ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகள்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகள்


கல்வி கற்கும் முறை மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகள்

நீங்கள் எந்த பாடத்தைக்கற்கும் பொழுதும் அதனை முழுமையாக விளங்கிக் கற்க வேண்டும். இவ்வாறு கற்கும் பொழுது எமது மூளையில் நரம்பு இணைப்புகள் அதிகரிக்கின்றன. நரம்பு இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

கற்ற பாடத்தினை கிரமமாக மீட்டல் செய்யும் பொழுது நரம்பு இணைப்புக்கள் வலிமை அடைகின்றன. இதனால் நீண்ட கால ஞாபகசக்தி அதிகரிக்கும். அதாவது கற்ற பாடத்தை நீண்ட காலமாக நினைவில் வைத்துக் கொள்வதற்கு இது பெரிதும் உதவுகின்றது.

இதற்காக விஞ்ஞான ரீதியில் நிருபிக்கப்பட்ட பயிற்சி செயல்முறை ஒன்றை நீங்கள் கடைப்பிடிக்கலாம்.

நீங்கள் கற்ற பாடத்தினை 10 நிமிடங்களின் பின் அவற்றை முழுமையாக மீட்டல் செய்யுங்கள். முழுமையாக அனைத்து விடயங்களையும் ஞாபகப்படுத்த முயற்சி செய்யுங்கள். நீங்கள் கற்ற அனைத்து விடயங்களையும் முழுமையாக ஞாபகப்படுத்தும் வரை திரும்பத் திரும்ப மீட்டல் செய்து ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

இதன் பின்பு 24 மணித்தியாலம்,3 நாள் அதனை தொடர்ந்து 7 நாள், 21 நாள் போன்ற கிரமமான இடைவெளியில் நீங்கள் கற்ற குறித்த பாடத்தினை மீட்டிக் கொள்ளுங்கள்.

இதன் பின்பு ஒவ்வொரு வாரமும் ஒரு குறித்த நாளில் நீங்கள் தயார்படுத்தி வைத்திருக்கிற அனைத்து பாடங்களையும் மீட்டிப்பாருங்கள்.

இவ்வாறு தொடர்ச்சியாக நீங்கள் மீட்டல் செய்யும் பொழுது குறித்த பாடத்தினை மிகக் குறுகிய நேரத்தில் உங்களால் மீட்டல் செய்து கொள்ள முடியும்.

உயிரியலைப் பொறுத்த வரை உங்களால் ஏராளமான கட்டுரை/ அமைப்புக்கட்டுரை வினாக்களை ஞாபகப்படுத்தி வைத்துக்கொள்ள கூடியதாக இருக்கும் நிலைமை உங்களுக்கு உற்சாகத்தையும் பரீட்சையை எதிர்கொள்ளும் மன தைரியத்தையும் வழங்கும்.


ஞாபக சக்தியை அதிகரிக்கும் பழக்கவழக்கங்கள்

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சிறிது நேரம் தியானத்தில்(பிராத்தனையில்) ஈடுபடுங்கள்.

ஆகக் குறைந்தது பத்து தொடக்கம் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் உற்சாகமடையும் இரத்த ஓட்டம் சீராகும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

அதிகாலையில் மூச்சுப்பயிற்சியினை செய்யுங்கள் ஆழமாக மூச்செடுத்து மெதுவாக வெளிவிடுங்கள். இப்பயிற்சியினை நாள் ஒன்றிற்கு மூன்று அல்லது நான்கு தடவை செய்யுங்கள் இது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

மிகவும் அதிகரித்த உடல் நிறை மற்றும் குறை நிறை ஞாபக சக்தியினை குறைக்கும் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்கள் உடல் பருமனை சராசரி அளவில் பேணுங்கள்.

7
ஒரு நாளில் சராசரியாக மணி நேரம் தொந்தரவின்றி அமைதியாக உறங்குங்கள். கற்ற விடயங்களை நினைவில் வைத்துக் கொள்வதற்கும் பரீட்சை நேரத்தில் தெளிவாக மீட்டிக் கொள்வாதற்கும் ஆழமான உறக்கம் அவசியமாகும்.

உங்களைச் சுற்றி உள்ள சூழ்நிலையை எப்பொழுதும் ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ளுங்கள்,

உங்களுக்கு பிடித்த பொதுவான நல்ல விடயங்களைப்பற்றி (கலை, இசை, விளையாட்டு, திரைப்படம்) உங்கள் உறவினர்களிடமோ/நண்பர்களிடமோ உரையாடுங்கள்.

தோல்வி எண்ணத்திலிருந்தும் எதிர்மறையான எண்ணமுள்ளவர்களிடமிருந்தும் விலகி இருங்கள்.

உங்களை உற்சாகமூட்டும் வாசகங்களை படிக்கும் அறையில் காட்சிப்படுத்துங்கள் உங்கள்

ஒவ்வொருநாளும் நீங்கள் செய்த நல்ல விடயங்களை எழுதிவையுங்கள் நீங்கள் வெற்றி பெற்றபின் பிறருக்கு அது முன்னுதாரணமாக அமையும்.


ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்

சகலவிதமான காய்கறிகள் மற்றும் இலை வகைகள் விசேடமாக வல்லாரை, அகத்தி, பசளிக்கீரை.

பாதாம், முந்திரி பருப்பு, பூசணி விதை நெல்லிக்காய்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட மீன் வகைகள் உதாரமாக சமன், காணாங்கெழுத்தி, சுறா.

திராட்சை பழம், செரிப்பழம், தோடம்பழம் மற்றும் அவகாடோ போன்ற பழ வகைகள்

பல வகையான தானியங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

அதிகாலை உணவை தவறாமல் எடுங்கள். கடலை, கௌபி பயறு, பால் முட்டை போன்ற உணவு வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பாண், பணிஸ் மற்றும் கேக் போன்ற உணவு வகைகள் மற்றும் அதிகளவான சீனி மற்றும் உப்பு கொண்ட உணவுகளை தவிர்த்தல் நன்று

பிரதான உணவு வேளைகளிற்கு இடையில் உங்களுக்கு பசி ஏற்படும் பட்சத்தில் கச்சான், பட்டாணிகடலை போன்ற கடலை வகைகளை உட்கொள்ளுங்கள்.

உங்கள் உடலில் நீரின் அளவை சரியான அளவில் பேணுங்கள். நாள் ஒன்றிற்கு சுராசரியாக 2.5 லீற்றர் நீர் (இளநீர், கஞ்சி, தேனீர், பழச்சாறு உள்ளடங்கலாக) எடுத்துக்கொள்ளுங்கள். இதனால் குருதிச் சுற்றோட்டம் சீராகும், உடல் ஆராக்கியம் மேம்படும்.

 

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top