 நிமிஷம் உட்கார்ந்துவிட்டு அதன் பின் கடையை நோக்கி புறப்படுவார். என்று அவரது காலை நேர செயற்பாடுகள் அனைத்தையும் தெளிவாகப் புலப்படுத்திவிட்டு அன்றும் காலை 10.25 க்கு கடைக்கு வந்தார். இந்த வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ள கருத்து யாதெனில் செட்டியாரது கடை நுழைவே அன்றைய நாளுக்கான முதலாவது கடை நிகழ்வாக உள்ளது. ஏனெனில் கடையில் கணக்குப்பிள்ளையாக பணிபுரியும் சோமசுந்தரம்பிள்ளை பின் சிப்பந்திகள் கடைக்குள் நுழைவதை ஓர் சம்பவமாக அவர் குறிப்பிடவில்லை. செட்டியாரையே கடை நிகழ்வுகளை தொடக்குபவராக படைத்துள்ளார்.

செட்டியார் ஊழியர்களை அவதானித்தல் கடை முதலாளியான கதிரேசன் செட்டியார் தனது கடையில் பணிபுரியும் ஊழியர்களை கண்ணோக்கல் என்பதும் மளிகைக் கடையில் நடைபெறும் ஓர் அன்றாட சம்பவமாக கருதக் கூடியதாய் உள்ளது. கடை முதலாளி என்ற அந்தஸ்தில் காணப்படும் கதிரேசன் செட்டியார் தமக்கு கீழ் பணிபுரியும் கணக்குபிள்ளை உட்பட அனைத்து கடை சிப்பந்திகளையும் அவதானிக்கின்றார். உதாரணமாக கடையில் வந்து உட்கார்ந்த கதிரேசன் செட்டியார் கணக்கு எழுதும் சோமசுந்தரப்பிள்ளையை ஒருதடவை ஏறிட்டுப் பார்த்தார். கடை சிப்பந்திகள் அந்த நான்கு பேரையும் மொத்தமாகவும் தனித்தனியயாகவும் பார்த்தார்' என்ற வசனங்களினூடாக இதைக் கண்டு கொள்ளலாம். முதலாளியின் தனித்துவப் பண்புமுகபாவம் கடுகடுப்பு. ஒரு மாதிரியான விறைப்புடன் நடந்து கொள்ளல்.

முதலாளி பணியாளர்களிடம் வேலை சொல்லுதல், ஏசுதல்: "முத்தையா பிள்ளையோட பாக்கிய போய் கேட்டியா?,பருப்பிலே ஒரேகல்லாக் கிடக்கு பொடச்சியா?" எனவேலை சொல்லுதல். தடிப்பயல்களா. சந்தியாசிகளாடா, எருமைமாட்டுப் பயல்கள், பரதேசிகள், கழுத,முடிச்சுமாறி பயலாதாயே பேயே" என பலவாற ஏசுதல் நண்பர்கள் தெரிந்தவர்கள் வந்தால் கடையை மறந்து கதைத்துக் கொண்டிருத்தல் ஷண்முகம் பிள்ளை எனும் பாத்திரம் வந்தால் கடையை மறந்து கதைத்துக் கொண்டிருத்தல்.

குறைகாணுதல்,கண்காணித்தல், சிப்பந்திகளுக்குத் திட்டுவது கதிரேசன் செட்டியார் தனது கடையில் சிப்பந்திகளாக பணிபுரியும் ஊழியர்களுக்கு அன்றாடம் திட்டிக் கொண்டும் குறை கூறிக்கொண்டும் காணப்படுவதையே எம்மால் அவதானிக்க முடிகின்றது. இதனை உறுதிப்படுத்தும் முகமாக கதையில் காணப்படும் சில உதாரணங்களைக் குறிப்பிடலாம்.கதை ஆரம்பத்திலேயே,"ஏன்டாதடிப்பயல்களா" எனத் தொடங்கும் வரிகளில் திருநீறு பூசி வந்தமைக்கு ஏசியது புதிதாக வந்த பையன் எதிர்த்துப் பேசிய போது, "அடி செருப்பால நாயே" எனத்தொடங்கும் வரிகள், மற்றுமொரு பையனுக்கு பருப்பிலே இருக்கும் கற்களை அகற்ற சொல்லும் படியாக, " கழுதே ஒன்னைத்தானே பருப்பிலே ஒரே கல்லா கிடக்கு என்று சொன்னனே பொடைச்சி வச்சியா கழுதே" என்று கூறியமை மேலும், "நாயே பேயே பிச்சைக்காரன் கஞ்சிக்கு இல்லாதவன்" என்று சேற்றிலே தோய்த்தெடுத்த வார்த்தைகளை பிரயோகிக்கின்றார் செட்டியார். ஆகவே இக்கதையில் அதிகமான இடத்தில் செட்டியார் சிப்பந்திகளுக்குத் திட்டுவதாகவே காணப்படுகின்றது. திருநீறு பூசினாலும் திட்டுதல்.பூசாவிட்டாலும் திட்டுதல்,பாக்கிய போய் கேட்டியா, கண்டிப்பா கேட்டியா எனத் திட்டுதல்,

வேலை செய்பவர்கள் கணக்காளர், சிப்பந்திகள்:

சோமசுந்தரப்பிள்ளை கணக்குப்பார்த்து, கறுகறுப்பாக வேலை பார்க்கிறார்.

சிப்பந்திகளுக்கு முதலாளி ஏசுகின்ற போது சிப்பந்திகளுக்கு உதவி செய்ய வெங்கடாசலம் எதிர்ந்துப் பேசுதல்.

சிப்பந்திகளிடம் வேலை சொல்லுதல், அவர் கடையில் மட்டும் முதலாளி போல நடந்துகொள்ளுதல் கடைக்கு வெளியில் அன்பானவராக நடந்து கொள்பவர்.

புதிதாக வந்த பையன் எதிர்த்துப் பேசுதல்:செட்டியார் சரியான காரணகாரியம் இன்றி எதற்கெடுத்தாலும் வீணாகத் திட்டும் சமயத்தில் புதிதாக கடைக்கு வேலைக்கு இணைந்த பையன் வெங்கடாசலம் கோபப்படுகின்றான். ஏனென்றால் பழைய சிப்பந்திகளுக்கு செட்டியாரது குணமும் செயற்பாடுகளும் நன்றாகத் தெரியும். ஆனால் இந்த புதிதாக சேர்ந்த பையனுக்கு அனைத்தும் புதிதாகவும் செட்டியாரது ஒவ்வொரு வார்த்தைகளும் தம்முடன் முரண்பட்டு காணப்படுவதால் அவனும் செட்டியாரோடு எதிர்த்துப் பேச முற்படுகின்றான். உதாரணங்களாக, செட்டியார் முதல்நாள் கடைக்கு வந்தவுடன் திருநீறு அள்ளி பூசியமையை சாக்காக வைத்து பையன்களுக்கு திட்டுகிறார். அப்போது அந்தப் பையன் நீங்களும் பூசியிருக்கிங்களே முதலானி?" என்று கேட்டது. மற்றொரு சமயம் செட்டியார் அனைவருக்கும் திட்டிவிட்டு, "தொலைஞ்சி போங்கடா" என்று விரட்டியவுடன் அனைவரும் உள்ளே போகின்றனர். அதற்கும் செட்டியார், வாரவங்களுக்குப் புளியும் கடுகும் நான் நிறுத்துப் போடுறன்" என்று மீண்டும் திட்டும் போது, அந்தப் புதுப் பையன் "நீங்கதானே முதலாளி உள்ளே போகச் சொன்னீங்க? நாங்க எது செய்தாலும் குத்தமா சொல்லுறீங்களே என்று தமது ஆத்திரத்தை வெளிக்காட்டுகிறான்.

புதிய சிப்பந்திக்கு திட்டும் போது பழைய சிப்பந்திகள் சிரித்தல்:புதிதாக கடையில் வேலைக்கு இணைந்த வெங்கடாசலத்தை செட்டியார் திட்டும் போது பழைய சிப்பந்திகள் சிரிப்பது வழக்கம். ஏனென்றால் செட்டியார் சிப்பந்திகளுக்கு திட்டும் போது பழைய சிப்பந்திகளுக்கு செட்டியாரின் குணாதிசயங்கள் சலுகைகள் அனைத்தும் தெரியும் ஆதலால் அவர்கள் செட்டியாரின் கோபத்திற்கு உள்வாங்கப்பட்டாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் புதிதாக இணைந்த பையனுக்கு முதற்பாடம் கூட இன்னும் சரிவர புரியவில்லை என்பதனால் அவன் எதிர்த்து பேசும் போது அவர் இன்னமும் அதிகமாகக் கோபப்படுகிறார். இதனாலே புதிய சிப்பந்திக்கு திட்டும் போது பழைய சிப்பந்திகள் சிரிக்கின்றனர். இதற்கு கதையினூடாக சில உதாரணங்களை நோக்குவோமானால், "நீங்களும் விபூதி பூசியிருக்கிங்களே முதலாளி" என்று புதுப்பையன் கேட்டவுடன் செட்டியார். "அடி செருப்பால நாயே" என்று திட்டும் போது பழைய சிப்பந்திகள் சிரிக்கின்றனர். அடுத்ததாக செட்டியார் பையன்களை உள்ளே போகச் சொல்லி திட்டிவிட்டு மீண்டும் அழைத்த போது, "நீங்தானே முதலாளி உள்ளே போகச் சொன்னீங்க நாங்க எதைச் செய்தாலும் குத்தமாகச் சொல்லுரிங்க" என்று கூறியவுடன் முதலாளி திட்டும் போது பழைய சிப்பந்திகள் சிரிக்கின்றனர்.

இந்த சம்பவங்களினூடாக செட்டியார் ஒவ்வொரு தடவையும் திட்டும் போது பழைய சிப்பந்திகள் வாய் திறந்து எதிர்த்துப் பேசுவதை காணமுடியவில்லை. ஆனால் இந்த வெங்கடாசலம் மாத்திரமே செட்டியாரின் கருத்தை எதிர்த்து பேசுவதையும் கேள்வி கேட்பவளாகவும் காணப்படுகின்றான். இது எவ்வாறு அன்றாட செயற்பாட்டிற்குள் அடங்கும் என்று பார்த்தோமானால் ஒவ்வொரு விடயத்திற்கும் எதிர்த்துப் பேசிக்கொண்டே காணப்படுவதைக் குறிப்பிடலாம்.

கடை பூட்டுதல்:கடை பூட்டுதல் துரிதமாக பூட்டுவதாக கூறப்படுகின்றது. கோயில் திருவிழா என்ற படியால் 8:00 மணிக்கு பூட்டப்படுகின்றது.

தியாகம் சிறுகதையின் படிப்பினைகள்

நேரமுகாமைத்துவம் : கோவில்பட்டி மளிகைக்கடை கதிரேசன் செட்டியார் காலையில் பலகாரம் சாப்பிட 10 மணியாகும். பின் பத்து நிமிடம் உட்கார்ந்து சாப்பிட்ட சிரமத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் கடையை நோக்கி புறப்படுவார். சரியாக 15 நிமிட நடை 10.25 க்கு கடையில் வந்து உட்காருவார். கடிகாரம் பார்க்காமலே நிமிடக்கணக்குத் தவறாமல் வருஷம் 365 நாளும் ஒரே மாதிரியாக கடைக்கு வருவதும் திரும்பிச் செல்வதுமாகக் காணப்பட்டார்.

இருக்கும் இடத்திற்கு ஏற்ப மனிதர்களின் நடத்தைகளும் மாறி மாறி நடைபெறும்: கதிரேசன் செட்டியார் கடைக்குள் நுழையும் போது முகத்தை எப்படி வைத்துக் கொள்ள வேண்டுமோ ஒரு குறிப்பிட்ட முறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த முகபாவத்தின் பிரதான அம்சம் கடுகடுப்பு, பிரதானமில்லாத அம்சம் ஒரு மாதிரியான விறைப்பு இந்த முகபாவத்தை கடையில் உட்கார்ந்திருக்கும் வரையில் எக்காரணத்தைக் கொண்டும் மாற்றமாட்டார். அவரது நண்பர்களோ, அந்தஸ்துமிக்க வாடிக்கையாளர்களோ வரும் போது அவர் சிரிக்கவோ புன்னகை செய்யவோ அவசியம் ஏற்படும். அதையும் இந்த முகபாவத்தை மாற்றாமலே நிறைவேற்றி விடுவார். அவருடைய வீட்டிற்கு கடைப்பையன்கள் போனால் கடுகடுப்பு இல்லாமல் ஐயா, ராசா என்று அன்போடு பேசுவார்.

பெற்றோர் சொல் கேட்டு நடத்தல்:வெங்கடாசலம் சொல்லாமல் கொள்ளாமல் கடையை விட்டு ஓடிரலாம் என்று நினைத்தாலும் தன் தகப்பனாரின் கண்டிப்பிற்கு பயந்து இன்னும் அங்கேயே இருந்து கொண்டிருந்தான்.

புரிந்துணர்வாலேயே ஒருவர் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படும்: செட்டியாரின் குணாதிசயங்களெல்லாம் கடைப் பையன்களுக்கு மனப்பாடம் இரண்டு வாரங்களுக்கு முன்வந்து சேர்ந்த புதுப்பையன் வெங்கடாசலத்திற்கு இன்னும் முதல்பாடம் கூடசரிவரப் புரியவில்லை. இதனால்தான் செட்டியார் அவனைத் திட்டும் போது உள்ளூர மனம் குமுறியது.

கொடுக்கல் வாங்கலின் போது சாமர்த்தியம் வேண்டும்: செட்டியார். "அந்த முத்தையாப்பிள்ளை நரவேண்டிய பாக்கியைக் கேட்டு வாங்கினியாடா" என்று கேட்கும் போது. ஆம் முதலாளி வாங்கிட்டேன்" என்று முருகையன் கூற. அட என்னமோ இவன் சாமர்த்தியத்தில வாங்கின மாதிரியில்லே பேசுறான்" என்பதும் கண்டிப்பாக கேட்டியா? உன்ன யாருடா அப்படிக் கேட்கச் சொன்னது? எதம் பதமா பேசனும்னு ஒனக்கு எத்தனதரம் சொல்லிருக்கேன் கண்டிப்பா பேசினா நானைக்கு எவண்டா கடைக்கு வருவான்?" எனக் கூறுவதும். சேருமிடம் அறிந்து சேர வேண்டும்:வெங்கடாசலத்தினது ரோஷத்தைக் கண்டும் செட்டியார் தங்களைத்திட்டுவதைக் கண்டும் மற்றப்பையன்கள் சிரித்ததற்கு காரணம் அவர்களுக்கு மானமோ ரோஷமோ இல்லாததுதான் என்று யாராவது நினைத்தால் அதைவிட பெரிய தவறு வேறொன்று இருக்க முடியாது. அவர்கள் அங்கேயே இருந்து பழகியவர்கள் மற்றும் அதற்குப் பல காரணங்களும் உண்டு.அவை வருமாறு:வேறு 馬馬馬 கடையிலும் கடைச்சிப்பந்திகளுக்கு கொடுக்கும் சம்பளத்தைவிட அதிகசம்பளம்.தீபாவளிக்கு புதுவேஷ்டி சட்டைகளுடன் ஆளுக்கு 10ரூபாய் ரொக்கமும் கொடுப்பார்.கடை வேலையைத் தவிர மறந்தும்கூட வீட்டு வேலையைச் செய்யச் சொல்லமாட்டார். யார் என புகார் சொன்னாலும் எந்தப்பையனையும் வேலையிலிருந்து நீக்குவது கிடையாது.கல்யாணத்திற்கு கணிசமான தொகையைக் கொடுப்பதோடு அவர்கள் தனிக்கடை தொடங்கவும் உதவி செய்வார். ஒரு பொதுநலம் தன்னலம் கருதாது செட்டியார் தொழிலாளர்கள் என்ற வகையில் அவர்கள் முன்னுக்கு வரவேண்டுமென்னும் பொதுநல செயற்பாடு கொண்டவர்.

ஒருவரின் வெளி நடத்தையை மாத்திரம் வைத்து அவரது குணாம்சங்களை அறிய முடியாது:செட்டியார் கதையின் ஆரம்பத்தில் கடுகடுப்பாக காணப்பட்டார். ஆனால் கதைமுடிவில் அன்பானவராகவும், தியாக உணர்ச்சி உள்ளவராகவும் காணப்படுகின்றார்.

புதியதைக் கண்டு பழையதை மறந்துவிடக்கூடாது: செட்டியாரை அவர் பழகிய உலகம் கைவிட்டாலும் அவர் அதை விடத் தயாராக இல்லை எனக்கூறுவது.

இறைபக்தி:சைவனாப் பிறந்தவன் திருநீறு தரித்தல் வேண்டுமென செட்டியார் வெங்கடாசலத்திடம் கூறல்: செம்பகவல்லியம்மன் புண்ணியத்தில் இன்னும் உடம்புக்கு ஒன்னும் வரல்.

சிறப்பான வழிநடத்தல்:நான் கடைப்பையனாய் (செட்டியார்) இருந்த போது எங்க முதலாளி பேசினத்துல பத்துல ஒரு பங்குகூட நாள் பேசமாட்டன். என்னப்பத்தி மட்டுமா என் தாயி தகப்பன், பாட்டன் அத்தனை பேரையும் வைத்து கேவலமாய்ப் பேசுவாரு புழுத்த நாய்கூட குறுக்கப் போவாது ஒருநாள் என் முஞ்சியிலே அஞ்சுப்பல படியையே தூக்கி வீசிட்டாரு எனப் பழைய நினைவுகளைக் கூறுதல்.

ஏனையவரின் கருத்துக்களில் பங்கெடுத்தல் செட்டியாரின் பேச்சைக்கேட்டு சண்முகப்பிள்ளை சிரிப்பதும் அதைக் கண்டு செட்டியார் துன்பமடைதலும்,

நம்பிக்கைக்கு கரங்கொடுத்தல் :"அவங்க தாய் நகப்பன்மாரு என்னை நம்பி இவனுகளை ஒப்படைச்சிருக்காங்களே" என்று செட்டியார் சண்முகம்பிள்ளையிடம் கூறுதல்.

செய்யும் செயலில் நேர்த்தி:செட்டியார் கடை ஆரம்பித்ததிலிருந்து ஒருத்தன்கூட பார்த்து குறை சொல்வதற்கு இடமில்லாமல் நிர்வாகம் செய்யவர்.

பொருளாதாரத்தில் தூரநோக்குடன் செற்படல்: "கண்டிப்பாக கேட்டியா? உன்ன யாருடா அப்படிக் கேட்கச் சொன்னது? எதம் பதமா பேசனும்னு ஒனக்கு எத்தனதரம் சொல்லிருக்கேன் கண்டிப்பா பேசினா நாளைக்கு எவண்டா கடைக்கு வருவான்?" என்ற செட்டியார் முருகையா உரையாடல் மூலமாக அறியலாம்.

கஸ்ரப்படும் தொழிலாளர்களுக்கு உதவும் தியாகம் செட்டியார் சிப்பந்திகளின் எதிர்கால வாழ்விற்கு

அவரின் உடல் உயிர் நலத்தைத் தியாகம் செய்பவர்.

சமூகத்தில் நல்ல நிலையில் இருப்போர் தம் ஆரம்ப வாழ்வில் அதிக கஸ்ரங்களை அனுபவித்தவர்களேதான், வேதனைகளின்றி வெற்றியில்லை: செட்டியாரின் ஆரம்பகால வாழ்வும் தன்ன

முதலாளி செய்த கொடுமைகளும்.

தியாகம் கதைத்தலைப்பின் பொருத்தப்பாடு

கதையின் மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு நகரும் இக்கதைக்கு 'தியாகம்' என்ற தலைப்பு மிகப் பொருத்தமானதாகவே அமைகிறது.கதையின் ஆரம்பப் பகுதியில் செட்டியார் எனும் பாத்திரம் சிப்பந்திகள் மீது கடும் போக்கைக் கடைப்பிடிக்கும் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளது. கதாசிரியரின் படைப்புத்திறனால் கதை நகர்வின் அடுத்த கட்டத்தில் சிப்பந்திகள் மீது அக்கறையும் அன்பும் கொண்ட பாத்திரம் என்பது புலப்படுத்தப்படுகிறது. அவ்வாறு நுட்பமாக வளர்த்தெடுக்கப்படும் அப் பாத்திரத்திற்கும் ஷண்முகப்பிள்ளைக்கும் இடையில் கதையின் இறுதிப்பகுதியில் இடம்பெறும் உரையாடல் மூலமாக பையன்களின் முன்னேற்றத்திற்காக தனது நலத்தையும் பொருட்படுத்தாது தனது நலனைத் தியாகம் செய்து வாழ்பவர். என்பதன் உண்மை புலப்படுத்தப்படுகின்றது. அப்போதுதான் செட்டியாரின் அன்புள்ளம், தியாகம் முழுவதுமாக வெளிப்படுத்தப்படுகின்றது.

அவ் உரையாடல் பகுதியில் "இனிமே என்ன? வயது அறுபதாச்சு. உகரை வச்சிருந்து என்னத்தைச் சாதிக்கப்போகிறோம்?" என்று நியாக உணர்ச்சியோடு பேரினார் என்ற அவரது வார்த்தைகள் உயிரைக்கூட பையன்களின் முன்னேற்றத்திற்காக தியாகம் செய்யத் தயார் என்ற மனநிலையை புலப்படுத்துகிறது. இம் மனநிலையே கதையின் உச்சம் எனலாம். இத்தகைய மையப்பொருளைக் கொண்ட கதைக்குத் தியாகம் எனத் தலைப்பிட்டமை பொருத்தப்பாடுடையதே. அவ்வகையில் இக்கதையில் பல்வேறு தியாகங்கள் இடம்பெறுகின்றன.

() முதலாளியின் தியாகங்கள்:

உடல் நலத்தையும் உள நலத்தையும் தியாகம் செய்கிறார்.தான் எவ்வாறு நல்ல நிலைக்கு வந்தாரோ அதேபோல் கடைப்பையன்களும் வரவேண்டும் என்பதை மனதில் கொண்டு அவர்களிடம் மிக கண்டிப்பாக நடந்து அவர்களுக்கு தினமும் ஏசி ஏசி தன் உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்கின்றார். செட்டியாரிடம் சண்முகப்பிள்ளை பேச்சுக்கொடுக்கும் போது செட்டியார்,"அடிக்கடி தொண்டை கட்டிக்கும் பாலிலே பனங்கல்கண்டும் மிளகும் போட்டுக்குடிப்பன்" என்று கூறுகின்றார். அதற்கு ஷண்முகம்பிள்ளை இனியும் அர்ச்சனை நடக்கும்" என்று சிரிக்க செட்டியார் உங்களுக்கு என்னமோ சிரிப்பா இருக்கு எனக்கு உங்ககூட கதைக்க கூட முடியல்ல தொண்ட வலிக்குது" என்று அழாத குறையாகக் கூறுகின்றார். அவர்களுக்கு தினமம் ஏசிவிட்டு வீட்டுக்குச் சென்று வருத்தப்படுகிறார். இதன் மூலம் செட்டியார் உடல்நலத்தையும் உள நலத்தையும் தியாகம் செய்கிறார் என்பது புலனாகும்.

