G.C.E. O/L, தற்கால கவிதைகள், கடந்தகால வினாத்தாள்


கவனத்திற்கு

இலக்கிய கட்டுரை வினாக்களுக்கு இக்குறிப்புக்களை ஆதாரமாக கொண்டு கட்டுரையாக விரிவாக எழுதவேண்டும்.


 

G.E.C.O/L

தற்கால கவிதைகள்

கடந்தகால வினாத்தாள்

G.E.C.O/L-2023(2024)

01.(vii). “நெஞ்சகத்தை நிறைத்திருக்கும் நிர்மலமாம் வானில்

நிறைமதிதன் துணைவியர்கள் சூழவரும் கோலம்

() ‘நிர்மலமாம் வான்என்பதனால் உணர்த்தப்படுவது யாது?

() வானத்தின் களங்கமற்ற தன்மை

() நிறைமதிதன் துணைவியர்கள் எனப்படுவன யாவை?

() நட்சத்திரங்கள்

7. தேயிலைத் தோட்டத்திலேஎன்ற கவிதையில்

() தோட்டத் தொழிலாளர் மீதான கவிஞரின் பரிவு

ஊனையும் உடலையும் ஊட்டி இம்மண்ணை உயிர்ப்பித்தவர்கள்

பழுதிலாதவர்கள்

ஆழப் புதைந்த தேயிலைச் செடியின் அடியில் புதைந்தவர்கள்

எவரோ வாழ்வதற்காக தம்முயிரை ஈந்தவர்கள்

எவராலும் கண்டு கொள்ளப்படாதவர்கள்

மரியாதை பெறாதவர்கள்

() அவர்களைப் புறக்கணிக்கும் சமூகம்மீது கவிஞர் முன்வைக்கும் விமர்சனம்

ஆகியன வெளிப்படுமாற்றை விளக்குக.

தோட்டத் தொழிலாளர்கள் இறந்து போனால் அவர்களது இறப்பை சமூகம் பெரிதுபடுத்துவதில்லை

(இரங்கற் பா இல்லை, கல்லறைகள் எழுப்பப்படுவதில்லை, நினைவு நாள் கொண்டாட்டம் எதுவுமில்லை)

ஒரு காட்டுப் பூவையேனும் பறித்து அவர்களது புதை மேட்டில் போட்டு மதிப்புச் செய்வதில்லை அவர்கள் மீது அன்பு கொள்வதில்லை

என்னே மனிதர்? என்று ஏளனமும் வியப்பும் கலந்த தொனியில் சமூகத்தை விமர்சித்தல்.

 

G.E.C.O/L-2022(2023)

01.(vi). “குணக்குன்றாய் உழைத்துண்ணும் குல்விளக்காம் மளிதன்

() இங்கு மனிதனின் சிறந்த செயலாகக் கூறப்படுவது யாது?

) உழைத்துண்ணல்

() ‘குணக்குன்றுஎல்பது என்ன அணி?

) உருவகம்

7. சீறி ஓடாத வருங்கால மனித நதிஎன்ற கவிதையில்

() எழுத்தறிவின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுமாறு

எழுத்தறிவற்றவன் பரிதாபத்தின் மொத்த வடிவம்

மிக அடிப்படைத் தேவையான கையொப்பத்தையே இட முடியாத நிலை

ஆளுமைக் குறைவு (வெட்கிச் சிரித்தல், செத்த சிரிப்பு)

தன் அடிப்படை உணர்வுகளைக்கூட எழுத்தில் வடிக்க முடியாமை

சாதிக்கக்கூடிய எதனையும் சாதிக்க முடியாத நிலையில் ஒதுங்கிக் கிடக்க வேண்டிய அவலம்

() அதனை வலியறுத்துவதற்கு ஆசிரியர் கையாண்ட உத்தி

ஆகியன பற்றி விளக்குத?

). கையெழுத்து இடத் தெரியாத ஒருவனின் பரிதாப நிலையை நேரில் கண்ட அரச அலுவலர் ஒருவரின் அனுபவ வெளிப்பாடாக விபரித்தல்

இளமை, அழகு முதலியன இருந்தும் கல்வி இல்லாவிடில் வாழ்வில்லை என்பதனை இளைஞனை வருணித்திருப்பதன் மூலம் வெளிப்படுத்தியிருத்தல்

மனிதனை வேகம் மிக்க நதியாக உருவகித்துவிட்டு, கல்வி இல்லாவிடின் அந்நதிஉறைந்துவிடும் என்பதன்மூலம் கல்வியின் பெருமையை உணர்த்துதல்

கவித்துவமான வரிகள் மூலம் கல்வியின் பெருமையையும் கல்லாமையின் இழிவையும் வெளிப்படுத்துதல் (செத்த சிரிப்பு, இதயம் கழன்று கருகிப் பற்றியது)

எழுத்தறிவற்ற ஒருவனின் நிலையை எழுத்தறிவில்லாத முழுச் சமுதாயத்திற்கும் உரியதாக வெளிப்படுத்துதல்.

 

G.E.C.O/L-2021(2022)

01.(ix). “புழுதிப் படுக்கையில் புதைந்த எம் மக்களைப்

போற்றும் இரங்கற் புகழ்மொழி இல்லை

() இங்குபடுக்கைஎன்பது எதனைக் குறிக்கிறது?

() இறந்தவரின் உடல்கள் புதைக்கப்பட்ட இடம் / புதைக்குழி / கல்லறை

() ‘இரங்கற் புகழ்மொழிஎன்பதன் மூலம் உணர்த்தப்படுவது யாது?

() இறந்தவர்கள் பற்றி இரக்கத்தோடு புகழ்ந்து பேசுதல் / அஞ்சலி உரை / இரங்கல் உரை

 

G.E.C.O/L-2020

01.(vi). “தனித்து நின்றும் சத்தியத்தால் தலை நிமிரும் மனிதன்.

தற்பெருமை கொள்ளாது தலை தாழும் அறிஞன்.”

() மனிதன் தலை நிமிர்வது எதனால்?

. சத்தியத்தால்

() ‘தலை தாழும்என்பதன் உட்கருத்து யாது?

. பணிதல்

02. (iii).

ஆழப் புதைந்த

தேயிலைச் செடியின்

அடியிற் புதைந்த

அப்பனின் சிதைமேல்

ஏழை மகனும்

ஏறி மிதித்து

இங்கெவர் வாழவோ

தன்னுயிர் தருவன்

என்னே மனிதர்

இவரே இறந்தார்க்கு

இங்கோர் கல்லறை

எடுத்திலர்! வெட்கம்

தன்னை மறைக்கத்

தானோ அவ்விறைவனும்

தளிர் பசும் புல்லால்

தரை மறைத்தனனோ!

() தோட்டத் தொழிலாளரின் உழைப்பு எவ்வாறு புலப்படுத்தப்படுகின்றது?

. ஆழமாகப் புதைத்த தேயிலைச் செடியின் அடியில் தனது தந்தையாரின் உடல் புதைக்கப்பட்ட

சிதையில் ஏழை மகனொருவன் ஏறி மிதித்து தேயிலைக் கொழுந்தினைப் பறிக்கின்றான். எவர்

வாழ்வதற்கோ தன் உயிரை வருத்தி உழைக்கின்றான்.

() ‘வெட்கம் தன்னை மறைக்கத்தானோ அவ்விறைவனும் தளிர் பசும்புல்லால் தரை மறைத்தனனோ!’

என்ற தொடர் மூலம் கவிஞர் கூற விழைவது யாது?

. இறந்தவர்க்குக் கல்லறை எடுக்காதமை வெட்கத்துக்குரிய விடயம்

இயல்பாகவே புதைமேட்டில் புல் படர்ந்துள்ளமையை, வெட்கப்படத்தக்க அந்தச் செயலை

மறைப்பதற்கு கடவுள் செய்த செயலாகக் (தற்குறிப்பேற்றமாக) கவிஞர் கற்பனை செய்கிறார்.

 

G.E.C.O/L-2019

01.(viii).
நெஞ்சகத்தை நிறைத்திருக்கும் நிர்மலமாம் வானில்

நிறைமதி தன் துணைவியர்கள் சூழவரும் கோலம்

() இங்கு களங்கமின்மையை உணர்த்தும் சொல் யாது?

. நிர்மலம்

() ‘துணைவியர்கள்என்று குறிப்பிடப்படுபவை யாவை?

. நட்சத்திரங்கள்

5. சீறி ஓடாத வருங்கால மனித நதி என்ற கவிதையில்,

() எழுத்தறிவின்மையின் அவலம்

. பரிதாபத்தின் மொத்த வடிவமாகத் தோன்றுதல்

கையொப்பங் கூட இட முடியாத நிலை; அதனால் ஏற்படும் வெட்கம்

தனது உணர்வுகளை எழுத்தில் வெளிப்படுத்த முடியாமை

எதிர்காலத்தில் எய்த வேண்டிய முன்னேற்றம் எதுவும் இல்லாமை.

() எழுத்தறிவில்லா இளைஞன்மீது கவிஞர் கொண்ட பரிவு

என்பன புலப்படுமாற்றை விளக்குக.

. அவனின் பரிதாபத் தோற்றத்தைக் கண்டு இரங்கல்

எழுத முடியாத அவனது நிலைமையைக் கண்டு வருந்துதல்

இதயம் கழன்று விழுந்ததாகக் கூறுதல்

தனது அலுவலகத்திற்கு அவன் வராமல் விட்டிருக்கலாம் என வருந்துதல்

அழகு, இளமை எல்லாம் இருந்தும் வருங்காலமற்றவனாய் இருக்கும் அவனது நிலைக்கு வருந்துதல்

தனது வழமையான வேலைகளைச் செய்ய முடியாத அளவிற்கு அவனைப்பற்றிய பரிதாப உணர்வு மேலெழல்.

 

G.E.C.O/L-2018

01. (vii). “மீசைக்கு விதைதூவி இளமை மழை பெய்ய

பயிர் முளைத்த பருவம்

() ‘இளமை மழைஎனக் குறிப்பிடப்படுவது எது?

(). இளமைப் பருவம் / இளம் பராயம் / கட்டிளமைப்பருவம்

()பயிர் முளைத்தல்என்பது எதனைச் சுட்டுகிறது?

(). மீசை அரும்புதல் / மீசை முளைத்தல்

02. (ii).

ஓடுகின்ற நீரையெதிர்த் தோடுகின்ற மீன்கள்

ஊருகின்ற சிற்றெறும்பின் ஒழுங்குமுறை வாழ்க்கை

ஆடுகின்ற பூமரங்கள் அசைகின்ற இலைகள்

அதிகாலை எழுந்துஇரை தேடவரும் பறவை

மூடுகின்ற இமைக்கடங்கா முழுநிலவு விழிகள்

முந்தானைச் சேலைகட்டும் செந்தாழம் பூக்கள்

கூடுகின்ற இயற்கையெழில் குதூகலத்தைத் தருமே

குழந்தையென எனது மனம் குதித்தாடும் தினமே

() கவிஞர் உள்ளமானது குழந்தை போலக் குதூகலிப்பதற்கான காரணங்களை விளக்குக?

() இயற்கை நிகழ்ச்சிகள் கவிஞரது உள்ளம் குழந்தை எனக் குதூகலிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

நீரை எதிர்த்து ஓடும் மீன்கள்

சிற்றெறும்பின் ஒழுங்கு முறையான வாழ்வு

பூ மரங்கள் ஆடுதல், இலைகள் அசைதல்

அதிகாலை எழுந்து இரைதேட வரும் பறவை

முழு நிலவு

முந்தானைச் சேலை கட்டும் செந்தாழம்பூக்கள்

(). இயற்கையினூடாக நாம் கற்றுக்கொள்ளக்கூடியவை எவை?

() எதிர்நீச்சல் போடுதல்

ஒழுங்கு முறையான வாழ்க்கை

அதிகாலை எழுந்து இரைதேடல் முயற்சி

தொடர்ந்து இயங்குதல்

 

G.E.C.O/L-2017

5. தேயிலைத் தோட்டத்திலே என்ற கவிதையில்,

() தொழிலாளரின் உழைப்பும்

உழைப்பைக் கொடுத்தும் உடலைப் பசளையாக்கியும் மண்ணை உயிர்ப்பித்தவர்.

(வளம் பெறச் செய்தவர்.)

பரம்பரை பரம்பரையாக உழைத்தல்.

தேயிலைச் செடியின் அடியில் புதைக்கப்பட்டிருக்கும் அப்பாவின் புதைமேட்டில் மகன் நின்று உழைத்தல்.

தொடர்ந்து உடலை வருத்தி உழைத்தும் ஏழையாக இருத்தல்.

இங்குள்ளோர் வசதியாக வாழ்வதற்காகத் தமது உயிரைத் தருதல்.

() அவர்கள் மீதான கவிஞரின் பரிவும்

வெளிப்படுமாற்றை விளக்குக?

புழுதியில் புதைந்த தொழிலாளர்களைப் போற்றிப் பாடிய இரங்கற்பா இல்லை.

கல்லறை, நினைவு நாள் இல்லாமை.

மனம் கசிந்து அன்போடு நினையாமை.

புதைமேட்டில் ஒரு காட்டுமலரையாவது பறித்துப் போடவில்லை என்பதன் மூலம் ஆதங்கத்தை வெளிப்படுத்தல்.

கடின உழைப்பைத் தந்து உயிரை அர்ப்பணித்தவர்களை நினைக்காத மனிதர்களை என்னே மனிதர் என ஆற்றாமையை வெளிப்படுத்தல்.

மனிதரின் இந்தச் செயலிற்காக வெட்கப்பட்டு இறைவன் பசும்புல்லால் தரையை மறைத்திருக்கிறான் எனத் தனது கருத்தை ஏற்றிச் சொல்லல்.

 

G.E.C.O/L-2016

5. சீறி ஓடாத வருங்கால மனித நதி என்ற கவிதையில்,

() இளைஞனின் தோற்றமும்

இளைஞனது தோற்றத்தைக் கவிஞர் இருவகையாகச் சித்திரிக்கின்றார்.

பெண்களை மயக்கும் இளமை, அழகு முகம்

சிவந்த உதடுகள்

அரும்பு மீசைப் பருவம்

பரிதாபத்திற்குரிய தோற்றம்

பரிதாபத்தின் மொத்த வடிவம்

செத்த சிரிப்பு

() கல்லாத அவ்விளைஞன் பற்றிய கவிஞரின் கவலையும்

வெளிப்படுமாற்றை விளக்குக?

() கல்லாத அந்த இளைஞன் பற்றிக் கவிஞரின் கவலை வெளிப்பாடு

கையொப்பம் இடமுடியாது கல்லாத நிலை கண்டு தன் இதயம் கத்தியதும் கருகியதும்

தன் காதல் உணர்வுகளை எவ்வாறு எழுத்தில் வடிப்பான் என்ற கவலை

எழுதத் தெரியாததால் அவனுக்கு வருங் காலம் இல்லை (அந்த நதி சீறிப்பாயாது சிறு துளியாய் அடங்கிப் போகும்) என வருந்துதல்

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top