G.C.E.O/L, தத்தைவிடு தூது, கடந்தகால வினாத்தாள்


கவனத்திற்கு

இலக்கிய கட்டுரை வினாக்களுக்கு இக்குறிப்புக்களை ஆதாரமாக கொண்டு கட்டுரையாக விரிவாக எழுதவேண்டும்.


தத்தைவிடு தூது

கடந்தகால வினாத்தாள்

G.C.E.O/L- 2024(2025)

01.(viii). “அன்னநடை மைவிழியா ளம்பொன்மலர்க் கொம்பனையாள்

என்னிதய தாமரைக்கோ ரிலக்குமியாம்

இந்தச் செய்யுட் பகுதியிற் காணப்படும்,

() உவமையணி ஒன்றை இனங்கண்டு குறிப்பிடுக?

() உவமையணி அன்னம் போன்ற நடை / அன்னநடை, மலர்க் கொம்பு அனையாள் / அம்பொன் மலர்கொம்பனையார்

() உருவக அணி ஒன்றை இனங்கண்டு குறிப்பிடுக?

() உருவக அணிஇதயத்தாமரை / இலக்குமி

03. ‘தத்தைவிடு தூதுபகுதியில்,

() அக்கால சமூகம் பெண்களை அடிமைப்படுத்திய விதம்

பெண்களை அழகாக வளர்த்து அறிவற்ற ஆண்களுக்கு மணம் முடித்துக் கொடுத்தல் (கொங்கு மலர் மாலையைக் குரங்கிற்கு அழிப்பது போல)

எளியவருக்கும் முதிர்ந்தவர்களுக்கும் மணமுடித்து வைத்தல்

வரதட்சணை கொடுத்து பெண்கள் வாழ்கமைக்காலம் வரை புலியின் வாயில் அகப்பட்ட மான் போல துன்பப்படும் நிலைக்குத் தள்ளுதல்

உண்பது, உறங்குவது, ஊர்க்கதைகள் பேசுவது மட்டுமே பெண்களின் தொழில், அடிமைகளுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை, அவர் போகு மட்டுமே பெண்கண்ட தெய்வம் என்று எல்லாம் கூறல்

கூட்டில் அடைத்து வைக்கும் கிளி போலவும் பூட்டித்திறந்து எடுக்கும் பொருளாகவும் பெண்களைக் கருதுதல். ஆண் என்ற ஒரு தகுதி இருந்தால் போதும் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கலாம் என கருதுதல்

வீட்டிற்கு பசு வாங்கும் போது கூட பலமுறை ஆராய்கிறார்கள் ஆனால் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது எந்த ஆராய்ச்சியும் இன்றி சடுதியாக முடிவெடுக்கிறார்கள்

() அச்சமூகத்தின்மீது தலைவன் கொண்ட கோபம்

என்பன வெளிப்படுமாற்றை விளக்குக.

பொருத்தமற்ற வகையில் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பவர்களை விரகிலர் எனச் சாடுதல்.

பெண்களுக்கும் அடிமைகளுக்கும் போதமில்லை என்பவர்களை அறிவிலிகள் எனல்.

வேடுவரைத் திருமணம் செய்து கொடுப்பதை விரும்புவோமோ? என வினாவுதல்.

பெண்களை அவர்கள் விருப்பமின்றி திருமணம் செய்து கொடுக்கும் பெற்றோர் கண் இல்லாதவர் என்றும் கடு நரகிற்குரியவர் என்றும் சாடுதல்.

பெண்கள் கல்வி கற்பதை விரும்பாதவர்களை வீணர் எனல்.

பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து எவற்றையும் ஆராயாது முன் பின் அறியாத ஒருவருக்கு அவளைத் திருமணம் செய்து வைத்தலை சாடுதல்.

G.C.E.O/L- 2023(2024)

01. (ix). “வெம்புலிவாய் மானென்ன வீணே கொடுத்திடுவார் செம்பொற் றிரளுடனே

() இங்கு கையாளப்பட்டுள்ள அணி யாது?

(). உவமை

() ‘செம்பொற்றிரள்என மறைமுகமாகக் குறிப்பிடப்படுவது யாது?

() சீதனம் / சீர்வரிசை

02. (iii). கூட்டிற் பசுங்கிளிபோற் கோதையரை யெப்பொழுதும்

வீட்டி லடைத்துவைக்கும் விரகிலருக் கியாதுரைப்பேம்

பூட்டித் திறந்தெடுக்கும் பொருளாக் கருதினரோ

கேட்டோர் நகைப்பதுவுங் கேட்டிலரோ பைங்கிளியே

கிஞ்சுகவாய்ப் பைந்தொடிபாற் கிளத்தாய் பசுங்கிளியே.

() பொதுவாக பெண்களை ஆண்கள் எவ்வாறு நடத்துகின்றனர்?

(). கூண்டில் கிளியாக, வெறும் பண்டமாக

() அவ்வாறு நடத்துபவர்கள் தொடர்பில் கவிஞர் எத்தகைய மனநிலையினைக் கொண்டுள்ளார்

என்பவற்றை விளக்குக.?

(). வீரமில்லாதவர் / அறிவிலர் என்று அவர்களைக் குறிப்பிடல்

G.C.E.O/L- 2022(2023)

01. (vii). “மூடருக்கும் பேடருக்கும் முதியோர் மெலியோர்க்குந் தேடருநல் இரத்தினம் போற் தெரிவையரைச்

சேர்த்துவரோ?”

() ‘பேடர்எனப்படுபவர் யாவர்?

) துணிவற்றவர் / ஆண்மையற்றவர்

() இங்கு பெண்கள் எவ்வாறு சிறப்பிக்கப்படுகின்றனர்?

) கிடைத்தற்கரிய இரத்தினம் போன்றவர்கள்

G.C.E.O/L- 2020

3. தத்தைவிடு தூது என்ற இலக்கியத்தில்,

() காதலிமீது தலைவனின் காதல் உணர்வு.

(). காதலியை உணர்வுபூர்வமாக பலவகையில் வர்ணித்தல்

என்னிரு கண்மணியாள்

அன்னநடை மைவிழியாள்

இதயத்தில் வீற்றிருக்கும் இலக்குமி

காதலிமீதான தன் அன்பின் ஆழத்தையும் உரிமையையும் வெளிப்படுத்தல்

அவளுக்கு ஏற்ற மணாளன்தானே எனல்

தன்னை அவள் விரும்பாவிடில் சன்னியாசியாவேன் எனல்

அவளை அடையாவிடில் உயிர் விடுவேன் எனல்

அவளுக்குப் பழிவந்துவிடலாகாது என்பதால் உயிர்விடும் எண்ணத்தைத் தவிர்த்தல்

அவளே தனக்கு அடைக்கலம் (சரணம்) எனல்

அவள் தன்னிடம் வந்தால் வானுலகத்து இன்பம் எல்லாம் வரும் எனக் கூறுதல்

() பெண்களின் அன்றைய சமுதாய நிலைமை

ஆகியன புலப்படுமாற்றை விளக்குக.

(). பெண்ணின் விருப்பம் இன்றியே அவளுக்குக்குப் பொருத்தமற்ற ஒருவனை ஆண் என்ற ஒரு காரணத்தாலேயே திருமணம் செய்து வைத்தல்

சுதந்திரம் அற்றவர்களாகப் பெண்களை வீட்டில் அடைத்து வைத்தல்

அடிமைகளாக மிருகங்களைப் போல நடத்துதல்

கல்வி உரிமையை மறுத்தல்

உண்பது, உறங்குவது, ஊர்க்கதை பேசுவது, கணவனைத் தொழுவது என்பவையே பெண்களின் தொழில்கள் எனக் கருதுதல்

G.C.E.O/L- 2018

01. (i). “மெல்லியர்பாற் கல்வி விரும்பாத வீணரெல்லாம்

எல்லையில்லா இன்படைதற்கிடையூறென்றே இயம்பாய்

() மெல்லியர் என்போர் யாவர்?

. பெண்கள்

() இங்குவீணர்எனக் குறிப்பிடப்படுபவர் யாவர்?

. பெண்கல்விக்குத் தடையான ஆண்கள் / பயனற்றவர்

G.C.E.O/L- 2017

01. (ix) ‘தத்தை விடு தூதுஎன்பது தி.. கனகசுந்தரம்பிள்ளை இயற்றிய செய்யுளாகும்.

() ‘தத்தைஎன்பதன் பொருள் யாது?

(.) கிளி

() தத்தை விடு தூதினூடாக ஆசிரியர் யாருடைய விடுதலை பற்றிக் குறிப்பிடுகிறார்?

(.) பெண் விடுதலை பற்றிக் குறிப்பிடுகின்றார்.

02. (iii). தம்மனைக்கோர் பசுவேண்டிற் றாம்பலகாற் பார்த்திருந்தும்

பின்னுந் துணிவிலராய்ப் பேதுறுதல் மாந்தர் குணம்

என்னே மணவினையே லிமைப்பொழுதி லேமுடிப்பார்

சின்னப் பதுமைகொடு சிறார் செய்மணம் போலுமரோ

தெரிவையவட் கிம்மாற்றஞ் சீர்க்கிளியே கூறுதியால்

() இப்பாடலில் கவிஞர் மாந்தரது குணத்தை எவ்வாறு கண்டிக்கிறார்?

(.) தமது வீட்டுக்கு ஒரு பசு வாங்குவதென்றால் கூட பலமுறை யோசித்து, வாங்கும் துணிவின்றித்

தடுமாறும் மனிதர்கள், பெண்ணின் திருமணம் என்றால் யோசிக்காது கண்ணிமைப் பொழுதினிலே

முடித்து விடுவார்கள்.

() ஆராயாது செய்யும் திருமணத்தை எதற்கு உவமிக்கிறார்?

G.C.E.O/L- 2016

01. (viii). “கூட்டிற் பசங்கிளிபோற் கோதையரை யெப்பொழுதும்

வீட்டி லடைத்து வைக்கும் விரகிலருக் கியாதுரைப்போம்

() ‘விரகிலர்என்போர் யார்?

(). பெண்களை வீட்டில் அடைத்து வைப்பவர்கள் / பெண்களை அடக்கியாள்வோர் / வீரமற்ற அறிவிலிகள் தந்தையர்கள்

() மேற்படி அடிகள் மூலம் கவிஞர் உணர்த்த விரும்புவது யாது?

(). பெண் விடுதலை வேண்டும் / பெண்களை வீட்டில் அடைத்து வைக்கக்கூடாது / பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும் / பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்படாமை.

06. தத்தை
விடுதூது என்ற பாடப்பகுதியில்,

() பெண்விடுதலை குறித்த கவிஞரின் கருத்துக்கள்

பெண்,
தனக்கு ஏற்ற பொருத்தமான மணவாளனைத் தெரிவு செய்யும் உரித்துடையவள்

பெற்றோர்கள், அறிவற்றோருக்குப் பெண்ணை வற்புறுத்தித் திருமணம் செய்து கொடுக்கக் கூடாது. பெண்கள் தொழில் என்றும் பெண்களுக்கும்

உண்பதும் உறங்குவதும், ஊர்க்கதைகள் பேசுவதுமே

அடிமைகளுக்கும் வேறுபாடு இல்லை என்றும் நினைக்கக் கூடாது.

பெண்கள் கல்வி நலம் பெற்றிருத்தல் குடும்பத்திற்குச் சிறப்பாகும்.

பெண்கள், வெறும் உடமைப் பாண்டங்களல்ல.

பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருப்பதும், அவளை வற்புறுத்தி முன்பின் தெரியாதவனுக்கு திருமணம் செய்து கொடுப்பதும் தவறானது. ஆணாகப் பிறந்ததை மட்டும் தகுதியாகக் கொண்டு பெண்ணை ஒருவனுக்கு மணம் முடித்துக் கொடுக்கக்கூடாது.

() பெண்ணடிமை செய்வோர் மீதான
அவரது சினம்

ஆகியவை புலப்படுமாற்றினை விளக்குக.

() . பெண்ணடிமை செய்வோர் மீதான அவரது சினம்

பெண்ணருமையை அறியாத பேதையர் என்று பெற்றோரைக் பெண் கொடுத்தவர் குறிப்பிடுதல்

கண்ணில்லாதோர் என்று பெற்றோரை நிந்தித்து அவர்கள் கொடிய நரகத்திற்குச் சேர்வார்கள் எனக் கூறல்

பெண் கல்வியை விரும்பாதவர்களை வீணர் எனல்.

பெண்களை வீட்டில் அடைத்து வைப்போரை விரகிலர் எனல்.

பெண்களை மதியாதோரின் வாழ்நாட்கள் வீணான நாட்கள் எனக் கூறல்.

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top