தரம் -9, தமிழ்மொழியும் இலக்கியமும், பாடம்- 03, ஒரு சின்னஞ்சிறு பூச்சி வினாவிடை

தரம்9,

தமிழ்மொழியும் இலக்கியமும்

பாடம்- 03,

ஒரு சின்னஞ்சிறு பூச்சி வினாவிடை

1. பூச்சி ஊர்ந்து வருவதைக் கண்ட சிறுவன் என்ன செய்தான்?
கையில் இருந்த சோக்கால் தனக்குப் பக்கத்தில் ஒரு வட்டம் போட்டான். பின்பு அம்புத்தடியால் அந்தப்பூச்சியை அந்த வட்டத்தின் மத்தியில் தட்டிக்கொண்டு வந்து விட்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

2. சின்னஞ்சிறு பூச்சியின் உருவ அமைப்பை கதாசிரியர் எவ்வாறு வருணிக்கிறார்?
பப்பாளி விதையளவு உடம்பு. அவ்வுடம்பு மட்டும் சிவப்பு நிறம் மற்ற உறுப்புக்கள் கறுப்பு நிறம். குண்டூசியின் குண்டுப் பருமன் தலையும், கடைக் கண் இமை மயிர் ஒத்த சின்னட்டிக்கால்களும் கொண்டதாக அப்பூச்சியின் உருவ அமைப்பைக் கதாசிரியர் வர்ணித்துள்ளார்.

3. சிறுவன் பூச்சியின் மேல் ஆத்திரம் கொள்ளக் காரணம் யாது?
பூச்சி அவன் விட்ட இடத்தில் நிற்கவில்லை. அம்புத்தடியால் தட்டி விடும் போதெல்லாம் அது புரண்டு நெளிந்து திரும்பத்திரும்ப வெளியே வர முயற்சித்தது. இதனால் சிறுவன் பூச்சியின் மேல் ஆத்திரம் கொண்டான்.

4. வெற்றி எனக்குத்தான் என்று மகன் எந்த அடிப்படையில் கூறினான்?
பூச்சியைக் கொன்று விட்டமையால் தனக்குத்தான் வெற்றி என்று மகன் கூறினான்.

5. "வெற்றி பூச்சிக்குத்தான்" என தந்தை கூறியதற்குக் காரணம் என்ன?
வெற்றி பூச்சிக்குத் தான் என்று அப்பா கூறக்காரணம் மகன் பூச்சியுடன் போராட முடியாமையினாற்றான் அதனைக் கொன்றான். எனவே, பூச்சிக்குத்தான் வெற்றி என்று அப்பா கூறினார். இந்தப்பூச்சிக்கு உயிர் வந்தால் அது மீண்டும் வெளியே தான் செல்லும் எனவே அதற்குத் தான் வெற்றி என்று அப்பா கூறினார்.

6. இக் கதையைப் படித்ததன் மூலம் நீங்கள் உணர்ந்து கொள்வன யாவை?
இக்கதையைப் படித்ததீன் மூலம் நாம் ஓர் உண்மையை உணர முடிகிறது. ஒடுக்கப்பட்டோர் நசுக்கப்பட்டோர் எவராயினும் தங்கள் உரிமையைப் பேண இறுதி வரை போராடிக் கொண்டிருப்பர். எந்தப் பிராணியாயினும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இறுதி வரை போராடிக் கொண்டேயிருக்கும். இந்த உண்மையைச் சின்னஞ்சிறு பூச்சியின் கதை எமக்கு உணர்த்துகிறது.

பின்வரும் பொருள்களைக் குறிக்க வழங்கும் வேறு மூன்று சொற்கள் தருக.

1. பத்திரிகை : செய்தித்தாள், இலை, கடிதம்

2. இலட்சியம் : கொள்கை, குறிக்கோள், நோக்கம்

3. ஆத்திரம் : கோபம், சினம், பரபரப்பு

4. உதிரம் : இரத்தம், செந்நீர், குருதி

5. வீறு : வெற்றி, அழகு, செருக்கு









 

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top