G.C.E.O/L-2016, தமிழ்மொழியும் இலக்கியமும், கடந்தகால வினாத்தாள் பகுதி 111,


 

 

G.C.E.O/L-2016,

தமிழ்மொழியும் இலக்கியமும்,

கடந்தகால வினாத்தாள்

பகுதி 111,

1. சுருக்கமான விடை தருக.

(i).விலகு பிள்ளைஅது கிடக்க எடுத்துக் கொண்டு வா, தந்தி தபாற் கட்டுகளை.”

() இக்கூற்றைக் கூறியவர் யார்?

() ஆறுமுகநாவலர் / நாவலர்

() ‘பிள்ளைஎன்று இங்கே குறிப்பிடப்படுபவரின் முழுப்பெயர் யாது?

() விஸ்வநாத பிள்ளை

 

(ii). -… கழற்கான் மைந்த

இன்றுணைவ னிராகவனுக் கிலக்குவற்கு

மிளையாற்கு மெனக்கு மூத்தான் … “

() இப்பாடலடிகளில் மூத்தான் எனக் குறிப்பிடுவது யார்?

() குகன்

() ‘இளையவன்எனக் குறிக்கப்படுபவன் யார்?

() சத்துருக்கன் / சத்துருக்கனன் / சத்ருக்கன்

 

(iii). -… நற்றேர்ப்

பொய்கை ஊரன் கேண்மை

செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே.”

() ‘கேண்மைஎன்பதன் பொருள் யாது?

() நட்பு/உறவு
/
காதல்

() ‘பொய்கையூரன்என்ற தொடர் எந்நிலத்துத் தலைவனைக் குறித்து நிற்கிறது?

() மருத நிலம்

 

(iv).கதியிழக்கினுங் கட்டுரை யிழக்கிலோ மென்றான்

மதியிழந்துதன் வாயிழந் தருந்தவன் மறைந்தான்

() ‘கட்டுரைஎன்ற சொல் இங்கு எதனைக் குறிக்கிறது?

) வாய்மை / சத்தியம் / உண்மை

() இதனைப் பாடிய புலவரின் பெயர் யாது?

() வீரகவிராசயர்

 

(v).சீனத்துச் செப்பேஎன்ர சிங்காரப் பூநிலவே

வானத்தைப் பார்த்துமச்சி வாடுவது என்னத்திற்கோ?’

() இங்கு பயின்றுள்ள அணியை இனங்காண்க?

() உருவக அணி

() ‘மச்சிஎன்ற உறவுமுறைப் பெயரின் திருத்தமான வடிவம் யாது?

() மச்சாள் / மைத்துனி /மதினி/நாத்தனார்

 

(vi).மஞ்சோனா மரத்திலிருந்து இப்போதுதான் பக்குல் பறந்து போனது

() ‘மஞ்சோனா மரம்என்பதன் திருத்தமான வடிவம் யாத ?

() மஞ்சள் வண்ண மரம் / மஞ்ச வண்ணா மரம்
/
மஞ்ச முண்ணா மரம்
/
மஞ்சமுணா

() ‘பக்குல்எனும் பறவையைக் குறிக்கும் வேறு பெயர் ஒன்று தருக?

() ஆந்தை / கோட்டான் /நத்து / கூகை

 

(vii).நண்பா கம்பியூட்டருக்கு தலபுராணம் எழுதியவர் விடுவாரா ? இப்போது வட்டியும் முதலுமாக அவர்களைப்

போட்டு குடைகுடையென்று குடைந்தார் … “

() ‘தலபுராணம்என்றால் என் ?

() தலமொன்றின் வரலாற்றையும் சிறப்புக்களையும் எடுத்துக் கூறுவதாகப் புராண வடிவில் அமைந்த நூல

() ‘தலபுராணம்என்ற தொடர் இங்கே என்ன பொருளில் கையாளப்பட்டுள்ளது?

() கம்பியூட்டர் பற்றிய முழு விபரத்தையும் அறிந்தவர் / சகல விடயத்தையும் பற்றிய அறிவு

 

(viii).கூட்டிற் பசங்கிளிபோற் கோதையரை யெப்பொழுதும்

வீட்டி லடைத்து வைக்கும் விரகிலருக் கியாதுரைப்போம்

() ‘விரகிலர்என்போர் யார்?

() பெண்களை வீட்டில் அடைத்து வைப்பவர்கள் / பெண்களை அடக்கியாள்வோர் / வீரமற்ற அறிவிலிகள் தந்தையர்கள்

() மேற்படி அடிகள் மூலம் கவிஞர் உணர்த்த விரும்புவது யாது?

() பெண் விடுதலை வேண்டும் / பெண்களை வீட்டில் அடைத்து வைக்கக்கூடாது / பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும் / பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்படாமை

 

(ix).கணக்காய ரில்லாத வூரும் பிணக்கறுக்கு

மூத்தோரை யில்லா வவைக்களனும் … “

() ‘கணக்காயர்என்று குறிப்பிடப்படுபவர் யார்?

() ஆசிரியர் / ஒதுவிப்பவர்

() ‘பிணக்கறுத்தல்என்பதனால் விளங்கிக் கொள்வது யாது?

() முரண்பாடுகளை நீக்குதல் / பிரச்சினைகளைத் தீர்த்தல்

 

(x).தொல்காப்பியர் கருப்பொருளில் பண்பாட்டுத் துறைகள் சிலவற்றைக் கூறுகிறார். அவற்றுள் வழிபாடும் இசையும்

இசைக்கருவிகளும் சில.”

() கருப்பொருள் என்றால் என்ன?

() குறித்த ஒரு நிலத்தின் பண்பாட்டுக் கூறுகள் (தெய்வம், உணவு,
விலங்கு, மரம்,
பறவை, பறை, யாழ், தொழில் முதலியன)

() கருப்பொருள் பற்றிக் கூறும் இலக்கண நூல் யாது?

() தொல்காப்பியம்

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top