அறிவித்தல்
& அறிவுறுத்தல்கள்
அறிவித்தல்
அறிவித்தல் மூலம் வெளிப்படுத்தப்படுபவை
செய்திகளை அறிவித்தல், எண்ணங்களை வெளியிடல், மகிழ்ச்சி தரும் தகவல்களைத் தருதல் போன்றன.
அறிவித்தலைச் செய்பவர் அறிவிப்பாளர் ஆவார். இவர் ஒரு தொடர்பியலாளரே.
அறிவிப்பாளர் ஒருவர் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்
தனது அறிவித்தல் தொடர்பான விடயத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல்.
சிறந்த குரல் வளம் அமைந்திருத்தல்.
அறிவித்தல் தரும் மொழியில் நல்ல புலமை பெற்றிருத்தல்.
அறிவித்தல் நுட்பங்களைப் புரிந்திருத்தல்.
நேயர்கள், வாசகர்களை, இரசிகர்களை, குறித்த நிகழ்ச்சியைக் கேட்போரைப் பற்றிய விளக்கம் உடையவராக இருத்தல்.
பொறுப்பு வாய்ந்தவராக இருத்தல்.
நேர முகாமைத்துவத்துக்குக் கட்டுப்படுதல்.
பல்துறை சார்ந்த அறிவு பெற்றிருத்தல்.
கேட்போரைக் கவரக்கூடிய முன்வைப்பாளராகத் திகழ்தல்.
தேவைக்கு ஏற்ற முகபாவனையை வெளிப்படுத்தல்.
அறிவித்தல் வகைகள்
நிகழ்ச்சி அறிவித்தல்.
செய்தி அறிவித்தல்.
விளம்பர அறிவித்தல்.
நேர்முக வர்ணனை அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
நேர்காணல் அறிவித்தல்.
தகவல் அறிவித்தல்.
விசேட அறிவித்தல்.
பொதுமக்கள் சார்ந்த அறிவித்தல்.
அரசாங்க அறிவித்தல்.
அறிவிப்பாளரிடம் (அறிவித்தலை வழங்குபவரிடம்) காணப்பட வேண்டிய திறமைகள் (ஆளுமைகள்)
நடிப்பாற்றல் மிக்கவராக இருத்தல்.
கிளர்ச்சியூட்டும் பேச்சாளராக இருத்தல்.
இசைவல்லுனர் அல்லது இசைப் பிரியராக இருத்தல்.
பரந்த அறிவும், பல்துறை அறிவு, அனுபவம் இருத்தல்.
கூர்மதி, சாதுரியம், சமயோசிதம் மிக்க பேச்சாளாராக இருத்தல்.
பண்பான, கனிவான, மதிப்பு வாய்ந்தவராக இருத்தல்.
புறத்தூண்டல் இல்லாது தானே இயங்கும் ஆற்றல் கொண்டிருத்தல்.
நேரமுகாமைத்துவக் கட்டுப்பாடு பேணுபவராக இருத்தல்.
நடப்பு விவகாரங்கள், நாளாந்தப் புதினங்களை அறிந்தவராக இருத்தல்.
விரைவாக ஊகித்து அறியும் தன்மை கொண்டவராக இருத்தல்.
பக்கச்சார்பின்றி இயங்குபவராக இருத்தல்.
அறிவுறுத்தல்கள்
அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள்
வீட்டில் பெற்றோரின் அறிவுத்தல்கள்.
பாடசாலையில் ஆசிரியர், அதிபரின் அறிவுத்தல்கள்.
சமூகத்தின் தலைமைத்துவ அறிவுத்தல்கள்.
அரசாங்க அறிவுத்தல்கள்.
சமூகத்தில் அறிவுத்தலகளைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் அனுகூலங்கள் (நன்மைகள்)
தலைமைத்துவத்துவத்தைப் பேணி நடக்கும் இயல்பு.
ஒருமைப்பாடு.
சட்டத்தை மதிக்கும் பண்பு.
ஒழுக்க விழுமியம் உருவாகுதல்.
வாழ்க்கையில் கட்டுப்பாடு நிலவும்.
வழிகாட்டல், ஆலோசனைகள் தெளிவாகும்.
தவறான வழிகளில் செல்கை தடுக்கப்படும்.
செயற்பாடுகள் இலகுவாக நிறைவேறும்.
பிறரை மதிக்கும் பண்பு வளரும்.
வாழ்க்கையில் நிதானமான நடத்தைக் கோலம் உருவாகும்.
![]()