G.C.E.O/L-2017,
தமிழ்மொழியும் இலக்கியமும்,
கடந்தகால வினாத்தாள்
பகுதி 111,
1. சுருக்கமான விடை தருக.
(i). "விதியை நோவர் தம் நண்பரைத் தூற்றுவர்
வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்."
(அ) இக்கூற்றைக் கூறியவர் யார்?
(அ.) பாரதியார் / சுப்பிரமணிய பாரதியார் / மகாகவி பாரதியார்
(ஆ) 'வெகுளி' என்பதன் பொருள் யாது?
(ஆ.) கோபம் / சினம் / சீற்றம் / முனிவு / காய்தல்
(ii). "ஏமிரோ வோரி என்பாள்"
"எந்துண்டி வஸ்தி என்பாள்"
(அ) இக்கூற்று இடம்பெறும் சிறுகதை யாது?
(அ.) கம்பியூட்டர்
(ஆ) யாருடைய கூற்றாக இது அமைகிறது?
(ஆ.) காளமேகப்புலவர் / காளமேகம்
(iii). "மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு."
(அ) மடைத்தலை என்பது யாது?
(அ.) வாய்க்கால் / நீரோடும் வாய்க்கால்
(ஆ) வாடியிருக்கும் கொக்கு யாருக்கு உவமையாகக் கூறப்படுகிறது?
(ஆ.) அடக்கமுடையவர்களுக்கு
(iv) "ஆடிக்குடத்தடையு மாடும்போதே இரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் ... "
(அ) இதில் கையாளப்பட்டுள்ள அணி யாது?
(அ.) சிலேடை
(ஆ) அந்த அணி மூலம் தொடர்புபடுத்தப்படுபவை எவை?
(ஆ.) பாம்பு, எள்
(v). "கிழங்கு கிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பெடுத்து வெம்புதினை யிடிப்போம்"
(அ) மேற்குறித்த செயல்களைச் செய்பவர்கள் யார்?
(அ.) குறத்தியர் / குறத்திப் பெண்கள்
(ஆ) இங்கு 'கிம்புரியின் கொம்பு' என்பது எதனைக் குறிக்கிறது?
(ஆ.) யானையின் பூணணியப்பட்ட தந்தத்தை / யானையின் தந்தத்தை
(vi). "வளர்ந்தருவி வெட்டும் இளந்தாரிமாரை
நாவூறு வாராமந் காரும் ஐயனாரே."
(அ) இப்பாடல் எத்தொழிலோடு தொடர்புபட்டது?
(அ.) அரிவி வெட்டும் தொழிலோடு / உழவுத் தொழிலோடு / அறுவடை செய்யும் தொழிலோடு
(ஆ) இப்பகுதியில் இடம்பெற்றுள்ள கிராமிய நம்பிக்கை யாது?
(ஆ.) நாவூறு தொடர்பான நம்பிக்கை / ஐயனார் தொடர்பான நம்பிக்கை (கடவுள் நம்பிக்கை)
(vii). "உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினுஞ்
செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும்"
(அ) இங்கு குறிப்பிடப்படும் உயிருடன் சென்ற ஒரு மகள் யார்?
(அ.) பாண்டிமா தேவி
(ஆ) செயிருடன் வந்த சேயிழை யார்?
(ஆ.) கண்ணகி
(viii). இப்போது சினிமா மொழி நமக்குப் பரிச்சயமில்லாத ஒன்றாக இருக்கிறது.
(அ) 'பரிச்சயம்' என்பதன் பொருள் யாது?
(அ.) பழக்கமானது / அறிமுகமானது / தெரிந்தது / தொடர்புள்ளது.
(ஆ) சினிமா மொழி என்பதில் மூன்று அம்சங்கள் உள்ளன. அவற்றுள் ஏதேனும் ஒன்றினைக் குறிப்பிடுக?
(ஆ). 1. காட்சிப்படிமம்
2. ஒலி
3. படத்தொகுப்பு (ஏதேனும் ஒன்று)
(ix). 'தத்தை விடு தூது' என்பது தி.த. கனகசுந்தரம்பிள்ளை இயற்றிய செய்யுளாகும்.
(அ) 'தத்தை' என்பதன் பொருள் யாது?
(அ.) கிளி
(ஆ) தத்தை விடு தூதினூடாக ஆசிரியர் யாருடைய விடுதலை பற்றிக் குறிப்பிடுகிறார் ?
(ஆ.) பெண் விடுதலை பற்றிக் குறிப்பிடுகின்றார்.
(x). "அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையோம் எம் குன்றும் பிறர் கொளார்."
(அ) இங்கு 'எந்தை' என்று குறிப்பிடப்படுபவர் யார்?
(அ.) பாரி மன்னன் / பாரி / அங்கவை சங்கவையின் தந்தை
(ஆ) இங்கு குறிப்பிடப்படும் குன்றின் பெயர் யாது?
(ஆ.) பறம்பு மலை / பறம்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக