G.E.C.O/L
எது நல்ல சினிமா
கவனத்திற்கு
இலக்கிய கட்டுரை வினாக்களுக்கு இக்குறிப்புக்களை ஆதாரமாக கொண்டு கட்டுரையாக விரிவாக எழுத வேண்டும்.
G.C.E.O/L-2024(2025)
04. ‘எது நல்ல சினிமா‘ என்ற கட்டுரையில்
(அ) ஆரம்பகாலத் தமிழ்ச் சினிமாவின் இயல்புகள்
(அ). தமிழ் சினிமா நாடகத்துக்கு அடிமைப்பட்டு இருந்ததனால் சினிமா வளராமை.
ஆரம்பத்தில் புராண நாடகங்களே படமாக்கப்பட்டமை.
நாடகம் மாதிரியே செட் போடப்பட்டு பார்ப்போர் கோணத்தில் இருந்து படமாக்கப்பட்டமை.
நடிகர், இயக்குநர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என அனைவரும் நாடகப் பின்புலத்தில் இருந்து வந்து சினிமாவில் ஈடுபட்டமை.
நாடகக் கம்பனிகளே சினிமாவைத் தயாரித்தமை.
வாய்ப்பேச்சால் கதையை விளக்க முற்பட்டமை.
சினிமாவில் நாடகத்தனம் மிகுந்திருந்தமை (காட்சி, ஒலி, குரல், அதீத பேச்சு)
(ஆ) நல்ல சினிமாவுக்கு அவசியமான தொழினுட்ப உத்திகள்
ஆகியவை புலப்படுத்தப்பட்டுள்ள விதத்தினை விளக்குக.
(ஆ). அழுத்தமான அழகான வரிசையான காட்சிப் படிமங்கள் மூலம் கதையை வெளிப்படுத்துதல்.
காட்சிப்படிமத்துக்கு தாங்கலாக ஒலி அமைந்து இருத்தல். அவ்வொலி பல வகைகளிலும் கையாளப்படுதல்,
காட்சிப்படிமங்களும் ஒலிப்பதிவுகளும் அர்த்தமுள்ள கோர்வையாக அமையும் வகையில் படத்தொகுப்பு அமைதல்.
காட்சிப்படிமங்களை இணைக்கும் முறையைக் கையாளல்.
காமிரா, லென்ஸ், ஒளி விளக்குகள், ஒலிப்பதிவுநாடா, ஒளியெறிதல் முதலியன சினிமா மொழியை விளக்கக் கையாளப்படல்.
புதுப் புது தொழினுட்ப சாதனங்கள் சினிமா மொழியை வளப்படுத்தல்.
(iv). “சினிமா மொழி, மொழிபெயர்க்க முடியாத ஒன்று, அது மனித குலத்துக்கே பொதுவானது“
(அ) சினிமா மொழிக்கும் ஏனைய மொழிகளுக்கும் இடையிலான வேறுபாடு யாது?
அ) ஏனைய மொழிகளை மொழிபெயர்க்கலாம்; சினிமா மொழியை மொழிபெயர்க்க முடியாது.
(ஆ) சினிமா மொழி எந்த மொழி பேசுவோராலும் விளங்கிக் கொள்ளத்தக்கது என்பதை உணர்த்தும் தொடர் யாது?
ஆ) அது மனித குலத்துக்கே
பொதுவானது.
G.C.E.O/L-2020
04. எது நல்ல சினிமா என்ற கட்டுரையில்,
(அ) ஆரம்ப காலத் தமிழ்ச் சினிமாவில் நாடகத்தின் செல்வாக்கு
(அ). சினிமாவில் நாடகத்தின் செல்வாக்கு
தமிழ்ச் சினிமா நாடகத்திற்கு அடிமைப்பட்டிருந்தது. அதனால் சினிமா வளராமை
ஆரம்பத்தில் புராண நாடகங்களே படமாக்கப்பட்டமை
நாடகம் மாதிரியே செட் போடப்பட்டமையும் நாடகக் கோணத்தில் படமாக்கப்பட்டமையும்
நாடகக் கம்பனிகளே சினிமாவைத் தயாரித்தமை
சினிமாவில் உள்ளோர் (நடிகர், இயக்குநர், வசனகர்த்தா, பாடலாசிரியர்) அனைவரும் நாடகத்தலிருந்தே வந்தமை
இன்றைய சினிமாத் தொழில்நுட்பத்திலும் நாடகத்தின் செல்வாக்கு (காட்சி, அமைப்பு, குரல், இசை) காணப்படுகின்றமை
(ஆ) நல்ல சினிமாவின் பண்புகள்
ஆகியன விபரிக்கப்படுமாற்றைத் தெளிவுபடுத்துக.
(ஆ). நல்ல சினிமாவின் பண்புகள்
சினிமாவின் மையக்கருவைச் சார்ந்து அதன் காட்சிப்படிமங்களும் ஒலியும் அமைதல்
சினிமா மொழியின் முக்கிய அம்சங்களாகிய காட்சிப்படிமம், ஒலி, படத்தொகுப்பு என்பவை சரிவர அமைதல்
காட்சிப் படிமம்மூலம் கதை சொல்லப்படுதல்
காட்சிப் படிமத்துக்கு ஒலி துணை போதல்
படத்தொகுப்பு அர்த்தமுள்ளதாக அமைதல்
தொழில்நுணுக்க வளர்ச்சியினால் உருவான புதிய புதிய சாதனங்களைக் கையாளுதல்
குறியீட்டின் மூலம் மையக் கருத்தை வெளிப்படுத்தல்
மையக்கருவுக்குத் தேவையற்ற எந்த விடயத்துக்கும் இடம் கொடாமை
6. எது நல்ல சினிமா என்ற கட்டுரையில்,
(அ) காட்சிப் படிமங்கள்
(அ) காட்சிப் படிமங்கள்
சினிமாவினுடைய காட்சிகள் எல்லாமே அழுத்தமான அழகான, வரிசையான காட்சி படிமங்களால் வெளிப்படுத்தப்படும் போது நல்ல சினிமா உருவாகும்.
சினிமா மொழியின் முக்கிய கூறு காட்சித் தொடர்
காட்சிப் படிமங்கள் மூலம் சொல்லக்கூடிய ஒன்றை வார்த்தை மூலம் கூற முயன்றால் சினிமா நலிவடையும். எனவே காட்சிப் படிமங்கள் முக்கியமானவை.
உதாரணம் : பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள்.
இத்தகைய காட்சிப் படிமங்கள் சினிமாவை நல்ல சினிமா ஆக்குகிறது.
(ஆ) ஒலி
(ஆ) ஒலி
பேசும் வார்த்தைகள் இயல்பான ஒலிகள் காட்சிப் படிமத்தை மேலும் விளக்குவதாக அமைகின்ற போது நல்ல சினிமா உருவாக வாய்ப்புண்டு.
சினிமாவை உருவாக்குவதில் ஒலிக்கும் மிக முக்கிய பங்குண்டு.
சினிமாவில் காட்சிப் படிமத்தின் தாங்கலாக இது வருகிறது.
சினிமாவில் ஒலி பல வகைகளில் கையாளப்படுகிறது.
இயல்பான ஒலி
பேசும் வார்த்தைகள்
காட்சிப் படிமத்திற்கு ஒத்திசைவாக ஒலி – சினிமாவில் இடம்பெற வேண்டும்
சினிமாவில் ஒலி சிறப்பாக கையாளப்படலுக்கு உதாரணம் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம்
(இ) படத்தொகுப்பு
ஆகியவற்றினூடாக சினிமா உருவாகுமாற்றை கட்டுரையாசிரியர் எவ்வாறு எடுத்துக்காட்டுகின்றார்?
(இ) படத்தொகுப்பு
காட்சிப் படிமங்களையும் ஒலிப் பதிவுகளையும் அர்த்தமுள்ள கோர்வையாக அமைப்பதே படத்தொகுப்பாகும்.
காட்சிப் படிமங்களும், ஒலிப் பதிவுகளும் ஒரு அர்த்தமுள்ள கோர்வையாக அமைய வேண்டும்.
சினிமாவுக்கு அடித்தளமாக அமைவது படத்தொகுப்பாகும்.
நிகழ்ச்சித் தொடர் கோவைப்படுத்தப்படும் முறைமைக்கு ஏற்ப நிகழ்ச்சித் தொடரின் அர்த்தமும் மாறும்.
காட்சிப் படிமங்களை இணைக்க பல முறைகள் கையாளப்படல்.
1.
Cut
2.
மயங்கித் தெளிதல் – காட்சி மங்கி அதே தருணத்தில் அடுத்த காட்சி திரையில் தோன்றுதல்
3.
இருண்டு தெளிதல்– திரை இருண்டு பின் மறுகாட்சி வருவது
உதாரணம் : சத்யஜித்ரே – பதேர் பாஞ்சாலி
பருவங்கள் மாறல் (மயங்கித் தெளிதல்)
இவற்றுக்குத் துணையாக காமிரா, லென்ஸ், ஒளி விளக்குகள், ஒலிப்பதிவு நாடா, ஒளியெறிதல் முதலியன அமைகின்றன.
மேற்குறித்த மூன்றும் பொருத்தமுற இணைகின்றபோது நல்ல சினிமா உருவாகும்.
01. (viii). இப்போது சினிமா மொழி நமக்குப் பரிச்சயமில்லாத ஒன்றாக இருக்கிறது.
(அ) ‘பரிச்சயம்‘ என்பதன் பொருள் யாது?
(அ.) பழக்கமானது / அறிமுகமானது / தெரிந்தது / தொடர்புள்ளது.
(ஆ) சினிமா மொழி என்பதில் மூன்று அம்சங்கள் உள்ளன. அவற்றுள் ஏதேனும் ஒன்றினைக் குறிப்பிடுக?
(ஆ.) 1. காட்சிப்படிமம்
2.
ஒலி
3.
படத்தொகுப்பு (ஏதேனும் ஒன்று)
G.C.E.O/L-2016
02. (iv). இந்த சினிமா மொழியை, அதன் தன்மையை, தனித்துவத்தை உணர்ந்து, ஒரு படைப்பாளி அதை அழுத்தமாகக்
கையாளும்போது, அங்கே நல்ல சினிமா பிறக்கிறது. இந்த மொழியிலிருந்து மாறுபட்டு, வாய்ப்பேச்சினால்
க்தை சொல்ல முற்பட்டால் அங்கே சினிமா நலிவடைகிறது. பேசும் மொழி போலவே இந்த மொழியின் நயம்
அதைப் பயன்படுத்தும் படைப்பாளியின் திறனை, கற்பனை வளத்தைப் பொறுத்தது. சூரியன் உதயமாவதைக்
கண்டால் ஒருவன் ‘ஓகோ விடிகிறது‘ எனலாம். கவிஞன் அதைக் கண்டாலோ ‘பொழுது புலர்ந்தது யாம் செய்த
தவத்தால்‘ என்கிறான்.
(அ) நல்ல சினிமா பிறப்பதும் நலிவடைவதும் எதனால்?
(அ) சினிமா மொழியை உணர்ந்து அதனை அழுத்தமாகக் கையாளும் போது நல்ல சினிமா பிறக்கிறது. இதிலிருந்து மாறுபட்ட வாய்ப் பேச்சினால் கதை சொல்ல முற்பட்டால் சினிமா நலிவடைகிறது.
(ஆ) மொழியின் நயம் அதைப் பிரயோகிப்பவனைப் பொறுத்தது என்பதை எழுத்தாளர் எவ்வாறு விபரிக்கிறார்?
(ஆ) சூரிய உதயத்தைச் சாதாரண ஒருவன் விபரிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் காட்டுவதன் மூலம்
