கிருஷ்ணன் தூது சருக்கம் கடந்தகால வினாக்கள்
G.E.C O/L - 2024(2025)
01.
(vii) அரவு உயர்த்தோன் கொடுமையினும் முரசு
உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே" இக்கூற்று,
(அ) யாரால் கூறப்பட்டது?
(அ)
யாரால் - வீமனால்
(ஆ) எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது?
(ஆ)
தர்மன் மீண்டும் சமாதானத்தை வலியுறுத்தி கிருஷ்ணனைத் தூது போகும்படி கேட்ட சந்தர்ப்பத்தில் / சமாதானம் கேள்
/தூது செல்ல
02. (ii). வயிரம் எனும் சுடுநெருப்பை மிகமூட்டி
வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன
செயிர் அமரில் வெகுளி பொர சேர இரு
திறத்தேமும் சென்று மாள்வோம்
கயிரவமும் தாமரையும் கமழ்பழனக்
குருநாட்டில் கலந்து வாழ
உயிர் அனையாய் சந்துபட உரைத்தருள் என்றான்
அறத்தின் உருவம் போல்வான்.
(அ) பகைவளர்க்கின் இரு பக்கத்தாரும் அழிந்துபடுவர் என்பதை வெளிப்படுத்துவதற்கு கையாண்டுள்ள உவமை
அ) வயிரம் எனும் சுடு நெருப்பை......
தனித்தனி மூங்கில்கள் உரசிக் கொள்வதால் உண்டாகும் தீ. அக்காடு முழுவதையும் அழித்துவிடல்
(ஆ) 'சந்துபட உரைத்தருள்' என்ற தொடர் ஆகியவற்றை விளக்குக.
(ஆ)
சமாதானம் உண்டாக்கும் வகையில் உரைத்தல்.
G.C.E O/L-2023(2024)
01. (viii) "கோது இலான் இந்த மொழி கூறுதலும்
மாமாயன் கூறல் உற்றான்"
(அ) கோது இலான்
(ஆ) மாமாயன் எனக் குறிப்பிடப்படுபவர்கள் யாவர்?
(அ) தருமன் / யுதிஷ்டிரன்
(ஆ) கிருஷ்ணன் / கிருட்டிணன் / விஷ்ணு / திருமால்
05. கிருட்டினன் தூதுச் சருக்கத்தில்,
(அ) குருநாட்டின் வளம்
(ஆ) கிருட்டினன் பெருமை
என்பன வெளிப்படுமாற்றினை விளக்குக.
(அ) குருநாட்டின் வளம்
வயல்கள் நிறைந்த நாடு
வயல்களில் வரால்மீன்கள் உலாவித் திரிதல்
வயல்களில் ஆம்பல் மலர்களும் தாமரைகளும் மலர்தல் (கயிரவமும் தாமரையும் கமழ் பழனக் குருநாடு)
சோலைகள் நிறைந்திருத்தல்
வண்டுகள் மலர்களில் தேனுண்டு ரீங்காரம் செய்தல் (தாது ஊதி அளி முரலும்)
உழவர்களின் முற்றங்கள் தோறும் சங்குகள் ஊர்ந்து திரியும் நீர்வளம் (உழவர் முன்றில் தோறும் நந்து ஊரும் புனல் நாடு)
(ஆ) கிருட்டினன் பெருமை
அமரர் கோமான், எம்பிரான், மாமாயன், இழிவெல்லாம் தீர்த்தவன் என்று சிறப்பித்துக் கூறுதல்.
குவலயாபீடமென்ற யானையின் தந்தத்தை ஒடித்தவன் (சிந்தூரத் திலகநுதல் சிந்தூரத்தின் மருப்பொசித்த செங்கண்மால்)
சிவபிரானின் இரத்தல் தொழிலை முடிவுக்குக் கொண்டு வந்தவன் (கடவுள் கங்கை நீரமுடித்தான் இரவொழித்த.......