ஓய்வை தியாகம் செய்கிறார்.கைக்கடிகாரம் கட்டாமலே வருசம் 365 நாளும் கடைக்குவருவதும் வீடு திரும்புவதையும் வழக்கமாகக் கொண்டிருப்பவர். ஒவ்வொரு நாளும் எதையாவது 压压 வைத்துக்கொண்டு கடைப்பயைன்களுக்கு திட்டி திட்டி தொண்டைவலி இருந்தாலும் வீட்டில் ஓய்வெடுத்து நிற்காது மறுநாளும் முன்னையநாள் போலவே கடையில் வேலை செய்கிறார்.

மகிழ்ச்சியை தியாகம் செய்தார் செட்டியார் கடையில் இருக்கும்போது கடுகடுப்பான முகபாவத்தை வைத்துக்கொண்டிருப்பார். கடைக்கு அந்தஸ்து மிக்க வாடிக்கையாளர்களோ நண்பர்களோ வரும்போது சிரிக்க வேண்டி ஏற்படும். அதையும் அதே முகபாவத்தோடு செய்து முடித்துவிடுவார்.பையன்களோடும் கடுமையாக நடப்பதால் தன் மகிழ்ச்சியை தியாகம் செய்கின்றார்.

நற்பெயரை தியாகம் செய்கிறார்:இப்படி வரும் கடைப் பையன்களுக்காக செய்வதாலும் மற்றவர்கள்ஷண்முகம்பிள்ளை செட்டியாரிடம் கேட்கிறார்."ஏன் இருபத்துநாலு மணி நேரமும் பையர்பளை திட்டிக்கொண்டே இருக்கிங்க. எப்ப பார்த்தாலும் எவனையாவது நிப்பாட்டி வைச்சு பொரியிறீங்களே. எதுக்கு கொஞ்சம் அன்பா ஆதரவா இருக்கலாமில்லே. ஏன் சுத்தனும் நல்லபடியா ஒரு சொல் சொன்னா பத்தாதோ" என கேட்பதன் மூலம் செட்டியார் நற்பெயரையும் நல்ல குணத்தையும் தியாகம் செய்கிறார் எனலாம்.

இலாபத்தையும் தியாகம் செய்கிறார்: கடையில் வேலை பார்த்த பையன்கள் பெரிவனாகி தனிக்கடை ஆரம்பிக்க நினைத்தால் அதற்கும் உதவி செய்வார். அவர் கைதூக்கிவிட்டு மூன்று பேர் அதே ஊரில் இலாபகரமாக வியாபாரத்தை நடாத்தி வருகின்றார்கள். செண்பக வல்லியம்மன் கோயில் திருவிழா இறுதி நாளின் போது வழக்கமாக ஒன்பது மணிக்கு முடும் கடையை எட்டு மணிக்கே மூடி கடைப்பையன்களை கோயிலுக்கு அனுப்பி வைக்கிறார். இதன் மூலம் செட்டியார் இலாபத்தை தியாகம் செய்கிறார் எனலாம்.

முதலாளி தன் உரிமையைத் தியாகம் செய்கிறார் திருநீறு பூசி வந்ததைப் பார்த்து செட்டியார் திட்ட நீங்களுந்தானே முதலாளி திருநீறு பூசியிருக்கீங்க" என்று கேட்க அடி செருப்பால நாயே வாயதொறக்கிறீயா நீ. பார்த்தீரா சோமசுந்தரப்பிள்ளை பய எதுத்தில வெவாகாரம் பண்ணுரான் ஜோட்டால அடிச்சு வெளியே பத்தும் இவனை" என்று ஏசுகிறாரே தவிர அவர்களை தன் உரிமையைப் பயன்படுத்தி வேலையை விட்டு நிறுத்தவில்லை.

சுய கௌரவத்தைத் தியாகம் செய்கிறார்: செட்டியார் ஷண்முகம் பிள்ளையிடம் சொல்கிறார் நான் கடைப்பையனா இருந்தபோது எங்க முதலாளி பேசினத நீங்க கேட்டிருக்கணும். அதில பத்தில் ஒருபங்கு கூட நான் பேசியிருக்கமாட்டன். என்னப்பத்தி மட்டுமா என்ட நாய். தகப்பன், பாட்டன் எல்லாரையும் சேர்த்து வைச்சு கேவலாமாக பேசுவார். புளுத்த நாய் குறுக்கே போகாது. ஒருநாள் அஞ்சுப்பல படியை முஞ்சியில் வீசிட்டாரு. இதையெல்லாம் பொறுத்துத்தான் நான் இந்த நிலைமையில இருக்கன்"என வெளிப்படையாக கூறுகிறார்.

செட்டியார் வாழ்க்கையை தியாகம் செய்கிறார்: 'அண்ணாச்சி நீங்க என்னதான் சொல்லுங்க பயக நல்லா தலையெடுக்கணும் என்று இவ்வளவு காலமும் இப்படி இருந்திட்டு இனிமே எக்கேடு கெட்டா எனக்கென்ன என்று என்னால இருக்கமுடியாது. வயசு அறுபதாச்சு இனி உசிரவச்சிருந்து என்னத்த சாதிக்கப்போறம்" என தியாக உணர்ச்சியோடு பேசுகிறார். இதன்முலம் தன் வாழ்க்கையையே அவர்களுக்காக தியாகம் செய்கிறார்.

() தொழிலாளியின் தியாகங்கள்:

கடைப்பையன்களும் தம் உரிமையை தியாகம் செய்கிறார்கள்:கடைப் பையன்களுக்கு செட்டியார். "நாயே. பரதேசி, கஞ்சிக்கு வழியில்லாதவன்" என்று திட்டும்போது மனம் கஸ்டமாக இருக்கும்.கடையை விட்டு ஓடிவிடலாம் போல தோன்றினாலும் தன் தந்தையின் கண்டிப்புக்குப் பயந்து அக்கடையிலே வேலை செய்கிறான். இதன் மூலம் தம் உரிமையை தியாகம் செய்கின்றனர் எனலாம்.

சோமசுந்தரம் பிள்ளை தன் தொழில் தர்மத்தை தியாகம் செய்கிறார்: சோமசுந்தரம்பிள்ளை வேலை செய்துகொண்டிருக்கும் போது செட்டியார் அந்த கடைப் பையன்களுக்கு திட்டுவதால் அதை தடுக்க தன் வேலையை விட்டு அதற்காகவே நேரத்தை தியாகம் செய்து செலவிடுகிறார். அவர் கணக்குப்பிள்ளையாக இருந்தாலும் அந்த பையன்களை செட்டியார் திட்டிலிருந்து காப்பாற்றுபவராக விளங்குகிறார். இதன் மூலம் அவர் தனது தொழில் தர்மத்தை தியாகம் செய்கிறார் எனலாம்.

தியாகம் சிறுகதையின் மொழிநடைப் பிரயோகம்

எளிமையான மொழிநடை : ஒரு கதையின் பிரதான அம்சமாகவே மொழிநடை காணப்படுகின்றது. கதைக்கு உயிர் கொடுப்பது மொழிநடையே ஆகும். மொழிநடை சாதாரணமாக பேசக்கூடிய வடிவில் இருந்தால் மட்டுமே பாமர மக்களாலும் அதை வாசித்து பயன்பெற முடியும். இதனால் வாசிப்பவர்களின் மனதில் தெள்ளத் தெளிவாக கதை மனதில் பாதியும். இவ்வாறுதான் இந்தத் தியாகம் சிறுகதையின் மொழிநடையும் அமைந்துள்ளது.

கு.அழகிரிசாமி மிகவும் கவனமாகவும் தெள்ளத் தெளிவாகவும் கதை அமைப்பைக் கொண்டு எழுதியுள்ளார். இவர் தமிழ் மொழி மட்டும் கையாளாமல் பல்வேறு பிற மொழிச் சொற்களையும் லார். இவறை எல்லாம் தியாகத்தை எழுதினார். கச்சிதமாக மொழிநடையை கையாண்டு உரையாடல் பாங்கில் அமைந்தமை தியாகம் சிறுகதை முழுமையாகவே ஓர் உரையாடல் பாங்காகவே அமைந்துள்ளது. வெறுமனே கதை ஆசியரியரே எல்ல விடயங்களையும் கூறிக்கொண்டு செல்லாமல் பாத்திரங்களையே தனக்குரிய விடயத்தை கூறுவதாகவே அமைந்துள்ளது. கதை ஆசிரியரே கதையை நகர்த்திச் சென்றால் வாசகர் விரும்புவது இல்லை. ஆனால் உரையாடல் பாங்கில் கதை சென்றால் ஒரு விறுவிறுப்பு வாசகர் மத்தியில் நிலைகொள்ளும். சோமசுந்தரப்பிள்ளை, செட்டியாருடன் உரையாடுவதையும் சோமசுந்தரப்பிள்ளை கடைப்பையன்களுடன் உரையாடுவதையும், செட்டியார் அண்ணாச்சியுடன் உரையாடுவதையும் உதாரணமாகக் கொள்ளலாம்.

இழிசன மொழிப் பயன்பாடு பரதேசி, நாயே, பிச்சைக்காரன், கஞ்சிக்கு இயலாதவன், எருமைமாட்டுப் பயலே. கழுதைஎன்பன இத்தகையன. சிறுகதையில் வரும்.ஃஅடி செருப்பால நாயே வாயைத் தொறக்கிறியா நீ. ஏன்டா தடிப்பயல்களா! நீங்க என்ன பரதேசிகளா, சந்யாசிகளாடா? எருமை மாட்டுப் பயல்கள்!" என்றவாறான சில தொடர்கள் பயன்படுத்தப்பட்டன.

நாகரிகமான மொழிநடைப் பிரயோகம் பல இழிய சொற்களை செட்டியார் பேசுகின்றார். அவற்றை எல்லாம் இக்கதையில் சஹாப்ரநாம அர்ச்சனை, வசைபுராணம். புரியாத அந்நிய பாசை என்றே கூறியுள்ளார். ஊதாரணமாக, "பிச்சைக்காரன் கஞ்சிக்கு இல்லாதவன், நாயே, பேயே என்று எத்தனையோ வார்த்தைகளை சேற்றிலே தோய்த்து செட்டியார் வீசுவார்.

இந்திய மதுரைத்தமிழ் : "நான் உனக்கு என்னலே சொன்னன்" எனும் வானத்தின் மூலம் அறியமுடியம்.

மரபுத் தொடர் பயன்பாடு கைதூக்கி விடுதல்' எனும் மரபுத்தொடர் பயன்படுகிறது. தனது கடையில் வேலை செய்யும் பையன்கள் திருமணம் ஆன பின் தனிக்கடை எல்லாம் வைத்து அவர்களுக்கு உதவி செய்தலை குறிப்பிடலாம்.

உணர்ச்சிக்கேற்ப சொற்பிரயோகம் பயன்படல் கோப உணர்ச்சி அடிசெருப்பாலே நாயே வாய தொறக்கிறியா நீ மகிழ்ச்சி : "ஐயா ராசா"என்று பாசத்தோடு பேசுவது. சோகம்: இந்தப்பயகளோட கத்திக் கத்தி என் தொண்டைத் தண்ணிதான் வத்திப் போச்சி சேச்சே"

பிறமொழிச் சொற்களின் பயன்பாடு தமிழில் சிறுகதை எழுதப்பட்டிருந்தாலும், சில பிறமொழிச் சொற்களும் சிறுகதையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஜோட், சமுக்காளம், ஜரூர், சோலி என்பவற்றைக் கூறலாம். கதையில் வரும் சில உதாரணம் "ஜோட்டாலே அடிச்சு வெளியே பத்தும் இவனை""எங்கடா கூண்டோட கைலாசம் பொயிட்டீங்களா? "உள்ளே சமுக்காளத்தை விரிச்சுப் படுத்துத் தூங்குங்கடா." என்பவற்றை குறிப்பிடலாம்.

மணிப் பிரவாள மொழிநடை:இச்சிறுகதை முழுவதுமாகவே மணிப்பிரபாள மொழி நடையே காணப்படுகின்றது. இது வடமொழியும், தமிழ் மொழியும் சேர்ந்து கலந்த மொழிநடை ஆகும். இது எமது தமிழ் நாட்டிற்கு ஒரு பரீட்சயமான மொழிநடையாகவே காணப்படுகின்றது.

சிறிய சிறிய வாக்கியம்: சிறிய சிறிய வாக்கியங்கள் பயன்படுத்தப்பட்டால்தான் படிப்பவர்கள் இலகுவாகப் புரிந்து கொள்வார்கள் என்பதற்காகத்தான் கதை ஆசிரியர் இவ்வாறு செய்துள்ளார். இதனால் எல்லோரும் இலகுவாகப் புரிந்து கதை எல்லோருக்கும் சென்றடையும்.

மாதிரி வினாக்கள் :

சிறுகதை தொடர்பான கலந்துரையாடலுக்குரிய தலைப்புக்கள்

1.
தியாகம் சிறுகதையின் கதைக்கரு முதலாளி, தொழிலாளி சார்ந்த சிந்தனைகள்

2.
கு.அழகிரிசாமியின் 'தியாகம்' சிறுகதையில் சிப்பந்திகளான: முருகையா, வெங்கடாசலம் ஆகிய பாத்திர உருவாக்கமும் அப்பாத்திரத்தின் பண்புகளும், கதைவளர்ச்சியில் அதன்பங்கும் முக்கியத்துவமும் அது பற்றிய உங்கள் மனப்பதிவும்.

3.
கு.அழகிரிசாமியின் 'தியாகம்' சிறுகதையினைப் படிக்கும் போது கடைச்சிப்பந்திகள் 01031 வகையில் மளிகைக்கடை முதலாளியான கதிரேசன் செட்டியாரிடத்து பெரு வெறுப்பும் நல்ல வாசகர் எனும் வகையில் பேரபிமானமும் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?

4. முதலாளியின் தியாகம் கடைப்பையன்களின் வளமான எதிர்காலம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக