இனியவை நாற்பது
வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே,
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே,
இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது.
ஒன்றில் வெற்றிபெற வேண்டும் என்றால், கோபமே கொள்ளக்கூடாது என்று விரதம் இருத்தல் இனியது. வெற்றிபெறும் வரை உறுதியாய் பொறுமை காத்தல் இனியது. அடைய முடியாத பொருளின்மேல் ஆசை கொள்ளாதிருத்தல் இனியது. செய்ய வேண்டிய செயல்களைச் செய்தல் இனியது.
![]()