தேவர்களும் முனிவர்களும் வேதங்களும் போற்றும் திருவடிகளை உடையவன்
உலகமுழுவதையும் தனது தொப்புளில் இருந்து தோற்றுவித்தவன்.
தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமியை மணந்தவன்
துளசிமாலை அணிந்தவன்
கௌத்துப மணிமாலையை அணிந்தவன்
பாண்டவர்க்காய் தூது சென்றவன்.
G.C.E O/L-
2021(2022)
03.கிருட்டிணன் தூதுச் சருக்கத்தில்,
(அ) சமாதானத்தை வலியுறுத்தி தர்மனும்
(ஆ) போரை வலியுறுத்தி வீமனும்
முன்வைத்த கருத்துக்களைத் தெளிவுறுத்துக.
(அ) தர்மன்
போரை விட சமாதானமே சிறந்தது.
சினந்து போர் புரிந்தால் இரண்டு பக்கத்தினருக்கும் அழிவு நேரும்.
போரில் சான்றோரையும் உறவினரையும் கொன்று நிலம் முழுவதையும் நாமே தனித்து அரசாட்சி செய்வதைவிட, காட்டில் வாழ்தல் நன்று.
தூது உரைத்த பின்னர் நாட்டையும் அதிகாரங்களையும் தர மறுத்தால் போர் செய்து நாட்டைப் பெறுவது வசையாகாது.
. "குற்றம் பார்க்குங்கால் சுற்றம் இல்லை . ஒரு குலத்துப் பிறந்தோருடன் கூடி வாழும் வாழ்வே நன்மை பயக்கத்தக்கது.
நாடு காரணமாகப் போர் செய்தல் இரு திறத்தார்க்கும் பழியை ஏற்படுத்தும்.
நெருங்கிய உறவினர்கள் கூறும் பழிமொழிகளை அவமானமாகக் கருதத்தேவையில்லை.
சாம, பேத, தானம் என்பவற்றின் பின்பே போர் பற்றி சிந்திக்க வேண்டும்.
(ஆ) வீமன்
வனவாசத்திலும் அஞ்ஞாத வாசத்திலும் பல ஆண்டுகள் பெருந்துன்பங்களையும் அனுபவித்து வாழ்ந்த பின்பும் தருமன் போருக்குப் பின்வாங்குகிறான்.
தருமனின் அருளுக்கு அஞ்சுகின்றேன்.
துரியோதனனை விண்ணுலகிற்கு அனுப்பி அரசுச்செல்வம் முழுவதையும் தர்மனுக்குப் பெற்றுத் தருவேன்.
தருமன் போரை முடிக்கவில்லை, பாஞ்சாலியினதும் தம்பிமாரினதும் சபதங்களை முடிக்க வழிசெய்யவில்லை.
போரில் துரியோதனனையும் அவனுக்குத் துணையாக வரும் அரசர்களையும் வென்று நாட்டை ஆளத் துணியாது, தூது அனுப்பி, யாசித்து நாட்டைப் பெற்று உயிர் வாழ்வதற்கே தர்மன் துணிந்துள்ளான். இது நாம் முன்புபட்ட துன்பங்களைவிடக் கொடியது.
திரௌபதையின் சபதமும் என் சபதமும் தவறாத வண்ணம் என்னைத் தூதாக அனுப்புவாயாக.
G.C.E O/L-
2020
01. (ix) "வயிரம் எனும்
சுடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன
செயிர் அமரில் வெகுளிபொர சேர இரு திறத்தேமும் சென்று மாள்வோம்."
(அ) இங்கு
'வரை' எனப்படுவது யாது?
அ) வரை - மூங்கில் / மூங்கில் காடு
(ஆ) 'இருதிறத்தேமும்' எனச் சுட்டப்படும் இரு பகுதியினரும் யாவர்?
(ஆ)
பாண்டவர், கௌரவர் /ஐவர்,
நூற்றுவர் / துரியோதனன் ஆகியோர், தர்மன் ஆகியோர்.
G.C.E.O/L
2019
01. (x) "முந்து ஊர் வெம் பணிக்கொடியோன் மூதூரில்"
(அ) இங்கு
'பணிக்கொடி' என்பது எதனைக் குறிக்கிறது?
(அ)
பாம்புக் கொடி
/அரவக் கொடி
/சர்ப்பக் கொடி
/ பாம்பு
(ஆ) இங்கு 'மூதூர்' எனக் குறிப்பிடப்படுவது யாது?
(ஆ) அஸ்தினாபுரம் / குருநாடு
03. கிருட்டிணன் தூதுச் சருக்கத்தில்,
(அ ) தருமன்
(ஆ) வீமன்
ஆகியோர் போர் பற்றிக் கொண்டுள்ள அபிப்பிராயங்களை விளக்குக.
(அ) தர்மன்
போரை விட சமாதானமே சிறந்தது.
சினந்து போர் புரிந்தால் இரண்டு பக்கத்தினருக்கும் அழிவு நேரும்.
போரில் சான்றோரையும் உறவினரையும் கொன்று நிலம் முழுவதையும் நாமே தனித்து அரசாட்சி செய்வதைவிட, காட்டில் வாழ்தல் நன்று.
தூது உரைத்த பின்னர் நாட்டையும் அதிகாரங்களையும் தர மறுத்தால் போர் செய்து நாட்டைப் பெறுவது வசையாகாது.
. "குற்றம் பார்க்குங் கால் சுற்றம் இல்லை . ஒரு குலத்துப் பிறந்தோருடன் கூடி வாழும் வாழ்வே நன்மை பயக்கத்தக்கது.
நாடு காரணமாகப் போர் செய்தல் இரு திறத்தார்க்கும் பழியை ஏற்படுத்தும்.
நெருங்கிய உறவினர்கள் கூறும் பழிமொழிகளை அவமானமாகக் கருதத்தேவையில்லை.
சாம, பேத, தானம் என்பவற்றின் பின்பே போர் பற்றி சிந்திக்க வேண்டும்.
(ஆ) வீமன்
வனவாசத்திலும் அஞ்ஞாத வாசத்திலும் பல ஆண்டுகள் பெருந்துன்பங்களையும் அனுபவித்து வாழ்ந்த பின்பும் தருமன் போருக்குப் பின்வாங்குகிறான்.
தருமனின் அருளுக்கு அஞ்சுகின்றேன்.
துரியோதனனை விண்ணுலகிற்கு அனுப்பி அரசுச்செல்வம் முழுவதையும் தர்மனுக்குப் பெற்றுத் தருவேன்.
தருமன் போரை முடிக்கவில்லை, பாஞ்சாலியினதும் தம்பிமாரினதும் சபதங்களை முடிக்க வழிசெய்யவில்லை.
போரில் துரியோதனனையும் அவனுக்குத் துணையாக வரும் அரசர்களையும் வென்று நாட்டை ஆளத் துணியாது, தூது அனுப்பி, யாசித்து நாட்டைப் பெற்று உயிர் வாழ்வதற்கே தர்மன் துணிந்துள்ளான். இது நாம் முன்புபட்ட துன்பங்களைவிடக் கொடியது.
திரௌபதையின் சபதமும் என் சபதமும் தவறாத வண்ணம் என்னைத் தூதாக அனுப்புவாயாக.
G.C.E O/L-
2017
03. கிருட்டிணன்தூதுச் சருக்கத்தில்,
(அ) தருமனுடைய பொறுமையும்
(ஆ) வீமனின் ஆவேசமும் வெளிப்படுமாற்றினை விவரிக்குக.
(அ) கிருட்டினன் தூதுச் சுருக்கத்தில் தர்மனின் பொறுமை
போரை விரும்பாது பொறுமை காத்த தருமன் கிருஷ்ணரைத் தூது செல்லுமாறு வேண்டுகின்றான்.
சினத்துடன் போர் புரிந்தால் இரண்டு பக்கத்தினரும் இறந்து விடுவோம் சேர்ந்து வாழ சமாதானம் உண்டாகத் தூது செல்வாயாக எனல்.
போரில் தங்கள் குரவர்கள், உறவினர்கள், தம்பியர்கள் ஆகியோரைக் கொன்ற பின் ஆட்சியைப் பெறுவதிலும் பார்க்கக் காட்டில் வாழ்தல் நன்று எனல்.
தூது உரைத்த பின்னர் நாட்டின் பாகத்தையும் அதிகாரங்களையும் தர மறுத்தால் தான் போர் புரிந்து நாட்டைப் பெறுவது வசையாகாது எனல்.
பாதிநாடு, ஐந்து ஊர்கள், ஐந்து இல்லங்கள் எனக் கேட்டு அவற்றைத் தர மறுத்தால் போர் என எவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்க முடியுமோ அவ்வளவு தூரம் விட்டுக் கொடுத்தல்.
ஆத்திரத்துடன் தன்னை அவதூறாகப் பழித்துப் பேசிய தம்பி வீமனை அமைதிப்படுத்தி, அவனது வீரத்தைப் புகழ்ந்து, "குற்றம் பார்க்குங்கால் சுற்றம் இல்லை" எனக் கூறி, "ஒரு குலத்துப் பிறந்தோர் உடன் வாழும் வாழ்வே உறுதியானது. அது இன்றேல் வசை ஏற்படும் எனல்.
அன்று சபையில் அறியாமை காரணமாகத் துரியோதனன் முதலியோர் கூறிய சொற்கள் தமக்கு அவமானமன்று, அவமானம் பிறரால் உண்டாவது ; தமரால் உண்டாவது அவமானமாகாது (தன் கை தனது கண்களில் படுதல் குற்றமன்று) எனல்.
போர்த்தொழில், மன்னர்களுக்குரிய இறுதி உபாயமே என உரைத்தல்.
(ஆ) வீமனின் ஆவேசமும்
துரியோதனனிடம் தூது சென்று சமாதானம் பேசுமாறு தருமன், கண்ணனைக் கேட்டதை மிகவும் வெறுத்துப் பேசியவன்.
வெஞ்சினம் மனத்தில் மூளமூள, நாவின உரை குளற விரைவாக எழுந்து வார்த்தைகளைக் கடுமையாகக் கூறுகிறான் என்ற கவிஞர் கூற்றின் மூலம் ஆவேசம் புலப்படல்.
தனது அண்ணனையே மானம் இல்லாதவன் என்று கூறுதல்.
கௌரவர் சபையில் திரௌபதியைத் துச்சாதனன் துகிலுரித்த போது எம்மை அமைதி கொள்ளுமாறு கூறியதன் மூலம் குல மரபுக்கும் நமக்கு தீராப்பழியை ஏற்படுத்தியவன் என அண்ணனையே குற்றம் சாட்டுதல்.
துரியோதனின் கொடுமையிலும் தருமனின் அருளுக்காக அஞ்சுவதாகக் கூறி அண்ணனைக் கடிதல்.
துரியோதனன் உயிரைப் போரில் கவர்ந்து விண்ணுலகு அனுப்புவதுடன், நாட்டை மீட்டுத் தருமருக்குத் தருவதாக ஆவேசமாகக் கூறுதல்.
வீரனாகிய நான் வீரமற்ற தருமனுக்குத் தம்பியாகப் பிறப்பது தகுதியோ எனச் சினமடைதல்.
போரில் துரியோதனனையும் அவனுக்கு துணைவரும் அரசர்களினையும் வென்று நாட்டை ஆளாமல் இருந்து தூது செல்லுமாறு கேட்பது நாம் முன்பு பட்ட துன்பங்களையே மிஞ்சியது எனல்.
திரௌபதியினதும் தன்னுடையதும் சபதங்கள் நிறைவேறத் துரியோதனிடத்தில் தான் தூது செல்கிறேன் என்று ஆத்திரப்படல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக