18.11.25

புத்தகசாலை வினாவிடை

புத்தகசாலை வினாவிடை

 

01. புத்தகசாலை என்ற கவிதையை எழுதியவர் யார்? இவர் எங்கு பிறந்தார்? இவரது காலம் யாது?

பாரதிதாசன்

தென்னிந்தியாவின் பாண்டிச்சேரி, 1891-1964

 

02. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன? அவரின் புனைபெயருக்கான காரணம் யாது?

கனக சுப்புரத்தினம்

பாரதியின் மீது கொண்ட ஈடுபாடு

 

03. பாரதிதாசன் வகித்த பதவிகள் யாவை? இவர் எக்கொள்கை சார்ந்து இயங்கினார்?

ஆசிரியர், சட்டமன்ற உறுப்பினர்

திராவிடக் கொள்கை

 

04. பாரதிதாசனின் படைப்புக்கள் சிலவற்றைக் குறிப்பிடுக?

வீரத்தாய்

அழகின் சிரிப்பு

போர் மறவன்

பாண்டியன் பரிசு

இருண்ட வீடு

 

05. புத்தகசாலை என்பது எதைக் குறிக்கிறது?

நூல் நிலையத்தை

 

06. புத்தகசாலை கவிதையின் மையக் கருத்து என்ன?

நூலகத்தின் மீதான ஈர்ப்பும், அது ஏற்படுத்தும் தாக்கமும்

 

07. புத்தகசாலையின் இடத்தை இன்று பெற்றிருப்பது எது?

இணையம்

 

08. அச்சியந்திரத்தின் வருகையால் ஏற்பட்ட மாற்றம் யாது?

செல்வந்தர்களிடமும் குறிப்பிட்ட சிலரிடமும் ஓலைச் சுவடிகளில் முடங்கியிருந்த கலை, இலக்கியம், அறிவியல் அனைத்தும் அச்சியந்திரத்தின் வருகையுடனேயே பதிப்பிக்கப்பட்டு நூல்களாக பல்கிப் பெருகின.

 

09. புத்தக வாசிப்பில் மூழ்கியபோது கவிஞர் எவற்றைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார்?

இனித்த புவி இயற்கை அழகைக் காணுதல்

இசைகேட்டல், மணம்மோருதல், சுவைகள் உண்ணல் (வாசிப்பினூடாக மேற்கண்ட அனுபவங்களைப் பெறல்)

மனிதரிலே மிக உயர்ந்த கவிஞர்களின் ஒளி மிகுந்த உள்ளத்தோடு கவிஞரது உள்ளமும் கலத்தல்

புத்துணர்வு பிறத்தல்

 

10. புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும் என்று கவிஞர் கூறுவதற்கான காரணங்கள் எவையெனக் குறிப்பிடுக?

மனிதர்களெல்லாம் அன்பு நெறி காண்பதற்கு

உயர்ந்த மனோபாவம் வானைப்போல விரிவடைவதற்கு

தனிதமனித தத்துவமான இருளைப் போக்குதற்கு

சசு மக்கள் ஒன்றென்று உணர்வதற்கு

இனிது இனிதாக எழுந்த உயர்ந்த எண்ணங்களெல்லாம் தோன்றுவதற்கு

புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வாழ்வதற்கு

 

11. கவிஞர் காணவிழையும் நூலகம் எத்தன்மையானது என்பதை விளக்குக?

தமிழர்க்கு தமிழ்மொழியில் சுவடிச்சாலை (ஆவணக் காப்பகம்) பல்கலைக் கழகத்தைப் போல எங்கும் வேண்டும்.

தமிழில் இல்லாத பிறமொழி நூல் அனைத்தும் நூலகத்தில தமிழாக்கித் தரப்பட்டு வாசிக்கக் கிடைக்க வேண்டும்.

அமுதம் போன்ற செந்தமிழில் கவிதை நூலகளும், அழகிய முறையில அமைந்த உரைநடை நூல்களும் அதிகமாகச் சேகரிக்கப்பட்டு பல திறத்தினதாய் துறைதுறையாக பிரித்து அடுக்கி வைக்கப்படல வேண்டும்.

நாலைந்து வீதிகளுக்கு ஒன்று வீதம் நல்ல வசதி படைத்த நூலகம் வேண்டும்.

நூல்களெல்லாம்முறையாக அமைந்து நொடிக்கு நொடி ஆசிரியராய உதவுகின்ற அழகிய செய்தித்தாள்களும் குவிந்திருக்க வேண்டும்

மூலையில் ஓர் சிறுநூலும் புது நூலாயின் அதை தலைமேற் சுமந்து வந்து தருதல் வேண்டும்.

 

12. நூலகத்திற்கு வருவோர்க்கு எத்தகைய தொண்டு செய்ய வேண்டுமென கவிஞர் குறிப்பிடுகின்றார்?

வாசிக்க வருபவர்களின் வருகையை ஏற்க வேண்டும்

மரியாதை காட்டி, அவர்களுக்கு இருக்கை தர வேண்டும்

அவர்கள் விரும்பிய நூல்கள் தரவேண்டும்

புதிய நூல்கள் வேண்டின் அதை பெற்றுத்தர வேண்டும்

தினமும் நூல்களை நேசித்து வருபவர்கள் பெருகும் வண்ணம் எண்ணத்தாலும், செயலாலும், உடலாலும் குற்றமற்ற தொண்டு இழைக்க வேண்டும்.

 

13. பின்வரும் அடிகளின் இலக்கியச் சிறப்பை விளக்குக?

 

(1) "மனிதரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின் மகாசோதியில் கலந்த தெனது நெஞ்சம்"

மனிதர்களிலே உயர்ந்தவர் கவிஞர். அவர்தம் கவிதையை வாசிக்கும்போது வாசிப்பவரின் நெஞ்சும் அவ்வுயர்ந்த நிலையை அடையும், அத்தன்மையை பேரொளியில் (மகாசோதியில்) கலத்தல் என்று கூறுவது நயக்கத் தக்கது.

 

(2) "அமுதம்போல் செந்தமிழிற் கவிதை நூற்கள்"

செந்தமிழில் வெளிவருகின்ற கவிதை நூற்களின் சிறப்பு ஓர் உவமையினூடாக கூறப்படுகின்றது. செந்தமிழ் கவிதை நூலகள் அமுதத்திற்கு ஒப்பிடப்படுகிறது.

 

(3) "மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கி"

மனோபாவம் வானின் விரிந்த தன்மைக்கு ஒப்பிடப்பட்டு தனிமனித தத்துவம் இருளுக்கு உருவகிக்கப்பட்டுள்ளது. புத்தகம் வாசிக்கப்படும்போது மனோபாவம் வான்போல விரிவடைவதும், தனிமனித தத்துவம் இருளைப் போல அகல்வதும் சிறப்பாகும்.

 

(4) "மாசற்ற தொண்டிழைப்பீர்! சமுதாயச் சீர் மறுமலர்ச்சி கண்டதென முழக்கஞ் செய்வீர்

நூலகத் தொண்டின் சிறப்பு கூறப்படுகிறது. இது குற்றமற்ற தொண்டு என்றும், இதனால் சமுதாயம் மறுமலர்ச்சி காணு மெனவும் கூறி முழக்கம் செய்ய அழைப்பு விடுத்தல் நயக்கத் தக்கதாகும்.

 

14. இக்கவிதை வெளிப்பாட்டு முறையிலுள்ள சிறப்புக்களைக் கூறுக?

எளிய சொற்கள்

உணர்வு பூர்வமான நடை

எதுகை மோனை, உவமை, உருவக அணிப்பயன்பாடுகள்

வாசகரை முன்னிலையில் விளித்துக் கூறல்

வாசிக்கும் ஆர்வத்தை தூண்டல்

சிறந்த ஓசைப்பாங்கு

 

15. பின்வரும் சொற்களின் கருத்தினைத் தருக?

மகாசோதி - பேரொளி

யாண்டும் - எல்லாவிடத்திலும்

வாக்கு - சொல்

தொண்டு - சேவை

இருக்கை - ஆசனம்

சர்வகலாசாலை - பல்கலைக்கழகம்

முடி - தலை

கோலமுறும் செய்தித்தாள் - விதவிதமான பத்திரிகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக