G.C.E.O/L,
இலட்சியமும் சமநோக்கும்
கடந்தகால வினாத்தாள்
02. (v). இலட்சியவாதிகளின் தூலவடிவங்கள் மறைந்தாலும், இலட்சியங்கள் மறைந்து போவதில்லை.
அவை நம்முள்ளத்தே கலந்து நம்மை ஆட்கொண்டு நிற்கின்றன. அவை அழியாநிலை பெற்றவை.
தூலவடிவில் நின்றும் மறைந்த இலட்சிய புருடர்களை இயற்கைப் புலமையும் அறிவுத் தெளிவுமுள்ள
உண்மைக் கவிஞர்கள் காவியங்களிலே சூக்கும வடிவில் அமைத்துக் காட்டுகின்றார்கள்.
இவ்வற்புதக் காட்சியில் இலக்கிய புருடர்களைக் காணாமற் கண்டு பேரானந்தம் அடைகின்றோம்.
இலட்சியங்களும் இலட்சியவாதிகளும் அபின்னம். இதேபோன்று இலக்கியங்களும் அபின்னம்.
இலக்கியங்களுடன் அபின்னமாய் நின்று உணர்வார்க்கு இவை புலனாகும். நூறாண்டு கழிந்தாலும்
உண்மை இலக்கியங்கள் புதுமை பெற்று உள்ளங்களைத் தளிர்த்து மலரச்செய்கின்றன.
(அ) 'தூலவடிவில் நின்றும் மறைந்த இலட்சிய புருடர்களை சூக்கும வடிவில் அமைத்துக்
காட்டுகின்றார்கள்' என்பதன் மூலம் உணர்த்தப்படுவது யாது?
(அ) உடலோடு கூடி வாழ்ந்து மறைந்த இலட்சியவாதிகளைக் கருத்து வடிவில் விபரித்தல்
(ஆ) 'இலட்சியங்களும் இலட்சியவாதிகளும் அபின்னம்' இத்தொடரை விளக்குக?
(ஆ) இலட்சியங்களையும் இலட்சியவாதிகளையும் பிரிக்க முடியாது. இலட்சியம் இல்லாமல் இலட்சியவாதிகள் இல்லை.
02. (v). இராமாயணத்தில் ஒரு காட்சி. தசரதன் இரண்டு இலட்சியங்களிடையே ஊசலாடுகிறான். ஒன்று
அரசியல். மற்றையது சத்தியம். இவ்விரண்டில் ஒன்றைத் தெரிவுசெய்வதில் அவன் திண்டாடுகின்றான்.
அரசியற் கொள்கையின்படி மூத்த புதல்வனுக்கு முடிசூட்டுவதா? அல்லது கைகேயிக்குக் கூறிய
சத்தியவாக்கை நிலைநாட்டுவதா? இந்த தருமசங்கடத்தின் மத்தியிலே ஊசலாடுகின்ற அரசன்
நினைக்கின்றான்: அரசியல் நிலைமாறக் கூடியது, சத்தியம் நிலைமாறாதது. நிலைமாறுந் தன்மையுள்ள
அரசியற் கொள்கையைக் கைவிடுவேன்; நிலைமாறாத இயல்புள்ள சத்தியவாக்கைக் கடைப்பிடிப்பேன்.
இதுதான் அரசனது முடிபு. நடுநிலையிலே நின்று வாக்குறுதியைக் காப்பாற்றிச் சத்தியத்திலே
நிலைநின்று உயிரைத் தியாகஞ் செய்கின்றான்.
(அ) தசரதன் 'ஊசலாடுகின்றான்' என்பதன் மூலம் ஆசிரியர் உணர்த்துவது யாது?
தசரதன், சத்தியத்தை நிலைநிறுத்துவதா அல்லது அரசியல் மரபைப் பேணுவதா என்று
முடிவெடுக்க முடியாது திண்டாடுதல்
(ஆ) சத்தியத்தின்மீது தசரதன் கொண்ட உறுதிப்பாடு எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது?
