A/L, வேதங்கள்

வேதங்கள்


இந்து இலக்கியங்களுள் வேதம், ஆகமம் என்பன முதல் நூல்கள் எனவும் பிரமாண நூல்கள் எனவும் கொள்ளப்படுகின்றன. வேதம் என்ற சொல் ஷவித்என்னும் வினையடியிலிருந்து தோன்றியது. அது அறிவு என்னும் பொருள் தரும். அதனால் வேதங்களை அறிவு நூல் எனக் கொள்வர். வேதங்கள் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை என்பது மேலோர் மரபு.
வேதங்களை வகுத்தவர் அல்லது தொகுத்தவர் வியாசர். வியாசர் என்பது ஒரு காரணப்பெயர். அதற்குத் தொகுப்பாசிரியர் எனப் பொருள் கொள்வர்.வரலாற்று அடிப்படையில் வே இலக்கியங்கள் கி.மு. 1500 கி.பி. 600 வரையிலான காலப்பகுதியில் தோற்றம் பெற்றன எனக் கூறப்படுகின்றது. வேதங்களை எழுதாமறை, எழுதாக்கிளவி, சுருதி, மறை, அபௌருசேயம், சுயம்பு, ஆம்நயம் முதலான பல பெயர் கொண்டு அழைப்பர்.

வேதங்களின் வகை
ஆரம்பத்தில் வேதங்கள் "திரயீ வித்யா" என மூன்றாகச் சொல்லப்பட்டன. அவை இருக்கு, யசுர், சாமம் என்பன. பின்னர் வழக்கில் இருந்த அதர்வ வேதமும் இணைக்கப்பட்டு, நான்காகக் கூறப்பட்டன. வேதங்கள் நான்கு என்பதனால் அவை சதுர்மறை, சதுர்வேதம் என அழைக்கப்படுகின்றன. நால் வெதங்களுள் மிகவும் முக்கியத்துவம் பெறும் இருக்கு வேதம் 10 மண்டலங்களையும் 1028 சூக்தங்களையும் கொண்டுள்ளது. 101 சாகைகளைக் கொண்ட யசூர் வேதம் கிருஷ்ண யசூர். சுக்கில யசூர் எனும் இரு பிரிவுகளைக் கொண்டது. சாம வேதம் 1549 பாடல்களைக் கொண்டுள்ளதுடன் பூர்வ ஆர்சிகம், உத்தர ஆர்சிகம் என்னும் இரு பிரிவுகளையும் கொண்டுள்ளது. அதர்வண வேதம் 20 காண்டங்களையும், 731 சூக்தங்களையும், 6000 பாடல்களையும் கொண்டுள்ளது.
நான்கு வேதங்களும் இரண்டு காண்டங்களையும் நான்கு பகுதிகளையும் உடையன. சங்கிதை, பிராமணம், ஆரணியகம், உபநிடதம் என்பன நான்கு பகுதிகளாக உள்ளன. அவற்றுள் சங்கிதை என்பது மந்திரங்களின் தொகுப்பு. பிராமணம் என்பது வேள்விக் கிரியைகளுக்குரிய விதிகளைக் கூறுகின்றது. ஆரணியகம் என்பது வானப்பிரஸ்தனுக்குரிய சமய அனுட்டானங்களைக் கூறியுள்ளது. உபநிடதம் என்பது உண்மைப்பொருள் பற்றிய விசாரணைகளைக் கொண்டது. சங்கிதை, பிராமணம் என்பன வேதத்தின் கர்ம காண்டப் பகுதியைச் சார்ந்தவை. ஆரணியகம், உபநிடதம் என்பன வேதத்தின் ஞான காண்டப் பகுதியைச் சார்ந்தவை. இவை தவிர ஆரணியகம் என்ற பகுதியை உபாசனை காண்டம் என்று அழைக்கும் வழக்கமும் உள்ளது.

வேதகால சமயநிலை
வேத இலக்கியங்கள் அக்காலத்தில் நிலவிய சமய நிலை பற்றி அறிய உதவுகின்றன. வேத கால மக்களிடையே காணப்பட்ட இயற்கை வழிபாடு பற்றி இவை விபரிக்கின்றன. இயற்கை அம்சங்களே நாளடைவில் தெய்வங்களாக உயர்வு பெற்றன. வேதங்களில் கூறப்படும் 33 தெய்வங்களையும் அவை வாழும் இடங்களின் அடிப்படையில் விண்ணுலகத் தெய்வங்கள். இடையுலகத் தெய்வங்கள், மண் உலகத் தெய்வங்கள் என வகைப்படுத்துவர்.

தெய்வங்கள் வழிபடுவோருக்கு வரங்களை கொடுப்பனவாகவும் பகைவர்களை அழிப் பனவாகவும் விளங்கின என வேதங்கள் குறிப்பிட்டள்ளன. வேதங்களில் கூறப்பட்ட தெய்வங்களே பிற்கால சமய வளர்ச்சியின் தெய்வீக நம்பிக்கையில் பிரதான இடத்தைப் பெறுகின்றன. வேதகால மக்கள் தெய்வங்களுக்குச் செய்த வழிபாடுகள், கிரியைகள் பற்றி வேதங்கள் கூறியுள்ளன.
வேதங்களில் அஷ்வமேதம், இராஜசூயம், வாஜபேயம், புருஷமேதம், சர்வமேதம் போன்ற வேள்விகள் தொடர்பான செய்திகள் காணப்படுகின்றன. வேள்வி வழிபாட்டில் புரோகிதன், அக்கினி பகவான், சோமன் என்போர் பிரதான இடம் வகித்தனர். வேள்விக் கிரியைகளின்போது ஓமகுண்டம் அமைத்தல், அக்கினி வளர்த்தல், தானஸ் துதி பாடுதல், பலியிடுதல், தானம் வழங்குதல், தட்சணை வழங்குதல் முதலான கிரியைகள் இடம்பெற்றன. வேள்விகளின் பிரதான நோக்கம் உலகியல் இன்பங்களேயாகும். நீண்ட ஆயுள். போரில் வெற்றி, நோய் நீக்கம் முதலான உலகியல் இன்பங்களை அவாவி வேள்விகள் செய்யப்பட்டன. சவித்திரு எனும் ஞாயிற்றுக் கடவுளுக்குரிய காயத்திரி மந்திர செபம், விபூதி தாரணம் பற்றியும் வேதங்களில் காணலாம்.
சுக்கில யசூர் வேதம் உருத்திரனுக்குரிய பல திருநாமங்களை நூறு முறைகூறி வழிபடும் சதருத்திரிய வழிபாட்டு முறையைக் கூறியுள்ளது. இது வேதகால வழிபாட்டுமுறைகளுள் இலகுவானதாக அமைவதுடன், ஒரு திருப்புமுனையாவும் அமைகிறது. இசையால் இறைவனை வழிபடுதல் பற்றிக் கூறுகின்றது.

அதர்வண வேதம் சாதாரண மக்களிடையே நிலவிய மாந்திரீக நம்பிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. பிறருக்கு தீமை தரும் மந்திரங்கள் இதில் அதிகம் காணப்படினும் வழிபடுவோனைக் குறித்து நன்மை தருவனவாய் அமைந்தன. பௌஷ்டிகாணி, ஆயுஸ்ஷானி, ஸ்திரீகர்மாணி, ராஜகர்மாணி போன்ற பகுதிகள் செல்வச் செழிப்பையும், நிறைந்த ஆயுளையும் பெண்களின் சுபீட்சம் பற்றியும், அரசனின் நன்மை பற்றியதாகவும் அமைந்தவை.

வேதகால மக்களின் சமூகவாழ்வு
வேத இலக்கியங்கள் அக்கால மக்களின் வாழ்வின் பல்வேறு அம்சங்கள் பற்றியும் விபரிப்பன. தனிமனித வாழ்க்கைப் படிநிலைகளாகிய பிரமச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம். சந்நியாசம் என்பன தொடர்பான சிந்தனைகளை வேதங்கள் கொண்டுள்ளன. இருக்கு வேதத்தில் உள்ள பிரம்மசரிய சூக்தம், முனி சூக்தம், திருமணம் பற்றிய பாடல்கள் முதலியவற்றில் வாழ்க்கைப் படிநிலைகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. திருமணம், கணவன் மனைவி உறவு. குடும்ப வாழ்வு, கணவரின் கடமைகள் பற்றியும் அவை குறிப்பிட்டுள்ளன. கணவன்மனைவி என்போரைச் சுட்டும்தம்பதிஎன்னும் தொடர் இருக்கு வேதத்தில் உள்ளது. குடும்பத் தலைவனின் கடமைகளுள் முக்கியமானது வேள்விச் சடங்கினை ஆற்றுதல்.

வேத இலக்கியங்கள் ஊடாக, அக்கால சமூகக் கட்டமைப்பு, சமூகத் தொடர்புகள் என்பனவற்றை அறியலாம். ஆரம்பத்தில் நிற அல்லது இன அடிப்படையிலான இருவகைச் சமூக அமைப்பே நிலவியது. பீற்காலத்தில் வலுப்பெற்ற நால்வகை வருணக் கட்டமைப்பின் தொடக்கத்தை இருக்கு வேத புருஷ சூக்தப் பாடல்களில் காணலாம். மகாபுருஷனின் உடம்பிலிருந்து நால்வருணத்தாரும் தோன்றியதாக புருஷ சூக்தப் பாடல் கூறுகிறது. இது நான்கு வருணம் தொடர்பாக சமய அங்கீகாரத்துடன் கூறப்பட்ட முதற்பதிவாக உள்ளது. நால் வருணத்தவருள் பிராமணர் சமூகத்தில் முக்கியமான நிலையில் காணப்பட்டனர். சதபதப் பிராமணம்பிராமணர்கள் அவனியில் நடமாடும் தெய்வங்கள்என்று கூறியுள்ளது. வேட்டல். வேட்பித்தல், ஓதல், ஓதுவித்தல் என்பன பிராமணர்களின் முக்கிய கடமைகள் எனக் கூறப்பட்டுள்ளன.

வேத காலச் சமூக அமைப்பில் சத்திரியர்களும் முக்கியமான இடத்தை வகித்தனர். வேத கால மக்கள் குழுக்களாக வாழ்ந்தனர். அதனை அடுத்து குழுத் தலைவர்கள் அரசர்களாக உயர்வு பெற்றனர். அரசர்கள் மாளிகையில் வசிப்பவர்களாகவும், உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிபவராகவும் காணப்பட்டனர எனக்கூறப்பட்டுள்ளது. மக்களின் நலன்களைப் பேணும் வகையில் அரசனின் ஆட்சி அமைய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அரசரின் மகுடாபிஷேகத்தின் போதுமன்னராகிய நீர் இன்று முதல் வலியோரையும் மெலியோரையும் சமமாக நடத்துவீராகஎன்று புரோகிதன் வேண்டிக் கொண்டான். அரசனுடன் தொடர்புடைய சபா, சமீதி முதலான நிறுவனங்கள் பற்றியும் வேதங்கள் கூறியுள்ளன. அரசனது அன்றாடச் செயற்பாடுகளுடன் தொடர்பு உடையனவாக இந்நிறுவனங்கள் காணப்பட்டன.
வாழக்கைப் படிநிலைகள் பற்றக கூறப்பட்டுள்ளன. தருமணம். கணவன் மனைவ உறவு, குடும்ப வாழ்வு, கணவரின் கடமைகள் பற்றியும் அவை குறிப்பிட்டுள்ளன. கணவன்மனைவி என்போரைச் சுட்டும்தம்பதிஎன்னும் தொடர் இருக்கு வேதத்தில் உள்ளது. குடும்பத் தலைவனின் கடமைகளுள் முக்கியமானது வேள்விச் சடங்கினை ஆற்றுதல்.
வேத இலக்கியங்கள் ஊடாக, அக்கால சமூகக் கட்டமைப்பு. சமூகத் தொடர்புகள் என்பனவற்றை அறியலாம். ஆரம்பத்தில் நிற அல்லது இன அடிப்படையிலான இருவகைச் சமூக அமைப்பே நிலவியது. பிற்காலத்தில் வலுப்பெற்ற நால்வகை வருணக் கட்டமைப்பின் தொடக்கத்தை இருக்கு வேத புருஷ சூக்தப் பாடல்களில் காணலாம். மகாபுருஷனின் உடம்பிலிருந்து நால்வருணத்தாரும் தோன்றியதாக புருஷ சூக்தப் பாடல் கூறுகிறது. இது நான்கு வருணம் தொடர்பாக சமய அங்கீகாரத்துடன் கூறப்பட்ட முதற்பதிவாக உள்ளது. நால் வருணத்தவருள் பிராமணர் சமூகத்தில் முக்கியமான நிலையில் காணப்பட்டனர். சதபதப் பிராமணம்பிராமணர்கள் அவனியில் நடமாடும் தெய்வங்கள்என்று கூறியுள்ளது. வேட்டல், வேட்பித்தல், ஓதல், ஓதுவித்தல் என்பன பிராமணர்களின் முக்கிய கடமைகள் எனக் கூறப்பட்டுள்ளன.
வேத காலச் சமூக அமைப்பில் சத்திரியர்களும் முக்கியமான இடத்தை வகித்தனர். வேத கால மக்கள் குழுக்களாக வாழ்ந்தனர். அதனை அடுத்து குழுத் தலைவர்கள் அரசர்களாக உயர்வு பெற்றனர். அரசர்கள் மாளிகையில் வசிப்பவர்களாகவும், உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிபவராகவும் காணப்பட்டனர எனக்கூறப்பட்டுள்ளது. மக்களின் நலன்களைப் பேணும் வகையில் அரசனின் ஆட்சி அமைய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அரசரின் மகுடாபிஷேகத்தின் போதுமன்னராகிய நீர் இன்று முதல் வலியோரையும் மெலியோரையும் சமமாக நடத்துவீராக" என்று புரோகிதன் வேண்டிக் கொண்டான். அரசனுடன் தொடர்புடைய சபா, சமிதி முதலான நிறுவனங்கள் பற்றியும் வேதங்கள் கூறியுள்ளன. அரசனது அன்றாடச் செயற்பாடுகளுடன் தொடர்பு உடையனவாக இந்நிறுவனங்கள் காணப்பட்டன.

வேதங்களில் தத்துவ சிந்தனைகள்
வேத இலக்கியங்கள் இந்து மெய்யியல் தொடர்பான அடிப்படைச் சிந்தனைகளையும் கொண்டுள்ளன. பரம்பொருள், ஆன்மா, பிரபஞ்சம், ஒழுக்கம் தொடர்பான பல விடயங்கள் நாஸதீய சூக்தம், ஜம சூக்தம், வருண சூக்தம் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இருக்கு வேதப பாடலில், ‘ஏகம் சத் விப்ரா பகுதா வதந்திஎன்னும் தொடர் ஒரு கடவுள் கொள்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. இருக்கு வேதத்தில் உள்ள நாஸதியப் பாடலில் இந்து மெய்யியலில் உள்ள அத்வைதக் கோட்பாட்டில் வலியுறுத்தப்படும் ஒருமை வாதத்தின் ஆரம்பத்தைக் காணலாம்.
வேத இலக்கியங்களில் பிரபஞ்சம், ஆன்மா, ரிதம் தொடர்பான சிந்தனைகளையும் காணலாம். இருக்கு வேதத்தில் உள்ள யம சூக்தம், இறப்பு பற்றிய பாடல்கள் போன்ற பகுதிகளில் ஆன்மாவின் இறப்புக்குப் பிற்பட்ட நிலை, ஆன்மாவின் கன்ம வினைகள், வினைகளுக்கான பயன்கள் பற்றிய கருத்துக்கள் உள்ளன. பிரபஞ்ச உற்பத்தி, பிரபஞ்சப் படைப்புக்கு முற்பட்ட நிலை, படைப்பின் மூலாதாரம் பற்றிய விடயங்களை இருக்கு வேதத்திலுள்ள நாஸதீய சூக்தத்தில் காண முடிகின்றது.
இருக்கு வேதத்திலுள்ள வருணன் பற்றிய பாடல்களில் வரும் வருண சூக்தம் ஒழுக்கம் பற்றிய சிந்தனைகளைக் கொண்டுள்ளது. ரிதத்துக்குரிய பொறுப்புடையவன் வருணன். அதனால் ரிதஸ்ய கோபா என்ற பெயர் அவனுக்குண்டு. வருணன் உலக ஒழுங்கைப் பேணுபவனாகவும், மனிதர்களின் ஒழுக்கத்தைக் கண்காணிப்பவனாகவும் கூறப்பட்டுள்ளான். வேதங்களின் இறுதிப் பகுதியாக அமைந்த உபநிடத்தில் பிரமம், ஆன்மா பற்றிய சிந்தனைகள், முத்தி பற்றிய கருத்துக்கள் விரிவாக ஆராயப்பட்டள்ளன. வேத இலக்கியங்கள் அக்கால மக்களின் தத்துவ சிந்தனைகளைக் கொண்டிருப்பதுடன் அவை பிற்கால மெய்யியல் வளர்ச்சிக்கும் முன்னோடி என்பர்.

வேதங்களின் முக்கியத்துவம்
இந்து சமய வளர்ச்சியில் வேதங்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. இந்து நாகரிகம் சார்ந்த இறை நம்பிக்கை, தத்துவ சிந்தனைகள், அரசியல், சமூகவியற் சிந்தனைகள் முதலியவற்றின் வளர்ச்சியில் வேதங்கள் அதிக செல்வாக்குச் செலுத்தியுள்ளன. வேதங்கள் இறை சம்பந்தமுடையவை என்பதுடன், அக்கால மக்களின் சமய நம்பிக்கை பற்றியறிய உதவும் முக்கியமான இலக்கிய மூலமாகவும் அமைகின்றன. வேதங்களை இறைநூல், தெய்வீகநூல், முதன்நூல் என்று கூறும் மரபு இவற்றுடன் தொடர்புடையன. இந்தியாவில் தோன்றிய அறுவகைச் சமயங்களும் வைதீக சமயங்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றமை இந்து சமயப் பிரிவுகளுக்கும் வேதங்களுக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டுகிறது.
பிற்காலத்தில் வைதீக மரபுகளைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் பல தோன்றுவதற்கு வேதங்கள் பிரமாணமாய் அமைந்தன. நால்வகை ஆச்சிரம நிலைகளின் வளர்ச்சிக்கும் வேதங்களே அடிப்படை எனலாம். தரும சாத்திரங்கள், தருமசூத்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றின் உருவாக்கத்தில் வேதங்களுக்கு முக்கியமான பங்குண்டு. இறைவனைத் துதித்துப் பாடிய முதல் துதிப் பாடல்களாக வேதப் பாடல்கள் உள்ளன. பிற்காலத்தில் எழுந்த துதிப் பாடல்களுக்கு வேதங்களே முன்னோடி. நாயன்மார் பாடல்கள், ஆழ்வார் பாசுரங்கள் இதற்குத் தக்க சான்று. ‘வேத நெறி தழைத்தோங்க….’ என்பன போன்ற பாடல்கள் வேத மரபின் வளர்ச்சியை எடுத்துரைக்கின்றன. ஆழ்வார் பாடல்களில் அமரவோரங்க மாதும் வேதமோர் நான் மோதி என தொண்டரடிப் பொடியாழ்வார் பாடுகின்றார்.

இந்து தத்துவத் துறையின் வளர்ச்சியிலும் வேதங்கள் பங்களித்துள்ளன. சுருதிப்பிரமாணம் என்ற வகையில் இந்து தத்துவக் கோட்பாடுகளுக்கு வேதங்கள் அடிப்படையாக அமைந்தன. பிரம சூத்திரம் முதலான தத்துவ நூல்களுக்கு மட்டுமன்றி, அத்துவைதம் முதற்கொண்டு தோன்றிய மெய்யியல் கோட்பாடுகளுக்கும் வேத இலக்கியங்களின் பங்களிப்பு மிகவும் பிரதானமானது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top