22.11.25

G.C.E. O/L- 2023(2024), தமிழ்மொழியும் இலக்கியமும், பகுதி 111

கல்விப்பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2023(2024)

தமிழ் மொழியும் இலக்கியமும் - III

01. சுருக்கமான விடை தருக.

(1) "மடைத் தலையில் ஓடுமீன் ஓட
உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு"
(
) மடைத்தலை
(
) உறுமீன் என்பவற்றின் பொருளைத் தருக.

() வாய்க்கால், நீரோடும் வாய்க்கால் / சிறிய நீரோடை

(ஆ). பெரியமீன், ஏற்றமீன் / பொருத்தமான மீன்

(11) "பொய்மைசேர்

மதியினிற்புலை நாத்திகங் கூறுவர்"

(
) நாத்திகம் என்றால் என்ன?

(
) அதில் ஆசிரியருக்குள்ள வெறுப்பு எவ்வாறு வெளிப்படுகிறது?

() கடவுள் மறுப்புக்கொள்கை / கடவுள் இல்லை என்று கூறுதல்

() பொய்மை சேர்ந்தது. கீழானது (புலை) என்னும் அடைமொழிகள் மூலம், புலைநாத்திகம். பொய்மை சேர் புலை நாத்திகம்

(iii). ) "தோன்றல் துயர்க்கடலின் ஏக" இங்கு,

(
) தோன்றல் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?

(
) இதில் இடம்பெற்றுள்ள அணியை இனங்காண்க?

() பரதன்

() உருவக அணி துயர்க்கடல் / உருவகம்

(iv). "கன்றுபிரி காராவின் றுயருடைய கொடி"

(
) கொடி எனக் குறிப்பிடப்படுபவள் யார்?

(
) அவளுடைய துயரம் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது?

() கோசலை

() கன்றைப் பிரிந்த பசுபோல என்ற உவமை மூலம்

(v). "என்னத்துக்கு இந்த வண்டிலுக்கு குடிலப் போல ஓல கட்டினிங்க"

இக் கூற்று,

(
) யாரால்

(
) யாருக்குக் கூறப்பட்டது?

() காசிமால்

() மூத்தவாப்பாவுக்கு

(vi). "பொய்கை ஊரன் கேண்மை

செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே"

(
) கேண்மை என்பதன் பொருள் யாது?

(
) 'வளைகள் செறிந்தன' என்பதனால் வெளிப்படுத்தப்படுவது யாது?

(). காதல் / நட்பு/உறவு

() மகிழ்ச்சி / பூரிப்பு / சந்தோசம் / உவகை / களிப்பு

(vii). "நெஞ்சகத்தை நிறைத்திருக்கும் நிர்மலமாம் வானில் நிறைமதிதன் துணைவியர்கள் சூழவரும் கோலம்"

(
) 'நிர்மலமாம் வான்' என்பதனால் உணர்த்தப்படுவது யாது?

(
) நிறைமதிதன் துணைவியர்கள் எனப்படுவன யாவை?

() வானத்தின் களங்கமற்ற தன்மை / தெளிவான வானம்/தூய்மையான

() நட்சத்திரங்கள் / உடுக்கள் / தாரகைகள் / விண்மீன்

(viii). "கோது இலான் இந்த மொழி கூறுதலும்

மாமாயன் கூறல் உற்றான்"

(
) கோது இலான்

(
) மாமாயன்

எனக் குறிப்பிடப்படுபவர்கள் யாவர்?

() தருமன் / யுதிஷ்டிரன்

() கிருஷ்ணன்/கிருட்டிணன் / விஷ்ணு / திருமால்

(ix). "வெம்புலிவாய் மானென்ன வீணே கொடுத்திடுவார் செம்பொற் றிரளுடனே"

(
) இங்கு கையாளப்பட்டுள்ள அணி யாது?

(
) 'செம்பொற்றிரள்' என மறைமுகமாகக் குறிப்பிடப்படுவது யாது?

() உவமை

() சீதனம் /சீரவரிசை

(x). () 'கூனலிளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்'

எனக் குறிப்பிடப்படுபவர் யார்?

(
) 'கூனல் இளம்பிறை' என்பதை விளக்குக.

() சிவன் / குற்றாலநாதர்

(
) வளைந்த இளம்பிறை

 

 

மேழி / கலப்பை
() 'ஏர் தழைக்க வேணும்' என்ற தொடரால் உணர்த்தப்படுவது யாது?
விவசாயம் / வேளாண்மை சிறக்க வேண்டும் / உழவுத்தொழிலின் சிறப்பு / கமம்

(02 10 = 20 புள்ளிகள் )


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக