விவேக சிந்தாமணி பற்றிய சிறுகுறிப்புகள்

விவேக சிந்தாமணி

 

விவேக சிந்தாமணி பற்றிய சிறுகுறிப்புகள்

இது ஒரு தொகுப்பு நூலாகும்.

நாயக்க மன்னர் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாடிய; பல தனிப்பாடல்களின் தொகுப்பாகும்.

இந்நூல் நாயக்கர் காலத்துக்குப் பிற்பட்ட காலத்து அறிஞர்களால் தொகுக்கப் பட்டுள்ளது.

1. தண்டா மரையினுடன் பிறந்தும்…. என்ற பாடலின் மூலம்,

() கற்றோர் இயல்பு

ஐயம் திரிபின்றிக் கற்றுணர்ந்தவர்கள், கல்லி வேள்விகளாலும் ஒழுக்கத்தாலும் சிறந்து விளங்கும் மேன்மைக் குணங்கள் நிரம்பிய சுற்றோரைக் கண்ட கணப்பொழுதே அவர்களின் நல்ல இயல்புகளைத் தெரிந்து கொள்வார்கள்." அவர்களிடம் உள்ள நல்ல இயல்புகளைத் தாமும் அடைவதற்காய் அவர்களைத் தம்மோடு சேர்த்து வாழ்வார்கள். அதன் மூலம் உறவைப் பேணி வளர்த்து அவர்களிடமிருந்து பெறுதற்கரிய நல்ல பயன்கள் யாவற்றையும் பெற்றுப் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.

() கல்லாதார் இயல்பு

கல்லாதவர்கள் கற்றறிந்த மேன்மக்களுடன் நீண்ட நாட்கள் ஒன்றாகவே சேர்ந்து வாழ்ந்து வந்தாலும், அறியாமை என்ற இருள் அவர்களின் அறிவுடைமையை மூடியிருப்பதால் கற்றவர்களின் நல்ல இயல்புகளை என்றுமே அறிய மாட்டாதவர்களாய் வாழ்வார்கள். இதனால், அவர்களால் அடையும் பயன் கிடைக்காமல் போய் விடுகின்றது. ஆகவே, கல்லாதவர்கள் அறியாமையால் சூழப்பட்டு அறிவிலிகளாகவும் கற்றவர்களின் மூலம் பெறும் பயன்களைப் பெறமாட்டாமலும் வாழ்வர்.

இப்பாடல் உணர்த்தும் மையக் கருத்து யாது?

கல்லாதவர் கற்றவரின் நல்ல இயல்புகளை என்றும் அறியமாட்டார்கள் என்பதுடன் கற்றவர்களே கற்றோரை கண்ட மாத்திரத்தே அவர்கள் இயல்பைத் தெரிந்து கொண்டு அவர்களையும் தம்மோடு சேர்த்து வாழ்வார்கள் என்ற அறிவில்லாதார், கற்றோர் ஆகியோரின் இயல்புகளை வெளிப்படுத்துகிறது.

தண்டாமரையினுடன் பிறந்தும்என்ற பாடலின் மையக்கருத்தை விளக்குவதற்கு கையாண்ட உத்தி யாது?

கற்றார் இயல்பையும் கல்லாதவர் இயல்பையும் விளக்க உவமை கையாளப்பட்டு விளக்கப்படுகிறது. முதலில் கல்லாதார் இயல்பை விளக்க வந்த கவிஞர் நீர் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய குளத்திலே தவளைகள் வாழும். அதே குளத்திலே மலர்ச்சியானதும் இனிமையுடைய தேன் நிறைந்ததுமான தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும். ஆனால், அத்தாமரை மலரிலுள்ள தேனை அதில் வாழும் தவளைகள் அருந்துவதுமில்லை அதன் இனிமையை உணருவது மில்லை. அதேபோல கல்லாதவர்களும் கற்றறிந்த மேன்மக்களுடன் நெடு நாட்கள் ஒன்றாகவே சேர்ந்து வாழ்ந்திருந்தாலும் அவர்களுடன் கூடிப்பழகியிருந்தாலும் மேன்மக்களின் நல்ல குணங்களை அறியமாட்டாதவர் களாயும் அவர்கள் மூலம் கிடைக்கும் பெறுதற்கரிய பயன்களையும் பெறமுடியாமல் வாழ்வார்கள். இதற்குக் காரணம் அதாவது, மேன்மக்களின் நல்ல இயல்புகளை அறிய முடியாமல் இருப்பதற்கு அறியாமையே காரணமாம் என்று விளக்கியுள்ளார்.

உவமானம் – தாமரையுடன் பிறந்து தண்ணீரில் வாழும் தவளை

உவமேயம் – பண்டு பழகியிருந்தாலும் கற்றவரின் இயல்பறியா அறிவிலார்.

பொதுத்தன்மை அறியாமை

கற்றவரின் இயல்பை விளக்க வந்த கவிஞர், நீர் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய குளத்திலே மலர்ச்சியுடையதும் இனிமையான தேன் நிறைந்ததுமான தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும். அதிலுள்ள தேனைப் பருகி அதன் இன்சுவை யுணர்ந்து பயனடைவதற்காய்; வண்டு தான் வாழும் காட்டை விட்டு நீங்கித் தொலைதூரம் வந்து அப்பொய்கையை அடைந்து தேனையருந்திப் பயன் பெறும். அதேபோல கற்றவர்கள் கல்வி வேள்விகளாலும் ஒழுக்கத்தாலும் மேம்பட்டு விளங்குகின்ற கற்றோரைக் கண்ட மாத்திரத்தே மனங்களிப்படைந்து அவர்களின் மேலான நல்ல குணங்களைத் தெரிந்து; அவர்களுடன் சேர்ந்து பெறுதற்கரிய நல்ல பயன்களை எல்லாம் பெற்று; இன்புற்று வாழ்வார்கள் என விளக்கியுள்ளார்.

உவமானம் :- தாமரை மலரிலுள்ள தேனை நுகரும் வண்டுகள்

உவமேயம் : – கற்றோர் இயல்பறிந்து சேர்ந்து வாழும் அறிவுடையார்

பொதுத்தன்மை : அறிவுடைமை

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top