1. எழுத்து என்றால் என்ன?

மொழிக்கு முதற்காரணமாகிய அணுத்திரளொலி எழுத்து எனப்படும்.
மொழி முதற் காரண மாமணுத் திரளொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே. (நன். 58)
எழுத்தானது முதல் எழுத்து, சார்பெழுத்து என இரு வகைப்படுகின்றது.
உயிர் எழுத்துகள் 12, மெய்யெழுத்துகள் 18 ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.
‘உயிரும் உடம்புமாம் முப்பதும் முதலே’ (நன் 59)
என்னும் நன்னூல் நூற்பா இதை விளக்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக