சார்பெழுத்துக்கள்
முதலெழுத்துக்களை சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துக்கள் எனப்படும்.
அதாவது உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும், உயிர் மெய் எழுத்துக்களும், ஆய்த எழுத்தும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தமக்கு உரிய மாத்திரையை விட குறுகி அல்லது நீண்டொலித்தல் சார்பெழுத்துக்கள் எனவும் கூறலாம்.
. "சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல்"
என்கிறது தொல்காப்பியச் சூத்திரம்..
இதனை நன்னூல்
உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள
ப ஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும் -(நன்னூல்– 60) எனக்
கூறுகிறது.
சார்பெழுத்துக்கள் 10 வகைப்படும். அவையாவன
1. உயிர் மெய் எழுத்துக்கள்
2.ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. ஐகாரக் குறுக்கம்
6. ஔகாரக் குறுக்கம்
7. மகரக் குறுக்கம்
8. ஆய்தக் குறுக்கம்
9. குற்றியலுகரம்
10. குற்றியலிகரம்
என்பனவாகும்.
இதனைப் பற்றி நன்னூல்
"உயிர்மெய் இரட்டுநூற்று எட்டு, உயிர் ஆய்தம்
எட்டு, உயிரளபு, எழு மூன்று,ஒற் றளபெடை
ஔகான் ஒன்றே மஃகாள் மூன்றே ஆறுஏழ்
அஃகும் இம், முப் பான்ஏழ்
உகரம் ஆறாறு ஐகான் மூன்றே
ஆய்தம் இரண்டொடு சார்பெழுத்து உறுவிரி
ஒன்றுஒழி முந்நூற்று எழுபான் என்ப"
– (நன்னூல் 61)
சார்பெழுத்துகள் எண்ணிக்கை மொத்தம் – 369
உயிர்மெய் இருநூற்றுப் பதினாறு (216)
முற்றாய்தம் எட்டு (8).
உயிரளபெடை இருபத்தொன்று(21)
ஒற்றளபெடை நாற்பத்திரண்டு (42),
குற்றியலிகரம் முப்பத்தேழு(37),
குற்றியலுகரம் முப்பத்தாறு(36).
ஐகாரக் குறுக்கம் மூன்று(3),
ஔகாரக் குறுக்கம் ஒன்று,
மகரக் குறுக்கம் மூன்று,
ஆய்தக் குறுக்கம் இரண்டு.
ஆக மொத்தம் சார்பெழுத்துகள் முந்நூற்று அறுபத்து ஒன்பது ஆகும்.
.
![]()