(ஆ). 'உயிரைத் தியாகம் செய்தேனும் சத்தியத்தை நிலைநாட்டுவேன்' என்பதன் மூலம்
4. இலட்சியமும் சமநோக்கும். என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு பின்வருவனவற்றைத்
தெளிவுபடுத்துக.
(அ) இலட்சியமும் சம்நோக்கும் என்பதற்கான விளக்கம்
எக்காலத்தும் மக்களை ஈடேற்றுவது இலட்சியமாகும்.
இது சமூகமாகிய உடலுக்கு உயிராக அமைவது.
இலட்சியங்களுக்குள்ளே உயர்வு தாழ்வு என்பது இல்லை.
இலட்சியவாதிகளிலுள்ளேயும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது.
இலட்சியங்களிலும் இலட்சியவாதிகளிலும் சமநோக்கம் கொண்டு, ஒருமைப்பாடு
காணப்படுதல் வேண்டும்.
இலட்சிய வாழ்வில் எத்தனை சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடினும் தான்கொண்ட இலட்சியத்தில் உறுதியாய் நிற்றல் வேண்டும்.
(ஆ) மணிவாசகர், தருமர், தசரதன் ஆகியோர் தத்தம் இலட்சியத்திற் கொண்ட உறுதிப்பாடு
மணிவாசகர்
இறைவனது திருவருளை இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர்.
இலட்சியத்தின் பயனைத் தியாகம் செய்து, தொடர்ந்தும் இலட்சியத்தை போற்றிவாழ்ந்தவர்.
நரகத்தையும் சுவர்க்கத்தையும் சமநோக்கில் கண்டு, இலட்சியத்தில் உறுதி பூண்டு வாழ்ந்தவர்.
தருமர்
அறத்தையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர்.
பிற உயிர்களைத் தம் உயிரில் கண்ட சமநெறிச் செல்வர்.
தன்னுடன் வந்த புழுத்த நாய்க்குக் கிட்டாத முத்தியுலகம் தனக்கும் வேண்டாம் என இலட்சியத்திற்கான பயனை விடுத்து இலட்சியத்தில் உறுதி கொண்டிருந்தவர்.
தசரதன்
சத்தியத்தை இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர்.
அரச நீதிப்படி மூத்தவனுக்கு முடிசூட்டுவதா கைகேயிக்குக் கொடுத்த சத்திய
வாக்கைக் காப்பாற்றுவதா என இலட்சிய வாழ்வில் இடையூறு ஏற்பட்டபோதும்
தன் இலட்சியத்தில் உறுதியாய் நின்றவர்.
த்தியத்தை நிலைநிறுத்திவிட்டு இலட்சியத்திற்காக உயிரையே விட்டவர்.
02. (v). தூலவடிவில் நின்றும் மறைந்த இலட்சிய புருடர்களை இயற்கைப் புலமையும் அறிவுத் தெளிவுமுள்ள
உண்மைக் கவிஞர்கள் காவியங்களிலே சூக்கும வடிவில் அமைத்துக் காட்டுகின்றார்கள். இவ்வற்புதக்
காட்சியில் இலக்கிய புருடர்களைக் காணாமற் கண்டு பேரானந்தம் அடைகின்றோம். இலட்சியங்களும்
இலட்சியவாதிகளும் அபின்னம். இதேபோன்று இலக்கியங்களும் அபின்னம்.
(அ) உண்மைக் கவிஞர்களது கவியாற்றல் எத்தகையது?
(அ) தூல வடிவில் நின்றும் மறைந்த இலட்சிய புருடர்களை, காவியங்களில் சூக்கும வடிவில் அமைத்துக் காட்டுதல்.
(ஆ) இங்கு 'காணாமற்கண்டு' என்ற தொடர் கையாளப்பட்டுள்ளதன் பொருத்தப்பாடு யாது?
(ஆ) இறந்துபோய்ச் சூக்கும வடிவில் இருக்கும் இலட்சிய புருடர்களைக் கட்புலனால் காண முடியாது. ஆனால் கவிஞரின் வார்த்தைகளூடாக அவர்களைக் காணக்கூடியதாக இருத்தல்.
G.C.E.O/L-2019
01. (iii). "இன்பப்பயன் காணச் செய்கின்ற இலட்சியம், சமூகமாகிய உடலுக்கு உயிராக அமைந்துள்ளது."
(அ) இங்கு இடம்பெற்றுள்ள அணி யாது ?
அ. உருவக அணி
(ஆ) இங்கு உடலாகவும் உயிராகவும் கருதப்படுபவை யாவை ?
ஆ.1. சமூகம்
2. இலட்சியம்
4. இலக்கியமும் சமநோக்கும் என்ற கட்டுரையில், இலக்கியத்துக்கும் இலட்சியத்துக்குமிடையிலான தொடர்பை
வலியுறுத்துவதற்கு ஆசிரியர்,
(அ) சிலப்பதிகாரம்
இலக்கியங்களில் இலட்சியங்களையும் இலட்சியவாதிகளையும் கண்டுணர முடிகின்றது. இலட்சியம்
ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது. அத்தோடு அவ் இலட்சியம் சமநோக்குடையதாகவும்
இருத்தல் வேண்டும். இவற்றை இலக்கியங்கள் எமக்குப் போதிக்கின்றன. இவற்றின் மூலம் இலக்கிய
இன்பமும் பெற முடியும்.
அ. சிலப்பதிகாரத்தில்,
சிலப்பதிகாரம் இலக்கிய பாத்திரங்களுக்கிடையேயான சமநோக்கை விபரிக்கிறது.
கண்ணகி, பாண்டிமாதேவி ஆகியோர் இரு வேறு இலட்சியங்களைக் கொண்ட கதாமாந்தர்கள்.
பாண்டியன் இறந்த பின்பு உயிர் துறந்தவள் அவன் மனைவி பாண்டிமாதேவி. கணவனை இழந்ததால்
அவன்மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைப்பதற்காகத் தன் கோபத்தை வெளிப்படுத்தியவள் கண்ணகி.
"இருவரில் யார் சிறந்தவர்" என்ற சேரன் செங்குட்டுவனின் வினாவிற்கு "அத்திறம் நிற்க" எனச் சேரமாதேவி கூறிய விடையில் இருமகளிரது இலட்சியங்களும் சிறந்தவை என்பது புலப்படல்.
(ஆ) மகாபாரதம்
ஆகியவற்றைக் கையாண்ட முறையை விளக்குக.
ஆ. மகாபாரதத்தில்
மகாபாரதம் தனிமனித பாத்திரங்களின் இலட்சியங்களினூடாக சமநோக்கை வெளிப்படுத்துகின்றது.
உயிரினும் இனியதாக இலட்சியம் உள்ளது என்பது, அர்ச்சுனன் மானத்தை உயிரைவிட மேலானதாக
போற்றியுள்ளமையால் அறிய முடிகின்றது.
உயிரைத் துறந்தாவது மானத்தைக் காப்பதே மக்களுக்கு வரிசையும், குடிப்பிறப்பும், மரபும் என அர்ச்சுனன் கூற்றாக இது வெளிப்படுகிறது.
இலட்சியத்தின் பயனைத் தியாகம் செய்தவர்களையும் மகாபாரதம் குறிப்பிடுகிறது.
பிற உயிர்களைத் தம் உயிரில் கண்ட சமநெறிச் செல்வரான தருமர், அறத்தையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்ததோடு இலட்சியத்தின் பயனாக முத்தி உலகம் கிடைத்தும், புழுத்த நாய்க்கு உரிமையல்லாத முத்தி உலகம் தனக்கும் வேண்டாம் என மறுத்தார்.
கர்ணன் கவச குண்டலங்களை இந்திரனுக்கு வழங்கியதன் மூலமும் அவனது இலட்சியத்தின் தன்மை வெளிப்படுத்தப்படுகிறது எனக் கூறுதல்.
G.C.E.O/L-2017
01. (vii). "உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினுஞ்
செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும்"
(அ) இங்கு குறிப்பிடப்படும் உயிருடன் சென்ற ஒரு மகள் யார்?
(அ.) பாண்டிமா தேவி
(ஆ) செயிருடன் வந்த சேயிழை யார்?
(ஆ.) கண்ணகி
02. (v). நாம் இலக்கியங்களைப் படிக்கின்றோம். அங்கே என்ன காண்கின்றோம்? இலட்சியங்களைக் காண்கின்றோம்
இலட்சியங்களைக் கடைப்பிடித்தொழுகிய இலட்சியவாதிகளைக் காண்கின்றோம். எதிர்மறை முகத்தால்
இலட்சிய வாழ்வினை உயிர்பெறச் செய்த ஏனையோரையும் காண்கின்றோம். நிறைவுடைய கதாபாத்திரங்களும்
குறைவுடைய கதாபாத்திரங்களும் நம்மை இலட்சியமென்கின்ற குறிக்கோளை நோக்கிச் செலுத்துவதை நாம்
இலக்கியங்கள் வாயிலாக உணர்ந்து கொள்ளுகின்றோம். இந்த உணர்ச்சி நம்மிடையே பிறவாதபோது நாம்
இலக்கியங் கொண்டு இடர்ப்படுவோமேயன்றி, இன்பங் காண்பதில்லை. இலக்கியத் திறவுகோலை நாம் பெறுதல்
வேண்டும். பெற்றால் இன்பங் காண்போம்.
(அ) இங்கு இலட்சியவாதிகள் யார் என்று கட்டுரையாசிரியர் குறிப்பிடுகின்றார்?
(அ.) இலட்சியங்களைக் கடைப்பிடித்து ஒழுகுவோரை
(ஆ) இலக்கியத்தில் இன்பம் காண்பதற்கு யாது செய்ய வேண்டுமெனக் கட்டுரையாசிரியர் குறிப்பிடுகின்றார்?
(ஆ.) இலக்கியங்கள் உணர்த்தும் குறிக்கோளை உணர்ந்து அனுபவித்தல் வேண்டும்.
G.C.E.O/L-2016
01. (iv). "கதியிழக்கினுங் கட்டுரை யிழக்கிலோ மென்றான்
மதியிழந்துதன் வாயிழந் தருந்தவன் மறைந்தான்"
(அ) 'கட்டுரை' என்ற சொல் இங்கு எதனைக் குறிக்கிறது?
(அ) வாய்மை சத்தியம் | உண்மை
(ஆ) இதனைப் பாடிய புலவரின் பெயர் யாது?
(ஆ) வீரகவிராயர்/நல்லூர் வீர கவிராயர்
7. இலட்சியமும் சமநோக்கும் என்ற கட்டுரையின் அடிப்படையில்,
(அ) கண்ணகி
(அ) கண்ணகி
கண்ணகி தனது இலட்சியத்தின்படி வாழ்தல்.
தான்கொண்ட கொள்கையில் இருந்தும் மாறுபாடாது, கணவனுக்கு அரசன் அநீதி இழைத்த போது
அவளைக் குற்றமற்றவனாக நிரூபித்தல்.
அதன் மூலம் தனது இலட்சியத்தில் உயர்ந்து நிற்றல்.
(ஆ) சந்திரமதி
ஆகியோர் தத்தமது இலட்சியங்களை எவ்வாறு பேணி நடந்துகொண்டார்கள் என்பதை விளக்குக.
(ஆ) சந்திரமதி
சத்தியம் என்னும் தர்மத்தை இலட்சியமாகக் கொண்டு வாழ்தல்.
இடர்கள் பல நேர்கின்றபோதிலும் தனது இலட்சியத்தைக் கணவனுடன் இணைந்து கடைப்பிடித்தல்.
கதி (சொர்க்கம் / முத்தி ) இழக்கினும் கட்டுரை (வாய்மை) இழக்கிலோம் என்று தான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நின்று உயர்வு பெறுதல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக