இதிகாசங்கள்
வேத நெறிமரபினை தொடர்ந்து ஐந்தாம் வேதமரபாக எழுச்சி பெற்ற இலக்கியங்களே இதிகாசங்கள். இதிகாசங்களில் மகாபாரதம் இராமாயணம் ஆகிய இரண்டும் அடங்கும். மகாபாரத காவியம் ஐந்தாம் வேதம் என அழைக்கப்படும். இதிகாசம் என்னும் சொல் இவ்வாறு நடந்த கதை என்று கூறப்படும். மனிதன் வாழ் வாங்கு வாழ வழிகாட்டும் உபதேசங்களை உடையனவாக இதிகாசங்கள் விளங்குகின்றன. கதாபாத்திரங்களுடாக அறிவுரை கூறும் பாங்கு இதிகார வரலாறுகளுடாக எடுத்துக்காட்டப்படுகின்றது.
இதிகாச இலக்கியங்கள் வேத உபநிடத நூல்களைத் தொடர்ந்து எழுச்சி பெற்ற கதை மரபுகளாக அந்நூல்கள் தோற்றம் பெற்றன. இதிகாசக் கதை மரபுகள் குறித்த ஒரு காலத்தில தோன்றியவை அல்ல.
பல ஆண்டுகாலமாக நிலவிய கதை மரபுகள் வட இந்தியாவில் குப்தராட்சிக் காலத்திலேயே இறுதி வடிவம் பெற்று தொகுக்கப்பட்டமையை அறிகிறோம். மகாபாரத கதை வியாசரால் தொகுக்கப்பட இராமாணக் கதை வான்மீகியால் தொகுத்து எழுதப்பட்டது. இதிகாசங்களில் ஒன்றாகிய மகாபாரதம் இந்து சமய நெறியை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. ஜகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே என்று பிற்காலத்தில் இராமாயணம் போற்றப்பட்டது.
மகாபாரதமும் இந்து சமயப் பண்பாடும்.
மகாபாரதமானது மிகப் பெரிய கதை வடிவமாக கூறப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் சுலோகங்களை உடையதாகவும் 18பருவங்களை உடையதாகவும் மிளிர்கின்றது. பருவங்கள் என்பது அத்தியாயங்களைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. ஆதி பருவம், வனபருவம், துரோணபருவம், வீஸ்மபருவம் அறுசாசனபருவம், சாந்திபருவம் என்பவை பிரதானமானவை. பல இணைக் கதைகளை உடையதாக மகாபாரதம் விளங்குகனின்றது. இந்து தத்துவ நூல்களில் ஒன்றாகிய பகவத்கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதியாக விளங்குகின்றது. மகாபாரதத்தின் ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் நாராயணாம் நமஸ்கிருதய என்னும் நாராயண ஸ்துதி சுட்டிக் காட்டப்படுகின்றது. இதனால் மகாபாரத காப்பியம் வைணவச் சார்புடையதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. மகாபாரத மூல வடிவம் சமஸ்கிருத மொழியிலானது பின் தமிழ் மலாய,
யாவா மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
மகாபாரதக் கதையைப் பொறுத்தவரை இந்து சமய பண்பாட்டு விடயங்கள் தொடர்பாக எல்லா சிந்தனைகளும் மகாபாரத கதையில் உள்ளடங்கி இருக்கின்றதெனக் குறிப்பிடலாம். இங்கில்லாத விடயத்தை வேறெந்த நூலிலும் காணமுடியாது என அழைக்கப்பட்ட விடயம் மிகப் பிரதானமானது. சூதர் எனப்படும் கதை சொல்லிகளால் அரண்மனைகளிலும் மக்கள் வாழ்விடங்களிலும் ஓதப்பட்ட வரலாறுகளே இதிகாசங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
மகாபாரதத்தின் இந்து சமய மரபுகளில் சண்மத நெறிக் கோட்பாடு உன்னதமானதாக விளங்கினாலும் சைவம் வைணவம் என்பன மேல் நிலை பெற்றுள்ளதெனக் குறிப்பிடலாம். விஷ்ணு பரத்துவ பகவத் கீதையில் கூறப்பட்ட அர்ச்சுனன் தவம் செய்த வேளையில் சிவபெருமான் கிராதர் எனும் வேடர் வடிவில் தோன்றி பாசுபதாஸ்திரம் வழங்கிய செய்தி இறை ஆற்றல், இறை அருள் பக்தி மரபு அனைத்தையும் இணைத்த வாறாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சைவம், வைணவம் மட்டுமல்லாது சாக்த, காணாபத்ய கௌமார. சௌர சமயங்களின் வரலாறு வெளிப்படும் இலக்கியமாகவும் மகாபாரதம் விளங்குகின்றது. தன்னிகரில்லாத் தலைவனின் பெருமைகளை இது காட்டுகிறது. அதேவேளை உலகியல் வாழ்வு அறவாழ்வு ஆன்மீக வாழ்வு என்பவற்றை இணைத்த பாங்கும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மகாபாரதம் குறிப்பிடும் சமய மரபில் பொதுமக்கள் நல்வழியில் வாழ்வதற்கான நீதியை உபதேசம் செய்வது முக்கியமானதாகும் வீஷ்மதருமம் இதனை வெளிப்படுத்துகின்றது. அரசருக்கு வேண்டிய வேள்விகள் ராஜதருமம் என்பனவும் மகாபாரதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மகாபாரத ராஜதருமமே நல்லாட்சிக் கொள்கையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாழ்வின் ஒழுக்கவியல் பற்றிய கருத்துக்களும் மகாபாரதத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. கருமயோகம், புலனடக்கம், அறவாழ்வு, சமத்துவம், தருமநெறி, வீடுபேறு என்னும் விடயங்கள் உபதேச வழிகள் மூலமாக குறிப்பிடப்பட்டுள்ளன. தருமம், பொறுமை, சமத்துவம், கற்பு, ககோதர பாசம் முதலிய வாழ்வியல் பண்பாடுகள் கூறப்பட் டுள்ளன. தருமம் ஒன்றே ஒருவனை பின்தொடர்ந்து செல்லும் என்னும் போதனை விதிகளை வடிவமாக மகாபாரத கதைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தருமம் தலைகாக்கும் என்பது இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றது. தருமநெறி நின்ற தருமன், வீமன் அருச்சுனன். நகுலன், சகாதேவன் என்னும் பாண்டவர் வாழ்வும் தீய வழி நின்ற துரியோதனன் ஆகியோர் வாழ்வும் பிரதானமானவை. நன்மை வெல்லும் தீமை தோற்கும் என்பதை மகாபாரத வாழ்வியல் எழுத்துக்காட்டுகின்றது. கொடையின் சிறப்பு கர்ணன் வரலாற்றில் காட்டப்பட்டுள்ளது.
மகாபாரதம் திரிமூர்த்தி வழிபாட்டை வலியுறுத்துகின்றது. தேவ இலக்கியத்தில் வருணிக்கப்பட்ட இயற்கை தேவர் வழிபாட்டை விட சண்மத தேவர் வழிபாடு முதன்மை பெற்றது. பகவத்கீதையில் அவதார தருமம் கூறப்பட்டுள்ளது. தருமம் குலைந்து அதருமம் பெருகும் போது தருமத்தை நிலைநாட்ட நான் யுகம் தோறும் அவதரிக்கின்றேன் என்பது கீதையின் உபதேசம். அவதாரக் கோட்பாடு இறை ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்டே திருஉருவ வழிபாடு தோற்றம் பெற்றது. வேத இலக்கியங்ளில் குறிப்பிடப்படாத திரு உருவவழிகாடு இதிகாசங்களில் மேலும் செல்வாக்கடைகிறது.
யாகங்களை அடிப்படையாகக் கொண்ட வழிபாடு மகாபாரதக் கதையில் செல்வாக்ப்கு பெற்றது வேள்வி தவம்,
பூசை, தோத்திரம், தலயாத்திரை, தீர்த்தம் என்பன பிரதான இடம் பெற்றன. கங்காஸ்ஞானம், காசியாத்திரை தியானம் என்பனவும் பாரதக் கதையில் செல்வாக்குப் பெற்றன. மகாபாரதக் கதையில் வைணவ மரபாகிய பாஞ்சராத்திரம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பாஞ்சராத்திர வைணவம் விஷ்ணு பகவானால் உபதேசம் செய்யப்பட்டது என மகாபாரதம் எடுத்துரைக்கின்றது. சூரிய உபாசனை காயத்திரி மந்திர செல்வாக்கும் மகாபாரத கதையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. குந்தி தேவியின் வரலாறு இதற்கு சான்று. துர்க்கா உபாசனையும் துர்க்கா கோத்திரமாக அமைந்துள்ளது.
மகாபாரத கதையின் அறவாழ்வுக் கொள்கை மேலானது. அகிம்சை மேலான தருமமாகக் கூறப்படும் சத்தியம், குரோதமின்மை, தானம், புலனடக்கம் பிறரிடம் குறைகாணாமை, பிறரில் குறைகூறாமை கோபமறுதல், மன்னிப்பளித்தல், அகபுறத்தூய்மை பிறரில் பகைமை பாராட்டாமை என்பன உயரிய தத்துவங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. சத்தியமே உயிர் என்று மகாபாரதம் போதிக்கின்றது. சாந்திபருவத்தில் துவேசமின்மை, சத்தியம், புலனடக்கம் பொறுமை, சகிப்புத்தன்மை பரம்பொருளைத் தியானித்தல் என்பன அகிம்சையின் பாற்படும். எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குருகுலக் கல்வி மரபுடன் தொடர்பான ஆசாரங்களும் தபோவன வாழ்வும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மகாபாரதமும் இந்து சமய இலக்கிய மரபுகளும்
மகாபாரதக் கதையின் இலக்கிய மரபில் பகவத்கீதை முதன்மையானது. பல்வேறுபட்ட கிளைக் கதை மரபுகளையும் மகாபாரதம் உள்ளடக்கி இருக்கின்றது. தேவார பாடல்களிலும் மகாபாரதத்தின் அர்ச்சுனன் தவம் செய்த வைபவம் சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ‘அடுத்தானை உரித்தானை அருச்சுனர்க்குப் பாசுபதம் கொடத்தானை‘ என்று தேவாரப் பாடல் குறிப்பிடுகின்றது. ‘வேடன் தன் வில்லை விஜயற்கு ஈந்து ‘என்று கிராதார்ச்சுனன் வடிவத்தை தேவாரப்பாடல் பிரதிபலிக்கின்றது. சமஸ்கிருத, தெலுங்கு மொழிகளில் பாரதக் கதை முன்வைக்கப்பட்டது சாள்ஸ் வில்கின்ஸ் என்பார் மகாபாரத கதையை ஆங்கிலத்திலும் தமிழிலும் பாரத அம்மானை மகாபாரதக் கதையை அடியொற்றியதாகம் வைகுந்த அம்மானை, கம்சன் அம்மானை முதலிய சிற்றிலக்கிய வடிவங்களும் இலக்கிய மரபாக எழுச்சி பெற்றுள்ளன. திரௌபதி கோவில் பண்பாடு, பாண்டவர் கதை மரபுடன் தொடர்பானது பல்வகை கூத்துக்களும் நாடகங்களும் பாண்டவர் கதை மரபு தழுவியன.
இராமாயணம் குறிப்பிடும் இந்துப் பண்பாடு
இராமாயணம் வடமொழியல் வான்மீகி ரிஷியால் தொகுக்கப்பட்டது. இராமாயணம் 7 காண்டங்களை உடையது. பாலகாண்டம் அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம் கிஸ்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்த காண்டம், உத்தரகாண்டம் என்பன அவை 24000 சுலோகங்களை உடைய தொகுப்பாக இராமாயணம் காணப்படுகின்றது. இது கி.பி 2ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. வான்மீகி ஆதிகவி என்று அழைக்கப்படுகின்றார்.
இராமாயணம் இராமனை கதாநாயகனாக எடுத்துக்காட்டுகின்றது. இராமனது தெய்வீக ஆற்றல் இராம வழிபாட்டிற்கு அடிப்படையான மரபினை ஏற்படுத்தியது. ரிஷிகளுக் கெல்லாம் மகரிஷியாக வான்மீகி சுட்டிக்காட்டப்படுகின்றார். அயோத்தியமாநகரம், தசரதன் கதை. முன்வினைப் பயன் தண்டகாரணியதவம், பரதன் உறவு சகோதர பாசம் இலங்கை த்தொடர்பு என்பன கதையோட்டமாக அமைகின்றன. அக்கதையோட்டத்தில் இராமன் என்னும் பாத்திரம் உத்தம வடிவமாகவும் இலட்சிய வடிவமாகவும் விளங்குகின்றது.
இராமாயணக்கதையின் மற்றொரு கதாபாத்திரமாக இராவணன் எடுத்துக்காட்டப்பட்டுள்ளான். சிவபக்தனாகவும் இசைமரபினனாகவும் வான்மீகி அறிமுகம் செய்கின்றார். இராம இராவண யுத்தத்தில் இன்றுபோய் நாளை வா என்னும் வேண்டுதல் ராஜ தருமத்தினதும் யுத்த தர்மத்தினது உன்னத போக்கைச் சுட்டிக் காட்டுகின்றது. இராவணன் லிங்க வழிபாட்டினன் எனவும் அறியப்படுகின்றது.
இராமாயணக் கதையிலும் தருமத்தின் சிறப்பு தனித்துவமாக எடுத்துக்காட்டப்படுகின்றது. தருமத்தில் இருந்தே எல்லாம் கிடைக்கின்றன என்பதால் அனைத்திலும் மேலானது தருமமே என்பது இதன் மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது பற்றி அரியும் தீயை நீர் ஊற்றி அவிபதைப் போல உள்ளத்தில் எழும் கோபத்தை அடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சகிப்புத்தன்மையே உயர் தருமம் என்று குறிப்பிடப்படுகின்றது.
வான்மீகி இராமாயணம் தமிழில் கம்பஇராமாயணம் எனப் பாடப்பட்டது. கம்பர் இதனை சோழராட்சியில் பாடியுள்ளார். பின் இந்தி மொழியில் துளசி தாசர் இராமாயணத்தைப் பாடியுள்ளார். தெலுங்கு கன்னட மொழியிலும் இராமாயணக்கதை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இராமயணக்கதைகளிலும் மோட்சம் நரகம் பற்றிய சிந்தனைகள் கூறப்பட்டுள்ளன. வசிட்ட முனிவர் இராமனுக்கு உபதேசித்த வரலாறுகள் இதற்கு சான்றானவை. இராமாயணக் கதைமூலம் மானுட விழுமியங்கள் வடஇந்திய கலாசாரப் பண்புகள் தமிழகத்தில் பரவலாயின. இராமர் கோயில், இராமேஸ்வரம் இலங்கையில் சீதாஎலிய, மாமங்கேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், கன்னியா ஆகியன இராமாயணக் கதையுடன் கூடியவை. யாவா.
சம்பா, தாய்லாந்து, முதலிய நாடுகளில் இராமாயணக்கதை வரலாறுகள் கோயிற் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் காட்டப்பட்டுள்ளன. இராமாயணக் கதைகளை நாட்டார் கலைகளுடன் தொடர்புபட்டன. இராமலக்ஷ்மணன் ஆலயம் ஆஞ்சநேயர் ஆலயம் என்பவை இராமாயண மரபைத் தழுவிய சமயக் குறியீடுகள் ஆகும்.
![]()