வஞ்சியர் காண்டம்
1. இந்நாடக ஆசிரியர் யார்?
இந்நாடகத்தின் பிரதியாக்கம் பிரளயன்
இயக்கம் பேராசிரியர் ராஜு
2. கண்ணகியின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டிருக்குமாற்றினை விளக்குக?
குணகடல் செல்வி
குடவாயில் கோட்டத்து தெய்வமாய் ஆயினாள்
முடியுடைச்சேரனும் குடிகளைக்கூடடி நானிலம் அறியவே நடுகல்லும் நாட்டினான்
ஒருமுலை பியத்தெறிந்து ஊனமாய் நின்று திருநகர் தீயிட்ட தேவி
அரசதிகாரத்தின் அநீதி சிதற சிலம்பறைந்து முழங்கிய கோதை.
சிலம்பின் வென்ற செயிழை
கொங்கையாற் கூடற்பதி சிதைத்தவளவள்
கோவேந்தரை செஞ்சிலம்பால் வென்றவள்
கொங்கச்செல்வி எடமலையாட்டி தென்தமிழ்ப்பாவை, செய்தவக்கொழுந்து
ஒரு மாமணியாய் உலகில் தோன்றிய திருமாமணி
3. சிலம்பு கண்ணகி அணியப்பெற்றதும் பின்னர் சுழற்றப் பெற்றதும்.
கண்ணகியிடம் மாநாய்க்கன் மகனே எனக்குப்பிடித்ததை வாங்கி வந்துள்ளேன். ஏற்றுக்கொள்வாயா என்று கேட்க நிச்சயம் ஏற்றுக்கொள்வேன் என்று கூறினாள். மாநாய்க்கன் தன் கையில் உள்ளபெட்டியைத் திறந்து இரண்டு பொற்சிலம்புகளை காவற் பெண்டிடம் கொடுத்து இச்சிலம்புகளை கண்ணகிக்கு அணிவியுங்கள். இது பொன்வினைஞர் பலர் பல மாதங்களாக கூடிச் செய்த பொற்சிலம்புகள் கவனத்தொடு பெறப்பட்ட மாணிக்கப் பரல்களால் ஆனவை,
மூவேந்தர் தமது அரசியர்களிடம் கூட இத்தசைய சிலம்புகள் இருக்கமுடியாது? நான் என் மகளுக்கு அளிக்கும் அன்புப் பரிசுகள் இவை என்றான் பெண்கள் குரவையிட காவற்பெண்டு கண்ணகியின் கால்களில் சிலம்புகளை அணிவிக்கின்றாள்.
பின்னர் திருமண நாளும் வர கண்ணகி மணவாழ்வு புகுந்தாள். கண்ணகியை மணம் முடித்த மாசத்துவனின் மகன் கோவலன் ஓரிரு ஆண்டுகளில் அவளை விட்டுப் பிரிந்து போனான். கண்ணகியின் துயர் முகத்தினைக்காண எவருக்கும் துணிவில்லை. பின்னர் காவற்பெண்டு, சிலம்பை அணித்த நானே அவள் காலிலிருந்து சிலம்பைக் கழறறினேனே சிலம்பணிந்த கால்களை மீண்டும் காணவேயில்லை என்றாள்.
4. சமணத்துறவிகளைக் கண்டதும் கண்ணகி பதட்டத்துடன் உள்ளே
ஓடியதற்கு காவற்பெண்டு கூறியது யாது?
அறவோரை வணங்குகின்றோம். இல்லத் தலைவன் இல்லில் இல்லை. உங்களுக்கு விருந்தோம்பும் பாக்கியத்தை இழந்து நிற்கும் எங்களுக்கு தயைகூர்ந்து அருள்புரியவேண்டும் என்றாள்.
5. உள்ளே
ஓடிய கண்ணகிக்கு காவற்பெண்டு யாது கூறினாள்?
அறவோர்க்கு அளித்தலை, அந்தணரைப் போற்றுதலை துறவர் ஒழுக்கமாய் ஏற்றவளதான் நீ அறவோரைக் கண்டால் இனி ஓடிஒளியத் தேவையில்லை கோவலன நாளை நிச்சயம் வரத்தான் போகிறான்,. கவலையின்றி நீ கடமையாற்றத்தான் போகிறாய் மறவாதே மகளே இந்திலை மாறும் என்று கூறினாள்
6. காவற்
பெண்டுவின் காதல்
நினைவுகளும் அக்காதவனின் மரணமும் எடுத்துரைக்கப் பட்டிருக்குமாற்றினை விளக்குக?
பாறைக்குள் ஒளிந்திருக்கும் சுனை நீரின் ஊற்றைப்போல் அக்காதல் நினைவுகள் இன்றும் என ஆழ்மனத்துள் சுரந்து கொண்டுதான் இருக்கின்றன
என் மூதாதையர் நாக நாட்டைச் சேர்ந்தவர்கள் போரில் வெல்லப்பட்ட அவர்கள் வேள்விக் குடியென்னும் பாண்டிய நாட்டு கிராமத்திற்கு அடிமைகளாய் விற்கப்பட்டனர். எண்பாட்டன் கொத்தடிமைகளாய் இருந்த அவர்களை விடுவித்தான். அதில் சிலர் மதுரைக்குப் புலம்பெயர்ந்தனர். அதில் எண்பாட்டன் கோல்காரணானான். என் மூதாய் சமையற்காரியானாள்.
மழைக்காலம் மதுரையில் இருப்போம் மற்றைய காலங்களில் பெருநிலப் பயணம்தான். அப்படியான ஒரு பயண வழியில்தான் நான் பிறந்தேன். என் சமையலில் மயங்கிய ஒருவன் என் பின்னே சுற்றித் திரிந்தான். நாம் இருவரும் ஈருடல் ஒருயிராய் வாழ்ந்தோம். ஓர் இரவில் கள்வர் கூட்டம் எம்மைத் தாக்கியது. அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததால் நாங்கள் பெரும் இழப்பைச் சந்தித்தோம். மார்பிலே வேல் பாய்ந்த என் கணவன் என் மடியிலே தன்னுயிரை நீத்தான் என்று கூறினாள்.
7. காவற்பெண்டு தனது அடிமைத் தனத்தினை கண்ணகியிடம் எவ்வாறு எடுத்துரைத்தாள்?
மகளே உன் தாய் உன்னைக் கருவுற்றாள். அதை அறிந்ததும் நானும் கருவுற்றேன். ஏன் தெரியுமா? நான் உனக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டுமென்பதற்காக. இனி நீ கருவுற்றால் உன் அடித்தோழி என் மகள் நாகமணியும் கருவுற வேண்டியிருக்கும். உன் பிள்ளைக்கு பால் கொடுப்பதற்காக. நாங்கள் எங்களுக்காக வாழமுடியாதவர்கள் உங்களுக்காக வாழுகின்ற அடிமைகள் அதற்காக காதலையும் பிரிவையும் அறியாதவள் என்று நினைத்து விடாதே. மகளே உன் தந்தைக்கும் அவரது விருந்தினருக்கும் கூட விருந்தாய் இருந்திருக்கின்றேன் என்று தனது நிலையை எடுத்துரைத்தாள்..
8. சொகுசோடு வாழ்ந்த உன்னை
இச்சிறுகுடில் தவிக்க விட்டேனே பெரும் தவறு செய்தேன் என கோவலன் கூற அதற்கு கண்ணகி யாது கூறினாள்?
கவலையை விடுங்கள்! நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள் அதுபோதும் எனக்கு சுற்றம் சூழ்திருந்தாலும் ற்றேவல் புரிய நூறுபேர் காத்திருந்தாலும் நீங்கள் அங்கில்லாதபோது நான் தனிமையில் விடப்பட்டவளாகத்தான உணர்ந்தேன் புதுவாழ்வு தொடங்குவோம். கடந்ததை மறந்து விடுங்கள். நாம் இணைந்திருக்கின்றோம். இனிவரும் நாட்களை நம்வசப்படுத்துவோம் என்று கூறினாள்.
9. கோவலன் கண்ணகியிடம் ஒற்றைச் சிலம்பைக் கேட்டதேன்?
கோவலன் கண்ணகியிடம் ஒன்று மட்டும் போதும் நான் பொருள் ஈட்டியதும் இதைப் போன்ற சிலம்பை உனக்கு செய்து தருவேன் அப்போது எதைப் பார்த்து நகல் செய்வது? ஆதலால் ஒன்றை மட்டும் தா என்றான்.
10. ஐயை கண்ணகியிடம் கேட்ட
கேள்விகளும் கண்ணகி கூறிய
பதில்களும்
ஐயை - மாதவி உங்களை விட அழகானவளா?
கண்ணகி - நான் அவளை நேரில் கண்டதில்லை. மற்றவர் சொல்லி அறிந்திருக்கின்றேன். புகார் நகரின் மிகச்சிறந்த நடனமணி என்றும் பேரழகியென்றும்
ஐயை - உங்களை விடவா அழகி?
கண்ணகி - எனக்கு விடை தெரியாத கேள்வி இது நான் என்ன பதில் சொல்லமுடியும்.
ஐயை - மாதவியிடம் எதைக்கண்டு உங்கள் கோவலனார் மயங்கினார்.
கண்ணகி - இனனொரு பெண்ணிடம் மயங்க ஆண்களுக்கு காரணம் ஏதும் தேவையா என்ன?
ஐயை - உங்களிடமிருந்து கோவலனைப் பறித்துக் கொண்டாளே, அதற்காக அவள்மீது சினம் கொண்டதுண்டா?
கண்ணகி - அவர்தான் எனக்கு திரும்பக் கிடைத்துவிட்டாரே. இப்போது எதற்கடி பழைய கதையெல்லாம்?
ஐயை - மாதவியிடம் கோவலன் கொண்ட மையல் உங்களை தாழ்வுணர்ச்சி கொள்ளச் செய்யவில்லையா? உங்கள் உள்ளத்தில் பொறாமைக் கனலைத் தூண்டி விடவில்லையா?
கண்ணகி - சிறிய பெண் போலவா பேசுகிறாய் நீ? எதற்கடி இந்தக் கேள்வியெல்லாம்.
11. மாதவியிடம் கோவலன் கொண்ட
மையல் உங்களை தாழ்வுணர்ச்சி கொள்ளச்செய்யவில்லையா? உங்கள் உள்ளத்தில் பொறாமைக் கனலைத் தூண்டிவிடவில்லையா? என்று
கேட்டதற்கு சுண்ணகி கூறியவை யாவை?
ஒரு பெண்ணுக்கு மிகப் பெரிய தாழ்வு எது தெரியுமா? ஓர் ஆணுக்காக இன்னொரு பெண்ணோடு போட்டியிடுவதுதான். அத்தாழ்வு நிலைக்கு நான் என்றும் சென்றதில்லை; மாதவியிடம் நான் பொறாமை கொண்டதில்லை, அவளிடம் உள்ள திறன்கள் பலவும் என்னிடம் இல்லை என்பதை அறிய நேர்கிறபோ அவள்மீது கொண்ட மதிப்பு மேலும் உயர்ந்தது. உனக்கு தெரியுமா? புகாரிலிருந்து மதுரைக்கு வந்தி கொண்டிருந்தபோது இடைவழியில் ஓர் நாள் கோசிகன் என்னும் பார்ப்பான் மாதவியிடம் இருந்த மடலொன்று கொண்டு வந்தான். சிறிது நேரத்தில் அம்மடலை அவன் வாசித்தான். மாதவியென்னும் மங்கை நல்லாளை அன்றுதான் நான் முழுமையாக அறிந்தேன். சொற்களைக் கொண்டு சரம் தொடுக்கத் தெரிந்த வித்தகி அவள்.
அம்மடலில் கள்வர்போல நள்ளிரவில் புகார்விட்டு நீங்கினீரே இதில் என் குற்றம் என்ன?
என்று கோவலனிடம் கேட்டிருந்தாள் அவள்.
தண்டனை பெறுகின்ற குற்றவாளிக்கு தான் செய்த குற்றம் என்னவென்று தெரிந்துவிடும். தெரியவில்லையெனில் தண்டிக்கும்போது அது அவனுக்குத் தெரிவிக்கப்படும். ஆனால் செய்க குற்றமென்ன என்று அறியாமல் தண்டனையை அனுபவிக்கின்றேன். இதில் என் குற்றமென்ன? என்ற கேட்டிருந்தாள் அவள்.
இப்படி ஒரு கேள்வியை கோவலனிடம் கேட்கவேண்டுமென நான் ஒருநாளும் நினைத்ததில்லை. அப்படிக் கேட்சு கோடி நியாயங்கள் எனக்குள் இருந்தபோதிலும் கேள்விகளே திரண்டதில்லை என் மனதில். இவ்வுண்மை எனக்குப் புலப்பட்டதும் என் மீதே வெறுப்புற்றேன். நான் என்னில் பெரியோரைக் கண்டு வியந்தவளுமில்லை. சிறியோரைக் கண்டு இகழ்ந்தவளுமில்லை இருந்தாலும் சொல்கிறேன் பெண்ணே! அவள் கணிகையர் குலத்தில் பிறந்தாலும் மாதவம் செய்த கவுந்தியடிகளைப்போல் மெத்தப் படித்தவள் என்று கூறினாள்.
மாணவர்களின் கவனத்திற்கு மேலே கண்ணகியால் கூறப்படும் விடைக்கான பகுதி பின்வரும் வினாக்களுக்கும் பொருந்தும்.
கண்ணகிக்கும் மாதவிக்கும் உள்ள வேறுபாடுகளாக அமைபவை எவை?
கண்ணகி மாதவியின் மீது கொண்டுள்ள மதிப்பு வெளிப்படுமாற்றினை விளக்குக.
12. நான் உங்களைப்போல் இருக்க ஆசைப்படுகிறேன் என்று
கூறிய ஐனமக்கு கண்ணசி கூறியவை யாவை?
அடி பாவிப்பெண்ணே! போயும் போயும் என்னைப் போலொரு அபலையாய் இருக்க ஆசைப்படுகிறாய். எந்தப் பெண்ணும் என்னைப்போல் இருந்துவிடக்கூடாதடி மாதவிபோல். கவுந்தி அடிகளைப்போல் மெத்தப் படித்தவளாக முயற்சி செய்.
அதுதான் உன் போன்ற பெண்களுக்கு நல்லது என்று கூறினாள்.
13. இந்த நாடகப் பிரதிமூலம் நாடக ஆசிரியர் கூறவிழைந்த கருத்துக்கள் யாவை?
வஞ்சியர்கள் வஞ்சிக்கப்பட்ட கொடுமைகள்.
பெண்கள் மீதான அடிமைத்தனங்கள்.
பெண்கள் மீதான அடக்கு முறைகள்.
அடிமைகளாக தம்மை உணர்ந்திருந்த பெண்கள்.
தம்மை அடிமை என உணராத பெண் அடிமைகள்.
கண்ணகியின் பெருமை
கண்ணகி மாதவி மீது கொண்ட மதிப்பு
மாதவியின் நியாயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக